Thursday, January 15, 2015

பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!


நிவேதனத்துக்குக்  கரும்பு வாங்கினோம். ஆனால் நாங்க சாப்பிடறதில்லை.  சின்ன வயசிலேயே எனக்குக் கரும்பின் மேல் விருப்பம் இருந்ததில்லை.  யாருக்கானும் தான் கொடுப்போம்.  இன்னிக்கே குடியிருப்பு வளாகத்தின் பொது வேலை செய்யும் பெண்மணி கரும்புக்கு வந்து விட்டார்.  நாளை கனுப்பொடிக்கு வேண்டும் என்பதால் நாளை தரேன்னு சொல்லி இருக்கேன்.


மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து. இவற்றையும்  பூஜையில் வைப்பது உண்டு. கிழக்கே இருக்கும் பால்கனியில் வெயிலும் வந்தது.  பல நாட்கள் கழித்து வந்ததால் சூரியன் கொஞ்சம் கடுமையாகவே இருந்தான். :)



சூரியக் கோலத்தில் பூக்களால் அர்ச்சனை செய்திருக்கிறது.  இந்தத் தரைக்குக் கோலம் பளிச்செனத் தெரியவில்லை. பக்கத்தில் ஒரு தட்டில் அரிசி, வெல்லம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், வெண்கலப்பானையில் சர்க்கரைப் பொங்கல், மஞ்சள் கொத்து நீளமாக இருக்கிறது. இன்னொரு சின்ன வெண்கலப் பானையில் அவிஸ் எனப்படும் பாலன்னம், பாத்திரத்தில் சாதம், பருப்பு, வடை, காய்கள்  தட்டில்.  முன்னெல்லாம் ஒரு கிலோ காய்கள் வாங்கிக் கொண்டிருந்தோம். பின்னர் அரைகிலோ வாங்கி அதுவும் மிஞ்சிப் போகவே கால் கிலோ வாங்கினோம்.  இப்போது கால் கிலோ வாங்கி  பொங்கலுக்கு எடுத்தது போக அதையே இன்னொரு நாளுக்குனு  வைச்சுக்கறோம். :))))

சர்க்கரைப் பொங்கல் மதுரைப்பக்கம் எல்லாம் பாலிலேயே கரைய விடுவோம்.  இதுவும் அப்படிச் செய்தது தான். அரிசி 100 கிராம் தான். பருப்பு ஒரு கரண்டி, பால் அரைலிட்டரிலிருந்து முக்கால் லிட்டர் வரை அவரவர் விருப்பம் போல். வெல்லமும் அவரவர் ருசிக்கு ஏற்ப. மு.ப. தி.ப. தேங்காய்க் கீற்று நெய்யில் வறுத்துப் போட்டு ஏலப் பொடி தூவணும்.  சூடான பொங்கல் ரெடி!

20 comments:

  1. கீதா , நாங்களும் பாலில் தான் பொங்கல் செய்வோம். அழகாக இருக்கிறது தரை. பொங்கல் நல்ல படி பூர்த்தியானத்தில் மகிழ்ச்சி மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. பாலில் தான் சுவையாக இருக்கும். இங்கே அரை லிட்டர்னு எழுதி இருப்பது கம்மி. முக்கால் லிட்டருக்கும் மேலே ஆச்சு! :) உங்கள் தொலைபேசி அழைப்புக்கும், வாழ்த்துக்கும் நன்றிம்மா.

      Delete
  2. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் அம்மா...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் டிடி

      Delete
  3. அன்புடையீர்!
    வணக்கம்!
    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

    நட்புடன்/நன்றியுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் புதுவை வேலு அவர்களே.

      Delete
  4. இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    டைல்ஸ் தரையில் கோலம் இருப்பதே தெரியவில்லை!

    ReplyDelete
    Replies
    1. பூக்களுக்கு வெளியில் வெள்ளையாகவும் சிவப்பாகவும் தெரியுது பாருங்க. கோலம் போட்டதால் என்னால் கண்டு பிடிக்க முடியும். எல்லோராலும் முடியுமா தெரியலை! :))))

      Delete
  5. அழகான பொங்கல் படங்கள். இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு, இனிய பொங்கல் வாழ்த்துகள்.

      Delete
  6. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ், பொங்கல் வாழ்த்துகள் உங்களுக்கும்.

      Delete
  7. பால் பொங்கியாச்சா?..

    உங்கள் இருவருக்கும் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பால் பொங்கி வழியவே செய்தது ஜீவி சார். உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

      Delete
  8. வணக்கம்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரூபன், உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

      Delete
  9. இனிய பொங்கல் வாழ்த்துகள் அம்மா!

    ReplyDelete
    Replies
    1. அபூர்வமான வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி கவிநயா.

      Delete
  10. எல்லாரும் “இனிய பொங்கல் வாழ்த்துகள் ” அப்படிங்கறாங்களே, வெண்பொங்கலுக்கு வாழ்த்து கிடையாதா? ஸோ ஸேட்!

    ReplyDelete
    Replies
    1. வா.தி. வெண் பொங்கலே பண்ணலையே! சின்னப் பானையில் இருப்பது ஹவிஸ். சும்மாப் பேருக்குப் பாலை ஊத்தாமல் பாலிலேயே பண்ணிட்டேன். :) பால் கிடைச்சால் போதும். :))))

      Delete