Tuesday, July 21, 2015

ஓர் முக்கிய அறிவிப்பு!

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவெனில் "ஆடிக்காற்று"ப் பதிவுக்கு எக்கச்சக்கமான வருகை தந்து ஆதரித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதோடு இங்கே ஶ்ரீரங்கம், சமயபுரம் பகுதிகளில் மின் வெட்டுக் கடுமையாக இருப்பதாலும் நேற்றுக் கிட்டத்தட்டப் பத்து மணி நேரம் மின்சாரம் (பகலில்) இல்லாததாலும் என்னால் இணையத்துக்கு வர முடியவில்லை என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மின்சாரம் இல்லாததால் வீட்டில் கொஞ்சம் வேலைகள் நடந்தது. ஹிஹிஹி, இல்லைனா தள்ளிப் போட்டிருப்பேன்.  சில, பல புத்தகங்கள் படித்தேன். நீங்கள் கொடுக்கும் பின்னூட்டங்கள் நான் பார்க்கும்போது தான் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே தாமதமானால் பின்னூட்டங்களைக் காக்காய் தூக்கிப் போச்சோனு  நினைச்சு வருந்த வேண்டாம்.  காக்காயை விரட்டிட்டு நாங்க தூக்கி வந்துடுவோமுல்ல!


ஶ்ரீராம் செய்த வெண்டைக்காய் சப்ஜியைக் கூட இன்னிக்குத் தான் பார்த்தேன். நேத்துச் செய்தது என்பதால் சாப்பிடவில்லை. :) இன்னிக்கு மத்தியானம் மின்சாரம் இருந்தால் வழக்கம் போல் ரம்பம் போடுவேன் என்பதையும் மகிழ்வோடு தெரிவிக்கிறேன். உங்க அதிர்ஷ்டம் எப்படியோ! :))))

13 comments:

  1. ஏன் மின்சாரம் இப்படிப் படுத்துகிறது அங்கு? ஏதோ ரிப்பேர் வேலை நடப்பதாகச் சொல்லி இருந்தீர்களோ? பகலாயினும், இரவாயினும் மின்சாரம் இல்லாவிட்டால் கஷ்டம்தான். ஒரே ப்ளஸ், மற்ற வேலைகளைக் கவனிக்க முடியும் என்பதுதான்! குறிப்பாக, நீங்கள் சொல்லியிருப்பது போல புத்தகங்கள்!

    ReplyDelete
    Replies
    1. உயர் மின் அழுத்தக் கம்பிகள் மாற்றும் வேலை நடக்கிறதாம். எல்லா சப் ஸ்டேஷன்களிலும் வேலை நடப்பதால் மாற்றி மாற்றி ஒவ்வொரு பகுதியாக மின்சாரம் நின்று நின்று வருகிறது. ஆனால் எப்போப் போகும்,எப்போ வரும்னு சொல்ல முடிவதில்லை. :) நேத்து வாஷிங் மெஷினில் போட்டிருந்த துணிகளுக்கு இன்று தான் விடிவு காலம்! :)

      Delete
  2. Replies
    1. வாங்க வல்லி, நன்றி.

      Delete
  3. காத்திருக்கிறோம் அம்மா...

    ReplyDelete
  4. Angayuma? Podhaa koraikku inga nethula irundhu single phase thaan varudhu. Kitchen'la mattum no current, enna designo therla :(

    ReplyDelete
    Replies
    1. அங்கேயுமா ஏடிஎம்? சரியாப் போச்சு போங்க!

      Delete
  5. கூடிய மட்டும் தொடர்பில் இருங்கள். இல்லாவிட்டால் என்னாயிற்றோ ஏதாயிற்றோ என்னும் கவலை வந்து விடும் .

    ReplyDelete
    Replies
    1. முடிஞ்ச போது வருவேன் ஐயா! பதிவுகள் படிப்பதிலும் பின்னூட்டம் கொடுப்பதிலும் தான் தாமதம் ஆகிறது. :)

      Delete
  6. “““““““““““ இங்கே ஶ்ரீரங்கம், சமயபுரம் பகுதிகளில் மின் வெட்டுக் கடுமையாக இருப்பதாலும் நேற்றுக் கிட்டத்தட்டப் பத்து மணி நேரம் மின்சாரம் (பகலில்) இல்லாததாலும் என்னால் இணையத்துக்கு வர முடியவில்லை என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.“““““““““““““““


    அட நீங்க நம்ப ஊர்தானா..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


    அப்ப சரி.

    நானிருக்கும் இடத்தில் அவ்வளவாக மின்தடை இருப்பதில்லை.


    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அட????????????????? எங்கே இருக்கீங்க? இங்கேயும் சொல்லலாம், மாடரேஷன் இருக்கு. இல்லைனா தனி மடலிலேயும் சொல்லலாம். :) இப்போக் கொஞ்சம் பரவாயில்லை. மின்வெட்டுக் குறைந்திருக்கிறது. ஆனாலும் திடீர்னு போகும்; வரும்.

      Delete