Friday, July 03, 2015

நான் வந்துட்டேனே!

கூகிள் ரொம்பத் தொந்திரவு பண்ணுது ப்ளாகர் ஹிந்தியிலே ஆரம்பினு! ஜி+இல் ஆரம்பிக்கட்டுமானு  கேட்டிருந்தேன். யாரும் பார்க்கலை போல! பேசாம ஆரம்பிச்சுட்டா என்னனு தோணுது!  முகநூலில் போட்டுப் பார்க்கிறேன். என்ன சொல்றீங்க? ஆரம்பிச்சுடலாமா?

ஹிஹிஹி நாலு நாளா இல்லைனதும் எல்லோருக்கும் ஜாலிலோ ஜிம்கானாவா இருந்து இருக்குமே! ரங்குவைப் பார்த்தது போதாதுனு பத்துவையும் பார்க்கணும்னு கிளம்பினோம். பத்துவைப் பார்த்துட்டுக் காலம்பர நம்ம சுப்புக்குட்டிங்களுக்கு ராஜாவைப் பார்த்தோம். அப்புறமாக் கேஷுவைப் பார்த்துட்டு, அரண்மனையில் காலார உலாவிவிட்டு, சாயந்திரமாக் கன்னியைப் பார்த்துட்டு அப்புறமா மும்மூர்த்திகளையும் பார்த்துட்டு வந்து சேர்ந்தோம். எல்லாம் விபரமாச் சொல்றேன். இப்போதைக்கு நான் வந்துட்டேன் என்பது தான் தலையாய செய்தி! 

12 comments:

  1. வாங்க.... வாங்க....

    ஹிந்தியில் ப்ளாக் ஆரம்பிக்கலாமான்னு நானும் ஏற்கெனவே ஃபேஸ்புக்கில் கேட்டுட்டேனாக்கும்!

    'திங்க'க்கிழமை ஹை... பாஸிட்டிவ் செய்திகள் ஹை, ஞாயிறு படம் ஹை....!!!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், "திங்க"க்கிழமை பார்த்தாச்சு ஹை! கொத்துமல்லித் தொக்கு ஹை! :) ஞாயிறும், பாசிடிவ் செய்திகளும் கூடப் பார்த்தாச்சு ஹை!

      Delete
  2. Replies
    1. வாங்க வா.தி. அதானே! உங்களுக்கு அப்படித் தான் இருக்கும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  3. திருவனந்தபுரம், திருவட்டாறு , பத்மநாபபுரம், கன்யாகுமாரி , சுசீந்திரம் எல்லாம் ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வந்தாச்சு போல இருக்கே !

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, வாங்க ஷோபா, ஆமாம்!

      Delete
  4. மூன்று வயதுக் குழந்தைகள் நினைக்கும் வேகமும் பேசும் வேகமும் ஒத்து வராது. புரிவதே கஷ்டம் ஷோபா சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறாரோ. வெல்கம் பேக்.

    ReplyDelete
    Replies
    1. hihihi ஜிஎம்பி சார், அப்போ எனக்கு மூணு வயசுனு சொல்றீங்க? ஹிஹிஹி, தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

      Delete
  5. வாங்க... வாங்க... அசத்துங்க அம்மா...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, நன்றிப்பா.

      Delete
  6. ஹிந்தியில் ப்ளாக் ஆரம்பிக்க எல்லோரையும் கேட்கிறாதா கூகுள்? எனக்கும் வந்தது இதுபோல ஒரு நோடிபிகேஷன். புரியாத பாஷையில் என்ன எழுத முடியும்? உங்களுக்கு நன்றாக தெரியும் என்பதால் எழுத ஆரம்பிக்கலாம். ஆரம்பியுங்கள். வாழ்த்துக்கள்.
    நீங்கள் திரும்பி வந்தது போல நானும் திரும்பி வந்திருக்கிறேன். இன்னும் ஒரு வாரம் திரும்ப பயணம்!
    நேற்று உங்கள் பதிவுகள் சிலவற்றை வரிசையாகப் படித்துக் கொண்டு போய்விட்டேன். ஆண்டாளம்மா, திருவனந்தபுரத்தில் இரவு தங்கியது, ஒருவழியாக .. என்று.
    தொடர்ந்து வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரஞ்சனி, வருகைக்கு நன்றி. மெதுவாப் படிங்க எல்லாத்தையும். ஒண்ணும் அவசரம் இல்லை..:)

      Delete