Monday, February 11, 2019

வயல் சூழ்ந்த செப்பறைக் கோயிலில்!

செப்பறைக்குப் போகும் முன்னரே ஓட்டல் அறையிலேயே கோயில் திறந்திருக்கும் நேரம் பார்த்தபோது மாலை நான்கு மணிக்குத் திறக்கப்பட்டு இரவு எட்டு மணிக்கு மூடுவார்கள் எனப் போட்டிருந்தது. அப்போது கிளம்பும் நேரம் என்பதால் போனால் சரியாக இருக்கும், கோயில் போய்க் கொஞ்ச நேரத்தில் திறந்துடுவாங்கனு நினைச்சுப் போனோம். மூன்றரை மணிக்குப் போனோம். அங்கே வயலில் வேலை செய்துவிட்டு வீட்டுக்குப் போனவர்களிடம் கோயில் எப்போது திறக்கும் எனக் கேட்டால் ஐந்தரை, ஆறு மணி ஆகும் என்றனர். அதற்கேற்றாற்போல் நான்கு மணிக்கெல்லாம் கோயில் திறக்கும் சுவடே இல்லை, சிறிது நேரத்தில் வயல் வேலை செய்த விவசாயிகளும் சென்றுவிட அந்த இடத்தில் நாங்கள் சென்ற வண்டி, வண்டி ஓட்டுநர், நான், நம்ம ரங்க்ஸ் தவிர்த்து யாருமே இல்லை. கொஞ்சம் தள்ளி இருந்த சாலைகளில் ஆங்காங்கே ஆட்டோக்கள் போய்க் கொண்டிருந்தன. இந்தப்பக்கம் யாருமே வரலை.

என்னதான் மயில் ஆட்டத்தையும், குயில் பாடலையும் கேட்டுக் கொண்டிருந்தாலும் கோயில் திறந்து எப்போப் பார்த்து எப்போப் போவது என்னும் கவலை உள்ளூர இருந்தது. கீரிப்பிள்ளைகள் பாம்புகளைத் துரத்துவது கண்டு படம் எடுக்கப் போனால் பாம்புகள் பழைய நினவில் நாங்கல்லாம் சுப்புக்குட்டிகள் எனக் கூறிக்கொண்டு வந்து செல்லம் கொஞ்சும் போல் இருக்கவே வெற்றிகரமாகப் பின் வாங்கினேன். கோயில் நுழைவாயிலையும் அங்கிருந்த தலவரலாறு எழுதப்பட்டிருந்த பலகையையும் படம்பிடித்துக் கொண்டேன். கீழே அவற்றைப் பார்க்கலாம்.


  கோயிலின் நுழைவாயில். செப்பறை அழகிய கூத்தர் என்று அழைக்கப்பட்கிறார் இங்குள்ள நடராஜர். சபாமண்டபம் சிதம்பரம் கனகசபை பாணியிலேயே கட்டப்பட்டுள்ளது. உள்ளே நடராஜரைப் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். தெற்கே பார்த்த வண்ணம் தான் காட்சி அளிக்கிறார்.


தலவரலாறு காணப்பட்ட அறிவிப்புப் பலகை



கீழே பஞ்ச சபைகளின் பெயரும் அவை இருக்கும் இடங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விளக்கங்கள் அதிரடிக்குக் கொடுத்த கருத்தில் கொடுத்திருக்கிறேன்.

தலவரலாற்றுக்கும், இந்தக் கோயில் பற்றிய செய்திகளுக்குமாக ஆதாரங்களாக எடுக்கப்பட்டுள்ள நூல்களின் பட்டியல் கீழே கொடுத்துள்ளது.


கோயிலைச் சுற்றிக் காணப்பட்ட வயல்கள், வயல்கள்


பச்சைக்கம்பளம் விரித்தாற்போல் காணப்படும் வயல்களும், சுத்தமான மண் தரையும்


இங்கே வண்டிகள் வரும் பாதை அந்தப்பக்கம் வயல்கள்



நாலரை மணி வரைக்கும் பார்த்துவிட்டுக் கோயில் திறக்கும் சுவடே தெரியாததால் மீண்டும் முகநூலில் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்துக் கோயில் திறக்கும் நேரம் அல்லது குருக்களின் தொலைபேசி எண் தெரிந்தால் கொடுக்கும்படி கேட்டுவிட்டு, நானே கூகிளில் போய்க் கோயில் பெயரைக் கொடுத்ததும் தினமலர்ப்பக்கத்தில் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்ததும் ஓர் அலைபேசி எண்ணை நம்மவரிடம் கொடுத்து குருக்கள் எண்ணாகத் தான் இருக்கும், பேசிப்பாருங்கள் என்று சொன்னேன். அவரும் பேசினார். அது குருக்கள் எண்ணே தான். அவர் தான் கோயிலுக்கு வரத் தயார் என்றும் ஆனால் சாவி கோயில் அறங்காவலரிடமிருந்து வர வேண்டும் என்றும் சொன்னார். பின்னர் அவரே தொலைபேசிச் செய்தியைத் தெரிவித்துச் சாவியைச் சீக்கிரம் கொண்டு வரும்படி சொல்வதாகவும் சொன்னார்.

