Monday, September 07, 2015

விடுவோமா முறுக்கையும், தட்டையையும்! ஜோராச் சாப்பிட்டேனாக்கும்! எப்பூடி? இப்பூடித் தான்!

ஹாஹாஹா ஹிஹிஹிஹிஹி ஹுஹுஹுஹு ஹெஹெஹெஹெஹெ என்ன சிரிப்புனு பார்க்கிறீங்க?
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது பக்ஷணச் சிரிப்பு!
இங்கே நான் அந்த பக்ஷணத்தை வைச்சே ஒரு புது ஐடம் பண்ணிட்டேனே!

இரண்டு நாட்களாக ஷோபா சொன்ன தயிர், ப.மி.யும், தில்லையகத்து கீதா சொன்ன க்ரீமோடு தயிரில் முறுக்கை ஊற வைப்பதும் மண்டையில் ஊறிக் கொண்டிருந்தது. பக்ஷணமும் காலி ஆகணும். ஒருத்தருக்கும் கொடுக்கவும் முடியலை. ஆகவே  அவற்றை வைத்து தஹி சாட் பண்ண முடிவு செய்துட்டேன். நல்லவேளையா இப்போ விரத நாட்கள் ஏதும் இல்லை. தக்காளி, வெங்காயம் சேர்க்கலாம்.

முடிவு செய்வதும், அதைச் செயலாற்றுவதும் நமக்கு ஒரே சமயம் நடக்கும் ஒண்ணு தானே!

ரங்க்ஸைக் கேட்டேன். சோதனை எலியா? நானா? ம்ஹ்ஹூம்னு மறுத்துட்டார். பச்சை, மஞ்சள், சிவப்புக் கலர் துரோகி! போகட்டும்! ரசனை இல்லாத மனுஷன்! :P :P :P :P

மளமளவென ஒரு சின்ன நடுத்தர அளவுத் தக்காளியும் பெரிய வெங்காயத்திலே சின்ன அளவாக ஒன்றும் எடுத்துக் கொண்டேன். பொடிப்பொடியாக நறுக்கி ஒரு பேசினில் போட்டேன்.


பொடிப்பொடியாக நறுக்கிய தக்காளி வெங்காயம். 


அதன் பின்னர் ஒரு முறுக்கு, ஒரு தட்டை,  இரண்டு  உப்புச்சீடை, நாலு வெண்ணெய்ச் சீடை, இரண்டு சீப்பி ஆகியவற்றை ஒன்றிரண்டாக உடைத்துச் சேர்த்தேன்.



நிறையப் போட்டுவிட்டால் நான் மட்டும் இல்ல சாப்பிடணும். அதனால் கொஞ்சமாகவே சேர்த்தேன். 

இப்போ அதைச் சாப்பிடும் தட்டில் போட்டு அதன் மேல் ஒரு கரண்டி தயிரை ஊற்றினேன். உப்புச் சேர்க்காத தயிர்! 


 ஹூம், என்ன வருத்தம்னா பச்சைக் கொத்துமல்லியே வீட்டிலே இல்லை. தீர்ந்து விட்டது. ரங்க்ஸ் வாங்கிட்டு வந்திருக்கார்னு நினைச்சேன். வாங்கலையாம். வாடி இருந்ததாம். அதான் ஒரு குறை. அதோடு சாட் மசாலா இருந்தால் மேலே தூவி இருக்கலாம். காலா நமக் எனப்படும் கறுப்பு உப்புப் பொடியைக் கூடத் தூவிக்கலாம். தேவையான புளிச் சட்னி, பச்சைச் சட்னி ஆகியன இருந்தால் சேர்க்கலாம். காலா நமக் மட்டும் இருக்கு. அதையும் போட்டுக்கலை. மறந்துட்டேன். தயிர் சேர்த்து ஒரு கலவை கலந்து ஒரு நிமிஷம் வைத்துவிட்டுச் சாப்பிட்டேன். ரங்க்ஸ் வேண்டவே வேண்டாம்னு திட்டவட்டமாக (ராகுல் காந்தினு நினைப்பு, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) மறுத்துவிட்டார். போனால் போகட்டும்னு மனசுக்குள்ளே பாடிக் கொண்டு (வாய்விட்டுப் பாடினால் யாருங்க கேட்கிறது? எனக்கே சகிக்காது, பயந்துடுவேன்) சாப்பிட்டுவிட்டு ஒரு காஃபி சாப்பிட்டேன் பாருங்க! சொர்க்கம்! 

22 comments:

  1. ஏங்க, அந்த பட்சணத்தைத்தான் யாருக்கும் தரக்கூடாது, இந்த அட்ஜஸ்ட்மென்ட் பட்சணத்தை நைஸாய் நாலு பேருக்குத் தரலாமே.. ரகசியம் ரங்ஸுக்கு மட்டும்தானே தெரியும்!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, ஶ்ரீரங்கம் வாங்க, தரேன்! நேத்திக்கு யாரும் மாட்டலை!

