Wednesday, June 29, 2016

பச்சை நிறமே, பச்சை நிறமே! கிளிகள், பறவைகளின் அடாவடித்தனம்!


தென்னை மரத்திலே கிளிகளைப் பார்த்தீங்களா? தெரியுதா? படத்தைப் பெரிசு பண்ணிப் பாருங்க. இப்படிக் கொத்துக் கொத்தாகக் கிளிகள் வந்து உட்காரும்.
இங்கேயும் அவை தான். காத்திருந்து எடுக்க வேண்டி இருக்கு படத்தை! இதுங்களுக்காகத் தண்ணீர் வைக்கவும் சாப்பாடு போடவும் ஒரு துத்தநாகத் தகட்டை ஜன்னல் கம்பியில் பொருத்தி இருக்கோம். அதிலேயே ஓர் தம்பளரில் தண்ணீரும் சாதமும் முன்னால் வைத்துக் கொண்டிருந்தோம். பின்னர் அவை போதவில்லை என்பதால் மண் சட்டி ஒன்று அகலமானதாக வாங்கி அதில் தண்ணீர் வைக்கிறோம். ஆனால் இதுங்களுக்கு இருக்கிற அடத்தைப் பாருங்க! சாதம் சாப்பிடாதாம். கொஞ்ச நாட்கள் முன்னர் வரை வெயிலாக இருந்தது. அதான் சாப்பிட வரதில்லைனு நினைப்பேன். ஆனால் தீனி வைச்சால் தின்னும்! எல்லாம்! ஒரு கருகப்பிலையைக் கூட விடறதில்லை! என்ன அநியாயம் பாருங்க!


இந்தத் தட்டில் முதலில் கொஞ்சம் போல் ஓமப்பொடி போட்டுப் பார்த்தோம். அதைத் தொட்டுக் கொண்டு சாதத்தையும் சாப்பிட்டிருந்தது. பின்னர் இன்னும் கொஞ்சம் ஓமப்பொடி கருகப்பிலை கலந்தது போட்டால் அந்தக் கருகப்பிலையைக் கூட விடலை! சாப்பிட்டு முடிச்சுடுத்து. இன்னிக்கு வைச்ச சாதம் தான் அப்படியே இருக்கு!  என்ன அடாவடித் தனம் பாருங்க! :)


இந்த மண் சட்டியில் தான் தண்ணீர் வைக்கிறோம். இப்போ வெயில் இல்லை என்பதால் கொஞ்சம் வருதுங்க. வெயில் ரொம்ப இருந்தால் தண்ணீர் குடிக்கக் கூட வரதில்லை. அதுங்களுக்கும் வெயிலில் சூடு எல்லாம் தெரியும்போல! என்ன ஒண்ணு! நம்மை மாதிரி அதுங்களும் தீனி தின்னிப் பண்டாரங்களா இருக்கு! நாம் தான் அப்படின்னா நமக்கு வாய்ச்சதுங்களும் அப்படியே வந்து சேர்ந்திருக்கு பாருங்க!


இந்த அசோகா (இது அசோகா இல்லைனு ஒருத்தர் சொல்லி இருந்தாங்க, இருந்தாலும் அப்படிச் சொல்லிப் பழக்கப்பட்டுப் போயாச்சு) மரம் காற்றிலே ஆடும் பாருங்க! எங்க வீட்டு ஜன்னல் கதவை வந்து தொட்டுவிட்டுச் செல்லும். அப்படி ஒரு ஆட்டம். இது காற்றில் ஆடியபோது வீடியோவாக எடுக்க நினைச்சேன். போன வருஷமோ என்னமோ எடுத்துப் போட்டிருந்தேன். ஆனால் இன்னிக்கு வீடியோ வரலை! :)

முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேனே! நேத்திக்கு மடிக்கணினி குடிச்ச காஃபி பத்தி எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். அதன் பலன் உடனடியாகத் தெரியவில்லை. இன்னிக்குப் படங்களை பிகாசாவில் ஏத்தும்போது தகராறு ஆரம்பிச்சுடுத்து!  அப்புறமாக் கணினியைச் சமாதானம் செய்து நல்ல வார்த்தை சொல்லி அதிலிருந்து படங்களை பிகாசாவில் ஏத்திட்டு இங்கேயும் போட்டேன். இனிமேலே இந்த மடிக்கணினி படங்களை ஏத்துமா ஏத்தாதானு தெரியலை! ஆனால் என்னோட கணினிக்கு நான் அதைத் தொடாமல் இருந்ததில் இப்போ வருத்தம் குறைஞ்சிருக்கு! :)

24 comments:

  1. கிளிகள் என்றில்லை, காக்கைகளும் மாறித்தான் போய்விட்டன. இப்படித்தான் அவைகளும் செய்கின்றன. கடைசி ஞாயிறன்று கார சிப்ஸ் வைத்தேன். தொடவே இல்லை. கொஞ்ச தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டே இருந்தன. நேற்று சாதாரண சிப்ஸ் வைத்தேதேன். வந்து சாப்பிட்டு விட்டுச் சென்றன.

