Wednesday, September 11, 2019

ஜெயஜெய பாரத சக்தி!

Barathiyar க்கான பட முடிவு


துச்சா தனன்எழுந்தே -- அன்னை
துகிலினை மன்றிடை யுரிதலுற்றான்.
‘அச்சோ தேவர்களே!’ -- என்று
அலறியவ் விதுரனுந் தரைசாய்ந்தான்.
பிச்சேறி யவனைப்போல் -- அந்தப்
பேயனுந் துகிலினை உரிகையிலே,
உட்சோதி யிற்கலந்தாள்; -- அன்னை
உலகத்தை மறந்தாள், ஒருமையுற்றாள். 88

‘ஹரி, ஹரி, ஹரி என்றாள்; -- கண்ணா!
அபய மபயமுனக் கபயமென்றாள்.
கரியினுக் கருள்புரிந்தே -- அன்று
கயத்திடை முதலையின் உயிர் மடித்தாய்,
கரியநன்னிற முடையாய், -- அன்று
காளிங்கன் தலைமிசை நடம்புரிந்தாய்!
பெரியதொர் பொருளாவாய், -- கண்ணா!
பேசரும் பழமறைப் பொருளாவாய்! 89

‘சக்கர மேந்திநின்றாய், -- கண்ணா!
சார்ங்கமென் றொருவில்லைக் கரத்துடையாய்!
அட்சரப் பொருளாவாய், -- கண்ணா!
அக்கார அமுதுண்ணும் பசுங்குழந்தாய்!
துக்கங்கள் அழித்திடுவாய், -- கண்ணா!
தொண்டர்கண்ணீர்களைத் துடைத்திடுவாய்!
தக்கவர் தமைக்காப்பாய், -- அந்தச்
சதுர்முக வேதனைப் படைத்துவிட்டாய். 90

‘வானத்துள் வானாவாய்; -- தீ
மண்நீர் காற்றினில் அவையாவாய்;
மோனத்துள் வீழ்ந்திருப்பார் -- தவ
முனிவர்தம் அகத்தினி லொளிர்தருவாய்!
கானத்துப் பொய்கையிலே -- தனிக்
கமலமென் பூமிசை வீற்றிருப்பாள்,
தானத்து ஸ்ரீ தேவி, -- அவள்
தாளிணை கைக்கொண்டு மகிழ்ந்திருப்பாய்! 91

‘ஆதியி லாதியப்பா, -- கண்ணா!
அறிவினைக் கடந்தவிண் ணகப்பொருளே,
சோதிக்குச் சோதியப்பா, -- என்றன்
சொல்லினைக் கேட்டருள் செய்திடுவாய்!
மாதிக்கு வெளியினிலே -- நடு
வானத்திற் பறந்திடும் கருடன்மிசை
சோதிக்குள் ஊர்ந்திடுவாய், -- கண்ணா!
சுடர்ப்பொருளே பேரடற்பொருளே! 92

‘“கம்பத்தி லுள்ளானோ? -- அடா!
காட்டுன்றன் கடவுளைத் தூணிடத்தே!
வம்புரை செய்யுமூடா” -- என்று
மகன்மிசை யுறுமியத் தூணுதைத்தான்,
செம்பவிர் குழலுடையான், -- அந்தத்
தீயவல் லிரணிய னுடல்பிளந்தாய்!
நம்பிநின் னடிதொழுதேன்; -- என்னை
நாணழியா திங்குக் காத்தருள்வாய். 93

‘வாக்கினுக் கீசனையும் -- நின்றன்
வாக்கினி லசைத்திடும் வலிமையினாய்,
ஆக்கினை கரத்துடையாய், -- என்றன்
அன்புடை எந்தை, என் னருட்கடலே,
நோக்கினிற் கதிருடையாய், -- இங்கு
நூற்றுவர் கொடுமையைத் தவிர்த்தருள்வாய்,
தேக்குநல் வானமுதே! -- இங்கு
சிற்றிடை யாச்சியில் வெண்ணெஉண்டாய்! 94

