Friday, August 14, 2015

அம்மா, அம்மா, கொழுக்கட்டைக்குக் கண்ணு உண்டோடி!

"எங்கள்" ப்ளாகில் எழுதின அத்திரிமாக்கு, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மக்குனு படிச்சேன்! :P அத்திரிபாச்சா கதையைப் படிச்சதும் இன்னொரு கொழுக்கட்டைக் கதை நினைவில் வந்தது.

அம்மாக்காரி ஒரு நாள் கொழுக்கட்டை பண்ணினாங்களாம். பொண்ணுக்கோ பள்ளிக்குப் போக மனசில்லை. வீட்டில் இருந்து கொழுக்கட்டை திங்கணும்னு ஆசை. அம்மாக்காரி சொன்னாங்களாம், நீ போயிட்டு வா! நான் பண்ணி வைக்கிறேன், சாயங்காலம் வந்து கொழுக்கட்டை தின்னலாம்னு சொல்லிட்டாங்க! பொண்ணும் பள்ளிக்குப் போயிட்டா. பள்ளியிலே கொழுக்கட்டையே நினைவு! சாயந்திரமாப் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்தா! அம்மா, அம்மா, கொழுக்கட்டை எங்கேனு கேட்டா!

அம்மாவுக்கு அப்போ வேறே ஏதோ வேலை, ஆகவே அங்கே பாத்திரத்தில் வைச்சிருக்கேன், எடுத்துக்கோனு சொன்னாங்க! பொண்ணும் பாத்திரத்தில் கைவிட்டு எடுக்கப் போனாள். ஒரே அதிர்ச்சி. அம்மா! என்று கூக்குரல் இட்டாள்!

என்னடி?

அம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் கண்ணு உண்டோடி?

அம்மா, அம்மா,கொழுக்கட்டைக்குக் காது உண்டோடி?

அம்மா, அம்மா, கொழுக்கட்டைக்குப் பல்லு உண்டோடி?

அம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் காலு உண்டோடி?

அம்மா, அம்மா கொழுக்கட்டைக்கு வாலு உண்டோடி?

என்று கேள்வி மேல் கேள்விகளாகக் கேட்க, அம்மாவுக்கு ஒண்ணும் புரியலையாம். வந்து பாத்திரத்தைப் பார்த்தால் அங்கே எலி ஒன்று எல்லாக் கொழுக்கட்டைகளையும் தின்றுவிட்டு அசைய முடியாமல் படுத்துக் கிடந்ததாம்!  கொழுக்கட்டைப் படம் மட்டும் தனியாத் தேட முடியலை என்பதால் நான் முன்னர் பிள்ளையார் சதுர்த்திக்குப் போட்ட படத்தையே போட்டிருக்கேன். :)

11 comments:

  1. ஹி.... ஹி..... ஹி... கேட்டிருக்கேன் இந்தக் கதையை நானும்.

    ReplyDelete
    Replies
    1. ஹெஹெஹெஹெ, மின் தமிழில் மரபு விக்கிக்காகக் குழந்தைப்பாடல்கள் எல்லாமும் சேகரித்தேன். அப்போ எனக்கு நினைவில் இருந்த இது மாதிரியான சில பாடல்களையும் சேர்த்தேன். :)

      Delete
  2. ரொம்ப நாள் கழித்து கேட்ட கதை! இதையெல்லாம் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே!

    ReplyDelete
    Replies
    1. வாங்க அப்பாதுரை, இன்னும் நிறைய இருக்கிறது. அவ்வப்போது நினைவில் வரும்.

      Delete
  3. பதிவைப் படித்ததும் கதையை எப்போதோ கேட்டது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. சின்ன வயசில் கேட்டிருப்பீங்க ஐயா!

      Delete
  4. இந்தக் கதையும் கேட்ட நியாபகம் இருக்கிறது! கரண்டியோட படையல் போடறதை விட மாட்டேங்கறேளே!...

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, சுரேஷ், இது பழைய படம், அதனால் கரண்டியோடு இருக்கு. அதுக்கப்புறமாப் படங்கள் எடுத்திருந்தாலும் போடவில்லை. :)

      Delete
  5. கேட்ட கதை.... இருந்தாலும் இன்னும் ஒரு முறை படித்து ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இதெல்லாம் எத்தனை முறை கேட்டாலும் ரசிக்கலாம் தான். வருகைக்கு நன்றி.

      Delete
  6. நன்றாக இருந்ததும் கொழுக்கட்டையும் பாட்டும் கீதா.

    ReplyDelete