மறுபடியும் காத்திருப்பு. முகநூலைத் தோண்டியதில் ஓர் நண்பர் கோயில் இருக்குமிடத்தை கூகிளில் தேடித் தெரிந்து கொண்டாப்போல் குருக்கள் நம்பரையும் தெரிஞ்சுக்கறது தானே என உதவி செய்திருந்தார். அவருக்கு நன்றி கூறிவிட்டு அப்படியே கூகிள் மூலமாகத் தொலைபேசி எண்ணையும் தெரிந்து கொண்டுவிட்டேன் எனக் கூறி விட்டு மறுபடியும் காத்திருக்க ஆரம்பித்தோம். இதற்குள்ளாக நம்ம வண்டி ஓட்டுநருக்கு போரடிச்சிருக்குப்  போல! குருக்கள் எப்போ வருவார் என எங்களைக் கேட்டுத் தொந்திரவு செய்ய நாங்கள் கை விரித்தோம். வரும் வண்டிகள் எல்லாம் எங்களைத் தாண்டிக்கொண்டு சற்று தூரத்தில் காணப்பட்ட வேறோர் கிராமச் சாலையில் சென்று கொண்டிருந்தன. எந்த வண்டியும் இங்கே வரவே இல்லை. அதற்குள்ளாக மயில்களுக்கும் போரடிச்சது போலும். அவையும் காணாமல் போயின. குயில்பாட்டும் நின்று விட்டது. மரங்களின் மர்மர சப்தம் தவிர்த்து வேறே ஏதும் இல்லை.  இனிமேல் தினமலர்ப் பக்கத்தைப் பார்த்தாலும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்ணிற்குத் தொலைபேசிக் கேட்டுக் கொண்டு போவதே நல்லது என எண்ணினோம். திருப்புல்லாணி, தேவி பட்டினம் எல்லாம் அப்படித் தான் கேட்டுக் கொண்டு போனோம். அது போல் காலை/மதியம் திருநெல்வேலிக்குப் போனதுமே கேட்டிருக்கணும். 

61 comments:

  1. செப்பறைக் கோவில் வாசலிலே செய்வதறியாது நின்றீரோ! எப்போதும்போல் ஓடிக்கொண்டு தரிசனம் செய்து, பின் மேலும் மேலும் ஓடிக்கொண்டேயிருக்காமல், நிதானமாகக் கோவில் வாசலில் கொஞ்சம் நிற்கவைத்து, சுற்றுவெளி, பச்சைப்பரப்பு என இயற்கை அழகை ரசிக்க, அங்குமிங்குமாக வரும் சப்தங்களைக் காதால் கேட்க, அந்தப் பரமன் வாய்ப்பளித்தானே. எல்லாவற்றிலும் நானேதான் என்றானே.. புரியாதுபோனதேனோ!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஏகாந்தன். ஓட்டம் நின்று நிதானமாய் இயற்கையின் அற்புத தரிசனம் கிடைத்தது தான்! கோயில் வாசலில் மனதில் ஓர் நிறைவு மட்டுமே இருந்தது.

      Delete
  2. கோவில் பக்கத்துல அதன் ஆகர்ஷணம் இருக்கும். கோவில் பக்கத்துலதானே காத்திருந்தீங்க. பரவாயில்லை.

    (நல்லவேளை குருக்கள்ட போன் செய்து கேட்டீங்க. ஒருவேளை அன்று வராமல் இருந்திருந்தால்?)

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லைத் தமிழரே, இருவேளை வழிபாடு உண்டு என்பதைத் தெரிந்து வைத்திருந்தோம். முன்னர் சென்றிருந்த தோழர்கள் சொன்னார்கள். ஆனால் அவங்கல்லாம் பகல் வேளையில் சென்றிருந்தார்கள்.

      Delete
  3. கீரிப்பிள்ளைகள் பாம்பைத் துரத்துவதை - நீங்க அந்த வேகத்துல போய் படம் எடுக்க முடிந்திருக்குமா?

