எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, March 24, 2020

பிரார்த்தனை ஒன்றே வழி!

மிக மோசமான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படி ஒரு நிலைமையை இது வரை பார்த்ததில்லை. யாரும் எங்கேயும் போகக் கூடாது.  நாட்டுக்கு நாடு விதித்துக் கொண்டிருந்த தண்டனை, இப்போது மாநிலங்கள், மாவட்டங்கள், நகரங்கள் எனப் பரவி எங்கும் யாரும் கூட்டமாகவோ 2,3 பேர் சேர்ந்தோ போகக் கூடாது என்று ஆகி விட்டது. நல்லவேளையாக மைத்துனனின் கடைசிக் காரியங்களுக்குச் சென்றிருந்த நாங்கள் வெள்ளியன்று ஸ்ரீரங்கம் திரும்பினோம். ஸ்ரீரங்கத்தில் மேற்கொண்டு செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யலாம் என நினைத்து ஏற்பாடுகள் செய்தோம்.  இரண்டாம் மைத்துனர் சென்னையிலிருந்து ஸ்ரீரங்கம் வரமுடியுமா என சந்தேகம். ஆனால் இன்று வண்டிகள் ஓடக்கூடாது என்பதால் நேற்றே கிளம்பி வந்துவிட்டார். இங்கோ? காரியங்கள் செய்யவேண்டிய அரசுக் கட்டிடமான "விஷ்ணு பாதம்" (ஞானவாபி மாதிரி) பூட்டி விட்டார்கள். அங்கே காரியங்கள் செய்வதற்கென ஏற்கெனவே ஏற்பாடுகள் செய்தவர்கள் என்ன செய்கிறார்களோ தெரியவில்லை. இப்போ எங்களுக்குக் குழப்பம்! என்ன செய்வது எனப் புரியவில்லை.

கல்யாணம், காதுகுத்து, இன்னும் கோயில் திருவிழாக்கள், கிரஹப்ரவேசம், சஷ்டி அப்த பூர்த்தி எல்லாவற்றையும் ஒத்திப் போடலாம். இறப்பை எப்படி ஒத்திப் போடுவது? அந்த இறப்புக்கு வரும் உறவினர்களை எப்படித் தடுப்பது? வெளி ஊரில் இருந்து வருபவர்கள் வராமல் இருந்து விடலாம். உள்ளூர்க்காரர்கள்? உடலை எடுப்பது எல்லாம் எப்படிச் செய்வார்கள்? ஏற்கெனவே எங்க வீட்டில் போல் எத்தனையோ வீடுகளில் கடந்த சென்ற வாரத்தில் இறந்திருப்பார்களே! அவங்களுக்கெல்லாம் போன வாரம் இறந்தவருக்கு  இந்த வாரம் தொடர்ந்து நீத்தார் கடன் செய்வது எப்படி? முக்கியத் தேவைகளுக்கு அனுமதி என்கிறார்கள். முக்கியத் தேவைகளில் இதுவும் வரும் என்றே நம்புகிறேன். மைத்துனர் வருவாரா, மாட்டாரா என்று கலங்கிக்கொண்டிருந்தபோது நேற்றே கிளம்பி வரும்படி செய்த அந்த ஆண்டவன் தான் மற்றக் காரியங்களையும் நடத்திக் கொடுக்க வேண்டும். ஒன்றுமே புரியவில்லை. ஒரே குழப்பமும், மனக்கவலையுமாக இருக்கிறது! எவ்வளவு மோசமான ஒரு காலத்தைக் கடந்து கொண்டிருக்கிறோம், இனி என்ன செய்யப் போகிறோம்? இதற்கு என்ன முடிவு என்றெல்லாம் யோசித்தால் விடை ஏதும் கிடைக்கவில்லை.

எல்லாம் வல்ல ஆண்டவன் துணையால் அனைவரின் துன்பங்களும் நீங்கட்டும். பிரார்த்திப்போம். 

35 comments:

  1. உண்மைதான் கீசாக்கா எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் எனப் புரியவில்லை, உலகம் அழியத்தான் போகுதோ எனும் எண்ண்ணமும் வருது:(.

    இங்கும் நேற்று இரவிலிருந்து, ஆரும் வெளியே செல்லக்கூடாது, ஏதும் அத்திய அவசிய தேவை தவிர என அறிவிச்சிருக்குது அரசு.

    தமிழ்நாட்டில் இப்போ ஒரு இழப்பு எனில், 3 மணி நேரத்துள் அலௌவலை முடித்திட வேண்டும் எனச் சொல்லியிருக்காமே.. அதிலும் சில இடங்களில், காச்சல் என்றாலே வெளியே போர்ட் போடுகிறார்களாம், ஆரும் உள்ளே போகவும் கூடாது, வெளியே வரவுக் கூடாது என...

