படங்கள் நிறைய இருந்தாலும் அதில் மக்கள் அதிகம் முகம் தெரியும் அளவுக்கு இருப்பதால் பகிரவில்லை.அங்கும் இங்கும் செல்லும் மக்கள் கூட்டத்தைத் தவிர்த்துப்படம் எடுப்பது என்னைப் பொறுத்தவரை சிரமமாக உள்ளது. ஒரு சில படங்கள் மட்டும் தேர்வு செய்து போட்டிருக்கேன். இன்னும் சில படங்கள் இதற்கு முன்னால் நவம்பர் மாதம் டாலஸ் போனப்போ எடுத்தவை இருக்கின்றன. அதைக் கொஞ்ச நாட்கள் இடைவெளியில் பகிர்கிறேன். இவை எல்லாம் கிறிஸ்துமஸுக்கு முதல்நாள் மாலை இங்கே உள்ள கால்வெஸ்டன் போனப்போ எடுத்தவை என்பதை மறுபடியும் நினைவு கூர்கிறேன். இதற்கு மேலும் வண்ண விளக்கு அலங்காரங்கள் மேலும் ஒரு மைல் நீளத்துக்குத் தொடர்ந்தாலும் தொடர்ந்து எடுக்க முடியலை! :(
விளக்குகளில் ஜாலம் காட்டுகிறார்கள். எல்லாமே அருமை.
ReplyDeleteஇன்னும் அருவியைப்போல் எல்லாம் அலங்கரித்திருந்தார்கள். நாங்கள் களைப்புத் தாங்காமல் கொஞ்சம் குறைவான ஆட்களுடன் வந்த ஓர் பாட்டரி காரில் ஏறிக்கொண்டு விட்டோம். ஆகவே அப்புறமாப் படம் எடுக்கத் தோன்றவே இல்லை. அவ்வளவு அலுப்பு!
Deleteஆனால் மைல் கணக்கில் வெறும் விளக்கு அலங்காரங்கள் போர் அடித்து விடாதோ!
ReplyDeleteஹாஹாஹா, ஸ்ரீராம்! உங்களைப் போல் தான் மாமா சொன்னார்.
Deleteபடங்கள் நன்றாக இருந்தன. ஆனால் ஒன்ற முடியலை.
ReplyDeleteஇருந்தாலும் பனிச்சிற்பங்கள் பரவசம்தான்
வாங்க நெல்லை, ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ருசி!
Deleteபடங்கள் அழகாகவே இருக்கிறது.
ReplyDeleteநன்றி கில்லர்ஜி
Deleteபடங்கள் நன்று. பார்க்கத் தந்ததற்கு நன்றி.
ReplyDeleteநன்றி வெங்கட்!
Deleteவிளக்குகள் அழகு வண்ணங்களோடு நன்றாக ஒளி கொடுக்க்கின்றன.
ReplyDeleteமைல் கணக்கில் நடக்க முடியாதே மா.
முடியலைதான். அதான் பாட்டரி காரில் ஏறிட்டோமே!:)
Deleteவண்ணவிளக்கு அலங்கார பகிர்வு அருமை.
ReplyDeleteவண்ணவிளக்கு சுற்றிய மரங்கள் சித்திர குள்ளர்கள் போல காட்சி அளிக்கும் குல்லா அணிந்து நிற்கும் படம் நன்றாக இருக்கிறது.
ரசனைக்கு நன்றி கோமதி!
Deleteவிளக்கு அலங்கார பதிவுகளை என்று இருக்க வேண்டுமோ
ReplyDeleteதலைப்பிலா, ஆமாம், இருந்திருக்கலாம்.
Deleteஆஹா இம்முறை படமெடுப்பதில் முன்னேறிவிட்டா கீசாக்கா.. இருப்பினும் குளிருக்குக் கை நடுங்கியிருக்கிறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
ReplyDeleteவாங்க அதிரடி, குளிர்னு இல்லாட்டியும், அந்த அதிக நடைக்கும் கை, கால் நடுங்க ஆரம்பிச்சது.
Deleteஅருமை. நீங்கள் செய்ததா? நல்ல படங்கள். ஆனால் இதெல்லாம் மின் விரயம் அல்லவா?
ReplyDeleteநமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்
வாங்க சிகரம், தலைப்பு உங்களை இவ்வாறு நினைக்க வைத்திருப்பதை ஜிஎம்பி ஐயாவின் பதிலில் இருந்து புரிந்து கொண்டேன். இவ்வளவெல்லாம் அலங்கரிக்க மின்சாரத்துக்கு நான் எங்கே போவேன்? தனியாக மின் நிலையம் அமைத்துக்கொள்ள வேண்டாமோ? இது அம்பேரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் நகரின் நகராட்சி வேலை. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஒன்று.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteவிளக்கு அலங்காரங்கள் படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. ஒவ்வொன்றும் ஒரு கலையழகுடன் அற்புதமாக வடிவமைத்து உள்ளார்கள். அவர்களை பாராட்டத்தான் வேண்டும். ஒரு மைல் தூரத்திற்கு நீங்கள் நடந்து செல்வதென்பது இயலாத காரியம்தான். அதுவும் ஆங்காங்கே நின்று படங்களும் எடுத்து செல்வது கடினமான வேலை. ஆனாலும் அழகான படங்களை தங்கள் அதீத முயற்சியால் பொறுமையாக எடுத்து எங்களை காண வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
இந்த பதிவுக்கும் தாமதமாகி விட்டது. போன வாரம் முழுவதும் என் பேத்திக்கு கடுமையான காய்ச்சல். டாக்டரிடம் ஒரு நாள் விட்டு சென்று ஒரே மன உளைச்சல்.. கடவுளிடம் பிராத்தனைகள் செய்தபடி இருந்தேன். அவ்வளவு கவலை. இப்போது நான்கு தினங்களாக நார்மலாக இருக்கிறாள். இப்போதுதான் நிம்மதியாக உள்ளது.ஏதோ உங்களிடம் ஆறுதலுக்காக சொல்ல வேண்டும் போல் இருந்தது. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, ஒண்ணும் அவசரம் ஏதும் இல்லை. நிதானமா வந்து பார்த்தால் போதுமே! பேத்தி உடம்பு இப்போ எப்படி இருக்கு? தேவலையா? குழந்தைகள் கொஞ்சம் சோர்ந்து படுத்தாலே நமக்கு மனசு வேதனைப்படும். அதே குழந்தை அப்புறமா எழுந்து பயங்கர விஷமம் பண்ணும்போது தாங்கவும் தாங்காது! இன்னும் சில நாட்களில் இந்தியா திரும்ப இருப்பதால் இங்கே பெண் வீட்டிற்கு ஒரு பத்து நாட்கள் தங்க வந்திருக்கோம். பையர் வீட்டில் இருந்து கிளம்பும்போது குழந்தைக்குத் தெரியாமல் வந்தோம். அதுக்காகவே பெண் காலம்பரப் பத்து மணிக்கு வந்து அழைத்துக்கொண்டு வந்தாள். குழந்தையிடம் அத்தைக்கு உதவி செய்யத் தாத்தா பாட்டி போயிருக்காங்க என்று மாட்டுப் பெண் சொல்லி வைச்சிருக்கா. நேற்று வாட்சப் வீடியோவில் பார்த்துட்டுக் கண்களில் கண்ணீர் முட்டுகிறது. வந்துடுவோம்னு சொல்லி இருக்கோம். நாங்க இந்தியா வந்தப்புறமா என்ன செய்யுமோ என நினைத்தால் கவலையாத் தான் இருக்கு! மறந்துடும் என என் கணவர் சொல்றார் பார்ப்போம்.
Delete