    ReplyDelete
    Replies
    1. காட்டுக்கு அருகே மயில் நடனத்தை எடுக்க நினைச்சே முடியலை. நான் படம் எடுக்கப் போறேன்னு தெரிஞ்சுண்டோ என்னமோ அது முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டது. இதிலே சுப்புக்குட்டிங்களையும் கீரிப்பிள்ளைகளையும் எப்படி எடுக்கறது! ரொம்ப நேரம் காத்திருக்கணும். சட்டுனு கிடைக்கும் ஒரு செகண்டில் எடுக்கணும். நடக்கிற காரியமா!

      Delete
    2. இந்தத் தடவை நாங்கள் கும்பகோணம் டு திருச்சேறை செல்லும் வழியில், சட் என்று பக்கத்திலிருந்த வயலிலிருந்து பெரிய நாகம் (12 அடிக்கு மேல் இருக்கலாம்) சுருண்டு ரோட்டுக்கு வந்தது. பிறகு டிராபிக் பார்த்து மீண்டும் வயல் பக்கம் போனது. ரொம்ப பிரவுன் நிறத்தில். ஆட்டோ கொஞ்சம் ஜெர்க் அடித்து தொடர்ந்து போயிடுச்சு. இல்லைனா நான் புகைப்படம் எடுத்திருப்பேன்.

      நெல்லையில் நிறைய மயில்கள் பார்த்தோம்.. (ஒரு புறம் முருகனின் வாகனம்னு சொல்லிக்கிட்டே அதைக் கொல்பவர்களும் பெருகிவிட்டார்கள். எங்கள் கிராமத்தில் நிறைய வளையவரும்.. இப்போல்லாம் காணக் கிடைக்கலை)

      Delete
  4. இப்படி காத்திருப்பது கொஞ்சம் கடினமான வேலை. சில சமயம் எனக்கும் இப்படி காத்திருக்க நேரிட்டது உண்டு.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வெங்கட், கர்நாடகாவில் "தொட்டமளூர்" கிருஷ்ணனைப் பார்க்கச் சென்ற போதும் இப்படித் தான் காத்திருந்தோம். இத்தனைக்கும் அங்கிருந்த தபால் அலுவலகத்தில் அவருடைய மருமகளிடமே விசாரித்தோம். சாயந்திரம் நாலரைக்கு என்றால் நாலரைக்குத் தான் கோயில் திறப்பார். அதற்கு முன்னால் திறக்க மாட்டார் எனச் சொல்லிட்டாங்க! ஓரிரு சமயங்களில் வைத்தீஸ்வரன் கோயிலில் போய்க் காத்திருக்க நேரிட்டுள்ளது.

      Delete
  5. //சிறிது நேரத்தில் வயல் வேலை செய்த விவசாயிகளும் சென்றுவிட அந்த இடத்தில் நாங்கள் சென்ற வண்டி, வண்டி ஓட்டுநர், நான், நம்ம ரங்க்ஸ் தவிர்த்து யாருமே இல்லை. ///

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... நினைக்கவே பயமாக இருக்கு..

    //கீரிப்பிள்ளைகள் பாம்புகளைத் துரத்துவது கண்டு படம் எடுக்கப் போனால்//
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னமோ அணிலும் கோழியும் விளையாடுவதைப்போல ரொம்ப சிம்பிளாச் சொல்றீங்களே.. அப்போ கோயிலுக்குள் வந்தால்ல்ல்ல்ல்....

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, இதுக்கெல்லாம் பயப்பட முடியுமா? எங்களோடயே வளர்ந்திருக்காங்க ரெண்டு பேரும். கோயிலுக்குள் வந்தால் தான் என்ன? உம்மாச்சி பார்த்துப்பார்.

      Delete
  6. கோயிலைச்சுற்றி பற்றைகள் இல்லாமல் அழகா இருக்கே.. இங்கின எப்பூடி பாம்பு வந்துது, பஞ்ச சபைகள் அருமை.

    அதுசரி நீங்க ஏன் இந்தக் கோயிலுக்குப் போனீங்க?[ஏதும் விசேசமுள்ளது என அறிஞ்சோ] அல்லது சின்ன வயதில் போன கோயில் எனும் ஆசையிலோ?

    ReplyDelete
    Replies
    1. நான் கொஞ்சம் தள்ளி வந்து வயல்களைப் படம் எடுத்தேன். மற்றபடி கோயில் இருக்குமிடம் காடு தான். காட்டின் நடுவில் தான் அழகிய கூத்தர் குடி இருக்கார்.

      Delete
  7. ///அது போல் காலை/மதியம் திருநெல்வேலிக்குப் போனதுமே கேட்டிருக்கணும்//
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வந்தபின் காப்போன்ன்:)) ஹா ஹா ஹா அனுபவப்பட்டுத்தான் திருந்துவோம்.

    உண்மையில் மயில்கள் இருந்தனவோ.. அப்போ ஏன் நீங்க அவற்றைப் படமெடுக்கவில்லை...

