Sunday, March 22, 2015

யாமிருக்க பயமே! :)

ரொம்ப நாள் ஆனதாலே இன்னிக்குக் கணினிக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்தேன். முக்கியமான மடல்களை மட்டும் பார்த்துட்டுச் செய்ய வேண்டிய முக்கியமான வேலையை முடிச்சுட்டுச் சும்மாத்தானே உட்கார்ந்திருக்கப் போறோம்னு தொலைக்காட்சியைத் தோண்டிக் கொண்டிருந்தேன். "ஜி" தொலைக்காட்சியில் (ஜி சினிமா இல்லை, அதிலே ஹாப்பி நியூ இயர் படம்) ஜுடாயி ஹிந்திப் படம் ஓடிட்டு இருந்தது.

judaai க்கான பட முடிவு

 ஏற்கெனவே தமிழில், ஹிந்தியில் பார்த்திருந்தாலும் மற்றத் தொலைக்காட்சிகளில் இதை விட அறுவைப் படங்கள்!  சரினு பார்த்துட்டு இருந்தேன்.  அப்புறமாப் படம் முடிஞ்சதும் கொஞ்சம் வீட்டு வேலை முடிச்சுட்டு மறுபடி தொலைக்காட்சியைப் பார்த்தால் இம்முறை ஜிதமிழ் என்னும் தமிழ்த் தொலைக்காட்சியில் ஒரு படம் ஓடிட்டு இருந்தது.  பார்த்தால் நம்மளை மாதிரிப் பேய், பிசாசு எல்லாம் வரும் போல இருந்தது.


சரினு உட்கார்ந்து இவ்வளவு நேரம் பார்த்தேன்.  பேய்னா, பேய்! அப்படிப் பேய்! ஒண்ணில்லை, ரெண்டில்லை, பேய்க்கூட்டமே இருக்கு படத்தில். தங்களுக்குப் பரிசாகக் கிடைக்கும் ஊரை விட்டுத் தள்ளி இருக்கும் பங்களாவை வாங்கி ஹோட்டல் நடத்தும் கிரணும், அவன் மனைவியும் அமானுஷ்யமான நிகழ்ச்சிகள், சம்பவங்கள், ஆட்கள் எனப் பார்க்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைச் சந்தேகிக்க, கிரணைப் பிடித்துச் செல்லும் போலீஸ்காரரோ அங்கே புதையல் இருப்பதாகச் சந்தேகப் படுகிறார்.

கிரணின் நண்பனும் ஹோட்டலுக்கு மானேஜருமாக இருக்கும் வாலிபன், அந்த பங்களாவில் பல வருஷங்களாகக் குடி இருக்கும் ஒரு நபரை முதலில் பார்த்துப் பேய் என நினைத்துப் பயந்தாலும் பின்னால் அந்த நபர் பக்கத்தில் படுக்காமல் தூக்கம் வரவில்லைனு தேடிப் பிடிச்சு இழுத்து வந்து படுக்க வைப்பது அத்தனை திகிலுக்கும் நடுவில் நல்ல நகைச்சுவை. அதே போல் கழிவறையில் தலைகீழாகக் க்ளோசெட்டில் கிடக்கும் நபர். பார்த்தாலே திகில். பங்களாவில் பல வருஷங்களாகக் குடி இருக்கும் நபரின் உதவியைக் கொண்டே அந்தப் பேய் அங்கே வரும் அனைவரையும் கொல்லுகிறது என்பதை அந்த நபர் விவரித்த விதம் நல்ல திகிலோடு படமாக்கப் பட்டிருந்தது.

