Wednesday, October 22, 2014

தீபாவளி கொண்டாடினீங்களா? அனைவருக்கும் வாழ்த்துகள்.


எண்ணெய், சீயக்காய், மஞ்சள் பொடியோடு புடைவை, ரவிக்கை, வேஷ்டி, துண்டு ஆகியன பக்ஷணங்களோடு இடம் பெற்றிருக்கின்றன.  மதுரைப் பக்கத்தில் தீபாவளிக்கு  ஒரு புடைவையாக  அல்லது எந்த உடுப்பாக இருந்தாலும் ஒன்றே ஒன்று வாங்குவதில்லை.  இப்போல்லாம் எப்படியோ தெரியலை.  ஆனால் நான் இன்னமும் அந்த வழக்கத்தைக் கடைப்பிடிக்கிறேன்.  ஒரு புடைவை கொஞ்சம் விலை ஜாஸ்தி. இன்னொன்று சாதாரணமானது. 





ஶ்ரீராமர், இடப்பக்கம் வெண்ணெய்க் கிருஷ்ணன், வலப்பக்கம் பிள்ளையார்





ஶ்ரீதேவி, பூதேவி சகிதப் பெருமாளுடன் மற்ற கடவுளர் திருவுருவங்கள்




மேலே உள்ள பச்சைக்கலர் ஜிங்குச்சா சாதாரணப்  புடைவை தான்.  அடியிலுள்ள ப்ரவுன் கலர் புடைவை தான் விலை அதிகம். இரண்டுமே பருத்திப் புடைவைகள் தான்.  :)))

பக்ஷண வகையறாக்க்ள் ரொம்பவே எளிமையாகத் தான் செய்திருக்கேன். :) அலுமினியம் டப்பாவில் தேன்குழல், ப்ளாஸ்டிக் பச்சை டப்பாவில் கொஞ்சம் போல் மிக்சர், பக்கத்தில்  தூக்கில் கடலைமாவு, தேங்காய் சேர்த்த பர்ஃபி.  ப்ளாஸ்டிக் டப்பாவில்  மாலாடு, மாலாடுக்குப் பக்கத்தில் தீபாவளி மருந்து, வெற்றிலை, பாக்கு, பழம் போன்றவை.  அவ்வளவே!  தீபாவளி கொண்டாடியாச்சு. பொண்ணு நேத்தே தொலைபேசிப் பேசிட்டா.  மகனும், மருமகளும் கொஞ்ச நேரம் முன்னால் பேசினாங்க. தொலைபேசியில் தீபாவளி!


25 comments:

  1. கங்கா ஸ்நானம் ஆச்சா !!!!!

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    படங்களும் குறிப்பாக பக்ஷணங்களும் மிக அருமையாக உள்ளன.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன் கோபு [VGK]

    >>>>>

    ReplyDelete
  2. //மேலே உள்ள பச்சைக்கலர் ஜிங்குச்சா சாதாரணப் புடைவை தான். அடியிலுள்ள ப்ரவுன் கலர் புடைவை தான் விலை அதிகம். இரண்டுமே பருத்திப் புடைவைகள் தான். :)))//

    இரண்டு புடவைகளையும் [தனித்தனியாகக்] கட்டிக்கொண்டு இரண்டு போட்டோக்களைப் பதிவினில் போட்டிருந்தால் எல்லோரும் பார்த்து சந்தோஷப்பட்டிருப்போமே.

    அடுத்த பதிவுக்கு ஓர் ஐடியா கொடுத்து விட்டேன் பாருங்கோ :)

    >>>>>

    ReplyDelete
  3. நேற்று தங்களின் நேயர் கடிதம் என் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.

    தீபாவளி பக்ஷணங்கள் செய்வதில் பிஸியாக இருந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதனால் தான் வருகை தரவில்லையோ என்னவோ?

    http://gopu1949.blogspot.in/2014/10/8.html

    முடிந்தால் இன்று வாங்கோ !

    >>>>>

    ReplyDelete
  4. VGK-40 க்கு இன்னும் தங்களின் விமர்சனம் வந்துசேரவில்லை.

    வரும் 26.10.2014 இறுதி நாள்.

    நினைவிருக்கட்டும்.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  5. அப்பாடா! இங்கே திறந்து வெச்சிருக்கே! நன்னி நன்னி! தீபாவளி மருந்து எடுத்துண்டேன். கொஞ்சம் காரம் அதிகம்!

    ReplyDelete
  6. நாங்களும் கொண்டாடியாச்சு. வெடியில்லா, புகையில்லா தீபாவளி! மற்ற எல்லாம் உண்டு.