    பெரிய மர்மக் கதை எழுதுவதைப்போல.. அங்கங்கு முக்கிய கட்டத்தில நிறுத்தி தொடர் போட்டிடுறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), ஆனாலும் பாருங்கோ பேஸ்புக் எவ்ளோ ஹெல்ப் பண்ணியிருக்கு உங்களுக்கு.

    ReplyDelete
    Replies
    1. கவி அமுதம், முகநூலில் கேட்டதில் எதுவும் தெரிஞ்சுக்க முடியவில்லை. எல்லோரும் செப்பறை இருப்பது ராஜவல்லிபுரம் என எனக்குத் தெரிந்ததையே சொல்லி இருந்தார்கள். திறக்கும் நேரம் தான் யாருக்கும் தெரியலை! :) மயில்கள் நான் கிட்டேப் போனால் ஓடுகின்றன. என்ன செய்யறது! காட்டுக்குள் போயிடாதேனு பெரிய இடத்து உத்தரவு! மீற முடியுமா?

      Delete
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இங்க ஒரு திருனெல்வேலிக்காரி ஒருத்தி இருக்கறப்ப....எனக்கு ஒரு மெஸேஜ் தட்டிருக்கலாமல்லோ?!!!!! நான் முகநூலில் எல்லாம் இல்லையே....

      கீதா

      Delete
    3. திறக்கும் நேரம் என்னாலும் சொல்லிருக்க முடியாதுதான்....நான் சென்று பல வருடங்கள் அதுவும் வேக் மெமரிஸ்....ஆனால் நம்பர் எடுத்துக் கொடுத்திருப்பேன்...

      கீதா

      Delete
    4. நாங்க போனால் கீதாவுக்கு கோல் பண்றோம்:).

      Delete
    5. உங்களிடம் வாட்சப்பில் தான் கேட்கணும் தி/கீதா, நீங்க எங்கே இருக்கீங்க என்பதும் உங்களால் இணையம் பயன்படுத்த முடியுமானும் தெரியாது இல்லையா? ஏனெனில் நீங்க இன்னமும் பெண்களூரில் செட்டில் ஆகலை. அதோடு அதெல்லாம் நினைவிலும் வரலை என்பதே முக்கியம்.

      Delete
  8. படங்களுடன் பதிவு அருமை.
    காத்து இருந்த நேரத்தில் படங்கள் எடுக்க முடிந்தது உங்களால்.
    கோவில் திறந்து இருந்தால் இறைவனை வணங்கி விட்டு கிளம்ப வேண்டும் நேரமாச்சு என்ற எண்ணம் வந்துவிடும்.
    இயற்கையை ரசித்து கீரிப்பிள்ளை சுப்புகுட்டியை ரசித்து குயில் பாட்டுக் கேட்டு, மபில் ஆட்டம் பார்த்து என்று எவ்வளவு விஷயங்கள் செய்ய முடிந்து இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. உண்மை கோமதி! காத்து இருந்ததால் இயற்கையை ரசிக்க முடிந்தது. மயில் ஆட்டமெல்லாம் ராஜஸ்தானில் தினம் தினம் பார்த்திருக்கேன். என்ன, அப்போ நான் எழுத்தாளி ஆவேன்னும் தெரியாது; காமிராவெல்லாமும் இல்லை. :)))))

      Delete
  9. செப்பறைக்குச் சென்றதில்லை. உங்களால் இன்று அதனைப் பற்றி அறியும் பாக்கியம் கிடைத்தது. செல்லும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முனைவர் ஐயா. கட்டாயமாய்ப் போய்ப் பாருங்கள்.

      Delete
  10. காத்திருப்பது பெரும் சிரமம். அதுவும் உங்களுக்குக் கிடைத்த சுப்புக்குட்டிகள் பக்கத்தில் வராமல் இருந்ததே பெரிய நன்மை. இத்தனை நேரம் அவர் சன்னிதியில் என்று நேரம் போட்டிருக்கிறது. நல்ல வேளை விவரங்கள் எல்லாம் விரல் நுனியில்
    வைத்திருந்தீர்கள். பாராட்டுகள் கீதா. இறைவன் அருள் என்றும் கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வல்லி, நாங்க இத்தனை நேரம் காத்திருக்கணும் என்பது ஏற்கெனவே தீர்மானித்த ஒன்று. பாராட்டுகளுக்கு நன்றி.

      Delete
  11. // கோயிலைச் சுற்றிக் காணப்பட்ட வயல்கள், வயல்கள்... //

    ஆகா...! எங்கு நோக்கினும் சக்தியடா...! இதற்கு மேல் என்ன வேண்டும்...?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், டிடி, அதே போல் வாழைத்தோப்புகள், கரும்புத் தோட்டங்கள்! முன்னரே பார்த்து மகிழ்ந்தோம். இப்போவும் பார்த்தோம். ரசித்தோம்.மனதில் மகிழ்ச்சி உண்டாயிற்று. ஆனால் அங்கே விளையும் பொருட்கள் வெளியே செல்வதில்லை என்றார்கள்.