‘வையகம் காத்திடுவாய்! -- கண்ணா!
மணிவண்ணா, என்றன் மனச்சுடரே!
ஐய, நின் பதமலரே -- சரண்.
ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி!’ என்றாள்.
பொய்யர்தந் துயரினைப்போல், -- நல்ல
புண்ணிய வாணர்தம் புகழினைப்போல்,
தையலர் கருணையைப்போல், -- கடல்
சலசலத் தெறிந்திடும் அலைகளைப்போல், 95

பெண்ணொளி வாழ்த்திடுவார் -- அந்த
பெருமக்கள் செல்வத்திற் பெருகுதல்போல்,
கண்ணபிரா னருளால், -- தம்பி
கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்
வண்ணப்பொற் சேலைகளாம் -- அவை
வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே!
எண்ணத்தி லடங்காவே; -- அவை
எத்தனை எத்தனை நிறத்தனவோ! 96

பொன்னிழை பட்டிழையும் -- பல
புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைகளாய்,
சென்னியிற் கைகுவித்தாள் -- அவள்
செவ்விய மேனியைச் சார்ந்து நின்றே,
முன்னிய ஹரிநாமம் -- தன்னில்
மூளுநற் பயனுல கறிந்திடவே,
துன்னிய துகிற்கூட்டம் -- கண்டு
தொழும்பத் துச்சாதனன் வீழ்ந்துவிட்டான். 97

தேவர்கள் பூச்சொரிந்தார் -- ‘ஓம்
ஜெயஜெய பாரத சக்தி!’ என்றே.
ஆவலோ டெழுந்துநின்று -- முன்னை
ஆரிய வீட்டுமன் கைதொழுதான்.
சாவடி மறவரெல்லாம் ‘ஓம்
சக்திசக்திசக்தி’ என்று கரங்குவித்தார்.
காவலின் நெறிபிழைத்தான், -- கொடி
கடியர வுடையவன் தலைகவிழ்ந்தான்


நேற்றே ஷெட்யூல் செய்து வைக்கலாம்னு தான் இருந்தேன். முடியலை. உடல்நிலையும் ஒரு காரணம். இன்னிக்குத் தான் முடிந்தது. இங்கே இப்போத் தான் பதினோராம் தேதி காலை என்றாலும் இந்திய நேரப்படியும் பதினோராம் தேதிக்கே பதிவு வரவேண்டும் என்பதால் இப்போதே போட்டிருக்கேன்.

24 comments:

  1. இனிய காலை வணக்கம் கீதாமா.
    பாரதியையும், தமிழ்த் தாத்தாவையும்
    நினைக்காமல் உங்களால் இருக்க முடியாது
    என்று காலை எழுந்ததும் நினைத்தேன்.
    ஜெய ஜெய பாரதி.
    ஜெய ஜெய பாரதம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரேவதி, நேத்திக்கே ஷெட்யூல் செய்து இந்திய நேரத்துக்கு வெளியிட நினைச்சு முடியலை. சரி தேதி காலாவதி ஆகும் முன்னர் போடுவோம்னு போட்டுட்டேன். :)

      Delete
  2. ‘ஓம்
    ஜெயஜெய பாரத சக்தி!’

    பகிர்வு அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி அரசு.

      Delete
  3. காலை/ மாலை வணக்கம்.
    வல்லிம்மா சொல்வதுபோல உ வே சா  வையும்,  பாரதியையும் நீங்கள் நினைவு கொள்ளாமல் இருப்பீர்களா...

    ஓம் தேவி பராசக்தி ஆணையுரைத்தேன் பகுதியும், ஓம் ஓமென்று உறுமிற்று வானமும் மனப்பாடப்பகுதிகள்!  

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், அதெல்லாம் ஒரு காலத்தில் மனப்பாடப் பகுதிகள். இப்போ அட்டவணையிலேயே இடமே பெறவில்லை. :(

      Delete
  4. அம்பேரிக்கா போயும் எட்டையபுரத்தானை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி,எங்கிருந்தால் என்ன? நினைவு கூர்வது கஷ்டமெல்லாம் இல்லையே!

      Delete
  5. பாரதி கை கொடுத்தார் இல்லையா

    ReplyDelete
    Replies
    1. எதுக்கு? பாரதி எதுக்குக்கை கொடுத்தார்? புரியலையே ஐயா!