    ReplyDelete
  7. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. கீதா மேடம் ,

    உங்களுடைய பர்பி , மாலாடு, மிக்சர் எல்லாம் எடுத்துக் கொண்டேன்.
    பச்சைக் கலர் புடைவை நன்றாக இருக்கிறது .

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! பட்சண வாசனை ஆளைத்தூக்குது! கொஞ்சம் பார்சல் அனுப்புங்கோ! நன்றி!

    ReplyDelete
  10. இங்கு இப்பொழுது தான் கங்கா ஸ்நானம்!

    பட்டாசு வெடிக்கிறோமோ இல்லையோ, சாஸ்திரத்திற்கு ஒரு கம்பி மத்தாப்பு பெட்டியாவது வைக்கிறது வழக்கம்!

    உங்களுக்கும், உங்களவருக்கும் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.





    ReplyDelete
  11. வாங்க வைகோ சார், உங்க வீட்டிலேயும் தீபாவளி அமர்க்களமாய்க் கொண்டாடி இருப்பீங்கனு நினைக்கிறேன். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. என் படமெல்லாம் போட்டு யாரையும் பயமுறுத்தும் எண்ணம் இல்லை வைகோ சார். அதனால் நீங்க ஐடியா கொடுத்தால் கூடப் போட மாட்டேன். :)

    ReplyDelete
  13. பார்த்தேன். இரண்டு நாட்களாக பக்ஷணத்தில் பிசி. பொதுவாக இரண்டு மாதமாகவே பிசி தான்! இன்னும் சில நாட்களுக்கு பிசியோ பிசி! :)))) உங்க பதிவுக்கு வந்து கருத்துச் சொல்லிட்டேன்.

    ReplyDelete
  14. விமரிசனம் எப்படியானும் எழுதி அனுப்பிடறேன். அடுத்த வாரம் இணையத்தை பி எஸ் என் எல்லில் நிறுத்திடுவாங்க. அதுக்கப்புறமா எப்போ வருமோ தெரியாது. தொலைபேசியும் இருக்காது என்பதால் இங்கே ஒரு தனியார் மூலம் இணைய இணைப்பு வாங்க யோசனை செய்திருக்கோம். பார்க்கலாம்.

    ReplyDelete
  15. வாங்க வா.தி. கரெக்டாச் சொல்றீங்க மருந்து காரம்னு! பின்னே? மருந்துனா காரம் கொஞ்சமானும் இருக்கணும் இல்லையா? :)

    ReplyDelete
  16. வாங்க ஶ்ரீராம். அதென்ன தீபாவளிப் பட்டாசுக்கு மட்டும் இத்தனை கட்டுப்பாடுனு தெரியலை! :))))

    ReplyDelete
  17. வாங்க ராஜராஜேஸ்வரி, உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. வாங்க ராஜலக்ஷ்மி, வருஷத்துக்கு ஒரு பச்சைக்கலர் வந்துடும் எப்படியானும்! :) அதான் ராசினு வைச்சுட்டேன். :) உண்மையில் ப்ரவுன் நிறப் புடைவையின் வேலைப்பாடு அழகாக இருக்கும். :) பச்சைப் புடைவை பாரம்பரிய வேலைப்பாடுள்ளது.

    ReplyDelete
  19. வாங்க சுரேஷ், பக்ஷண வாசனையைக் கண்டு பிடிச்சதுக்கு நன்றி. வரவுக்கும் கருத்துக்கும் நன்றிப்பா.

    ReplyDelete
  20. வாங்க ஜீவி சார், 2011 ஆம் வருஷம் எங்களோட தீபாவளியும் அங்கே தான் ஹூஸ்டனில் பையர், மாட்டுப்பெண்ணோடு நடந்தது. ஆனாலும் மனம் என்னமோ இந்திய தீபாவளிக்கு ஏங்கியது என்பது உண்மை! :))))

    சொர்க்கமே ஆனாலும் நம்ம ஊரு போல வருமா?

    ReplyDelete
  21. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

    ReplyDelete
  22. அழகான பராம்பரிய தீபாவளி பண்டிகை.

    ReplyDelete
  23. ஸ்விட் எடு கொண்டாடு!

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். டைப் முதல் comment ல English ல இருந்ததாலையோ என்னவோ முழுங்கிடுத்து. ம.. லட்டு, மிக்சர் தேன்குழலா? சரி நடத்துங்கப்பு. பாத்து சந்தோஷப்படறேன். Mr திவா க்கு இஞ்சி மருந்து காரமாம். எனக்கு அனுப்புங்கோ எனக்கு பிடிக்கும்

    ReplyDelete
  25. தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete