Sunday, March 15, 2015

பயணங்கள் முடிவதில்லை! 13

இங்கே

மேற்கண்ட சுட்டியில் கடைசியாக எழுதினதைப் பார்த்தோம். சேது சமுத்திரத்தில் சங்கல்ப ஸ்நானம் நல்லபடியாக பட்டாசாரியார் செய்து வைத்தார். கூடவே அருமையான விளக்கங்களும் கொடுக்கவே பையரும், மருமகளும் ரொம்பவே மகிழ்ச்சி அடைந்தனர். அதுக்கு அப்புறமா திருப்புல்லாணி ஆதி ஜகந்நாதர் கோயிலுக்குப் போனோம்.  சேதுவிலிருந்து திருப்புல்லாணி போகும் வழியிலேயே இன்னொரு கோவிலும் இருக்கிறது.  காட்டுக்குள்ளே இருக்கு அந்தக் கோவில்.  திருப்புல்லாணியிலிருந்து சேதுக்கரை செல்லும் வழியில் 3வது கிலோ மீட்டரில் உள்ள அந்தக் கோயிலின் பெயர் ஏகாந்த சீனிவாசப் பெருமாள் கோயில் ஆகும்.  இதைக் குறித்த தகவலே இப்போது தான் தெரிய வந்தது.  ஆகவே அந்தக் கோயிலைப் பற்றி பட்டாசாரியார் கூடச் சொல்லவில்லை. :(

சேது ஹிமாசலா என இந்த இடம் அழைக்கப்படுவதாகவும், இங்கிருந்து தான் இலங்கைக்குப் பாலம் அமைத்ததாகவும் சொல்லப்படுகிறது.  பெரியதொரு ஆலமரத்தின் எதிரே சுற்றிலும் கருவேல மரங்களால் சூழப்பட்டுக் கண்பார்வையில் படாவண்ணம் மறைந்துள்ளது இந்தக் கோயில்.


படம் நன்றி தினமலர் பக்கம்.

தாயார் சந்நிதி கிடையாது இங்கே. சந்நிதிக்கு வெளியே காணப்படும் வெண்பளிங்கினால் ஆன விஷ்ணு சிலையில் சங்கும், சக்கரமும் இடம் மாறிக்  காணப்படுவதாகவும், இந்தச் சிலை சுமார் 80 முதல் 100 ஆண்டுகள் முன்னர் கடலிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. சிலையைச் சுற்றிலும் திருவாசி போல உள்ள இடத்தில் தசாவதாரங்கள் செதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இங்கே தான் ஶ்ரீராமனுக்கு அகத்திய முனிவர் ஆதித்ய ஹ்ருதயம் உபதேசம் செய்ததாகவும் சொல்கின்றனர். ஆதித்த்ய ஹ்ருதயத்தை உச்சரித்து வழங்கப்படும் இந்தக் கோயில் தீர்த்தம், துளசிப் பிரசாதம் ஆகியவை சக்தி வாய்ந்தவையாகவும் எப்பேர்ப்பட்ட கடுமையான காய்ச்சலையும் குணப்படுத்தும் வல்லமை கொண்டதாகவும் சொல்கின்றனர்.

தற்சமயம் இந்தக் கோயிலைக் கண்டு பிடித்து பாலாலயம் எழுப்பிக் கும்பாபிஷேஹம் நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் சொல்கின்றனர். இயற்கைச் சீற்றங்களிலிருந்து இந்தக் கோயில் தப்பிப் பிழைத்திருப்பதையே ஓர் அதிசயமாகச் சொல்கின்றனர்.

இப்பேர்ப்பட்ட அற்புதக் கோயிலைத் தரிசிக்காமல் வந்தது குறித்து வருத்தமாகத் தான் உள்ளது.  இனி செல்லும் நண்பர்களாவது சேதுவுக்கும் திருப்புல்லாணிக்கும் இடையிலுள்ள இந்தக் கோயிலுக்கும் சென்று வரும்படி வேண்டுகோள் விடுக்கிறேன்.

12 comments:

  1. ம்ம்ம்....எப்படியும் ஒரு தரமாவது போய்ப் பார்த்துடணும்.

    ReplyDelete
    Replies
    1. போயிட்டு வாங்க ஒரு தரமாவது.

      Delete
  2. சொல்லிட்டீங்க இல்லே... மறக்க மாட்டோம்...

    ReplyDelete
    Replies
    1. மறக்காமல் செய்யுங்க!

      Delete
  3. வணக்கம்

    நிச்சயம் போகிறோம்.. ஆலயத்துக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. அற்புதமான கோவில் பற்றிய தகவலுக்கு நன்றி..

    ReplyDelete
  5. கோவில் ரொம்ப அழகா .இருந்திருக்கும். விவரங்களுக்கு மிக நன்றி கீதா. உங்கள் பதிவுகள் முடிந்தால் எனக்கு ஒரு சுட்டி கொடுங்கள். நான் படிப்பதே கொஞ்சம்.அதில் உங்கள் பதிவை மிஸ் பண்ணினால் வருத்தமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அனுப்பறேன் வல்லி. பொதுவாகவே நான் யாரையும் பதிவுகளுக்குச் சுட்டி கொடுத்து அழைப்பது இல்லை. அவங்களா வந்து பார்த்தால் சரினு விட்டுடுவேன். தொடர்ந்து வரவங்க வரலைனால் தான் என்னனு கேட்டுப்பேன். ஆனால் உங்க விஷயம் வேறே. ஆகவே நினைவு இருக்கும்போது அனுப்புகிறேன்.

      Delete
  6. திருப்புல்லாணி சென்றிருக்கிறேன்! இங்கு சென்றதில்லை! அவனருள் இருந்தால் தரிசனம் கிட்டும்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. திருப்புல்லாணியிலிருந்து நாலு கிலோ மீட்டருக்குள் தான் இருக்கிறது சுரேஷ். முடிஞ்சப்போ முயற்சி செய்யுங்க.

      Delete