      Delete
    2. அச்சச்சோ அதானே இப்போ எனக்கும் கொயப்பமா இருக்கே எதுக்கு கொடுத்தார்ர் முக்கியமாக ஆருக்கு கொடுத்தார் கையை?:))

      Delete
    3. அதான் எனக்கும் புரியலைஅதிரடி! பாரதி எப்படிக் கை கொடுத்தார்?

      Delete
  6. கீசாக்கா இதென்ன இது அம்பேரிக்கா போயும், கொப்பி பேஸ்ட் பண்ணும் கெட்ட பழக்கத்தைக் கைவிடேல்லையோ ஹா ஹா ஹா...

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னோட எல்லாப் பதிவுகளும் சொந்தப் பதிவுகள் தானே. இது பாரதி பத்தின பதிவுக்கு பாரதி எழுதியதைக் காப்பி, பேஸ்ட் தான் பண்ண முடியும்,

      Delete
  7. கீசாக்கா, நம்பாட்டிலும் சொல்றேன்.. நேற்று பயங்கர தலையிடி, என்பக்கம் கூட கொமெண்ட்ஸ் க்குப் பதில் கொடுக்கவில்லை.. இன்று காலையில் உங்கள் போஸ்ட் பார்த்து கொமெண்ட் போட நினைக்க முன் புதுப்போஸ்ட் போட்டிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. குஞ்சுலுவுடன் விளையாடாமல் அங்கின போயும் புளொக் எழுதிக்கொண்டு இருக்கிறா:)

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, திடீர்னு ஏன் தலைவலி? ஸ்ரீராம் மாதிரி உங்களுக்கும் ஒற்றைத் தலைவலியா? உடம்பைப் பார்த்துக்கோங்க. குஞ்சுலு மத்தியானத்தில் தினம் ப்ளே ஸ்கூல் போயிடும். 2 மணிக்குத் தான் வரும். அந்த நேரம் தான் இதெல்லாம்.

      Delete
  8. மகாகவியைத் தாங்கள் நினைவு கூர்ந்தவிதம் அருமை.. அருமை..

    வான் புகழ் கொண்டு வாழ்கவே பாரதி!...

    ReplyDelete
  9. எங்கு சென்றாலும் கவியை மறக்கவில்லை.

    ReplyDelete
  10. நன்றி மாதேவி

    ReplyDelete
  11. அருமையான வரிகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி யாழ்பாவாணன், நன்றி அடுத்த சுட்டிக்கும்.

      Delete
  12. வணக்கம் சகோதரி

    நலமா? கால் வலி எப்படி உள்ளது. முழுதாக குணமாகியிருக்குமென நம்புகிறேன். தங்கள் பேத்தி தங்களுடன் சகஜமாக பழக ஆரம்பித்து விட்டாளா? பேத்தியுடன் நாட்களை மிகவும் சந்தோஷமாக களியுங்கள். பாரதியார் எழுதிய கவிதை ரொம்பவும் நன்றாக உள்ளது.இந்தப்பதிவை பார்த்த நினைவு இருக்கிறது. ஆனால் அன்றைய தினம் ஏதேதோ வேலைகளில், அதுக்கப்புறமாகவும், உடனே கமெண்ட் போட்டு விட்டேன் என நினைத்து விட்டேன் போலிருக்கிறது. ஆனால்,இப்போது கவனித்ததில், இதுவரை போடாததற்கு மன்னிக்கவும். தங்களின் உடல்நிலையை கவனித்துக் கொள்ளவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கமலா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பேத்தி பழகுகிறாள் என்றாலும் இன்னமும் சகஜபாவம் வரவில்லை. மெல்ல மெல்லத் தான் வரும்னு நினைக்கிறேன். நாங்க தான் பேத்தியோடு இருக்கிறோம் என்பதற்காக வந்திருக்கோம். குழந்தைக்கு இப்போது என்ன தெரியும்? அது விளையாடுவதைப் பார்த்து ரசிக்கிறோம்.

      Delete
    2. கால் வலி ஒரு நாள் சரியானால் இன்னொரு நாள் அதிகமாக இருக்கிறது. இந்தச் சீதோஷ்ணம் என் கால்களுக்கும் நான் சாப்பிடும் மருந்து வகைகளுக்கும் ஒத்து வரக் கொஞ்ச நாள் பிடிக்கும் போல் இருக்கிறது.

      Delete