      Delete
  12. யார் கண்டது நாளை செப்பறைபற்றிய செய்திகளில் உங்களது இந்தப் பதிவும் இடம்பெறலாம்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, அத்தனை அதிர்ஷ்டம் எனக்கும் இருந்தால் நடக்கட்டுமே!

      Delete
  13. வணக்கம் சகோதரி

    தன்னுடைய தரிசனத்திற்காக நிறைய நேரம் உங்களை காக்க வைத்த இறைவன் இயற்கை தரிசனத்தை அளவிட முடியாத அளவுக்கு கொடுத்துள்ளான் போலும். பசுமையான வயல் வெளிகள், மயில் குயில்களின் அழகு வனப்புகள் என்று அழகாக காட்சிகளை கண் நிறைய காட்டியுள்ளார். ஆனால் இந்த பாம்பு.. என்று தாங்கள் சொல்லுமிடத்தில்... இங்குதான் எங்களுக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது.

    இதுவும் இறைவன் தன் ஆபரணங்களில் ஒன்றானது என இஷ்டத்துடன் பூட்டிக் கொண்டாலும், தனியாக அதை காணும் போது சற்று உதறல்தான். அதற்கு நம்மை பிடித்து போய் நம் அருகில் நெருங்கி விட்டால்....அருகில் உதவிக்கு "ஆள்" "அரவம்" இல்லையென்று வேறு குறிப்பிட்டிருக்கிறீர்கள். (ஆனால் "அரவம்"தங்களுடன் இருந்திருக்கிறது. அந்த தைரியத்தில் பொழுதும் உங்களுக்கு நன்றாக போய் உள்ளது. இல்லையா? ஹா ஹா ஹா ஹா.) அதன் பின் தரிசனம் எப்போது கிடைத்தது. அடுத்தபதிவுக்கு காத்திருக்கிறேன். படங்கள் அழகாக வந்துள்ளது. பதிவையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, கமலா, நல்லா ரசிச்சு எழுதி இருக்கீங்க! அரவங்கள் இருந்ததாலேயே மனித "அரவம்" இல்லையோனு நினைக்கிறேன். நாங்க தான் பாம்புகளோடு குடித்தனமே நடத்தி இருக்கோமே! அதைப் பல முறை போட்டுட்டேன். திருப்பிக் கொடுத்தா அதிரடி அந்த சுப்புக்குட்டியாலேயே அடிக்க வருவாங்க! :)))))) சுட்டி தரேன். போய்ப் பாருங்க!
      http://sivamgss.blogspot.com/2018/05/blog-post_18.html

      Delete
  14. அழகான இடம். கோயில் பற்றிய உங்கள் தகவல்களும் மிகவும் பயனுள்ளது. கோயிலுக்குச் செல்லும் முன் கேட்டுக் கொண்டு செல்வது நல்லது என்றும் தெரிந்து கொண்டேன். மட்டுமல்ல தனிமையான இடம் போல இருப்பதால் கேட்டுக் கொண்டு செல்வது நல்லதுதான். உங்களின் பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி துளசிதரன். தினமலர் கோயில் பக்கங்களில் போய்ப் பார்த்துக்கொண்டே தான் கிளம்புவோம். என்றாலும் பல சமயங்களிலும் அதில் உள்ள செய்திகளுக்கும் நாம் நேரில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கத் தான் செய்கிறது. இந்தக் கோயில் பற்றி உள்ளூர்க்காரங்களே அதிகம் அறிந்திருக்கவில்லை. ஆனால் இப்படி இருப்பதும் ஒரு விதத்தில் நல்லது தான். இல்லை எனில் அந்த இயற்கை எழில் அழிந்து விடும். தென்மாவட்டங்கள் தான் ஓரளவு இயற்கைப் பசுமையைக் காப்பாற்றி வருகின்றன. மதுரையில் இப்போது பச்சை என்பதையே பார்க்க முடியாது! :(

      Delete
  15. பாம்புகள் பழைய நினவில் நாங்கல்லாம் சுப்புக்குட்டிகள் எனக் கூறிக்கொண்டு வந்து செல்லம் கொஞ்சும் போல் இருக்கவே வெற்றிகரமாகப் பின் வாங்கினேன்.//

    ஹா ஹா ஹா ஹா எங்கு போனாலும் உங்கள் சுப்புக் குட்டிகள் உங்களை விடாது போலருக்கே!!!! இதை வாசிச்சதும் சிரிச்சுட்டேன்....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, இங்கே சுப்புக்குட்டிங்களையே பார்க்க முடியறதில்லை! :(

      Delete
  16. அக்கா பரவாயில்லையே கோயிலைச் சுற்றி கட்டிடங்கள் வரவில்லை. அதே பசுமை சுற்றிலும்...என்ன அழகு இப்போது மீண்டும் பார்க்கனும் போய் என்று...

