Friday, November 27, 2015

சில, பல விளம்பரங்கள்!

எங்க உறவினர் அனுப்பிய ஃபார்வர்ட் மடலில் கீழ்க்கண்ட பழைய விளம்பரங்களைப் பார்த்தேன். எந்தப் பத்திரிகைனு தெரியலை. ஆனாலும் விளம்பரங்கள் சுவையாக இருக்கின்றன. அவர் அனுமதியோடு இந்த விளம்பரங்கள் உங்கள் பார்வைக்கு!
These Old Indian Ads Were Made When You & I Weren’t Even Born !!!!!!!
 

ADS OF YESTER YEARS------NOTE CAREFULLY RABINDRANATH TAGORE ADVERTISING GODREJ SOAP, & SEE INDIA: LAHORE :
 

1903: Taj Mahal Palace Hotel Inauguration

1903 taj opening

1922: Godrej No 1 soap – Rabindranath Tagore

1922 godrej tagore

1928: Mysore Sandal Soap

1928 mysore sandal

1929: Pears Soap

1929_pears

1930: Mysore Sandal Soap

1930 mysore sandal

1930: Washable Condoms

1930_washable_condoms

1932: The Bombay Armoury

1935: Indian Tourism

1935 India Tourism

bombay armoury 1932 back
 

Wednesday, November 25, 2015

அண்ணன்மாரே, தம்பிமாரே! கார்த்திகை தீபத்துக்குச் சீ(று)ருங்கப்பா! :)


இந்த வருஷம் கொஞ்சமாய்த் தான் தீபங்கள்! கீழேஉட்காரமுடியாததாலே ஒரு ப்ளாஸ்டிக் டேபிளில் வைத்து ஏற்றினேன். :(


இந்தப்பக்கமாய் குத்துவிளக்குகள் மூன்றும், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காயுடன், பொரி உருண்டைகளும். அவல் பொரி பிரமாதமாக வந்திருக்கு. நெல் பொரிதான் என்னவோ உருட்ட முடியலை! :( ருசி நல்லாவே இருக்கு! :)



அதே படம் தான். மறு பார்வைக்கு!

வீட்டு வாசலில் கோலத்தில் வைக்கப்பட்ட விளக்குகள்


ஜன்னலில் நம்ம ரங்க்ஸ் மெழுகுவர்த்தி ஏத்தி வைச்சிருக்கார்.





பால்கனியிலும்


கீழே திருவண்ணாமலை தீபம் ஏற்றப்பட்ட காட்சி!
நிலா நிலா ஓடி வா!



நம்ம வீட்டில் காக்காய், குருவி எங்கள் ஜாதி என்பதால் அதுக்காகச் செய்திருக்கும் ஏற்பாடுகள். ஒரு தம்ளரில் தண்ணீர், பக்கத்தில் சாதம், பருப்பு, பாயசம், வடை(இன்னிக்குக் கார்த்திகை என்பதால் வடை, பாயசம்)



சரி, இப்போ நம்ம விஷயத்துக்கு வருவோம். எல்லா அண்ணன்மார்களுக்கும், தம்பிமார்களுக்குமாக வேண்டிப் பிரார்த்தனை பண்ணிக் கொண்டு கார்த்திகை தீபம் ஏத்தியாச்சு! இந்த ஒளியைப் போலவே அனைவரின் வாழ்விலும் ஒளிவீசிப் பிரகாசிக்க வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இப்போ இந்த அக்கா/தங்கச்சிக்குச் சீர் கொடுங்க!  பொன் கொடுப்போர் பொன்னே கொடுப்பீர். வைரங்கள் கொடுப்போர் வைரமே கொடுப்பீர். பட்டுப் புடைவைகள் கொடுப்போர் வஸ்த்ரகலா, பரம்பரா, ரெயின்போ கலர்ஸ், சாமுத்ரிகா போன்றவற்றை மறக்க வேண்டாம்னு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். என்னது? டிசைனர் புடைவையா? கிழிஞ்சது போங்க! கைத்தறி தான் கட்டுவேன். அதுவும் பட்டில் நிச்சயமாக் கைத்தறி தான்! பார்த்துக்குங்க! வரிசையா வாங்க அண்ணன்மாரே, தம்பிமாரே!  