    ReplyDelete
    Replies
    1. வாங்க அதிரடி. ஆமாம், ஆனால் நேற்றைய செய்தியில் திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளுக்குப் பயணம் செய்பவர்களுக்கு அனுமதி கொடுப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

      Delete
  2. உண்மையிலேயே இந்த நேரத்து மரணங்களின் குடும்பம் படும் கஷ்டம் மிகவும் வேதனையானது.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் கில்லர்ஜி!

      Delete
  3. நலமே விளையட்டும்.

    நிறைய பிரச்சனைகள் இங்கேயும் - இதில் எங்கள் அலுவலகத்திற்கு விடுமுறை கிடையாது எனச் சொல்லி விட்டார்கள். போக்குவரத்தும் இல்லை - எப்படி அலுவலகத்திற்குச் சென்று வரப் போகிறோம் என்று புரியவில்லை. இன்று அலுவலகம் செல்லவில்லை. அலுவலகத்தில் இன்றைக்கு Order போட்டு விட்டார்கள் - எல்லோரும் வந்தே ஆக வேண்டும் என!

    இதுவும் கடந்து போகும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், இந்த இக்கட்டைக் கடப்பதற்காகவேனும் வண்டி வாங்கி விடுங்கள். அலுவலகம் செல்ல வசதியாக இருக்கும்.

      Delete
  4. மற்ற காரியங்களையும் இறைவன் நல்ல படியாக முடித்துக் கொடுப்பார்.
    மைத்துனரை நல்ல படியாக வர வைத்த இறைவன் நீத்தார் கடனையும் நல்லபடியாக செய்ய அருள்புரிவார்.

    சோதனையான காலகட்டம்தான். இறைவன் மட்டுமே இந்த சோதனை காலத்தை கடக்க உதவ முடியும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, உங்க வாக்குப் பலித்தது.

      Delete
  5. கீதாக்கா உங்கள் வருத்தம் ஆதங்கம் புரிகிறது. இப்படியான இக்கட்டான சூழலில் கண்டிப்பாக இது போன்றவை கடினம் தான்.

    சில அபார்ட்மென்ட்களில் வெளி ஆட்கள் வரக் கூடத் தடை உண்டு. பானுக்காவுக்கும் தற்போது இதே கஷ்டம்தான்.

    உங்களுக்கு கண்டிப்பாக வழி பிறக்கும். கண்டிப்பாகப் பிரார்த்திப்போம். நல்லது நடக்கும். பாருங்கள் ஒரு வழி நிச்சயமாகப் பிறக்கும். பிரார்த்தனைகள்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளையாக எங்கள் குடியிருப்பில் வெளியே இருந்து வருபவர்களுக்குத் தான் தடை! எப்படியோ எல்லாம் முடிந்தது.

      Delete
  6. அன்பு கீதாமா,
    இப்படி ஒரு காலம் நேரம் வந்ததே மிகப் பெரிய இடர் தான்.
    பெரிய சவாலாக இருக்கிறது.
    உண்மையில் பத்து நபர்களாவது சேர்ந்தால் தான் இது போலக் காரியங்கள் நிறைவேறும்.

    அத்தியாவசியத் தேவைகளில் கர்மாவுக்கு முதல் இடம் இல்லையா.
    நண்பர்களை விசாரித்தீர்களா.
    திருச்சியிலேயே 100 நபர்களுக்காவது இந்த வைரஸ் இருக்க சந்தர்ப்பம் உண்டு என்று படித்தேன்.
    இன்றுடன் எட்டு நாட்கள் ஆகிறது இல்லையா.
    வீட்டில் செய்ய முடியாதா. இல்லை
    கீழே கூடம் ஏதாவது இருக்கிறதா.
    சீக்கிரம் தீர்வு கிடைத்தால் நன்மை.
    பகவான் கருணை வைக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, கர்மா எப்படியோ முடிந்தது.

      Delete
  7. இறுதி சடங்கிற்கோ அல்லது இறுதி சடங்கு வாகனத்திற்கோ தடை இல்லை. இறுதி சடங்கின்போது அதிகம் கூட்டம் கூடாமலும், வந்த உறவினர்களை ரொம்ப நேரம் ஒரே இடத்தில் வைத்திருக்கவும் மட்டுமே கூடாது

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜி, கூட்டம் எல்லாம் இல்லை. நாங்க ஐந்தே நபர்கள் தாம். மற்றவர்களால் வரமுடியாத சூழ்நிலை.