    ReplyDelete
    Replies
    1. இங்கே காக்கைகள் இருக்கின்றன. காலை நடைப்பயிற்சிக்குப் போனால் தலைக்கு மேலே நூறு காக்காய் பறக்கும். சாதம் வைச்சால் ஒண்ணு கூட வராது!

      Delete
  2. இருக்கற கிளி ரெண்டோ ரெண்டரையோ! கொத்து கொத்தா வந்து உக்காருமாமில்ல! கர்ர்ர்ர்ர்ர்ர்!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, வா.தி. தம்பி, புகை வாசனை ரொம்ப வருதே! கொத்துக் கொத்தாத் தான் உட்கார்ந்திருந்ததுங்க! ஆனால் அதுங்களுக்கு ரெக்கைனு ஒண்ணு இருக்கு பாருங்க! நான் காமிராவை எடுத்துட்டு ஜன்னல் கிட்டேப் போறதுக்குள்ளே ரெக்கையைத் தூக்கிட்டு ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! மிச்சம் இருக்கும் இந்த ரெண்டரைக் கிளிங்க மட்டும் போனால் போகுதுனு போஸ் கொடுத்துச்சுங்க! :)

      Delete
  3. நேத்திக்கு மடிக்கணினி குடிச்ச காஃபி பத்தி எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். அதன் பலன் உடனடியாகத் தெரியவில்லை. // நீங்க போட்ட காப்பி ஆச்சே! பொழைக்கறது கஷ்டம்தான்! :P

    ReplyDelete
    Replies
    1. வருவீங்க இல்ல ஶ்ரீரங்கத்துக்கு! உங்களுக்கு நோ காஃபி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  4. பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதும் ஒரு நல்ல தானம்தான்.

    கிளிகள் தெரிந்தன நான்கு கிளிகளை காண்பித்து பதிவா ? இதோ நாலுநாள்ல நானும் 100 கிளிகளோட பதிவு போடுறேன்....

    ReplyDelete
    Replies
    1. நிறைய இருந்தன கில்லர்ஜி! படம் எடுக்கிறதுக்குள்ளே பறந்துட்டுதுங்க! ஒரு இடத்தில் உட்கார்ந்தால் தானே! கீக்கீ கீக்கீனு ஒரே பேச்சு, சத்தம் குழறல்! அப்புறம் பார்த்தாப் பறந்துடுது!

      Delete
  5. பறவைகளுக்கும் திண்பண்டம் தான் பிடித்த உணவு.
    சாதம் த்ண்ணீர் விட்டது என்றால் பிடிக்காது. புது சாதம், உதிரி உதிரியாக இருக்கும் சாதம் தான் பிடிக்கும், தோசை, சப்பாத்தி ,வடை , அப்பளம், இட்லி, பிஸ்கட் எல்லாம் பிய்த்து வைத்தால் எல்லா பறவைகளுக்கும் கிடைக்கும் இல்லையென்றால் ஒரு பறவை மட்டுமே கொத்தி சென்று விடும்.
    நம்முளுடன் சேர்ந்து அவற்றின் உணவு பழக்க வழக்கங்கள் மாறிதான் விட்டது.

    ReplyDelete
    Replies
    1. இங்கே அதெல்லாம் பார்க்காதுங்க! குக்கரில் விழுந்த சாதத்தைக் கூட வைச்சிருக்கேன். மனசிருந்தாச் சாப்பிடும். தினம் தினம் நிவேதனம் பண்ணிட்டுப் புதுசாத் தான் சாதம் போடறேன். அதையும் மனசிருந்தாச் சாப்பிடுதுங்க! சாகோஸ் பிடிக்கலை! காரசாரமா வேண்டி இருக்கு! :)

      Delete
  6. :) பப்படம் சாப்பிடும் காக்கை சோறை சீண்டுதல் இல்லை அம்மா !!! எங்கள் பாஷையில் (குமரி தமிழில்) சொன்னால் எல்லாம் விளைஞ்ச வித்துக்கள் :) அருமையான படங்கள் !!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், சாதம் மிஞ்சினால் ரொம்பக் கஷ்டமாத் தான் இருக்கு! கூடியவரை நான் கரெக்டா வைச்சுடுவேன். மிஞ்சினால் ஒரு கைப்பிடி மிஞ்சும். அதையும் ரெண்டு பேருமாப் பகிர்ந்துட்டுச் சாப்பிட்டுடுவோம். என்னிக்கானும் மிஞ்சும்!