Saturday, November 21, 2015

மழையின் புலம்பல்!

மழை.. நான் கடலுக்கே போகிறேன்!
----------------------------------------------------------------
நெஞ்சுருகி குமுறியதால் தானே வந்தேன்
பஞ்சம் என்று கதறியதால் தானே வந்தேன்
கெஞ்சி வேண்டியதாலே இரங்கினேன்,
உனக்காக கீழ் இறங்கினேன்.
கொஞ்சமும் நினைவு இல்லையா?
வஞ்சனை செய்கிறாயே
என்னை அழைத்து விட்டு ..
வறண்ட என் நிலக் காதலி
நான் முத்தமிட ஈர்த்திருப்பாள்
சுரண்டி அவள் மேனியெல்லாம்
சிமெண்டாலே போர்த்தி வைத்தாய்
நனைத்து அணைப்பதாலே
உடல் குளிர சுகம் கொள்வாள்
அனைத்தும் நிராகரித்து
கடல் சேரவே வழி செய்தாய்
குளம் குட்டை ஏரியென
அங்கங்கே தங்கியிருந்தேன்
வளம் கொளித்த அத்தனைக்கும்
பங்கம் செய்யவே வாழ்ந்திருந்தாய்
உனக்கு வழி வேண்டி
சாலைகள் நீட்டினாய்,
தொழிற்சாலைகள் கட்டினாய்,
காண்கிரீட் கட்டடமாய்
நிலமெல்லாம் நிரப்பினாய்.
நான் செல்லும் வழியடைத்து
திட்டமிட்டு துரத்தினாய்.
பூமித்தாய் மூச்சி விட திணறுகிறாள்!
மண் பார்க்க முடியாமல்
அவள் முகமெல்லாம்
மறைத்து விட்டாய்.
எனக்கென்று இருந்த சின்னஞ் சிறு
உறவுகள் தானே குளமும் குட்டையும்.
கண்மூடித்தனமாக
மண் போட்டு மூடி விட்டாய்.
என்னையே நம்பியிருந்த
கடைசி உறவுகளையும்
கொள்ளளவு ஏற்றியே உடைப்பெடுத்து
கொல்ல வைத்தாய்.
பள்ளம், குழி, சிறு தாழ்வு இருந்தாலே
வெள்ளமாய் தங்கி வாழ்வு தருவேனே?
உள்ளம் என்று இருந்திருந்தால்
கள்வன் போல் வசப்படுத்தி
கல் மண் கொட்டி குப்பை நிரப்பி
நீ மட்டும் தங்கும் தப்பை நினைப்பாயா?
என்னை வந்த வேகத்திலே
விரட்டி விட்டு
மண்ணை துளையிட்டு
நானூறு அடியில் என்ன தேடுகிறாய்?
நாற்பது அடியில்
கிணற்றின் மடியில்
நாளும் சுரந்தேனே !
ஊற்று, கால் என்றெல்லாம் நீ
முகர்ந்து குடிக்க மகிழ்ந்தேனே!
நினைவில்லையா?
எனக்கான இடத்தை நீ
உனக்காக வளைத்த மடத்தை
செய்யாமல் இருந்திருந்தால்
உன் கால் சுற்றி
கட்டிய வீட்டை சுற்றி
தேங்கி கிடக்கும் மடமையை
நானா செய்திருப்பேன்?
அவமானம் வேறு
வெகுமானமாக தருகிறாய்.
நீர் வடியும் இடமெல்லாம்
நீயாக அடைத்து விட்டு
பேரிடர் என்கிறாய்,
வெள்ளப்பெருக்கு என்கிறாய்,
மக்கள் அவதி என்கிறாய்,
இயல்பு வாழ்க்கை பாதிப்பென்கிறாய்.
அலுவலகம் செல்வதற்கு,
தொழில் நிற்காமல் நடப்பதற்கு,
மழை நிற்க வேண்டுகிறாய்.
பிழையாக குழி
நீ உனக்கே தோண்டுகிறாய்
உன் வாழ்வாதாரம் வேண்டியே
உன்னைத் தேடி நான் வந்தேன்.
உனக்கே வேண்டாம் என்ற போது
நான் கடலுக்கே போகிறேன்.
இனியாவது நீ திருந்துவாயா
உனக்காக நான் வந்தால் ?

