Monday, January 18, 2016

மீண்டும் சூரியனார் கோயிலுக்கு!

கோயிலின் மேல் தளம் தெரியும் என நினைக்கிறேன். அங்கே ஒருத்தர் நின்று கொண்டு இருக்கிறார், தெரிகிறதா?

வேலைகள் நடந்து வருகின்றன என்றாலும் அப்போது இருந்தாற்போல் வருமா என்று தெரியலை!

கீழே உள்ள வேலைப்பாடுகள்

இது ஒரு பக்கவாட்டுத் தோற்றம், ஏதோ ஒரு வகை மணலால் செப்பனிட்டிருக்கிறபடியால் சிற்பங்கள் சரியாகத் தெரியவில்லை. :(


நாட்டியக் கரணங்கள் இவை கோயிலின் மேல் தளம் வரை போகிறது.



இங்கே அழகிய மண்டபம் போன்ற சிற்பம் 

இங்கே ஒரு அருண ஸ்தம்பம் 33 அடிக்கு இருந்ததாகவும், இந்தக் கோயிலின் வழிபாடுகள் நின்ற பதினெட்டாம் நூற்றாண்டில் கோஸ்வாமி என அழைக்கப்பட்ட மராத்தா பிரமசாரி ஒருவரால் அது பெயர்த்தெடுக்கப்பட்டு புரி ஜகந்நாதர் கோயிலின் சிங்க வாயிலில் ஸ்தாபிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது. அருணன் சூரியனின் சாரதி என்பதால் இங்கே அருண ஸ்தம்பம் இருந்திருக்கிறது.  அதோடு அப்போது இருந்த ஓர் அரசனால் சில சிற்பங்களும்,கற்களும் எடுக்கப்பட்டு புரியில் அவனால் கட்டப்பட்ட ஓர் கோயிலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிய வருகிறது. அதை எடுக்கும்போது மேலும் சில சிற்பங்களும் வாயில்கள், அவற்றில் இருந்த அலங்காரச் சிற்பங்கள் எல்லாம் உடைந்து போயின. ராஜா  கோயிலில் இருந்து சிற்பங்களை எடுப்பதில் இருந்து தடுக்கப்பட்டார்.

வங்காளத்தின் ஏசியாடிக் சொசைடியால் இங்கிருந்த நவகிரஹ சிற்பம் இந்திய அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்யப்பட்டது,  1867 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி மேற்கொண்டு பணம் இல்லாததால் பாதியில் கைவிடப்பட்டுப் பின்னர், 1894 ஆம் ஆண்டில் கிட்டத்தட்டப் பதின்மூன்று சிற்பங்கள் பெயர்த்தெடுக்கப்பட்டு இந்திய அருங்காட்சியகம், வங்காளத்தில் வைக்கப்பட்டன.

1903 ஆம் ஆண்டு ஒரு மாபெரும் அகழ்வாராய்ச்சி இதன் அருகே நடைபெற்றபோது அப்போது வங்காளத்தின் கவர்னராக இருந்த ஜே.ஏ.பர்டிலான் என்பவர் கோயிலை மூடி மணலால் நிரப்பி வைக்குமாறு கட்டளை இட்டார். பின்னர் 1909 ஆம் ஆண்டு மணலை நீக்கி இடிபாடுகளை அகற்றுகையில் மாயா தேவி கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ இந்தக் கோயிலை உலக அதிசயங்களில் ஒன்றாக அங்கீகரித்தது. 


13 comments:

  1. அருமையான தகவல்களுடன் படங்கள் அனைத்தும் அருமை...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  2. சுவாரஸ்யமான தகவல்கள்.

    ReplyDelete
  3. படங்கள் அழகு! சிற்பங்கள் தெளிவாகத் தெரிகின்றன. தகவல்களும் !!

    ReplyDelete
  4. அன்புள்ள மேடம்,

    வணக்கம். தங்கள் பதிவினில் பின்னூட்டமிட பலமுறை முயற்சித்தும் என்னால் முடியவே இல்லை. ரோபோ இல்லை என நிரூபிக்கச்சொல்லி படுத்தி வருகிறது. நிரூபிக்க டிக் அடித்தும் ஏதேதோ 9 படங்கள் காட்சியளிக்கின்றன. அவற்றை எப்படி வெளியேற்றணும் எனவும் எனக்குத் தெரியவில்லை. அதனால் பின்னூட்டத்தை என்னால் அனுப்ப முடியவே இல்லை. இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    நான் அனுப்புவதாக இருந்த கமெண்ட்ஸ் இதோ:

    மீண்டும் சூரியனார் கோயில் படங்களும் பகிர்வும் ..... மிக அருமை.

    //1984 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ இந்தக் கோயிலை உலக அதிசயங்களில் ஒன்றாக அங்கீகரித்தது. //

    ஆஹா, மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.

    ReplyDelete
  5. ஹிஹிஹி, மேலே இருப்பது வைகோ சார் அனுப்பின கருத்து. அதை எழுதிச் சேர்க்கிறதுக்குள்ளே அ.கு.வாக பிரசுரம் ஆகி விட்டது. :)))))

    ReplyDelete
  6. வைகோ சார், ரோபோவை எல்லாம் லட்சியமே செய்யாதீர்கள்! அதை அலட்சியம் செய்துட்டுக் கருத்தைப் பதியுங்கள்.

    ReplyDelete
  7. அருஞ்சொற்பொருள்:-

    அ.கு.= அவசரக் குடுக்கை! :)

    ReplyDelete
  8. சூரியனார் கோயில் சிற்பக்கலை பிரமிக்க வைக்கிறது! அருமையான படங்களுடன் பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  9. //வைகோ சார், ரோபோவை எல்லாம் லட்சியமே செய்யாதீர்கள்! அதை அலட்சியம் செய்துட்டுக் கருத்தைப் பதியுங்கள்.//

    நான் அதனை லட்சியமே செய்வது இல்லை. அது குறுக்கே நந்தி போல அமர்ந்துகொண்டு, பின்னூட்டமிட முடியாமல் பாடாய்ப் படுத்தி வருகிறது. இப்போது அதுபோலத் தொல்லை இல்லை. தானே சரியாகிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஏதேனும் தொழில் நுட்பக் கோளாறாக இருக்கலாம், தானே சரியாகும். எனக்கும் லே அவுட்டில் போய் இமெயில் சப்ஸ்க்ரிப்ஷன் காட்ஜெட்டைச் சேர்க்க முடியாமல் இருந்தது. இன்று தான் அது சரியாகி வந்துள்ளது. :)

      Delete