      Delete
  2. செய்யற தப்பெல்லாம் செஞ்சுட்டு இப்படி ஒரு சமாளிப்ஸ்! வேற யாரும் சாப்பிடலையே; அதனால் நல்லா இருந்ததுன்னு தாளாரமா சொல்லிக்கலாம்! ;-))))

    ReplyDelete
    Replies
    1. தாளாரம்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் "தாராளம்" அப்படினு லக்ஷம் தரம் இம்பொசிஷன் எழுதுங்க

      Delete
  3. அட இது என்ன புது சாட்டா. நன்றாக இருக்கே.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், தஹி சாட்! ஹிஹிஹி. குஜராத்தில் பாப்படினு ஒண்ணு இந்தத் தட்டை மாதிரியே இருக்கும். அதை சாட்டோடு சேர்த்து நொறுக்கிப் போட்டுத் தருவாங்க. இங்கே நாம தட்டையையே போட்டோம்! :))))

      Delete
  4. இதுவும் நல்லாத்தான் இருக்கும் போலயே.... எதுக்கும் குலதெய்வத்தை வேண்டிக்கிட்டு செய்து பார்க்கிறேன்
    சகோ நாட்டுப்புறப் பாடல் ஒன்று எழுதினேன் நேரமிருந்தால் பாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி! அதெல்லாம் குலதெய்வம் காப்பாத்திடும்! எனக்கு ஒண்ணுமே ஆகலை பாருங்க! :) நாட்டுப்புறப்பாடலை இன்று வந்து பார்க்கிறேன்.

      Delete
  5. அட! சேம் பிஞ்ச் !!!! நானும் இப்படித்தான் செய்வேன்....என்ன காரெட், கோஸ், சாட் மசாலா, ப்ளாக் சால்ட், தஹி மசாலா, அப்புறம் பச்சை, சிவப்பு, ப்ரௌன் சட்னி என்று எல்லா கலரும் அடிச்சுவிட்டு....ஒரு கலக்கு கலக்கி, கொத்தமல்லி போட்டு தஹி போட்டு, அம்புட்டுதேன்...இன்னும் நம்ம கற்பனைக்கேற்ப நாக்கிற்கேற்ப புகுந்து விளையாடலாம்....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. காரட், கோஸ் இரண்டுமே இருக்கு. ஆனால் என்னமோ கோஸைப் பச்சையாகச் சாப்பிடப் பிடிக்கிறதில்லை. கொஞ்சம் வெந்நீரில் ஊற வைச்சு உப்பு. மஞ்சள் பொடி போட்டு லேசாக வதக்கிப்பேன். வட மாநில முறைப்படி பஜியா பண்ணினாலும் அதிலே மேலே இப்படிக் காரட், கோஸ், கொத்துமல்லி தூவிக்கலாம். பஜியானதும் என்னமோனு நினைக்காதீங்க. நம்ம ஊர் தூள் பஜ்ஜி தான்! :)

      Delete
  6. சுர்முர் சாட்!!! சொல்லிக்கலாமே ஏன் கடைல மட்டும்தான் சுர் முர்ரா????!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இது சுகாதாரமானது கூட! :)

      Delete
  7. சவாலே, சமாளி! அருமையான சமாளிப்பு. இப்படிப்பட்ட நெருக்கடியில் தான் நமது சாமர்த்தியத்தைக் காட்ட வேண்டும். வாழ்க உங்கள் சமாளிப்பு!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, நம்ம ரங்க்ஸ் இதைத் "திப்பிச வேலை" னு சொல்வார். நமக்கும் இது நல்லாவே வரும்னு வைச்சுக்குங்க. இப்படித் தான் போன வருஷம் வெல்லச் சீடை மாவை அப்பமாக்கிச் சாப்பிட்டோம். :)

      Delete
  8. அடாது மழை பெய்தாலும் ...என்று ஏதோசொல்வார்களே அதுபோல் விடாது முயற்சி செய்து அத்தனை பக்ஷணங்களையும் காலி செய்து விட்டீர்களா.?

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி சார், அத்தனை பக்ஷணங்களையும் ஒரே வேளையில் சாப்பிட நான் கடோத்கஜி இல்லையே! மேலே பதிவிலேயே சொல்லி இருக்கேன் பாருங்க, ஒரு முறுக்கு, ஒரு தட்டை, 2 சீடைகள், நாலு வெண்ணெய்ச் சீடைகள், 2 சீப்பி அப்படினு! அதுக்கு மேலே போட்டால் யாரால் சாப்பிட முடியும்! :))))

      Delete
  9. Replies
    1. போனால் போகுது! அகுடியா கொடுத்ததுக்காக மன்னாப்பு!

      Delete
  10. Replies
    1. ஹிஹிஹி, கண்ணன், நல்லா இல்லே?

      Delete
  11. நாட்டுப்புறபாடல்
    தலைப்பு - பஞ்சனூர், பஞ்சுவியாபாரி பஞ்சவர்ணம்

    http://killergee.blogspot.ae/2015/09/blog-post_4.html

    ReplyDelete
    Replies
    1. பார்த்துட்டேன் கில்லர்ஜி!

      Delete