திரு ஜெயராஜ் மணி அவர்களின் கவிதை, தினகரனில் வெளி வந்தது என்கிறார்.


எல்லா நாடுகளிலும் மழைப்பாடல் என்ற ஒன்றுண்டு. மழை பெய்வது நம்மை வாழ வைக்கவே! அழிப்பதற்கு அல்ல! நாம் தவறுகளை மேலும் மேலும் செய்து கொண்டே போவதால் மழையால் துன்பப் பட நேரிடுகிறது. அந்த மழைக்கு வாயிருந்தால் மேற்கண்டவாறே புலம்பி இருக்கும். யார் எழுதினதுனு தெரியலை. அருமைத் தம்பி அஷ்வின் ஜி அவர்களால் முகநூலில் பகிரப்பட்டிருந்தது. இங்கேயும் பகிர்கிறேன்.  இது நான் எழுதியது என யாரும் தவறாக நினைக்க வேண்டாம். எழுதியவருக்குப் பாராட்டுகள். பெயர் கிடைத்தால் கட்டாயமாய்ப் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.

Friday, November 20, 2015

மழையின் தாக்கம்! மேலும் சில படங்கள்!


வீட்டு வாசலில் செப்டிக் டாங்க் அருகே வீட்டின் சுவர். சமீபத்தில் தான் வெள்ளை அடித்தோம். :(


நம்ம ராமர் குடியிருந்த அலமாரி! வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது! :(



கூடத்தில் இருந்தும், சமையலறையிலிருந்தும் கொல்லைப்பக்கம் வரும் தாழ்வாரம்



கொல்லை வெராந்தாவில் தண்ணீர்க் கசிவு சுவரில்



தாழ்வாரத்தில் துணி உலர்த்தும் கொடிக்கு அருகே சுவரில் கசிவு!

 இன்னொரு கோணத்தில் கசிவு!


கொல்லை வராந்தாவின் ஒரு பகுதி!


இன்னொரு படுக்கை அறையும் அதை ஒட்டிய சாப்பிடும் கூடமும் நீரில் மூழ்கி இருக்கும் காட்சி! 





Displaying IMG_20151116_134705741.jpg

Wednesday, November 18, 2015

ரங்கு வீட்டுக்குக் கிரஹப்ரவேசம்!

நம்ம வீட்டுக் கதை இருக்கவே இருக்கு! இப்போ நம்ம ரங்குவோட வீட்டிலே நடைபெற்ற கும்பாபிஷேஹப் படங்கள் பகிர்ந்துக்கறேன். என்ன? போய்ப் பார்த்தேனாவா? கடவுளே! அந்தக் கூட்டத்திலே எங்களாலே நிற்கவே முடியாது. ஆகையால் வீட்டிலே இருந்து தொலைக்காட்சியிலே தான் பார்த்தோம். ராஜகோபுரத்திலே அபிஷேஹம் பண்ணறதையாவது பார்க்கலாமோனு மாடிக்குப் போனேன். ஒண்ணுமே தெரியலை. ஒன்றரை கிலோ மீட்டர் இருக்கே! சரினு தொலைக்காட்சியிலேயே பார்த்துட்டேன். அதிலே எடுத்த படங்கள் தான்! சுடச்சுடப் போடறேன்.






பர வாசுதேவர், பிரணவ விமானத்தில் கருவறைக்கு நுழையும் இடத்திற்கு நேர் மேலே இருக்கார். அவருக்கு நடக்கும் வழிபாடுகள்.




ராஜகோபுரம் ஒரு பார்வை. மேலே ஆட்கள் இருப்பதே தெரியலை!

ஶ்ரீரங்கத்தின் மரங்களடர்ந்த தோப்பின் காட்சிகள் ஒரு பார்வை!


