Sunday, February 19, 2023

தாத்தாவிற்குச் சற்றுத் தாமதமான அஞ்சலி!




தாம் வாழ்ந்து வந்த ஊரான ஆரியமூலையில் தமிழ் மேலும் கற்க வழியில்லாததால் சேர்வடைந்ததாகவும் அரும்பாவூர் நாட்டார் என்னும் பெரும் செல்வர் தமது இல்லத்தில் தங்கியிருந்த பொழுது, உ.வே.சாவின் தமிழார்வத்தை உணர்ந்து, இவரை மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் அனுப்பும் படி பரிந்துரைத்தது தம்மனத்தில் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்க வேண்டும் என்னும் வேட்கையை எற்படுத்தியது என்று குறிப்பிடுகிறார். இடையில் சிலகாலம் விருத்தாச்சலம் ரெட்டியாரிடம் உ.வே.சா தமிழ் கற்றார். பாடல் எழுதுவதன் நுணுக்கங்களை அங்கு கற்றார். மேலும் புத்தகங்களைப் படிப்பது மட்டும் போதாது, படித்தவர்களிடம் பாடம் கேட்க வேண்டும் என்பதையும் அப்பொழுது நன்கு உணர்ந்து கொண்டார். பின்னர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் சேர்ந்து பாடம் கற்கத் துவங்கினார். அப்பொழுது திருவாடுதுறை ஆதினத்தின் தொடர்பும் கிடைத்தது. அத்தொடர்பு இவர் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இறுதி வரையிலும் இத்தொடர்பு உ.வே.சா விற்க்கு மிகுந்த பலத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. பிற்காலத்தில் மடத்தலைவருடன் மிகவும் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் அதனால் அறிய தமிழ் தொண்டு ஆற்றவும் இது வழி வகுத்தது. உ.வே.சா தமது ஆசிரியர் திரு.மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் அளவிட முடியாத பற்றும், பாசமும் பக்தியும் கொண்டிருந்தார். தமது இறுதிக் காலம் வரை இவற்றில் இம்மியும் குறையவில்லை.


திருநாகைக்காரோணம், நைடதம், திருக்குடந்தைத்திரிபந்தாதி, பழமலைதிருபந்தாதி, திருப்புகலாதிருபந்தாதி, மறைசையந்தாதி, தில்லையக அந்தாதி, மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், செங்கழநிர்வினாயகர் பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், அஸ்டபபிரந்தங்கள், சீர்காழிக்கோவை, கண்ணப்பநாயனார் புராணம் ஆகிய நூல்களை அவரிடம் கற்றார். ஆசிரியரும் மிகவும் வருமையில் இருந்தார் என்று உ.வே.சா கூறுகிறார். “புலமையும் வருமையும் சேர்ந்தே இருப்பது இந்நாட்டின் சாபம்” இது உ.வே.சாவின் கூற்று. திருவாடுதுறை ஆதினம் திரு.சுப்பிரமணிய தேசிகரை ஆசிரியருடன் சென்று சந்தித்து, அங்கு ஒரு பாடலுக்கு விளக்கம் சொல்லும் வாய்ப்பு கிடைத்தை பெருமையுடன் கூறுகிறார். இசையுடன் பாடல்களை பாடி விளக்கம் அளித்த உ.வே.சா, தேசிகரிடம் நல்ல எண்ணத்தை உருவாக்கினார். ஆதினத்தில் பல புலவர்களுடன் கலந்துரையாடவும், ஆசிரியர்கள் நடத்திய பாடமும் கேட்கும் சந்தர்பமும் கிடைத்தது. சுப்பிரமணிய தேசிகர் ஐயரவர்களுக்கு புத்தகங்கள் பரிசு கொடுத்து அன்பு பாராட்டினார். இது தமது ஆசிரியருக்கு மெத்த மகிழ்ச்சியைக் கொடுத்தது என்று உ.வே.சா கூறுகிறார். ஆசிரியரிடம் பாடம் கேட்டதால் தமக்கு எவ்வளவு பெருமை என்றும் மற்றும் ஆசிரியர், தேசிகர் ஆகியோர் அன்பு இவரை நெகிழவைத்தது எனவும் கூறுகிறார். “என்ன துன்பம் வந்தாலும் இவர்களை விட்டுப் பிரிவதில்லை” என்று முடிவு செய்துள்ளார்.

13 comments:

  1. அன்புடன், நன்றியுடன் நினைவு கூர்வோம்.

    எங்கே இன்னும் உங்கள் பதிவைக் காணோமே என்று காலை முதல் பார்த்துக் கொண்டிருந்தேன்!

    ReplyDelete
  2. மன்னிக்க வேண்டும்..

    இதோ நானும் வந்து விட்டேன்..

    ReplyDelete
  3. சாமிநாத ஐயர் என்பதை சாமிநாதன் என்றாக்கி விட்டார்கள்..

    நாம் சற்று ஒதுங்கி இருப்பதே நல்லது..

    ReplyDelete
  4. தமிழ்த்தாத்தா அவர்களுக்கு வணக்கங்கள்..

    என்றும் மறப்பதில்லை..

    ReplyDelete
  5. அக்கா..
    நலம் தானே..

    எல்லாருக்காகவும் வேண்டிக் கொண்டு இருக்க வேண்டிய காலம் இது..

    எல்லாருக்கும் இறைவன் துணை..

    ReplyDelete
  6. Replies
    1. //மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் கல்வி, திருவாடுதுறை ஆதீனம் தொடர்பு :

      தாம் வாழ்ந்து வந்த ஊரான ஆரியமூலையில் தமிழ் மேலும் கற்க வழியில்லாததால் சேர்வடைந்ததாகவும் அரும்பாவூர் நாட்டார் என்னும் பெரும் செல்வர் தமது இல்லத்தில் தங்கியிருந்த பொழுது, உ.வே.சாவின் தமிழார்வத்தை உணர்ந்து// சூரிய மூலை நு போடலையே தம்பி. ஆரிய மூலைனு தான் போட்டிருக்கு. எதுக்கும் மறுபடி பார்க்கிறேன்.

      Delete
  7. கீதாக்கா நானும் தாமதமாகிவிட்டது வருவதற்கு.....உங்களை அழைப்பதாக இருந்தேன் இன்று....

    பதிவின் விஷயங்களை அறிந்து கொள்கிறேன்.

    அருமையான தாத்தாவை நினைவு கூர்வோம்...

    கீதா

    ReplyDelete
  8. நல்லதொரு நினைவஞ்சலி

    ReplyDelete
  9. Thanks to one and all. It will take time to answer separately. :)

    ReplyDelete
  10. சூரிய மூலை கிராமம் உ. வே. சாமிநாதையர் பிறந்த ஊராகும். அவரது தந்தையின் ஊர் 
    உத்தம தான புரம் சூரியமூலை அவரது தாயாரின் ஊராகும்.

    ReplyDelete
  11. தமிழ் தாத்தாவை நினைவு கூருவோம்.

    ReplyDelete
  12. தமிழ் தாத்தா பகிர்வு அருமை.
    நலமா? ஓய்வு எடுங்கள்
    நான் இரண்டு நாளாக ஊரில் இல்லை.

    ReplyDelete