      Delete
  7. எங்கள்வீட்டு மாமரத்தில் அணில்களின் கொட்டம் தாங்க முடியலை. கிளிகளை எப்பவாவது பார்ப்பதுண்டு படங்கள் நன்றாகவே இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. முன்னால் குடியிருந்த பகுதியில் அணில்கள் நிறைய! வீட்டுக்குள்ளேயே வரும். ஓணான்கள், பச்சோந்திகள்னு வரும்! இந்தப் பக்கம் அணில்கள் இருந்தாலும் அதிகம் வரதில்லை!

      Delete
  8. கிளிகள்.... இங்கே மாலை நேரத்தில் நிறைய கிளிகள் ஒரு இடத்திலிருந்து இன்னுமொரு இடத்திற்கு பறந்து செல்லும்.......... புகைப்படம் எடுக்க முடியாததால் எடுக்கவில்லை.....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், வடமாநிலங்களில் பறவைகள் கொஞ்சம் பெரிதாகவே இருக்கும். இங்குள்ள காக்கையை விட அங்குள்ள காக்கை பெரிதாக இருக்கும். கிளிகளும், மற்றப் பறவைகளும் அப்படித் தான்! பிணம் தின்னிக்கழுகுகள் மேலே பறந்தால் சூரிய ஒளியையே மறைக்கும். தேன் சிட்டு மட்டும் குட்டியாய் இருக்கும்! :) மரங்கொத்தி என்ன அழகாய் இருக்கும்! தச்சன் வேலை செய்யும் போது வரும் சத்தம் போலவே வரும்!

      Delete
  9. எங்கள் ஊரில் எல்லாமே அப்படியே இருக்கறாப்லதான் இருக்கு. காக்காய், கிளிகள்ம் மைனாக்கள் தோட்டம் இருப்பதால் எல்லாம் வந்து செல்லும்...

    கீதா: ஆமாம் அக்கா இப்போதெல்லாம் காக்காய்கள் ரொம்பவே முறுக்கிக் கொள்கின்றன. ஹஹ பால்கனி ஜன்னலில் சாதம் வைத்தால் சாப்பிடுவதில்லை. ஆனால் அதில் ஒரு காரணமும் உண்டு எங்கள் வீட்டு கிச்சன் பால்கனி ஜன்னலில் அது உட்காருவது கொஞ்சம் கஷ்டம். விளிம்பு குறைவு...ஸோ தோசை, ப்ரெட் வைத்தால் அதைப் பறந்தபடியே கொத்திக் கொண்டு போய் எதிர்த்தவீட்டு ஓட்டின் மேல் உட்கார்ந்து தின்று கொள்ளும்....

    அவர்களுக்குள்ளும் சண்டை எல்லாம் அதுவும் சாப்பாட்டிற்கு நடக்கிறது. கா கா என்றுக் கூப்பிடுவதில்லை. ஒன்/ரு வந்தால் அது மட்டும் தின்று விட்டுப் போகிறது...

    அந்த மரம் நெட்டிலிங்க மரம்.

    நேற்றே பதிவு வாசித்து விட்டோம் இங்கு கீ போர்டிற்கு நேற்று ஏனோ திடீரென்று தமிழ் மேல் கோபம். அதனால் இன்று அதனைக் கொஞ்சம் கொஞ்சி மிரட்டி எல்லாம் செய்துவிட்டு..இப்போது ஒழுங்காக இருக்கிறது...அதான் இப்போ கமென்ட்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நெட்டிலிங்க மரம்! அசோகானு பேச்சு வழக்கில் சொல்லிச் சொல்லி உண்மையான பெயரே மறந்துடுச்சு! :) காக்கைகள் சண்டை போடுவதை விடக் குயில் குஞ்சோடு காக்கைகள் போடும் சண்டை தான் விறுவிறு! பாவம் குயில் குஞ்சு! தப்ப முயற்சி செய்யும் காக்கைகள் விடாமல் துரத்தித் துரத்திக் கொத்தும். தாய்க் குயில் எங்கோ இருக்குமோ! கண்டுக்கவே கண்டுக்காது! பெத்துப் போட்டதோடு சரி! :)

      Delete
  10. எங்கள் கோயிலிலும் பச்சைக் கிளிகள் அவ்வப்போது வருவதுண்டு! அணில்களும் நிறைய வரும்! ஆனால் அவற்றை பதிவாக போட எனக்கு தோன்றியதில்லை! இனி முயன்று பார்க்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. முயற்சி செய்யுங்கள். விரைவில் எதிர்பார்க்கிறேன்.

      Delete
  11. அருமையான பதிவு


    கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
    http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி. கருத்து மோதலைத் தவிர்ப்பதற்காகவே பல பதிவுகளைப் போடாமல் வைச்சிருக்கேன். :)

      Delete
  12. இயற்கையை விட்டு அந்நியப்பட்டுப் போய்க்கொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இயற்கை விட்டு மட்டுமல்ல! சுத்தமாய் நம் கலாசாரங்களும் ஒவ்வொன்றாய் மறைந்து வருகிறது. :(

      Delete