ஶ்ரீரங்கம் ஊர் பறவைப் பார்வையில்




பிரணவ விமானத்தின் மேலுள்ள கலசங்களுக்கு அபிஷேஹம் நடைபெறும் முன் நடைபெற்ற வழிபாடுகள்.


அடுத்தடுத்த கோபுரங்கள், கடைசியில் தெரியறது ராஜகோபுரம்

அபிஷேஹம் நடைபெறுகிறது.

பிரணவ விமானத்தின் மேலே!

வெள்ளிக்குடத்தால் அபிஷேஹம் நடைபெறுகிறது.


பரவாசுதேவர் கிட்டப்பார்வையில்




பரவாசுதேவருக்கு அபிஷேஹம் நடைபெற்றது.

பார்த்தவங்க மீண்டும் பார்த்துக்கலாம். பார்க்காதவங்க பார்த்துக்கலாம். சென்னையில் சில இடங்களில் தான் மின்சாரம் இருக்குனு சொன்னாங்க. அதான் பதிவிட்டேன். பார்த்து ரசிக்கவும். இன்னும் பெரிய ரங்குவை ஒரு நாள் போய்ப் பார்க்கணும். போய்க் கிட்டத்தட்ட நாலைந்து மாசத்துக்கு மேலே ஆகுது! நம்பெருமாளையும் பார்த்து சௌக்கியம் விசாரிக்கணும். நேத்தி ஜாலியா உபய நாச்சியார்களோடு ரத்தினாங்கியில் காட்சி அளித்தார்.



நம்ம கருடாழ்வார் சுத்திச் சுத்தி வந்தார். அந்தப் படம் என்னவோ தெளிவாக விழலை என்றாலும் பகிர்ந்திருக்கேன். 

Tuesday, November 17, 2015

சென்னை மழையில் எங்க வீடு!

2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாங்க அம்பத்தூர் வீட்டில் இருந்தப்போ அப்படி ஒண்ணும் பெரிய மழைனு பெய்யலை! ஆனாலும் தெருவில் எனக்கு முழங்கால்/இடுப்பு (?) அளவுத் தண்ணீர் இருந்தது. பல வீடுகளிலும் தண்ணீர் புகுந்தாலும் எல்லோருக்கும் மாடி இருந்ததால் அங்கே போயிட்டாங்க. எங்களுக்கு மாடி இருந்தாலும் மொட்டை மாடி தான். :( கட்டலை! நல்லவேளையாக் கட்டலையேனு இப்போத் தோணுது! :) இந்த வருஷத்திய அதீத மழையில் வீட்டுக்குள்ளே தண்ணீர் புகாமல் இருக்குமா? நாலு நாட்களாக நம்ம ரங்க்ஸுக்கு அதே கவலை! வீட்டில் குடித்தனம் யாரும் இல்லை நல்லவேளையா! வீட்டைப் பார்த்துக்கறவங்களைப் போய்ப் பார்த்துத் தொலைபேசச் சொல்லி இருந்தோம். அவங்களும் கடமை தவறாமல் போய்ப் பார்த்துட்டுப் படங்கள் எடுத்து அனுப்பி இருக்காங்க. நம்ம பங்குக்கு நாமும் சென்னை மழைனு படம் போட வேண்டாமா?

இது ஹால் எனப்படும் கூடம்! 



ஹாலில் இருந்து கொல்லைக் கிணற்றடிக்குச் செல்லும் தாழ்வாரம்


மாஸ்டர் பெட்ரூம் எனப்படும் பிரதானப் படுக்கை அறை



குளியலறை


நான் ஆட்சி செய்த சமையல் அறை. டைல்ஸ் எல்லாம் இவ்வளவு அழுக்கா இருந்ததில்லை! என்ன செய்யறது! :)
ஆனால் இதெல்லாம் ஒண்ணுமே இல்லை என்னும் அளவிற்கு ஓரிரு இடங்களில் தண்ணீர்க் கடலாகக் காட்சி அளிக்கிறது. ஆகவே மனசைத் தேத்திக்க வேண்டியது தான். :) இத்தனைக்கும் 2005 ஆம் ஆண்டு பெய்த மழையின் அளவை விட இந்த மழை அளவு மிக மிகக் குறைவு. அதுக்கே இப்படி. ஏனெனில் இந்தத் தண்ணீரெல்லாம் கொரட்டூர் ஏரிக்குப் போகணும். வடிகால் வாய்க்கால் வழக்கம்போல் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுப் பட்டாக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே தண்ணீர் எங்கே போகும்! வழி தெரியாமல் திக்குத் திசை தெரியாமல், புரியாமல் தடுமாறித் தத்தளிக்கிறது. 

