எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, April 04, 2015

ஆதித்த கரிகாலன் யாரால் கொலையுண்டான்?

பொன்னியின் செல்வன் க்கான பட முடிவு

பல ஆயிரம் வருடங்களாக எல்லோரும் மண்டையை உடைத்துக் கொள்ளும் ஒரு விஷயம்! பல சரித்திர ஆசிரியர்களும் இதைக் குறித்து எழுத முயற்சித்த ஒரு விஷயம்!  நான் நந்திபுரத்து நாயகி படிச்சிருக்கேன்.  நல்ல வேளையா பாலகுமாரனின் "உடையார்" படிக்கலை! பொறுமை இருக்காது.  அந்த மர்மத்தை இதிலே உடைச்சிருக்கார் காலச்சக்கரம் நரசிம்மா! படிச்சதும் எனக்குத் தோன்றிய முதல் விஷயம், இப்போக் கல்கி இருந்து இதைப் படிச்சால் என்ன சொல்லுவார் என்பதே!

 பொன்னியின் செல்வனைத் திரும்பத் திரும்பப் படிச்சாலும் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் கல்கி சாதுர்யமாக விளக்கை அணைத்து இருளைச் சூழ விட்டு, அழுகைக் குரல்களை மட்டும் கேட்க விட்டு, எரியும் விளக்குச் சுடர் அணையும் தருவாயில் காட்டும் மணிமேகலையின் பீதி நிறைந்த முகத்தைக் காட்டி, மரணாவஸ்தையில் முனகும் குரல் என்றும் (அப்போவே யாரானும் என்ன, ஏதுனு கண்டுபிடிச்சிருந்தா ஆதித்த கரிகாலனைக் காப்பாத்தி இருக்கலாமோ?) சொல்லி இருப்பார்.  அப்போவும் ஆதித்த கரிகாலன் இறந்து விழுந்ததைச் சொல்லி இருக்கவே மாட்டார். வந்தியத் தேவன் யாழ்க் களஞ்சியத்திலிருந்து வந்து மெல்ல மெல்ல நகர்ந்து வந்து கண்டுபிடிக்கும்போது தான் ஆதித்த கரிகாலன் இறந்து விட்டான் என அந்த வந்தியத் தேவன் மூலமாகவே சொல்லி இருப்பார்.

ஆனால் காலச்சக்கரம்(காலச்சக்கரம் இன்னும் படிக்கலை, ரங்க ராட்டினத்தைப் படிச்சுட்டு அப்புறமா இதை முதல்லே படிச்சேன்.) நரசிம்மா ஆதித்த கரிகாலன் கடம்பூரிலே இறக்கவில்லை என்றும்,  ஏற்கெனவே இறந்து போய் அவன் இறந்த உடல் தான் கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்கு வருவதாய்ச் சொல்லி இருக்கார். அதற்கான ஆதாரங்களையும் சொல்லுகிறார். இதுக்காக மலேயாவில் இருந்தெல்லாம் ஆதாரங்களைத் திரட்டிக் கொடுத்திருக்கார். குடந்தை ஜோசியர் வரலை; ஆழ்வார்க்கடியான் வரலை.  மத்தபடி இங்கே பவிசுக்காரங்க (பவிஷ்யக்காரர்கள்) எதிர்காலத்தைக் கணிப்பவர்கள் வராங்க. நகைச்சுவை என்பது மருந்துக்கும் இல்லை! ரொம்ப சீரியஸான ஆளா இருப்பாரோ? ஆங்காங்கே கொஞ்சம் நகையைச் சுவையாகத் தூவி இருந்திருக்கலாம்.
பொன்னியின் செல்வன் க்கான பட முடிவு
ஆனால் ஒன்று புத்தகம் கடைசி வரை விறுவிறுப்புக் குறையவில்லை!  இத்தனைக்கும் இந்தப் புத்தகம் பத்தி என் தம்பி கிட்டேப் பேசினப்போ அவர் அவசரக் குடுக்கையாகக் கதையின் மர்மத்தைப் போட்டு உடைத்திருந்தார்.  என் தம்பி சின்ன வயசிலே இருந்தே அப்படித் தான்.  சங்கர்லால் கதைகள் முடியும் நேரம்  அவசரம் அவசரமா அவர் முன்னாடி படிச்சுட்டு, முடிவைச் சொல்லி என்னை வெறுப்பேத்துவார். அந்த நாள் சினிமா பார்க்கும்போதும் இப்படித் தான்.  முடிவைச் சொன்னார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!  இப்போ 60 வயது ஆகப் போகுது; இன்னமும் அந்தக் குணம் போகலை! ஹிஹிஹி! ஆனாலும் கடைசி வரை கதை விறுவிறுப்பாகவே இருந்தது!  குந்தவையை, வந்தியத் தேவனை எல்லாம் இப்படியும் நினைச்சுப் பார்க்க முடியுமா?  பொன்னியின் செல்வனின் நல்லவங்களா வந்த அநேகர் இதிலே கெட்டவர்களா வராங்க! படிச்சா அதிர்ச்சி ஏற்படும் தான்! ஆனால் எனக்குச் சில சந்தேகங்கள். இப்போத் தான் எங்கள் ப்ளாக் எழுதின "ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?" பதிவையும் போய்ப் பார்த்தேன்.  அங்கேயும் எனக்கு வந்த சந்தேகங்களை பானுமுருகன் என்பவர் கேட்டிருக்கார்.

