Tuesday, January 16, 2018

நல்லபடியாக எல்லாம் முடிந்தது! இறைவன் அருளால்!

நேற்று வீட்டில் நடந்த ஹோமத்தின் போது எடுத்த படங்களில் சில!


இது வேறே கோணத்தில் எடுக்கப்பட்டது!


அந்தப்பக்கம் ஹோமம் செய்யத் தயாராக ஹோம குண்டம்!


ஒருமாதமாக மாமியாரின் வருஷ ஆப்திகத்துக்கு ஏற்பாடுகள் செய்து வந்தோம். முக்கியமாய் அதற்கு உறவினர்கள் அனைவரும் கூடுவதால் சமையலுக்கு ஆள் கிடைப்பது கஷ்டமாக இருந்தது. ஏனெனில் போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் மூன்று நாட்களும் விசேஷங்கள்! அவங்க அவங்க வீட்டுப் பண்டிகையை விட்டு விட்டு யார் வருவாங்க என்பது தான் பெரிய பிரச்னை! ஒருவழியாக ஒரு மாமியைத் தேடிப் பிடித்துக் கண்டு பிடித்தோம். அவங்க சமையலும், பழகும் விதமும் எல்லோருக்கும் பிடித்தும் விட்டது! சமையலுக்கு ஆள் இருந்தும் எங்களுக்கும் வேலை இருக்கத் தான் செய்தது. அதிலும் நமக்குக் கேட்கவே வேண்டாம்! எக்கச்சக்க வேலை! புதன் கிழமையிலிருந்தே இணையத்தில் உட்கார முடியலை! வியாழனன்று ஒரு மாதிரியா வந்து எட்டிப் பார்த்தேன். வெள்ளிக் கிழமையிலிருந்து நான்கு நாட்கள் கணினியைத் தொடவே இல்லை!

ஆனால் அதுக்காக நம்ம பதிவுக்கு ஆளுங்க ஒண்ணும் ரொம்ப வந்துடலை! :) அதிலும் மார்கழிப் பதிவு, மீள் பதிவு வேறே! 2008 ஆம் ஆண்டில் எழுதினது! சும்மாப் போட்டு வைச்சேன். அன்னிக்குக் கூடாரவல்லிக்காகச் சர்க்கரைப் பொங்கல் கொஞ்சமாப் பண்ணினேன். பொங்கலுக்குத் தான் என்ன செய்யறதுனு ஒரே குழப்பம்! ஏனெனில் அன்று தான் ச்ராத்தம். பொங்கல் வைக்கும் நேரம் அதைவிடக் குழப்பம்! மாலை நாலரைக்குத் தான் மாசம் பிறப்பதாகச் சொன்னார்கள். நாலரைக்குச் சரியான ராகு காலம் ஆரம்பம்! பொங்கல் பண்ணி முடிப்பதற்குள் மணி ஆறாகி சூரியனார் விடைபெற்று அம்பேரிக்காவைப் பார்க்கப் போயிடுவார். இங்கே இருட்ட ஆரம்பிக்கும். அப்போ எப்படிப் பொங்கல் வைக்கிறதுனு ஒரே குழப்பம். அதோட ச்ராத்தம் அன்று பண்டிகை கொண்டாடலாமா என்னும் கேள்வியும். ஒரு வழியா ச்ராத்த வேலைகள் மதியம் இரண்டரைக்கு முடியவும் குடும்பப் புரோகிதர் இனிமேல் பொங்கல் பானை வைக்கலாம். நாலு மணிக்குள்ளாக நிவேதனம் செய்துடுங்க என்று சொன்னார்.