    அக்கா தினமலர் பகுதியில் கோயில் குருக்கள் எண்கள் இருந்தது. நீங்க குறித்துக் கொண்டிருப்பீங்கனு நினைச்சேன்...நீங்க கரெக்ட்டா ப்ளான் பண்ணி போவீங்களே அக்கா...அதுவும் இந்தக் கோயில் காட்டுப் பகுதியாச்சே....ஒரு வேளை விசேஷ நாள் என்றால் சீக்கிரமா திறந்திருப்பாங்க போல...நாங்க போயிருந்தப்ப அங்கிருந்த உறவினர்கள் பேசி தெரிஞ்சுருப்பாங்க போல....நாங்க போனது காலையில். ..இப்ப நிறைய மாறியிருக்கலாம்....ஹப்பா பசுமை மாறவில்லை என்பதை உங்கள் பதிவு மூலம் அறிய முடிவது சந்தோஷமா இருக்கு....ஆமாம் அக்கா திருநெல்வேலி பக்கங்களில் கிராமங்களில் விளைவது அது போல நாகர்கோவில் பக்கங்களில் கிராமங்களில் விளைவது எதுவும் வெளியில் செல்வதில்லை.

    கோயில் தகவல்கள் அருமை அக்கா.

    இதை வாசிக்கும் போது எனக்கு யுட்யூபில் பார்த்த ஒரு நல்ல கணொளி நினைவுக்கு வருது. அதில் இது போல சின்ன சின்ன வியாபாரிகள் என்ட்ருப்ரினேர்ஸ் கவனிக்கப்படுவதில்லைனு....இவர்கள் தான் இந்திய பொருளாதாரச் சந்தையில் பெரும்பான்மைக்குக் காரணம் என்பதையும் சொல்லியிருந்த அருமையான காணொளி...இதோ சுட்டி முடிந்தால் பாருங்கக்கா

    https://www.youtube.com/watch?v=yQGaoj9Iwro

    https://www.youtube.com/watch?v=12eD3K5Peu8

    இரண்டும் ஒரே வீடியோதான் எதை வேண்டுமானாலும் பார்க்கலாம் அக்கா..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பின்னர் இந்த விடியோக்கள் பார்க்கவேண்டும்.

      Delete
    2. தி/கீதா, திங்கட்கிழமையிலிருந்து இணையத்தில் அதிகம் உட்கார முடியலை. செவ்வாயன்று இங்கே மாதாந்திர மின்வெட்டு. சாயந்திரம் ஐந்து மணிக்குத் தான் மின்சாரமே வந்தது. :( அதனால் உங்க வீடியோவை நான் இன்னமும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டுச் சொல்கிறேன். தென் மாவட்டங்களின் பொருட்கள் சந்தைக்கு வரவில்லையே என்று வருத்தம் இருந்தாலும் ஒரு விதத்தில் யோசித்துப் பார்க்கையில் அங்கே உள்ள மக்கள் இதற்காகவெல்லாம் வருந்துவதாகத் தெரியலை. உள்ளதை வைத்துக்கொண்டு வாழ்வதில் மகிழ்ச்சியுடனே இருப்பாங்க போல! நகரத்து நாகரிகம் என்னும் பெயரில் இன்னமும் அநாகரிகம் அவங்கலைத் தாக்காமல் இருந்தாலே போதுமானது. போன மாசம் எங்க கிராமம் போனப்போ அங்குள்ள மக்கள், நாரத்தங்காய்கள், முழுப் பறங்கிக் கொட்டை(2 நாட்களே ஆனது) என்று கொடுத்தார்கள்! நம் ஊரிலே அக்கம்பக்கம் விளைந்தால் காசுக்குக் கூடத் தர மாட்டாங்க! :)

      Delete
  17. தி/கீதா, தாமிரபரணிக்கரையோடு போனோம். ஆற்றைக் கடந்ததாக நினைவில் இல்லை.//

    முந்தைய பதிவில் உங்க பதில் பார்த்தேன் அக்கா. ஓ அப்போ நீங்க வேற வழில போயிருக்கீங்க...ரெண்டு வழி இருக்கு அக்கா...ஒன்று ஆற்றைக் கடந்து..ஹைவே இப்போ...அப்போ அது ஒரு மாதிரியான பாதை ....மற்றொன்று உள் வழியா அதாவது கரை வழியா...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எனக்கு அந்த ஊர்ப்பக்கம் அவ்வளவு ஒண்ணும் தெரியாது தி/கீதா. ஓட்டுநர் அழைத்துச் சென்ற வழி தாமிரபரணிக்கரை! :)

      Delete
  18. கோயிலைச் சுற்றியுள்ள இடம் ரொம்ப அழகா இருக்கு அக்கா...இப்பவும்...காடு குறைந்திருக்கும்தான்....