இந்த நாவலை இப்போத் தான் படிச்சு முடிச்சேன்.  வாழ்க கிரஹணம்! :)

பானுமுருகனின் இந்த சந்தேகம் எனக்கும் வந்தது.
//ஆவணி சதயத்திற்கு அடுத்த மாதம் ஐப்பசி சதயம் என்கிறார். ஒன்யும் புரீல.
ஆதித்தனுக்கு அத்தைப்பெண் குந்தவையின் மகனுக்கு எப்படி சகோதரியாவாள் ? அதும் புரீல்ல.//

இது தான் பானு முருகன் அவர்களின் சந்தேகம்.  அதே சந்தேகம் எனக்கும் வந்தது. 

ஆவணிக்குப் பின்னர் புரட்டாசி சதயம் அப்புறமாத் தானே ஐப்பசி சதயம்  அதுக்குள்ளே ஆவணி சதயத்திலே பிறந்த குழந்தைக்கு 2 மாசம் ஆகி இருக்கும். பிறந்த குழந்தைக்கும், பிறந்து 2 மாசம் ஆன குழந்தைக்கும்  உடல் வளர்ச்சியில் வித்தியாசம் தெரியாமலா இருந்திருக்கும்? புரியத் தான் இல்லை! :)  அதே போல் சங்கு மச்சம்! இந்தச் சங்கு மச்சம் இல்லாமலேயே ஆதித்தனின் தம்பி உத்தமசோழனாக அரியணையில் அமர்ந்தது எப்படி?  இங்கே அந்தப் பரம்பரை வழக்கம் மாறுபடுகிறதே! அதோடு ஆதித்த கரிகாலனுக்குச் சங்கு மச்சம் இருக்கிறதா இல்லையா என்று பார்க்கப் போன குந்தவை கடைசி வரை அதைப் பார்த்ததாகவும் தெரியவில்லை.  அப்படி எனில் ஆதித்தனுக்குச் சங்கு மச்சம் இல்லையா? அரியணை ஏறாமல் போன மற்றச் சோழகுல வாரிசுகளுக்கும் இந்த மச்சம் அமையவில்லையா? அதை எல்லாம் விளக்கி இருக்கலாம்.