எல்லோரும் சாப்பிடப் போக நான் மட்டும் வேறே நல்ல புடைவையை மாற்றிக் கொண்டு வெண்கலப்பானைக்குச் சந்தனம், குங்குமம் தடவி மஞ்சள் கொத்துக் கட்டிப் பொங்கல் பானையைத் தயார் செய்து அடுப்பில் வைத்தேன். அரிசி, பருப்பை வறுத்துக் கொண்டு என் வழக்கப்படி முதலில் பருப்பைக் கரைய விட்டுப் பின் அரிசியைச் சேர்த்து இரண்டும் குழைந்ததும் வெல்லம் சேர்த்தேன்.  கிட்டத்தட்ட அரைலிட்டருக்கு மேல் பால் விட்டேன். அதிலேயே வெந்தது. பின்னர் பொங்கலைக் கீழே இறக்கி சுவாமிக்கு நிவேதனம் செய்துட்டு நான் சாப்பிடும்போது நாலே கால் மணி ஆகி விட்டது. வெறும் மோர் சாதம் தான் சாப்பிட்டேன். அன்று இரவு லங்கணம் பரம  ஔஷதம் என்று பட்டினி போட்டாச்சு! ஆக மொத்தம் ஒரு வழியாப் பொங்கல் கொண்டாடி விட்டோம். பொங்கல் பானையைப் படம் எல்லாம் எடுக்கலை! நேற்றைய சுப ஹோமமும் நல்லபடியாக நடந்து முடிந்தது. வந்திருந்த விருந்தினரில் என் பெரிய நாத்தனார் தவிர மற்றவர்கள் அவங்க அவங்க ஊருக்குப் போயாச்சு!

இனி இணையத்தில் நண்பர்கள் பதிவுகளைப் படிக்கணும். விட்டுப் போனவற்றைத் தொடரணும்! இறைவன் இழுத்துச் செல்லும் வழியில் செல்கிறோம். பார்க்கலாம்! என்ன செய்ய முடிகிறது என! பதிவுகளை ஒழுங்காகப் போட முடிந்தாலே பெரிய விஷயமா இருக்கு இப்போல்லாம்! 

23 comments:

  1. வருஷ ஆப்திகம் என்பது மறந்துவிட்டது. ஸ்ராத்தம் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன் (அப்புறம் பொங்கல் னால பிஸி என நினைத்தேன்).

    சுப ஹோமத்துக்கு பருப்புத் தேங்காய் (2) வைப்பீங்களா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. ஆப்திகம் தான் நடந்து முடிந்தது! ஒரு மாசமா சாமான்கள் சேகரித்தோம்! :)))) சுபத்துக்குப் பருப்புத் தேங்காய் எங்க புக்ககத்து வழக்கப்படி உண்டு. புதுத்துணிகளும் உண்டு! :)))))

      Delete
  2. நன்று இனிய பொங்கல் நல் வாழத்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, ரொம்ப நன்றி. உங்களுக்கும் தாமதமான பொங்கல் வாழ்த்துகள்.

      Delete
  3. கீதாம்மா இனிமே உங்க வீட்டு விஷேத்திற்கு சமைக்க ஆள் தேடி கஷ்டப்பட வேண்டாம் நான் நன்றாகவே சமைப்பேன் பேசாமல் என்னை புக் பண்ணுங்கோ என்ன நீங்க ஒரு ரவுண்ட் ட்ரிப் டிக்கெட் எனக்கு புக் பண்ணனும்

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, அவர்கள் உண்மைகள்! எப்படியானும் டிக்கெட் பணத்தை வாங்கலாம்னு பார்க்கிறீங்க போல! யாரு கிட்டே! என் கிட்டேயா? ஹிஹிஹிஹி

      Delete
  4. நல்லபடி எல்லாம் முடிந்து,சுபஹோமமும் செய்து, பொங்கலும் நிவேதனம் செய்து நல்லபடி தை பிறந்தது. மிக்க ஸந்தோஷம். வாழ்த்துகள் உங்கள் யாவருக்கும். ஆரோக்கியம் மிகுந்த ஆண்டாக வலம் வர வேண்டுகிறேன் எல்லாம் வல்ல இறைவனை. அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி காமாட்சி அம்மா, உங்கள் ஆசிகள் எப்போதும் எங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

      Delete
  5. உங்கள் மாமனாரின் வருட நாள் நல்லபடியாக முடிந்தது மகிழ்ச்சி! சகோதரி/கீதாக்கா..

    பொங்கலும் வைத்துவிட்டீர்களே!

