Friday, July 24, 2015

ஒழுங்காப்பல் தேய்க்கிறீங்களா?


colgate paste with charcoal க்கான பட முடிவு




colgate paste with neem க்கான பட முடிவு




colgate paste with lemon க்கான பட முடிவு


ஒழுங்கா நான் பாட்டுக்கு உமிக்கரியிலே பல் தேய்ச்சுட்டு இருந்தேன். கெடுத்தாங்கப்பா! அதெல்லாம் கூடாது, பேஸ்ட், பிரஷ் தான்னு! எலுமிச்சம்பழ மூடியிலே உப்புத் தோய்த்தும் பல்லைச் சுத்தம் பண்ணி இருக்கேன். அதெல்லாம் எனாமலைக் கெடுத்துடும்னு சொல்லிட்டு இருந்துட்டு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
இப்போ மரத்துமேலேருந்து குதிச்சுட்டு, "உன் பேஸ்ட்லே உப்பு இருக்கா? எலுமிச்சை இருக்கா? இருந்தால் ரசம் வைக்கலாம்."னு சொல்றதோடு. சார்க்கோல் இருக்கானும் கேட்கிறாங்களே! என்னப்பா அநியாயம் இது! ஒழுங்கா நம்ம வழக்கப்படியே இருக்க விட்டிருந்தால் இப்போ உப்பு, எலுமிச்சை, உமிக்கரி னு தேட வேண்டாமுல்ல! சுத்தமா நம்ம வழக்கத்தையே மறக்கடிச்சுட்டு இப்போப் புதுசா அவங்க கண்டு பிடிப்பு மாதிரிச் சொல்றாங்களே! என்ன அநியாயம் இது! இதையும் பார்த்து ரசிக்கிறோமே! :(

கீழே உமிக்கரி செய்யும் விதம் கொடுத்திருக்கேன்.

உமிக்கரி செய்யும் விதம். நெல்லை அரிசியாக்கும்போது சுத்தம் செய்து தவிட்டைத் தனியாக எடுத்து விட்ட பின்னர் (தவிடு மாட்டுக்கு உணவாகும்.) கிடைக்கும் உமியைக் குவித்துவிட்டு அதன் நடுவே ஆழமான குழி தோண்டிக் கொண்டு அதில் நிறைய நெருப்புக் கனன்று கொண்டிருக்கும் கரியைப் போட்டு பின்னர் மேலே மூடிவிடுவார்கள். அது பாட்டுக்கு நாள் முழுவதும் உள்ளே கனன்று கனன்று பின்னர் மேலே வரை வந்து மெல்ல மெல்லக் கறுப்பு நிறம் பெற்று விடும். மறு நாள் அதை ஆறவிட்டுச் சலித்துப் பல் தேய்க்கக் கொடுப்பார்கள். ஒரு சிலர் இதில் வாசனைக்காக ஏலக்காய், கிராம்பு போன்றவை சேர்ப்பதுண்டு. (இரண்டுமே பல்லுக்கு நன்மை தரும்.)


இன்னொரு விதம்! நெல்லிலேயே பதராக இருக்கும். அதைக் கருக்கு என்பார்கள். அந்தக் கருக்கையும் சேகரித்துக் குவித்து மேற்சொன்ன முறையிலே கருக்குவார்கள். இதிலும் பல் தேய்க்கலாம். இதெல்லாம் எங்க வீடுகளில் அறுபதுகளின் கடைசி வரை செய்யப்பட்டு வந்தது. விபூதியும் வீட்டிலே தான் செய்வார்கள். தக்ளியில் நூல் நூற்றுச் சிட்டம் போட்டு அதைக் கதர்க்கடையில் கொடுத்து அதில் தான் அப்பா வேஷ்டிகள், துண்டுகள் வாங்குவார். எழுபதுகளுக்குப் பின்னர் எல்லாம் நாகரிக மயம்!  