அதே போல் ஆதித்தனின் அத்தைப் பெண் என்றால் குந்தவைக்கும் அத்தை பெண் தான். குந்தவையின் மகனுக்கு சகோதரி முறை எப்படி வரும்? புரியலை! மண்டையைக் குழப்பிக் கொண்டேன். தாயின் அத்தை பெண் என்னும் முறை தான் வரும். ரொம்பக் குழம்பிப் போச்சோ எனக்கு? ம்ம்ம்ம்ம்.
கடைசியில் கொஞ்சம் அவசரமா முடிச்சுட்டாரோ என்னும்படி நிகழ்ச்சிகள் வேகமாக நடக்கின்றன.  இன்னும் கொஞ்சம் விபரங்கள் கொடுத்துச் சேர்த்திருக்கலாம்.  உத்தமசோழன் மறைவாக வளர்ந்து வருவது குறித்து ஒரு குறிப்பானும் காட்டி இருந்திருக்கலாம். அனைத்தும் தெரிந்த கண்டராதித்தர் மௌனமாக ஏன் இருந்தார்?

சுந்தர சோழருக்குத் தன் மகளைக் குறித்து சந்தேகம் சிறிதும் வரவில்லையா? வானவன்மாதேவிக்குக் குழந்தை மாறியது தெரியவில்லையா?  மச்சம் இல்லாத குழந்தை போய் மச்சம் உள்ள குழந்தை வந்திருப்பது தெரிந்திருக்க வேண்டுமே!  என்னதான் குந்தவையே அந்தக் குழந்தையை வளர்க்கிறாள் என்று காரணம் சொன்னாலும் கொஞ்சம் அங்க அடையாளங்கள் மாறித்தானே இருக்கும்.

பொன்னியின் செல்வனின் வரும் நந்தினி இதிலே நந்தாவிளக்காக வந்து அருண்மொழிவர்மனைக் கல்யாணம் செய்து கொள்கிறாள். இவள் தான் ஆதித்த கரிகாலனின் அத்தை பெண் என்கிறார்கள். அப்படி எனில் குந்தவைக்கும் அத்தை பெண் தானே! பொன்னியின் செல்வனில் வரும் அநேகக் கதாபாத்திரங்களும் இதிலே வந்தாலும் நிறைவான பாத்திரங்களாகப் பரிமளிக்கவில்லையோ என்னும் எண்ணம் தோன்றுகிறது. கடம்பூர் சம்புவரையர் மாளிகையும், கந்தமாறனும், சதியாலோசனையும், மதுராந்தகனுக்குப் பட்டம் என்பதும் இதிலேயும் வந்தாலும் அவற்றின் உள்ளார்ந்த பொருளே வேறு மாதிரி வருது. பழுவேட்டரையர் ஏன் குற்றவாளியைக் காட்டிக் கொடுக்கவில்லை? புதிராகத் தான் இருக்கிறது!

ஆனாலும் சோழர்களின் பாரம்பரியமாக பட்டாபிஷேஹத்தின் போது பாஞ்சஜன்யச் சங்கிலே தான் அபிஷேஹம் செய்து கொள்வார்கள் என்றும் கையில் புரச இலையும், தண்டமும் வைத்திருப்பார்கள் என்றும் அவை எல்லாம் மலேயாவுக்குப் போய்விட்டது என்றும் சொல்லி இருப்பது பாண்டியர்களுக்கு இந்திரன் அளித்த ரத்தினஹாரமும், மணிமுடியும் ஈழத்தில் ஒளித்து வைக்கப்பட்டதை நினைவுறுத்தியது.  அதை மீட்டது ராஜேந்திர சோழன் காலத்திலே தான்.  அதே போல் ராஜேந்திர சோழன் மலேயாவுக்கும் போய் இவற்றை மீட்டுக் கொண்டு வந்தானா என்பது தெரியவில்லை. திரு நரசிம்மாவே அதைக் குறித்து எழுதினால் தான் தெரியும்.  ஆனால் பிற்காலச் சோழர்கள் பெருமையுடன் வாழ்ந்தார்கள் என அனைத்து வரலாற்று ஆசிரியர்களும் சொல்ல இவர் குந்தவையைச் சோழ தேசக் கிருமி என்பதோடு அல்லாமல், "கிருமி கண்ட சோழன்" பற்றியும் குறிப்பிட்டுச் சோழ குலம் நசிந்தது இதனால் தான் என்கிறார்.  சோழர்களைப் பிடிக்காதோ?  அப்போ நரசிம்மா பாண்டிய நாட்டவரா? ஹை, ஜாலி!

