Thursday, December 04, 2014

அப்பாடா!

அப்பாடானு இருக்கு.  ஒரு வழியா மரவேலை முடிவடைந்தது. மனதில் இருந்து ஏதோ பெரிய பாரத்தை இறக்கி வைச்சாப்போல் இருக்கு.  ஆசாரிங்க ஒரு பக்கம் இழுத்தடிக்க, இங்கே குடியிருப்பு வளாகத்தில் சத்தம் ரொம்ப ஜாஸ்தியா வருதுனு புகார்கள்.  மனசே வெறுத்து நொந்து நூலாகி விட்டது. இது வரைக்கும் இம்மாதிரிக் குடியிருப்புகளில் இருந்ததே இல்லை. இப்போக்கடந்த  3 வருஷமாத் தான் குடியிருப்பு வளாக வாசம்.  வாடகைக்குனு வீடு எடுத்துக் குடி இருந்தப்போவும் தனி வீடுகளாகத் தான் இருந்திருக்கின்றன.  ஆகையால் இம்மாதிரி எதிர்ப்புகளைச் சமாளிக்கும் விதம் புரியத் தான் இல்லை.

சென்னையில் அம்பத்தூரில் இருந்தப்போ எங்க வீட்டுக்கு இரு பக்கங்களிலும், எதிரேயும் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டும்போது பழைய கட்டிடத்தை இடிக்கையில் இரவெல்லாம் ஒரே சத்தமாக இருக்கும். அதோடு வேலையாட்கள் வேறே அவங்க பொழுதுபோக்குக்காகத் தொலைக்காட்சியில் படம் பார்த்துட்டு இருப்பாங்க.  அந்த சத்தம் வேறே இருக்கும். ஒண்ணும் சொல்ல முடிந்ததில்லை. ஆனாலும் இப்போதெல்லாம் சுற்றுப்புறங்களில் சப்தம் அதிகமாகத் தான் ஆகிவிட்டது.

இங்குள்ள வேலை ஆட்கள் எல்லாம் சென்னை பரவாயில்லை என்னும்படி மெதுவாக வேலை செய்யறாங்க. சென்னையிலே எல்லோருக்கும் திங்கட்கிழமை என்றால் வேலைக்குக் கிளம்பும் மனசே வராது. செவ்வாய்க்கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை ஒழுங்கா வந்துடுவாங்க. இங்கோ திங்களன்று வரலைனா அந்த வாரம் முழுதும் வர மாட்டாங்க. இப்படி கிட்டத்தட்ட 25 நாட்கள் ஆட்களே வராமல் ஒரு கட்டத்தில் வேலையையே வேண்டாம்னு சொல்லிட்டோம்.  போட்டவரைக்கும் காசைக் கொடுத்துடறோம்.  எல்லாத்தையும் எடுத்துட்டுப் போங்கனு சொல்லிட்டோம்.

ஆனால் அந்தக் கம்பெனி முதலாளி இந்தத் தொழிலில் ஊறிப் போனவர் போல!  எங்களைப் போல் எத்தனை பேரைப் பார்த்திருப்பாரோ தெரியலை.  வெளியூரில் இருந்தெல்லாம் அவருக்கு வேலைக்கு அழைப்பு வருகின்றது.  ஆகவே நாங்கல்லாம் அவருக்கு ஜுஜுபி. எதுக்கும் அசைந்து கொடுக்கலை.  நேத்து சாயந்திரமா அவங்க கிளம்பும்போது ஆரத்தி எடுத்து வழி அனுப்பி வைக்காத குறை. ஸ்வீட் எடு, கொண்டாடுனு குதிக்கணும் போல் ஒரு எண்ணம்! :)))) சொந்த வீடு கட்டும்போது கூட இவ்வளவு மன உளைச்சல் இல்லை.   சமாளிக்க முடிந்தது.  இப்போ முடியலை. அப்போதைக்கு இப்போது பல மாற்றங்களும் ஏற்பட்டு விட்டன.

இனி சாமான்களை ஒருவிதமாக ஒழுங்குக்குக் கொண்டு வந்து விடலாம். அதிலும் 75% முடித்து விட்டோம்.  போன வாரம் வரை வீட்டுக்குக் குடி போயிடுவோமா என்ற கவலையில் இருந்தது.  இந்த வாரம் இங்கு இருக்கிறோம். எல்லாம் கனவு போல் இருக்கு.  இனி தான் புத்தகங்களை எல்லாம் தேடணும்.  கண்ணன் காத்திருக்கான் பல வாரங்களாக. புத்தகம் எங்கே வைச்சிருக்கேன்னு தெரியலை. என்னதான் கதை படிச்சிருந்தாலும் எழுதும்போது புத்தகம் பக்கத்தில் இருந்தால் வசதி தான்.  


10 comments:

  1. அச்சச்சோ! முடிஞ்சுடுத்தா?

    ReplyDelete
  2. எல்லாம் நல்லபடி முடிந்தது குறித்து மகிழ்ச்சி. பி எஸ் என் எல் இணைப்பும் வந்து விடுமா?

    ReplyDelete
  3. @Va.Ti. grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete
  4. @Sriram, a million dollar question! :)))

    ReplyDelete
  5. இன்னும் ஒரு வாரத்தில எல்லாம் சரியாகிடும் கீதா. உண்மையிலியே வீட்டைக் கட்டிப் பார்த்தாச்சு. இனி எந்தத் தொந்தரவும் இல்லாமக் கண்ணன் பார்த்துப்பான்.காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  6. அப்போ “ உறவுகள் “ எழுதிவிடுவீர்கள். ... நன்றி

    ReplyDelete
  7. வல்லிக்கா, வீட்ட எங்க கட்டினாங்க? கட்டின வீட்டுக்கு போகவே இவ்வளோ அலப்பறை! கட்ட வேற கட்டியிருந்தா..... நடுங்குது!

    ReplyDelete
  8. வாங்க வல்லி, உண்மையா வீடு கட்டின அனுபவம் எண்பதுகளிலே. நாங்களே சாரத்தின் மேலே ஏறி க்யூரிங் எல்லாம் பண்ணி இருக்கோம். :) குழந்தைங்க கூட ஸ்கூல்லேருந்து வந்ததும் நேரே வீடு கட்டும் இடத்துக்கு வந்துக் கூடமாட உதவி செய்வாங்க. :))) அதெல்லாமே இப்போக் கனவாப் போயிடுச்சு! :)))

    ReplyDelete
  9. வாங்க ஜிஎம்பி சார், விரைவில் எழுத முயல்கிறேன்.

    ReplyDelete
  10. வா.தி. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இது அக்கிரமமா இல்லை? :P :P :P :P

    ReplyDelete