    நாங்க கூட்டமா போனதால தெரியலை...அப்போ அடர் வனம்...அதன் பின் செல்ல வாய்ப்பே கிடைக்கலை...

    அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சின்ன வயசில் பார்ப்பதே ஒரு தனி சுகம் தான். அதுவும் காட்டு வழியில் போவது என்பது இன்னமும் ஆவலுடன் எதிர்நோக்கச் சொல்லும்.

      Delete
  19. அறிவிப்புப் பலகையில் என்ன இருக்கிறது என்று சரியாகப் படிக்க முடியவில்லையே... பாதிதான் படிக்க முடிகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், இரண்டு பகுதியாக எடுத்த அறிவிப்புப் பலகையைச் சேர்த்துப் போடும்போது இன்னொன்று வரவில்லை. அது டெலீட்டும் ஆகி விட்டது! :( படங்கள் அப்லோட் ஆனதும் எரேஸ் என ஏற்கெனவே ஆப்ஷனில் கொடுத்திருந்ததால் மறுபடி எடுக்க முடியலை! :(

      Delete
  20. இந்தப் பதிவு வந்ததை எப்படிப் பார்க்காமல் விட்டேன்? மதியத்தில் கணிணிப் பக்கம் வர முடியாமல் போய்விடுகிறது. அப்போது மிஸ் ஆகி இருக்கும் போலும்.

    ReplyDelete
    Replies
    1. கொஞ்ச நாட்களாகவே நீங்க அதிகம் கணினிப்பக்கம் அல்லது என் வலைப்பக்கம் வரலைனு என்னோட நினைப்பு ஸ்ரீராம். :)))) வேலை அதிகம்?

      Delete
  21. இவ்வளவு தனியாக ஒரு கோவில்... அதுவும் சரித்திரப்புகழ் பெற்ற கோவில்.. என்ன கொடுமை. ...

    ReplyDelete
    Replies
    1. இந்தக் கோயில் இப்படி இருப்பது தான் நல்லது ஸ்ரீராம். பிரபலம் ஆனால் பின்னர் நம்மால் இப்படி சாவகாசமாகப் போய் நடராஜாவைத் தரிசனம் செய்ய முடியாது!

      Delete
  22. தொலைபேசியில் பேசிய குருக்கள் எந்த ஊரிலிருந்து வரவேண்டுமோ! மதுரையிலிருந்து வரவேண்டுமோ?!!!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹி, ராஜவல்லிபுரம் தான். அவருக்கு என்ன அலுப்போ அல்லது ஏதேனும் வேலையோ! :)

      Delete
  23. /என்னதான் மயில் ஆட்டத்தையும், குயில் பாடலையும் கேட்டுக் கொண்டிருந்தாலும் கோயில் திறந்து எப்போப் பார்த்து எப்போப் போவது என்னும் கவலை உள்ளூர இருந்தது. கீரிப்பிள்ளைகள் பாம்புகளைத் துரத்துவது கண்டு படம் எடுக்கப் போனால் பாம்புகள் பழைய நினவில் நாங்கல்லாம் சுப்புக்குட்டிகள் எனக் கூறிக்கொண்டு வந்து செல்லம் கொஞ்சும் போல் இருக்கவே வெற்றிகரமாகப் பின் வாங்கினேன்//

    ஆஆவ் !!! படிக்கும்போதே ஆசையா இருக்கே ..நேரில் ரொம்ப அழகா இருந்திருக்கும் மயில் கீரிகள் .
    நாங்க தர்மபுரில இருந்தப்போ ரெண்டு கீரிப்பிள்ளை வளர்த்தோம் .நல்லா பழகும் அவை .

    என்னது சுப்புக்குட்டிகளும் freeyaa உலாத்தறாங்களா ??? எங்கம்மா ஒன்னு சொல்வாங்க நாம் அவற்றை ஒன்றும் சீண்டாதவரை அவை நம்மை கண்டுக்காது

    ReplyDelete
    Replies
    1. சுப்புக்குட்டிங்க எல்லாம் பார்க்க ஆசையாத் தான் இருக்கு! தொடணும் போலவும் இருக்கும். முகநூலில் ஒரு வீடியோ வந்திருந்தது. அதில் ஓர் இளம்பெண் பாம்பு பிடிப்பதைப் போட்டிருந்தார்கள். என்ன லாகவம்!