புத்தகம் பெயர் சங்கதாரா

எழுதியவர் "காலச்சக்கரம்" நரசிம்மா

வானதி பதிப்பகம் வெளியீடு

18 comments:

  1. Replies
    1. வாங்க எல்கே, எது மாற்றுக்கோணம்? கதை? அல்லது விமரிசனம்? :)

      Delete
  2. எது எப்படியோ, விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை! திரு நரசிம்மா எங்கள் ப்ளாக்கில் வந்து பதிலும் சொல்லி இருந்தார். நீங்களும் அங்கு பின்னூட்டம் இட்டிருந்தீர்கள். First impression is the best impression என்பார்கள். அதனாலேயே நாம் பல விஷயங்களை மாற்றிக் கொள்ள முயல்வதில்லை! :))))

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம், பாலகணேஷ் நரசிம்மாவிடம் விடைகளைக் கேட்டுச் சொல்வதாகச் சொல்லி இருக்கார். பார்ப்போம். ஆனால் நரசிம்மாவின் முயற்சி அருமையானது. விறுவிறுப்பாய்க் கொண்டு செல்லவும் தெரிந்திருக்கிறது என்றாலும் முடிச்சுக்களைப் போட்டவர் அவற்றைக் குறித்துச் சரியான விளக்கம் கொடுத்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது! :) பார்ப்போம்!

      Delete
  3. Replies
    1. நன்றி டிடி. உண்மையாகவே கடைசிவரை விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை.

      Delete
  4. சுத்தம்‘! உங்க பிரதர் உங்கள்ட்ட மட்டுந்தான் கதையோட முடிச்சை உடைச்சார்னா.... நீங்க எல்லார் மத்திலயும் போட்டு ஒடைச்சுட்டேளே... அவ்வ்வ்வ்.... உங்கள் சந்தேகங்களை திரு.நரசிம்மாவின் பார்வைக்கு வைக்கிறேன். அவரிடம்தான் சரியான பதில் உண்டு இதற்கெல்லாம்.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, நான் எங்கே கதையோட முடிச்சை உடைச்சேன்? சந்தேகங்களுக்கு பதில் வரும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன். :))))

      Delete
  5. ஏனுங்கோ... பதிவு பூராவுமே இந்த புத்தகம், இந்த நாவல்னே எழுதியிருக்கேளே... படிக்கறவா வெத்தலையில மை போட்டு இந்த புத்தகம் பேரு ‘சங்க தாரா’ அப்படின்னு கண்டுபிடிச்சுக்கணுமோ? ஹா... ஹா.. ஹா...

    ReplyDelete
    Replies
    1. அட!!! அது ஒரு சஸ்பென்ஸாவது வைக்கலாமேனு தான்! :))))) ஹிஹிஹிஹி, கதையோட பெயர் சொல்லலையா? மறந்திருக்கேன்! :) திருத்தறேன்.

      Delete
  6. விள‌க்கமாக, அருமையாக அலசியிருக்கிறீர்கள்!