ஹிஹிஹி, என்ன திடீர்னு பார்க்கிறவங்களுக்காக ஒரு டிஸ்கி:

சில மாதங்களாகப் பார்த்து வரும் பற்பசை விளம்பரத்தோட தாக்கம் தான் இது. எல்லாம் நம்ம நாட்டிலே ஒரு காலத்தில் கடைப்பிடித்து வந்தவையே! ஆலங்குச்சி மற்றும் வேப்பங்குச்சியில் பல் தேய்த்தால் நல்லது என்பதற்காக ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி எனப் பழமொழியே இருக்கு. ஆனால் பாருங்க! இதை எல்லாம் இப்போப் பற்பசை தயாரிக்கிறவங்க வந்து சொல்ல வேண்டி இருக்கு! ஆகவே நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்பதை இது மீண்டும் உறுதி செய்திருக்கிறது.

25 comments:

  1. நீங்க சொல்றது ரொம்ப சரிம்மா!..உப்பு இருக்கா? எலுமிச்சை இருக்கான்னெல்லாம் தனித்தனியா கேக்கறதுக்கு பதிலா, மொத்தமா 'ஊறுகா இருக்கா?'ன்னே கேக்கலாமேன்னும் நான் யோசிச்சிருக்கேன் :))!..என்னைப் பொறுத்தவரை, நம் கையே பிரஷ் ஆனால், பற்கள் அழுத்தமாகத் தேய்க்கப்படும்னு நினைக்கறதுண்டு..உமிக்கரி செய்முறை இப்பதான் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி அம்மா!..

    ReplyDelete
    Replies
    1. 'ஊறுகா இருக்கா?// குட் ஒன்! :-))))))

      Delete
  2. உபயோகமான தகவல் அம்மா... நன்றி...

    முன்னோர்கள் என்றுமே முட்டாள்கள் அல்ல...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, நன்றிப்பா.

      Delete
  3. உமிக்கரி கேள்விப்பட்ட இல்லை. எலுமிச்சை மூடியில் பல் தேய்ப்பது மிலிடெரியில் சகஜம் என்று படித்திருக்கிறேன்.
    எல்லாமே ஒரு வட்டம் தான்!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம் கிராமங்களிலே பார்த்திருக்கணுமே! :) எலுமிச்சை மூடியில் நான் நிறையத் தரம் தேய்ச்சிருக்கேன். :)

      Delete
  4. பழசையே புதுசு மாதிரி தருகிறார்கள்! எங்கள் வீட்டில் இதெல்லாம் செய்தது கிடையாது! புதுசு எனக்கு.

    எஜமான் படத்தில் வரும் 'ஆலப்போல் வேலப்போல்' பாடலும் அது சம்பந்தமான காட்சியும் நினைவுக்கு வருகின்றன!

    :)))

    ReplyDelete
    Replies
    1. எஜமான்? ஹிஹிஹி, நான் இந்த விஷயத்தில் ஒரு நிரக்ஷரகுக்ஷி! எங்கே நம்ம மன்னி? பார்வதீ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ உடனே வந்து விம் போட்டு விளக்கவும்.

      Delete
    2. எஜமான் படம் சூப்பர் ஸ்டார், மீனா நடிச்சது!.. ஸ்ரீராம் சார் குறிப்பிட்ட பாடல்ல, மீனா, கட்ட்ட்டுக் கட்டாஆஆ ஆலங்குச்சி, வேலங்குச்சி எல்லாம் க்ரூப் ஆக ஆடுகிற பெண் நடனக் கலைஞர்கள் கிட்ட கொடுத்து, அவங்க அதை ரஜினி கிட்ட தருவாங்க.. அவரும், ஆண் நடனக் கலைஞர்களும், பல்லு தேச்சிட்டே வரப்போரமா நடந்தாடி (?) வருவாங்க :))!.. இதுக்கு ஒரு லீட் சீன் வேறே உண்டு...

      Delete
    3. ஶ்ரீராம், (ஹேமநாத பாகவதர்) இது எப்பூடி இருக்கு? :))))) விட்டா ஃப்ரேமுக்கு ஃப்ரேம் பிச்சு உதறிடுவாங்க! :)

      Delete
    4. இதையும் பார்த்து வைக்கவும்! :))!.

      https://www.youtube.com/watch?v=S3BXBskXewA

      Delete
  5. பழசு மீண்டும் புதுசாக உருவெடுக்கிறது! உமிக்கரி செய்வது சொல்லித்தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உமிக்கரி ரொம்பவே நல்லா இருக்கும் தேய்க்க. கூடவே எலுமிச்சை மூடியைக் காயவைத்த பொடியும் உப்பும் கலந்து இருப்பாங்க! :) சில வீடுகளில் வாசனை சேர்ப்பதாகவும் அறிந்தேன்.