இதற்கான வரவேற்பைப் பொறுத்துப் படங்கள் தொடரும். 



Thursday, November 12, 2015

இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை!

நான் மதுரை, நம்ம ரங்க்ஸ் கும்பகோணம்னு எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். முழுக்க முழுக்க மாறுபட்ட குணாதிசயங்கள். பழக்க, வழக்கங்கள், பேச்சுக்கள், வழக்கு மொழிகள், வட்டார வழக்குச் சொற்கள்னு எல்லாமும் எனக்குக் கல்யாணமாகிப் போனப்போ ரொம்பப் புதுசாவே இருந்தது. அதுவும் எங்க வீடுகளிலே மிஞ்சிப் போனால் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி சம்பந்தங்கள் தான். அநேகமா எல்லாப் பழக்கங்களும் ஒன்றாகவே இருக்கும். பேச்சின் தொனியையும், ஒரு சில வட்டார வழக்குச் சொற்களையும் தவிர! கோலம் போடுவதிலிருந்து வேறுபாடுகள் உண்டு. மதுரைப்பக்கம் இரட்டைக் கோலம், தஞ்சைப் பக்கம் ஒற்றைக் கோலம் பெரிதாகப் போடுவது. இப்போல்லாம் இந்த வழக்கப்படியே நானும் போட ஆரம்பிச்சிருக்கேன். அதே போல் அமாவாசை என்றாலும் மதுரைப்பக்கம் கோலம் உண்டு. அதிலும் தர்ப்பணம் முடித்துக் கட்டாயமாய்க் கோலம் உடனே போட்டாகணும். ஆனால் தஞ்சைப்பக்கம் அமாவாசை அன்று கோலம் கிடையாது. தீபாவளியும் அமாவாசையும் சேர்ந்து வந்தால் விதிவிலக்கு.

ஆகவே கல்யாணம் ஆகிப் போனப்போ ஒருத்தருக்கொருத்தர் அனுசரிப்பது என்பது இரண்டு பக்கமும் கொஞ்சம் சிரமம் தான்.  பெரிய பித்தளைத் தாம்பாளங்களைத் தான் நாங்க தாம்பாளம் எனச் சொல்வோம். சாப்பிடும் தட்டுக்களை தட்டு என்றே சொல்வோம். ஆகவே கல்யாணம் முடிந்து, கிரஹப்பிரவேசம் ஆன மறுநாள் எல்லோரும் ஊருக்குப் போனதும் என் மாமியார் இலை பத்தலைனால் மத்தவங்களுக்குத் தாம்பாளத்தைப் போடுனு சொன்னதும் எனக்கு அதிர்ச்சி! ஹிஹிஹி, கலாசார அதிர்ச்சினு வைச்சுக்குங்களேன்! அதே போல் தோசைக்குத் தொட்டுக்கத் தக்காளிச் சட்னி தான் எங்க வீட்டிலே பண்ணுவாங்கனு தெரிஞ்ச எங்க மாமியார் வீட்டிலே அதே அளவுக்குக் கலாசாரத் தாக்குதல்! என்னத்தைச் சொல்றது. தேங்காய்ச் சட்னி தான் நல்லா இருக்கும்னு அவங்களும், தக்காளிச் சட்னிக்கு என்னோட ஓட்டுனு நானும் சொல்லக் கடைசியில் இரண்டையும் அரைச்சுட்டு யாருக்கு எது பிடிக்குதோ அதுனு ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