    நீங்கள் குறிப்பிட்ட நாவலை முன்பு மின்னல் வரிகள் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டிருந்தார். அதனால் ஒரு வருடத்திற்கு முன்னால் இந்த நாவலைப் படித்து விட்டேன். படித்ததும் ஏமாற்றமாகத்தான் இருந்தது. பொன்னியின் செல்வனில் முக்கிய குறை ஆதித்த கரிகாலனின் மரணம் தான். பழம்பெரும் சரித்திர ஆசிரியர்கள் எல்லோராலும் கண்டுபிடிக்க முடியாத விஷயம் இது. அதனாலேயே கல்கி கடைசிவரை நந்தினி, பழுவேட்டரையர் என்று நிறைய பேர் மீது சந்தேகம் நமக்கு வருமாறு காட்டியிருப்பார். கதை அதனால் ஒரு முழுமையடைந்த நிறைவு நமக்கு ஏற்படாது. வேடிக்கை என்னவென்றால் இந்த குறையையும் மீறி கல்கியின் அழகுத்தமிழ் தோய்ந்த எழுத்து நடையும் கதையை கடைசி வரை கொண்டு போகும் விறுவிறுப்பும் நம்மை அப்படியே கட்டிப்போட்டு விடும். அதனாலோ என்னவோ குந்தவியின் கதாபாத்திரத்தை இதில் ஏற்றுக்கொள்ள‌ முடியவில்லை!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மனோ சாமிநாதன், நானும் கணேஷ் பாலா எழுதினதையும் எங்கள் ப்ளாக் எழுதினதையும் படிச்சிருக்கேன். அதுலே இருந்து இந்த நாவல் படிக்க ஆசை! ஒரு வழியா ஆதி வெங்கட் தயவாலே படிக்கக் கிடைச்சது. :) ம்ம்ம்ம்ம்ம், பொன்னியின் செல்வனிலும் சரி, நந்திபுரத்து நாயகியிலும் சரி, இந்த நாவலிலும் சரி, குந்தவை தான் பெயர். குந்தவி "பார்த்திபன் கனவு" நாவலின் கதாநாயகி. பல்லவ இளவரசி. :)

      Delete
  7. சுவாரசியமான நாவலாக இருக்கே! நான் பொன்னியின் செல்வம் மாத்திரம் படித்திருக்கேன் . இதையும் படிக்க வேண்டு. நன்றி பகிர்வுக்கு..

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரமாரவி, படிச்சுப் பாருங்க. நல்ல உழைப்பு.

      Delete
  8. கதையைப் படித்திருந்தால்தானே விமரிசனத்தை ரசிக்க முடியும். சரித்திர நிகழ்வுகளின் பின்னணி தெரியாவிட்டால் கற்பனைக் கடிவாளம் கை விட்டுப் போகும்

    ReplyDelete
    Replies
    1. பொன்னியின் செல்வனாவது படிச்சிருப்பீங்க இல்ல? அது போதுமே விமரிசனம் புரிஞ்சுக்கவும், ரசிக்கவும். :)

      Delete
  9. நம்ம, நம்முடைய முன்னோர்கள் நல்லவங்களாக இருந்திருப்பார்கள் என்று நம்புகிறோம். கல்கியின் எழுத்து வன்மையால் குந்தவையின்மீதும் வந்தியத்தேவரின்மீதும் நல்ல எண்ணம் வைத்துள்ளோம். அதனால், சங்கதாராவை digest பண்ண முடியலை. நிறைய இடத்துல கதைல ஓட்டை. (குந்தவையை வந்தியத்தேவர் போற போக்கில் ஆண்டு, குந்தவைக்கு குழந்தை பிறக்கிறது என்பதெல்லாம் ரொம்ப டுபாக்கூர் விஷயம்). இருந்தபோதும், ஆதித்த கரிகாலன் மரணத்துக்குச் சரியான காரணம் கூறியிருக்கிறார். கொண்டுபோன விதம் ரசமாக இல்லை.

    ReplyDelete
  10. பெற்ற தாயை வேறு கோணத்தில் பார்க்க முடியாது... மன்னிக்கவும்

    ReplyDelete