Monday, October 13, 2014

துர்கா மஹாலக்ஷ்மி!




சமீபத்தில் ஒரு நண்பர் ஶ்ரீ என்னும் லக்ஷ்மி அதாவது மஹாலக்ஷ்மி பற்றிய பேச்சு வந்தபோது அவளை விஷ்ணு பத்னி தான் என்று அடித்துச் சொன்னார். வேறொரு சிநேகிதி துர்கா மஹாலக்ஷ்மி பற்றிக் குறிப்பிட்டபோது அப்படி எல்லாம் இல்லைனு சொல்லிட்டார்.  ஆனால் இது குறித்து ஓரளவு அறிந்திருந்த எனக்கு அன்றிலிருந்து இது கொஞ்சம் உறுத்தலாக இருந்தது.  என்றாலும் தக்க சான்றுகள் வேண்டுமே. கிடைத்தது தேவி மஹாத்மியத்திலேயே!

இப்போ இதைப் போய் அவரிடம் சொல்லிக் கொண்டு இருக்கப் போவதில்லை. ஆதாரமான ஸ்லோகம் கிடைச்சது.  அதுவே போதுமானது.  நவராத்திரியில் நாம் துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதியாகக் கொண்டாடுவது அம்பிகையில் ஆதிலக்ஷ்மியின் அவதார சொரூபங்களே.  தேவியின் பத்து அவதாரங்களில் இந்த ஶ்ரீ மஹாலக்ஷ்மி அவதாரமும் ஒன்று.  பத்து அவதாரங்களைக் குறித்தும் முதலில் படிக்கணும்.  அப்போத் தான் இந்த அவதாரம் குறித்துப் புரியும்.  அதுக்கெல்லாம் நேரமும், வாய்ப்பும், படிக்கத் தக்க புத்தகங்களும் தேடிப் பிடிச்சுப் படிக்கணும்.  முடியுமானு பார்க்கலாம். தேவியின் பத்து அவதாரங்கள் குறித்து லலிதாம்பாள் சோபனத்திலும் எழுதி இருக்கிறேன்.


இதை ரொம்ப ஆழமாக குருமுகம் இன்றிப் படிக்கவோ, எழுதவோ முடியாது. தெரிந்ததைப் புரிந்ததை மட்டும் அவ்வப்போது பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்.




பி.கு:  சில நாட்களுக்கு வேலை அதிகமா இருக்கும்.  அவ்வப்போது இணையம் வந்து செல்வேன்.  பதிவுகள் எப்போதாவது வரும்.. ஆகவே எல்லோரும் தீபாவளிக்கு முன்னாடியே


ஸ்வீட் எடு, கொண்டாடு!

15 comments:

  1. ஸ்ரீ தேவி பாகவதத்தில் சக்தியின் அவதாரங்கள் சொருபங்கள் பற்றி படித்ததாக நினைவு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. பிரேமா பிரசுரத்தின் 'தேவி பாகவதம்'வெளியீடு ஒனறு உள்ளது. மூன்று பாகங்கள். அவற்றில் உங்களுக்கு வேண்டிய தகவல்கள் நிறைய கொட்டிக் கிடக்கின்றன.

    மூன்று பாகங்களையும் இப்பொழுது புதுசாக பிரசுரித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். வெகு காலத்திற்கு முன்பு நான் வாங்கும் பொழுது மிக மிகக் குறைந்த விலை.

    எப்பொழுதுமே பிரேமா பிரசுரத்தின் வெளியீடுகள் குறைந்த விலையில் தான் இருக்கும். 'காதல்' பத்திரிகை
    ஆசிரியர் அரு. இராமநாதன் கண்ட
    பதிப்பகம் இது. இப்பொழுது சென்னை ஆற்காடு சாலையில் மீனாஷி கல்லூரி எதிரில் பிரேமா பிரசுரம் உள்ளது. அங்கு 'தேவி பாகவதம்' தொகுப்பு கிடைக்கும். இங்கு போனாலே தேவி பாகவத்தோடு நிறுத்திக்கொள்ள முடியாது. இன்னும் சில புத்தகங்களை வாங்க மனம் ஆசைப் படும்.

    உங்கள் தகவலுக்காக.

    ReplyDelete
  3. அப்போ மஹாலக்ஷ்மி விஷ்ணு பத்னி இல்லையா? :)))

    ----

    ஸ்வீட் எடுத்தேன். கொண்டாடினேன்!

    ReplyDelete
  4. என்னைப் பொறுத்தவ்ரையில் அனைத்துக் கடவுள்களும் ஒரே சொரூபத்தின் வித்தியாசமான வெளிப்பாடுகளே.

    ReplyDelete
  5. எழுதுங்கள் கீதா.சக்தி ஸ்வரூபங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை.

    ReplyDelete
  6. துர்கா மகாலக்ஷ்மி புராணம் பற்றித் தெரிந்து கொள்ள ஆவல். பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  7. பதிவைப் பார்த்து ஆனந்தமாக இருக்கிறது!.. தொடருங்கள்.. தொடருகிறேன்!..(ஆமா இந்த வாட்டி தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல் பக்ஷணம்?!)

    ReplyDelete
  8. வாங்க சுரேஷ், ஆமாம்னு நினைக்கிறேன். மறுபடி படிச்சுப் பார்க்கணும். நேரம் கிடைக்கணும். :)

    ReplyDelete
  9. ஜீவி சார், தகவலுக்கு நன்றி. வாங்க முயற்சி செய்யறேன். சென்னையிலே இருந்தாலேயே புத்தகங்கள் வாங்கனு போக முடியாது. இங்கேயா போகப் போறேன். என்றாலும் இதை முயற்சி செய்யறேன்.

    என்னிடம் இருப்பது ராமகிருஷ்ணா மடம் "அண்ணா"வால் தொகுக்கப்பட்டது.

    ReplyDelete
  10. ஶ்ரீராம், விஷ்ணுபத்னியான லக்ஷ்மி வேறு, நவராத்திரியில் நாம் கொண்டாடும் துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி அவதாரங்கள் வேறு. துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி மூவரும் ஆதி பராசக்தியின் அம்சங்கள். இதைக் குறித்து நன்கு படித்துப் புரிந்து கொண்டு தான் சொல்ல முடியும்.

    ReplyDelete
  11. //ஸ்வீட் எடுத்தேன். கொண்டாடினேன்!//

    அதானே! :P:P:P:P:P

    ReplyDelete
  12. ஜிஎம்பி சார், அது தான்நான் சொல்ல வந்ததும். :))))

    ReplyDelete
  13. வாங்க வல்லி, முதல்லே படிக்கணுமே, அது புரியணும், பார்க்கலாம். இதெல்லாம் பெரிய விஷயம்.

    ReplyDelete
  14. வாங்க ராஜலக்ஷ்மி, முயற்சி செய்யணும். பார்ப்போம்.

    ReplyDelete
  15. வாங்க பார்வதி, தொடர அந்த சக்தி தான் சக்தியைக் கொடுக்கணும்.

    தீபாவளிக்கு ஸ்வீட்டெல்லாம் முடிவு செய்யும் ஆர்வமே இப்போதெல்லாம் இல்லை. :))))) குழந்தைங்களும் இல்லை; அவருக்கும் ஸ்வீட் சாப்பிட முடியாது. அப்போ என்ன தோணுதோ அதான்! :)))))

    ReplyDelete