      Delete
  6. வேலையில் சேரும்வரை பல் தேய்க்க உமிக்கரிதான் எல்லாமே விளம்பரப் படுத்தித் தொலைக்கிறார்கள். நம்மில்பலரும் கண்மூடி நம்புகிறோம் .

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா, விளம்பரம் தான் பெரிசு! :( நானும் கல்யாணம் ஆகிக் கூட உமிக்கரி தான்! முதல் பிரசவம் சமயம் திடீர்னு ஈறிலிருந்து ரத்தம் வர ஆரம்பிக்கவே பேஸ்ட், பிரஷுக்கு மருத்துவர் சொன்னதன் பேரில் மாறினேன். :)

      Delete
    2. இப்போவும் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு பல் பொடி வைச்சிருக்கேன் கைவசம். :)

      Delete
  7. நான் பல் தேய்த்த வரலாறு.

    1. அடுப்பு சாம்பல்.
    2. செங்கல் பொடி.
    3. உமிக்கரி.
    4. வேப்பங்குச்சி.
    5. பயோரியா பல்பொடி.
    6. நஞ்சன்கூடு பல்பொடி.
    7. கோபால் பல்பொடி
    8. கோல்கேட் பல்பொடி
    9. பினாகா டூத் பேஸ்ட்.
    10. போர்ஹான்ஸ் டூத் பேஸ்ட்.
    11. கொலினாஸ் டூத் பேஸ்ட்.
    12. க்ளோசப் டூத் பேஸ்ட்
    13. நீம் டூத் பேஸ்ட்.
    14. கோல்கேட் டூத் பேஸ்ட்.
    15. தற்போது பிள்ளைகள் வாங்கி வைக்கும் ஏதாவது டூத் பேஸ்ட்.
    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வாங்க அண்ணா! அடுப்புச் சாம்பலிலும், செங்கல்லிலும் தேய்த்தது இல்லை. மற்றப் பல்பொடிகளும் தேய்த்தது இல்லை. உமிக்கரியிலிருந்து நேரே பேஸ்ட், பிரஷ்! :))))

      Delete
  8. வட்டம்.....

    நானும் உமிக்கரியில் பல் தேய்த்ததுண்டு.... :) கிராமத்திலிருந்து எடுத்து வந்து கொடுத்தார்கள் ஒரு முறை.

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டிலே அம்மாவே செய்வாங்க இதை! நேரிலே பார்த்திருக்கேன். :)

      Delete
  9. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
    கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
    https://ial2.wordpress.com/2015/07/25/70/

    ReplyDelete
  10. ஆம்.

    நீங்கள் சொல்வது மிகச்சரியே.

    புதுமை என்றும் நாகரிகம் என்றும் சொல்லப்பட்டபோது ஏன் எதற்கு என்று கேட்காமல் நாம் இழந்தது மிக அதிகம்.

    நம் மருத்துவம், நெசவு, பொறியியல் கணிதம் போன்ற பல கூறுகள் இவற்றுள் அடக்கம்.

    தொடர்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஊமைக்கனவுகள், வேறே எதையோ தேடினப்போ உங்களோட இந்தக் கருத்துக் கிடைச்சது. மருத்துவமும், நெசவும் நாம் தொலைத்த விஷயங்கள். அதில் கரை கண்டு இருந்தோம். ஆனால் இன்றோ! :((((

      Delete
  11. உமிக்கரி தேய்த்ததுண்டு...வீட்டில் செய்ததுண்டு....எலுமிச்சையும் உப்பும் கூட செய்ததுண்டு....கோபால் பல்பொடி....எல்லாமும் .....இப்போது உப்புள்ள பேஸ்ட்...ஹஹஹ அதே ஆனால் வேறு வடிவத்தில்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன், நாம் மேல்நாட்டார் சொன்னால் தான் எதையும் நம்பறோம். :(

      Delete