மழையில் நனைந்த அந்த இளைஞனை(பங்களாவில் நெடுநாட்களாய்த் தங்கி இருந்தவர் இளைஞனாக இருந்தப்போ நடந்த சம்பவம்)தலையைத் துடைத்து விடுவதாகச் சொல்லி ஆரம்பத்தில் இதமாகச் செய்து கொண்டிருந்த பேய் பின்னர் சுய உருவம் பெற்று மோத ஆரம்பிப்பதும், "பன்னிக்குட்டி,மூஞ்சி, வெளியே வா, வாடா,வாடானு ஒவ்வொருத்தராகக் கூப்பிட்டுப் பார்த்துப் பேயிடம் மாட்டிக் கொள்ளுவதும் மயிர்க்கூச்செறிய வைத்தது என்றால் பொய்யில்லை. இப்போப் பேய் வரும்னு தெரிஞ்சாலும் அதைக் கொண்டு வந்திருக்கும் விதமும், பின்னணி இசையும் திகிலை அதிகப் படுத்தியது.  முடிவில் தான் சொதப்பல். கிரணை  ஏற்கெனவே யாருக்குப் பயந்து ஓடி வந்தாரோ அந்த ரௌடி வந்து மிரட்டுகிறார்.  கிரண்  விற்ற லேகியத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த ரௌடிக்குக் கிரணே பெண் பார்த்துக் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று முதலில் கட்டளை போட்டிருந்த அவர் இப்போது இந்த பங்களாவைப் பார்த்ததும், கோடிக்கணக்கில் கிடைக்கும் சொத்துக்கு ஆசைப்பட்டுக் கிரணிடம் வற்புறுத்தி அதை எழுதி வாங்கிக் கொள்கிறார்.

கிரணையும் அவர் காதலி ஸ்மிதா, ஹோட்டல் மானேஜர் சரத், அவர் தங்கை சரண்யா ஆகியோரை வீட்டை விட்டு விரட்டி விடுகிறார். அப்புறமாத் தான் கதை முடிவு. அதான் சொதப்பல். சட்டுனு முடிவதால் முடிவைப் பார்த்துக் கொஞ்சம் ஏமாந்து விட்டேன். என்றாலும் நல்லா வாய் விட்டுச் சிரிக்கவும், திகில் கொள்ளவும் வைத்த படம் இது. மற்றக் காமா, சோமா படங்களுக்கு இது பரவாயில்லை. :) சொல்ல மறந்துட்டேனே, நடிகர்கள் யாரையும் அடையாளம் தெரியலை. மயில்சாமியையும் கிரணை மிரட்டும் ரௌடியாக வருபவரையும் தவிர. :)

13 comments:

  1. Replies
    1. என்னிக்கோ அதிசயமாப் பார்த்தாப் புகை விடாதீங்க தம்பி! :P :P :P :P

      Delete
  2. நான் "ஹோம் தியேட்டரி"ல் பார்த்தேன். மறுநாள் மாமா என்ற ஆங்கிலப் பேய்ப்படம் பார்த்தேன். எனக்கு ஒரு திகிலும் இல்லை!

    :))))))

    ReplyDelete
    Replies
    1. மாமானு ஆங்கிலப் படமா? ம்ம்ம்ம்ம்? வந்தால் பார்க்கிறேன்.

      Delete
  3. Replies
    1. ஏன்? டிடிக்குத் திகில் படம்னா பயமா?:)

      Delete
  4. நானும் இந்தபடத்தை முன்பே பார்த்தேன்..ரசிக்கும் படியாக எடுத்து சென்று முடிவில்தான் சொதப்பி இருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ராம்வி, சுத்தமாய்ச் சொதப்பல்! :(

      Delete
  5. படத்தைப் பற்றி நன்றாக விவரித்துள்ளீர்கள் அம்மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அனிதாஷிவா, முதல் வருகை? நன்றிம்மா.

      Delete
    2. முன்னரே வந்திருக்கீங்கனு நினைக்கிறேன்.

      Delete
  6. வல்லிசிம்ஹன் has left a new comment on your post "யாமிருக்க பயமே! :)":

    Emma pad ammu peyarE sollaliye ma. Unbalance bayamuruththiyaachchaa.

    ReplyDelete
    Replies
    1. படத்தோட பெயரே "யாமிருக்க பயமே" தான் ரேவதி! :)

      Delete