      Delete
  8. ரொம்ப சங்கடமான நிலைமைதான். இங்க உறவினர், தன் பெற்றோரின் ச்ராத்தத்துக்கு என்ன செய்வது என்று யோசிக்கிறார். இது அபர காரியம், உடனே செய்தாகவேண்டியது. நிச்சயம் உங்களுக்கு அங்கு உதவி கிடைக்கும்னு நினைக்கிறேன்.

    இந்தச் சமயத்தில், 2015 சென்னை வெள்ளத்தில் எழுத்தாளர் விக்ரமன் அவர்களின் பூத உடல் (மாம்பலம்) அல்லாடியது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ராத்தம் பின்னால் நாள் பார்த்துச் செய்து கொள்ளலாம். நாங்க மாமியாரின் ஸ்ராத்தத்தை அம்பேரிக்காவில் செய்ய முடியாமல் இங்கே வந்த பின்னர் நாள் பார்த்துச் செய்தோம்.

      Delete
  9. ஞான வாபிலாம் பூட்டிவிட்டார்களா? பிராமணர்கள், வாத்தியார்கள், சமையல் செய்பவர் - இவர்களும் அங்க இங்க என்று செல்ல முடியாது என்பதாலா? ரொம்பவே கடினமான தருணம்தான். ப்ரார்த்தனை ஒன்றுதான் தீர்வு என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்,ஞானவாபி பூட்டி விட்டார்கள். ஆனால் ஓரிரு திருமணங்கள் குறைந்த உறவினர்களோடு எங்கள் குடியிருப்புக்குப் பின்னால் உள்ள சத்திரத்தில் நடந்து வருகின்றன. நேற்றுக் கூட ஒரு திருமணம்.

      Delete
  10. விடை ஏதும் கிடைக்க வில்லை..

    உண்மை தான்..

    விடையேறும் பெருமான் தான்
    நம்மையெல்லாம் காத்தருள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, வேண்டிக் கொண்டே இருக்கோம்.

      Delete
  11. ஆம், மிக மிக மிகக் கடினமான ஒரு சூழலைத் தாண்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.  காலநிலையை, அதன் வீர்ய விபரீதத்தை உணர்ந்து சில விஷயங்களை ஒத்திப்போட வேண்டியதுதான்.  மறைந்தவர் உடலை எடுத்துச் செல்லத் தடை இல்லை.  மற்ற காரியங்கள் பின்னர்தான் செய்ய வேண்டும்.  இறைவன் அனைவரையும் காக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், இறப்புக்குப் பின்னர் வரும் பத்து நாள் காரியங்களில் தடங்கல் வரக்கூடாது என்றே சொல்லுவார்கள். அதற்கு மாற்று இருப்பதாகவும் தெரியலை. ஆனால் கடவுள் கிருபையில் தடங்கல் இல்லாமல் நடந்தது.

      Delete
  12. வணக்கம் சகோதரி

    பதிவை படித்தேன். தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மையே..! இன்றைய நிலைமை மிக கலக்கமான சூழ்நிலைகளை தருகிறது. உங்களது சூழ்நிலையும் மிக கஸ்டமானதுதான்.! புரிந்து கொள்ள முடிகிறது. அனைவரும் நலமாக இருக்க ஆண்டவனை பிரார்த்திப்பது தவிர இப்போதைக்கு வேறு எதுவும் தோன்றவில்லை.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்பவே கலக்கமான சூழ்நிலை கமலா. ஆனாலும் ஆண்டவன் கருணையும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

      Delete
  13. உண்மை தான் அம்மா... பிரார்த்தனை ஒன்றே வழி...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் திரு தனபாலன். பிரார்த்தனை ஒன்றே தான் வழியைக் காட்டுகிறது.

      Delete
  14. பிரார்த்தனை பலிக்கட்டும்

    ReplyDelete
  15. பிரார்த்தனை பலிக்கட்டும்

    ReplyDelete
  16. இக்கட்டான சூழ்நிலை அதுவும் கடந்து போகும் என நம்பிக்கை கொள்வோம்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு மாதிரியாகக் கடந்து விட்டது மாதேவி.

      Delete
  17. நமக்காகவும், அனைவருக்கவும் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா, லோக க்ஷேமத்துக்காகவும் பிரார்த்திப்போம்.

      Delete
  18. இக்கட்டான சூழலில் இயற்கை இறப்பின் பின்னான காரியங்கள் நடைபெறுவதிலும் தாமதம், குழப்பம். எதுவும் நம் கையில் இல்லை என அதிரடியாக உணர்த்தும் காலகட்டம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஏகாந்தன். ஆனாலும் இறை தன் இருப்பைக் காட்டி விட்டது எல்லாம் சுமுகமாக நடந்தது.

      Delete