Saturday, April 11, 2015

திருமோகூர் சக்கரத்தாழ்வாரிடம் பிரார்த்தியுங்கள்

திருமோகூர்

மேற்கண்ட சுட்டியில் கடைசியாக எழுதியது பார்க்கவும்.

இரண்டு பயணக்கட்டுரைகளை ஆரம்பிச்சுட்டுப்பாதியிலே நிறுத்தி இருக்கேன். ஒண்ணு பயணங்கள் முடிவதில்லை! அதிலே முக்கியமான கோயில்கள் பத்தி இன்னும் எழுதலை! ராமேஸ்வரம் போயிட்டுத் திரும்பி வரும் வழியிலே மதுரையிலே மீனாக்ஷியைப் பார்க்க வேண்டி வண்டியை நிறுத்தினோம்.  ஆனால் அப்போது இருந்த எக்கச்சக்கக் கூட்டத்தில் மீனாக்ஷியைப் பார்ப்பது கடினம் எனத் தோன்றியதால் போகவில்லை.  ரொம்பவே வருத்தமாக இருந்தது.  சரி, இப்போக் காளமேகப் பெருமாள் கோயிலுக்கு மறுபடி போவோமா?  ஏனோ தெரியவில்லை! படம் எடுக்கணும்னே தோணலை! காமிரா கொண்டு போயிருந்தும் படங்கள் எடுக்காமல் தான் இருந்தேன். அதற்கேற்றாற்போல் காமிராவை ஆட்டோவிலும் வைத்து விட்டேன். :(

பெருமாள் சந்நிதிக்கு இடப்புறமாய்த் தென் மேற்குப் பகுதியில் தாயார் சந்நிதியும் அதன் பின்னால் சக்கரத்தாழ்வார் சந்நிதியும் காணப்படுகிறது.  தாயார் மோகனவல்லிப் படிதாண்டாப் பத்தினி என்பதை ஏற்கெனவே பார்த்தோம்.  அங்கே தரிசனம் முடித்த பின்னர் பின்னாலுள்ள சக்கரத்தாழ்வார் சந்நிதிக்குச் சென்றோம்.  மஹாவிஷ்ணுவின் ஐந்து படைக்கலன்களில் முதன்மையானது சக்கரமே! சக்கரத்தையும் ஒரு ஆழ்வாராகவே கருதுகின்றனர்.  திருவாழி ஆழ்வான் என அழைக்கப்படும் சுதர்சனம் பெருமாளை விட்டுப் பிரிவதே இல்லை.

திருமோகூர் க்கான பட முடிவு

படம் நன்றி தினமலர்

இந்தச் சக்கரத்தாழ்வார் மிக விசேஷமானவர். மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதிதேவதைகள் பொறிக்கப்பட்டுள்ளன்.  உற்சவர் சிலையிலோ ஆறு வட்டங்களுக்குள்ளாக 154 எழுத்துகள் பொறித்திருக்க, 48 தேவதைகள் சுற்றிலும் இருக்க பதினாறு திருக்கரங்களிலும் பதினாறு விதமான படைக்கலன்கள் ஏந்தி முக்கண்ணனாகக் காட்சி தருகிறார்.  திருமுடி அக்னிகிரீடத்துடன் காட்சி அளிக்கிறது. இதோ, ஓடி வந்தேன் என ஓடி வரும் நிலையில் காட்சி தருகிறார். சுதர்சனச் சக்கரம் எழுதினால் பின்னால் நரசிம்மர் வர வேண்டும். அதன்படியே இங்கேயும் பின்னால் யோக நரசிம்மர் நான்கு விதமான சக்ராயுதங்களை ஏந்திய வண்ணம் கால்களை மடக்கி யோக நிலையில் காட்சி அளிக்கிறார்.

இவரை வேண்டினால் எல்லாக் காரியங்களும் பலிதமாகும் என்பது ஐதீகம்.  ஆறு முறைகள் அல்லது பனிரண்டு முறைகள் வலம் வந்தால் மரணபயம், திருமணப் பேறு, குழந்தைப்பேறு, எதிரிகளுக்கு அஞ்சாமை, தொழிலில் வெற்றி ஆகியன ஏற்படும் என்பது மக்கள் நம்பிக்கை.  சக்கரத்தாழ்வாரைப் பிரார்த்தித்ததும் ஆண்டாள் சந்நிதியில் ஆண்டாளையும் வணங்கிப் பின்னர் வெளியே வந்து ஆட்டோவைத் தேடிக் கண்டு பிடித்து மதுரை செல்லும் பேருந்து நிற்குமிடத்திற்கு விடச் சொன்னோம்.  ஆட்டோ ஓட்டுநரும் அப்படியே செய்தார்.  மதுரை செல்லும் பேருந்தும் வந்தது.  ஏறிக் கொண்டு பெரியார் பேருந்து நிலையத்திற்குச் சீட்டு வாங்கினோம்.

ஆனால் நாங்கள் போகவேண்டிய இடம் தானப்ப முதலி அக்ரஹாரத்தில் உள்ள கதிர் பாலஸ் என்னும் ஹோட்டல். அதைத் தான் இணையத்தில் தேடிக் கண்டு பிடித்திருந்தேன். நக்ஷத்திர அந்தஸ்து கொடுத்திருந்தனர்.  ஆனாலும் அறை வாடகை ஆயிரத்திற்குள் (ஏசி இல்லாமல்) இருந்தது.  ஆகவே அதைத் தேர்ந்தெடுத்திருந்தேன். அது எவ்வளவு தப்பு என்பது போனபின்பு தான் புரிந்தது. :(

8 comments:

  1. படித்தேன். தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், இந்தக் கோயில் எல்லாம் பார்த்திருப்பீங்க!

      Delete
  2. இணையத்தில் தேடி ஹோட்டல் அறை புக் பண்ணுவது சில நேரங்களில் தவறாகி விடுகிறதுநாங்கள் எங்காவது வெளியூரில் தங்க வேண்டுமானால் என் மகன் அவனது நண்பர்கள் மூலம் பதிவு செய்வான் இது வரை பெரிய இரச்சனை இருக்கவில்லை. மதுரையில் ஒரு முறை டைம்ஸ் நௌ எனும் ஹோட்டலில் பதிவு செய்துகார் நிறுத்தக் கொஞ்சம் சிரமம் இருந்தது

    ReplyDelete
    Replies
    1. இணையம் மூலம் எந்த ஒரு வேலையையும் முடிக்க எனக்குத் தயக்கம் தான். அதுக்காகவே இணைய வசதி உள்ள பணப்பரிமாற்றங்கள் செய்வது இல்லை. இது என் கணவர் ரொம்பச் சொன்னதாலே தேடிக் கண்டெடுத்தேன். ஆனால் ஏன் போனோம்னு ஆயிடுச்சு! :(

      Delete
  3. நான் திருமோகூர் பக்தனாச்சே. மதுரை போகச்செல்லாம் அங்கு போய் வருவேன். போன ஜூலையில் போய் வந்தோம்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? மதுரையிலேயே பிறந்து வளர்ந்தும் எனக்கு இது முதல்முறை "இ"சார்.

      Delete