      Delete
  24. வயல்களும் அந்த சுத்தமான மண் தரையும் செம அழகு .நம்மூர்க்காரங்க கொடுத்து வச்சவங்க அங்கே வசிக்கிறவங்க தெய்வீக சூழல் அமைதியானா இடம் .ஆட்கள் கூட்டம் சேர்ந்தா உணவு கடை பிசினஸ்னு வியாபார ஸ்தலமாகிடும் அதனால் அதன் அழகு இப்படியே இருக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. அதே, அதே, ஏஞ்சல்! நானும் அதைத் தான் நினைச்சேன்; அதைத் தான் சொல்றேன்.

      Delete
  25. ஆவ்வ்வ்வ் கொமெண்ட்ஸ் போடல்ல போடல்ல எனச் சொல்லிப்போட்டு.. இப்போ எல்லோரும் கொமெண்ட்ஸ் போட்டதும் கீசாக்கா தலைமறைவு கர்ர்ர்:).. இனிச் சொல்லப்போறா.. பின் வீட்டு மாமி வந்தவ என ஹையோ ஹையோ ஹா ஹா ஹா எனக்கெதுக்க்கு ஊர் வம்ஸ்ஸ்.. மீ ரன்னிங்:))

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, ஏற்கெனவே எழுதி இருந்தேன். திங்கள், செவ்வாய், புதன் கொஞ்சம் பிசி என! விருந்தினர் வருகை! அதிலும் ஒருத்தர் வயதானவர் வேறே, உடல்நலம் சரியில்லாதவர். நேற்றுச் சில வீட்டு வேலைகள் முக்கியமாய்ச் செய்து முடிக்க வேண்டியது காலை அவை நேரத்தை எடுத்துக் கொண்டன. சாயந்திரம் அதிகம் உட்கார முடிவதில்லை. அதான் பதில் கொடுக்க அடுத்த பதிவு போட தாமதம்! :( மன்னிக்கவும். மற்றவைக்குப் பின்னர் வருகிறேன்.. இப்போ தினசரி வேலைகள் அழைக்கின்றன.

      Delete
    2. ஓஒ கவனம் கீசாக்கா உடல்நலனைப் பார்த்துக் கொள்ளுங்கோ...

      Delete
    3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரதிரடி, எனக்கு உடம்பு ஒண்ணும் இல்லை. நல்லாத் தான் இருக்கு. வந்திருந்தவருக்குத் தான் கண் ஆபரேஷன் ஆகி இருக்கு. அதோடு சாப்பிட முடியாமல் வாய், வயிறு எல்லாம் புண். பாவம்!

      Delete
    4. இதை எழுதும்போது இப்போத் தான் மாமா, இந்த வார பலன் படிச்சுட்டு எனக்குக் கெட்ட பலன்களாகப் போட்டிருக்கு என்று சொல்லிட்டு இருக்கார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், வயிறு சரியா இல்லாமல் போகுமாம், (இல்லாட்டி என்ன வாழ்ந்தது?) வீண் பழி சுமப்பேனாம்! ஏற்கெனவே சுமந்ததை எல்லாம் என்ன செய்யறதாம்?) :)))))))))))

      Delete
    5. ஹா ஹா ஹா கீசாக்கா ஒழுங்கா எல்லோருக்கும் ஓடி ஓடிக் கொமெண்ட்ஸ் போடுங்கோ இல்லாட்டில் பழி கூடுமாக்கும் ... அத்தோடு மாமாக்கும் 4 கறி வச்சு சப்பாதி தோசை குடுங்கோ.. இல்லாட்டில் அதுக்கும் பழி வருமாக்கும் ஹா ஹா ஹா மீ வெயிட்டிங்:)... கீசாக்காக்கு என்ன பழியெல்லாம் வருதெனப் பார்க்க:)

      Delete
    6. அதை ஏன் கேட்கறீங்க அதிரடி! :))))) இன்னிக்கே ஆரம்பிச்சுடுத்து! மார்ச் 23 ஆம் தேதிக்கு ஃபெப்ரவரி 23 ஆம் தேதினு பயணச்சீட்டு முன்பதிவு செய்து ( எல்லாம் ஒரே சனிக் கிழமையா இருக்கா, அதிலே கன்ஃப்யூஷன்!) அப்புறமா அதைக் கான்சல் செய்துனு 750 ரூ நஷ்டத்தோடு இந்த வாரபலன் ஆரம்பிச்சிருக்கு! ஆனால் ஒண்ணு, பழியை மாமா தலையில் போட்டாச்சு! இஃகி, இஃகி! :))))))

      Delete