அதே சமயம் சாப்பாட்டில் தக்காளி சாதம்,  வெஜிடபுள் புலவ்  என்று நான் செய்தால் மாமியாருக்கு அதிர்ச்சியாக இருக்கும். மத்தவங்களை அதை எல்லாம் சாப்பிடாதே என்றே சொல்வாங்க. ஆனால் எப்படி இருக்குனு பார்க்க ஆவல் கொண்டவங்க அதையும் மீறிச் சாப்பிடுவாங்க. இப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாக அவங்க சமையலை நானும் என்னோட சமையலை அவங்களும் அங்கீகரிக்க ஆரம்பிச்சோம். இப்போ என்னோட வழக்கம் என்னனா சாதாரண நாட்களிலே எங்க வீட்டுப் பழக்கப்படியோ, அல்லது புக்ககத்து வழக்கப்படியோ சமையலைச் செய்தாலும் விசேஷ நாட்களிலும், விரத நாட்கள், முக்கியமான வழிபாடுகளில் புக்ககத்து வழக்கமே பின்பற்றி வருகிறேன். சிராத்தம் போன்ற நாட்களிலும் புக்ககத்து வழக்கமே.  அதே சமயம் எங்க மாமியாரும் இப்போ மாறிக் கொண்டு அல்லது மாற்றிக் கொண்டு எப்போவானும் வெங்காயம் போடாமல் தக்காளி சாதம், வெஜிடபுள் புலவ், மசாலா சேர்க்காத சாம்பார் சாதம்னு செய்ய ஆரம்பிச்சதோடு இல்லாமல் சாப்பிடவும் செய்யறாங்க. வெங்காயம், பூண்டு இல்லாமல் தான்.

அதே போல் நான் கந்த சஷ்டி கவசம் சொன்னாலே ஆச்சரியமாகப் பார்க்கும் எங்க மாமியார் பின்னாட்களில் அதையும் ஒரு வழிபாட்டுக்குரிய தோத்திரமாக ஏற்றுக் கொண்டு சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. இப்படிப் பெரியவங்க என்னோட கருத்துகளை ஏற்றுக் கொண்டதோடு அல்லாமல் நானும் முக்கியமான காலங்களில் குறிப்பாகப் பண்டிகைகள், விசேஷங்கள், கல்யாணங்கள், குலதெய்வப் பிரார்த்தனைகள், சிராத்தம் போன்ற தினங்களில் பெரியவங்க ஆலோசனைகளைக் கேட்பது உண்டு. என்றாலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக அபிப்பிராய பேதங்கள் வரும் தான். வராமல் இருக்க நாம் ஒன்றும் கடவுளர் இல்லை! சாதாரண மனிதர்கள் தானே!

குடும்ப வாழ்க்கையிலேயே இப்படி எல்லாம் இருக்கிறது. அனுசரிப்பு என்பது இன்னமும் தேவை! இன்னமும் நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கை வண்டி ஒழுங்கான பாதையில் செல்லும்; செல்ல முடியும். அப்படி இருக்கையில் ஒரு நாடு என்பது எவ்வளவு பெரிய பொறுப்பு! அதை வழி நடத்திச் செல்லும் பிரதமர் புதிய கருத்துகளைக் கொண்டிருப்பதும், புதிய பாதையில் நடை போடுவதும் புதிதே அல்ல. ஆனால் அதை அவர் சார்ந்த கட்சியின் மூத்தோர்கள் கண்டிக்கிறார்கள் என்றால் அவர்கள் வந்த பாதை அப்படி! திடீரெனப் புதியதொரு பாதைக்குச் செல்வதையோ, புதியதொரு கருத்தையோ அவங்க ஏற்க மறுக்கிறாங்க. என்றும் சென்று கொண்டிருக்கும் தடத்திலேயே செல்ல வேண்டும் என்பது அவர்கள் எண்ணம். வீட்டிற்குப் புதிதாக வந்திருக்கும் மருமகள் யார்  என்ன  கேலி செய்தாலும் வீண் பேச்சுக்களைச் சொன்னாலும் பதில் சொல்லாமல் இருப்பதைப் போலப் பிரதமர் எதற்கும் பதில் சொல்லாமல் அவர் வழியில் செல்வதை எதிர்க்கின்றனர்.

