அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு இணையம் வரது கஷ்டமா இருக்கும். அதனால் இன்னிக்கே இந்தப் பதிவையும் போட்டுடறேன். இந்தப் படங்களைப் பார்த்து வைங்க! யார்னு கண்டு பிடிச்சுடுவீங்கனு நினைக்கிறேன். குறைந்த பட்சமாக ஆறு வித்தியாசங்களைச் சொல்லுங்க பார்க்கலாம்! எப்போ எடுத்திருக்கலாம்னு உத்தேசமாச் சொல்றவங்களுக்கு
ஒண்ணும் கிடையாது! :)
தெரிலையே! எந்த சினிமால நடிச்சாங்க!
ReplyDeleteஉங்களுக்கு நோ மார்க் தம்பி! :P :P :P :P க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வர, வர ஆள் அடையாளம் கூடத் தெரியலை!
Deleteஎல்லாமே வித்தியாசம்...! ஹிஹி...
ReplyDeleteஅதானே, டிடி சரியாச் சொல்லிட்டீங்க! :)
Deleteயாரையும் பார்த்ததில்லையே. பின் எப்படிச் சொல்வது/
ReplyDeleteஹாஹாஹா, ரெண்டுமே நான் தான் ஐயா!
Deleteஸ்ரீராம். has left a new comment on your post "யார், யார், யார் இவர் யாரோ? ஊர், பேர் தான் தெரியாத...":
ReplyDeleteஇரண்டாம் படம் உங்களுக்குத் திருமணமான சில வருடங்களில் எடுத்தது. முதல் படம் இந்த வாரத்தில் எடுத்தது!
ஶ்ரீராம், உங்க கமென்ட் காக்கா தூக்கிட்டுப் போகப் பார்க்க ஓடிப் போய்ப் பிடிச்சு வந்து போட்டிருக்கேன். :)
Deleteஆனால் உங்க பதில் ரெண்டுமே தப்பு. முதல் படம் 2004--ஆம் வருடம் முதல் முதல் ஹூஸ்டன் போனப்போ பையர் இருந்த அபார்ட்மென்ட் சமையலறையில் சமைக்கும்போது எடுத்தது. படத்தை க்ராப் செய்து போட்டிருக்கா பொண்ணு! :))
இரண்டாவது படம் 1988 ஆம் வருடம், கல்யாணம் ஆகிப் பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆனப்புறமா எடுத்தது. பையருக்குப் பூணூல் போட்டது அப்போத் தான். ஏப்ரலில். இந்தப் படம் மே மாதம் எடுத்தது. :) எங்க சித்தப்பா அசோகமித்திரன் வீட்டில் அவர் எடுத்த படம் தான் இது! கூடவே எங்க பொண்ணு, பையர், நாத்தனார் பெண்கள் எல்லோரும் இருப்பாங்க. இதுவும் க்ராப் செய்தது. :)
உங்களது அந்த இரண்டாம் படம் பற்றி எனக்குத் தெரியும். நீங்கள் அதை முன்னர் வெளியிட்டபோது ஜாடை தெரிகிறது என்று பின்னூட்டம் இட்டிருந்தேன்! நினைவிருக்கிறதா? நீங்களும் என் போட்டோ எங்கு பார்த்தீர்கள் என்று கேட்டிருந்தீர்கள்!
Deleteமொபைலிலிருந்து பின்னூட்டமிட்டதால் சுருக்கமாக எழுதினேன்!
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஶ்ரீராம், இரண்டாவது படம் ஏற்கெனவே போட்டதே இல்லை! :) இப்போத் தான் போட்டிருக்கேன். இதுக்கு முன்னால் போட்டது ஒன்பது கஜம் புடைவையில் என் அண்ணா கல்யாணத்தின்போது எடுத்தது. அப்போ நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவே ரொம்பச் சின்னப் பொண்ணுங்க! இந்தப் படத்துக்குப் பத்து வருஷம் முன்னால் எடுத்ததைத் தான் நீங்க பார்த்திருப்பீங்க! :)
Deleteநாங்கல்லாம் இது யாரு யாருன்னு மண்டைய உடைச்சுகிட்டு யோசனை பண்ணி பதில் சொல்றதுக்குள்ள முழு விடையையும் சொல்லிட்டா என்ன பண்றது? அப்பு கிட்ட இந்த புகைப்படங்களைக் காண்பித்தீர்களா? அவளது காமென்ட் என்ன? பாட்டி நீ அப்பவும் அழகு, இப்பவும் அழகு அப்படின்னாளா?
ReplyDeleteபெண் வந்ததிலிருந்து பழைய நினைவுகள் நிறைய பேசுறீங்க போலிருக்கு. அதான் பழசெல்லாம் வெளில வருதா? நேற்றைக்கு அரங்கனை அம்மாமண்டபத்தில் சேவித்தீர்களா?
வாங்க ரஞ்சனி, உங்களுக்கு வர முடியுமா, முடியாதானு தெரியலை. அதோடு ஶ்ரீராம் விடையைச் சொல்லிட்டாரே! அதான் போட்டு உடைச்சுட்டேன். :)
Deleteபழைய படம் , புதுபடம் இரண்டும் அழகுதான்.
ReplyDeleteநன்றி கோமதி அரசு! :)
Deleteஅடடே, இங்கயும் ஆரம்பிச்சாச்சா? பிளாக்லயும் ஒரு ரவுண்டு வரலாமே!!! பிரபல பதிவர்கள் தொடங்கி வையுங்க...
ReplyDeleteம்ம்ம்ம் வாங்க ஸ்பை, இங்கேயும் எல்லோரும் போடலாமே! :)
Deleteநீங்களேதான் கண்டுபிடிக்க கஷ்டமாக இல்லை....என்ன வருடங்கள் வித்தியாசப்படுவதால்..சில மாற்றங்கள் அவ்வளவே....
ReplyDelete