    மிஸ் ஆன பதிவுகள் எங்கு போகப் போகிறது. மெதுவாகத் தொடருங்கள். ஆம் இறைவன் இழுத்துச் செல்லும் பாதையில்!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க தில்லையகத்து கீதா, மாமனாருக்கு இல்லை, மாமியாருக்கு! :)))) கொஞ்சம் மெதுவாய்த் தான் வர வேண்டி இருக்கு!

      Delete
  6. வருஷாப்தீகம் நல்லபடியாய் முடிந்ததா? அவசர பொங்கலும் முடிந்தது போலும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், எல்லாம் நல்லபடி முடிந்தது.

      Delete
  7. ஆஹா நல்லபடி உங்கள் வீட்டு நிகழ்வுகளை நடத்தி முடிச்சிட்டீங்க... கதையோட கதையா பொங்கலுக்குப் புதுப்புடவை எடுத்ததையும் ஜொள்ளிட்டீங்க:)) ஹா ஹா ஹா:).. நெல்லைத்தமிழன் இதைக் கவனிச்சிருப்பாரோ தெரியல்ல:)..

    ReplyDelete
    Replies
    1. நான் இதைக் கவனிக்கலை அதிரா (பெண்கள்தான் இந்த மாதிரி விஷயங்களை கவனிப்பார்கள் :-) ). வருஷாப்தீகம் முடியும்போது, சுபமாக, புதுத்துணிகள் வாங்குவது வழக்கம். பொங்கலுக்கு என்று வாங்கியிருக்கமாட்டார்கள்.

      Delete
    2. வாங்க அதிராமியாவ்! பொங்கலுக்குனு புதுத்துணி வாங்கவில்லை! இருக்கும் நிறையவே! அதில் ஒண்ணைக் கட்டிப்போம். இப்போ வருஷாப்திகம் முடிந்ததற்கு வாங்கிய துணிகள் அவை! :)))

      Delete
  8. நீண்ட நாட்களாக இருந்த கவலைஅல்லவா

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, ஆமாம், ரொம்பக் கவலையாகத் தான் இருந்தது! :) எல்லாம் இறைவன் சித்தப்படி நல்லபடி முடிந்தது.

      Delete
  9. மன நிறைவினைப் பகிர்ந்தமையறிந்து மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முனைவர் ஐயா!

      Delete
  10. பொங்கல் அன்றுதான் எங்கள் சம்பந்திக்கும் வருஷாப்திகம் செவ்வனே நடந்தது. சென்னையில்,
    அங்கிருக்கும் சுவாமிகள் பொங்கல் அடுத்த நாள் வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டார்.

    ஹோமம் சுபம் எல்லாம் நன்றாக நடந்தது மிக மகிழ்ச்சி கீதா. சிரத்தையோடு செய்த உங்கள் கணவரும்,நீங்களும் குடும்பத்தோடு நன்றக இருக்கணும்.
    கனு அன்று பேரனுக்கு சுவையான சர்க்கரைப் பொங்கல்
    செய்து கொடுத்தேன். ரசித்து சாப்பிட்டான்.
    உறவினர்கள் வந்து சிறப்பித்து நடத்தியது உங்கள் நல்ல குணத்துக்காகத் தான்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, எல்லாம் நன்றாக நடந்து பொங்கலும் கொண்டாடிக் கொண்டோம்! :))))) உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் தாமதமான பொங்கல் வாழ்த்துகள்.

      Delete
  11. அதோட ச்ராத்தம் அன்று பண்டிகை கொண்டாடலாமா என்னும் கேள்வியும். //
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
    மாச பிறப்புக்கு தர்ப்பணம் செய்யறாங்க இல்ல? அது ச்ராத்தம் செய்யறதுக்கு பதிலா செய்யறதுதான். அது ஒவ்வொரு பொங்கலுக்கும்தான் வரும். அப்புறம் என்ன?

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, தம்பி சொன்னால் அப்பீலே இல்லை! :)))) அதோட இந்த வருஷம் எங்களுக்காகவே முக்கியமா எனக்காகவே மாசப்பிறப்பு மாலையில் வந்ததாகவும் சொல்லிக்கிட்டாஹ! :))))))))))))))

      Delete