பொதுவாக வீட்டுப் பெரியவங்களைச் சிறியவர்கள் தாங்கள் ஒரு ஸ்திரமான நிலைக்கு வந்துவிட்டால் யோசனை கேட்பதோடு நிறுத்திக் கொள்வார்கள். பின்னர் செயலாற்றுகையில் அவர்கள் யோசித்துத் தற்காலச் சூழ்நிலைக்கேற்பத் தான் முடிவெடுப்பார்கள். அதற்காக அவர்கள் செல்லும் பாதை தவறெனச் சொல்ல முடியுமா?  அதிலும் அக்கம்பக்கம் அண்டை நாடுகளில் இருந்தெல்லாம் நட்புக்கரங்கள் நீட்டிய வண்ணம் நமக்குச் சாதகமான சூழ்நிலைகள் உருவாகின்றன என்பதே செல்லும் பாதை சரியானது என்பதால் தானே! இன்று நம் நாடு ஊழல்கள் குறைந்துள்ள நாடு என்னும் தர வரிசையில் சீனாவை முந்திக் கொண்டிருக்கிறது. இது ஊடகங்களால் பேசப்படவில்லை என்பதால் உண்மை இல்லை என ஆகிவிடாது! இதே போல் வளர்ச்சிகள் மெல்ல மெல்ல உருவாகுகின்றன. ரயில்வே துறையிலும் சுரேஷ் பிரபு வியத்தகு மாற்றங்களைச் செய்து வருகிறார். வண்டி கிளம்ப அரை மணி முன் கூடக் காலி இருக்கும் இடங்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளும் வசதி புதிதாக உருவாக்கப்படுகிறது. ஆனால் ரயில் முன்பதிவை ரத்து செய்தால் கிடைக்கும் தொகையில் தான் முரண்பாடு. சாமானியர்களுக்கு அதில் பெருத்த அடி விழும்

இப்படிச் சில குறைகள் இருந்தாலும் பொதுவாக நிறைகளே அதிகம் காணப்படுகின்றன. ஒரு பெரிய பட்டியலே இருக்கு! இந்தச் சமயம் கட்சியின் மூத்தோர்கள் தங்கள் கட்சியின் இளையவர்களான பிரதமரிலிருந்து மற்ற மந்திரிகளைச் சாடுவது கட்சியின் மேலும் நாட்டின் மேலும் உள்ள அக்கறையினால் தான். நம் வீட்டில் தாத்தா இருந்தால் நாம் இரவிலோ அல்லது அடிக்கடியோ வெளியே செல்லும்போது கட்டாயம் கேள்வி கேட்பார். அந்தக் கேள்வி நமக்குப் பிடிக்காது தான். ஆனால் அதற்காக வாயை மூடிக் கொண்டு தாத்தா இருக்க மாட்டார். நாமும் சும்மா இருக்க மாட்டோம். உரிமையிலும், கோபத்திலும் வெடுக்கெனப் பேசுவோம். இது எங்கும் நடப்பது தான். ஆனால் ஊடகங்கள் இதைப் பெரிதாகத் தூக்கிக் கொண்டு அலைகின்றன. இவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதே நல்லது. இது ஒரு குடும்பச் சண்டை! குடும்பம் பெரிய குடும்பம். நாமும் அதில் அங்கத்தினர்கள் என்பதால் கொஞ்சம் கவலை! மற்றபடி பயப்படும்படி எதுவும் இல்லை என்பதே உண்மை!



Tuesday, November 10, 2015

தீபாவளி வந்துட்டுச் சட்டுனு போயாச்சு! :)


ஶ்ரீராமர் வழக்கம் போல் எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்கார் கீழே தீபாவளிக்கு வைக்க வேண்டியவற்றை வைத்திருக்கிறேன். பலகையில் எண்ணெய், கங்கை நீர், சீயக்காய் கரைச்சது, மஞ்சள் தூள், வெற்றிலை, பாக்கு, பழம், தீபாவளி மருந்து ஆகியன. இடப்பக்கம் வைத்திருக்கும் புடைவை கோவைப் பருத்திச்சேலை, போச்சம்பள்ளி டிசைன்! வலப்பக்கம் வைத்திருக்கும் க்ரே கலர் புடைவை கோரா பட்டு/சில்க் காட்டன்(?), பக்கத்தில் ரங்க்ஸுக்கு வாங்கிய காதி சட்டை(ஆயத்த ஆடை), வேஷ்டிகள், துண்டுகள்.


டப்பாவில் ஒன்றில் மாவு லாடு, இன்னொன்றில் முள்ளுத் தேன்குழல், சின்ன டப்பாவில் கொஞ்சம் போல் ரிப்பன் பக்கோடா!

 நிவேதனம் செய்யத் திறந்து வைத்திருக்கும் டப்பாக்கள். :)

புடைவை ஒரு கிட்டப்பார்வையில்! இது தான் (சில்க் காட்டன்) கோரா பட்டுக் கைத்தறிப் புடைவை. மேலே காணப்படும் அட்டையில் புடைவையின் நீள, அகலங்கள், ரவிக்கைத்துணி இணைக்கப்பட்டிருக்கும் விஷயம், நெசவுக்கு எத்தனை நாட்கள் ஆனது, எத்தனை நபர்களால் நெய்யப்பட்டது, முக்கிய நெசவாளர் பெயர் ஆகியன குறிப்பிடப் பட்டிருக்கும் சீட்டு! புடைவையின் விலை. இதற்கான தள்ளுபடி! ஆகியனவும் இருக்கின்றன. நெசவாளருக்கு இந்தப் புடைவையின் மூலம் கிடைக்கும் லாபம் ஆகியனவும் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்! :)  இந்தப் புடைவையை இரண்டு நாட்கள் நெய்திருக்கின்றனர். புடைவையின் மேலே இருக்கும் ரவிக்கைத் துணி நான் என்னிடம் இருப்பவையிலிருந்து வைத்தது. புடைவையில் கிழிக்கவில்லை. கட்டிக்கும்போது தான் முந்தானைப்பகுதியில் ரவிக்கைத் துணி இணைத்திருப்பதால் கிழிக்கும்படி ஆகிவிட்டது.  வெறும் புடைவை வைக்கக் கூடாது என்பதால் என்னிடம் இருக்கும் ஒரு ரவிக்கைத் துணியை வைத்திருக்கிறேன்.


இது இன்னொரு புடைவை. இதுவும் கைத்தறிப் புடைவை தான். நெசவாளரின் படம் சீட்டில் மிக லேசாகத் தெரிகிறது. இதை நெய்யவும் இரண்டு நாட்களுக்கு மேல் ஆகி இருக்கிறது. கோ ஆப்டெக்ஸில் தான் பட்டு நம்பிக்கையுடன் வாங்கலாம். ஆனால் பட்டுப் புடைவை நிறைய இருப்பதால் பட்டு இப்போதெல்லாம் அதிகம் எடுப்பதில்லை.  வருஷத்திற்கு ஒரு தரம் நடைபெறும் கண்காட்சியில் அனைத்து மாநிலங்களின் கைத்தறிகளும் கிடைக்கும். சென்னை எழும்பூரில் அப்படி நடைபெற்ற ஒரு கைத்தறிக் கண்காட்சியில் வாங்கிய சேலைகள் மிக அருமையாக இருந்தன. கைத்தறிப் புடைவைகள்  கட்டப் பிடிப்பவர்களுக்கு இது நல்லதொரு வாய்ப்பு!   ரொம்ப நாட்கள் கழிச்சு இன்னிக்கு சூரிய பகவானும் தீபாவளிக் கொண்டாட்டங்களைப் பார்க்க வந்திருக்கார். ஆனால் வெடிச் சப்தத்துக்குப் பயந்து கொண்டு மேகப் போர்வையால் முகத்தை மூடிக் கொண்டுப் பாதி விலக்கிக் கொண்டு பார்க்கிறார். இதுவும் ஒரு அற்புதமான காட்சி தான்! வெடிச் சப்தம் அதிகமாய் இருப்பதால் தொலைபேச முடியவில்லை. பட்சிகள் சப்தமின்றி மரங்களில் போய் அடைந்து கொண்டு விட்டன! :(