Sunday, September 17, 2023

எங்கே தப்பு?

 குஞ்சுலு ஊருக்குப் போனதில் இருந்து ஒரே நெருக்கடி. -ஹி-ஹி, அதால் இல்லை. உறவினர் வருகை/திரும்புதல் என. உட்கார நேரம் இல்லை. சென்ற வாரம் ஒரு கல்யாணம். பையருக்கு 26 வயது/பெண்ணூக்கும் கிட்டத்தட்ட 2,3 வயதே கம்மி. பார்க்கவே அழகாக இருந்தது. இங்கே ஶ்ரீரங்கத்திலேயே பெரிய திருமண அரங்கான அரங்கன் அரங்கத்தில் கல்யாணம். உண்மையிலேயே பெரிய திருமண மண்டபம். மாமியார் வழி சொந்தங்கள் அனைவரும் வந்திருந்தனர். ஆகவே நம்ம வீடு கல்யாண வீடு மாதிரி ஆகி விட்டது. எல்லோரும் வருவதும் போவதுமாக இருந்தது. உட்கார நேரமில்லை. பின்னர் அவசரமான  ஒரு சின்னப் பயணமாகச் சென்னைக்குப் போயிட்டு புதன்கிழமை திரும்பிட்டோம். மறூநாள் அமாவாசை வேறே! மூச்சு விட முடியலை.

செப்டெம்பர் 11 ஆம் தேதி குட்டிக் குஞ்சுலுவின் பிறந்த நாள். அன்னிக்குக் குஞ்சுலுவைப் பார்த்து ஆசிகள் சொன்னோம். குதித்துக் கொண்டு இருந்தது. அதோட அன்னிக்குத் தான்  பாரதியின் நினைவு நாள். கணீனியைத் திறக்கவே முடியலை. விடாமல் பதிவு போட்டிருக்கேன். ஆனால் இந்த வருஷம் முடியலை!அன்னிக்குப் பூரா மனசில் பாரதியின் நினைவுப் பதிவு போடாதது முள்ளாகக் குத்தியது. என்ன செய்ய? மறூநாள் அதிகாலை சென்னை கிளம்பணூமே! உறவினரையும் கவனித்துக் கொண்டே கிளம்பவும் ஏற்பாடுகள். முன்னெல்லாம் தினம் இரு பதிவுகள் கூடப் போட்டிருக்கேன். வெளீயே எங்காவது போனால் நம்பிக்கையான நட்பிடம் கடவுச் சொல்லைக் கொடுத்துப் பதிவுகள் போடச் சொன்னதும் உண்டு. பின்னர் ஷெட்யூல் செய்து வைக்க ஆரம்பித்தேன். ஆனால் இப்போ 2016 ஆம் ஆண்டில் இருந்தே சுணக்கம். இப்போ 2021க்குப் பின்னர் ரொம்பவே மோசம். பதிவு போட்டாலே பெரிய விஷயம் என இருக்கு. இந்த வருஷம் அதை விடவே மோசம். இதுவும் ஒரு நேரம். கடந்து போகும் என நினைக்கிறேன்.

பல வேலைகள் முடிக்காமல் கிடக்கின்றன. வயதோ ஆகிறது. எதை எடுத்துச் செய்வது? எல்லாமே முக்கியமானவை தான். இனியாவது உட்கார முடியுமா? உட்கார்ந்தாலும் வேலைகள் முடிக்க முடியுமா? தெரியலை. என்னமோ நாட்கள் பறக்கின்றன. ஆனால் வெட்டியாக! மனது ஒரு பக்கம் குத்தினாலும் நேரம் வாய்ப்பது கஷ்டமாக இருக்கே!  ஏன் இப்படி? எங்கே தப்பு? உட்கார்ந்து யோசிச்சாலும் புரியலை. கடவுள் தான் சரி பண்ணணூம்.


14 comments:

  1. மனசுதான் காரணம். சட்டென உற்சாகமாகி விடுங்க.. பழையபடி ஆகி விடலாம்.

    ReplyDelete
    Replies
    1. இல்லை ஶ்ரீராம், நேரப் பற்றாமல் போவதை என்ன செய்யலாம்?

      Delete
  2. செப் 11 எங்கள் அண்ணனின் பிறந்த நாளும் கூட! பேத்திக்குமா? வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. இந்திய நேரப்படி செப்டெம்பர் 12 ஆம் தேதி காலை ஆறு மணீ திங்கட்கிழமை. அம்பேரிக்க நேரப்படி செப்டெம்பர் 11 ஆம் தேதி மாலை ஏழரை மணீ ஞாயிறூ

      Delete
  3. உறவினர் வருகை அது இதுவென பிஸியானதில் மனதில் ஒரு மாறுதலும் உற்சாகமும் வந்திருக்கணுமே....

    ReplyDelete
    Replies
    1. ஹையோ! அதை ஏன் கேட்கறீங்க! உடனேயே சென்னை கிளம்ப வேண்டி இருந்ததா? மூச்சு விட நேரமில்லை.

      Delete
  4. இதில் சொல்லாமல் கொள்ளாமல் சென்னை வேறு வந்து சென்றிருக்கிறீர்கள்..  சொல்லவே இல்லை!

    ReplyDelete
    Replies
    1. ஒரு முக்கியமான விசேஷம். திடீர்னு முடிவாச்சு. சொன்னால் எல்லோருக்கும் சொல்லணூம் இல்லையோ?

      Delete
  5. குஞ்சுலுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    செப்டம்பர் 11 என்றதும் பாரதியின் நினைவுதான் எனக்கு வந்தது.

    எல்லாம் நலமாகும் வாழ்க வளத்துடன்.

    ReplyDelete
    Replies
    1. நன்னி கில்லர்ஜி. ஒழுங்கா எழுத முடியாமல் கலப்பை தொந்திரவு. ;( சுரதா ஏன்னே கேட்கலை.

      Delete
  6. மகாகவிக்கு ஒரு பதிவு செய்வதற்கு நானும் தவறி விட்டேன்.. வருத்தமாக இருக்கின்றது..

    நேரம் அமைவபது கஷ்டமாக இருக்கின்றது.. இத்தனைக்கும் சும்மாதான் இருக்கின்றேன்..

    கண்ணாடி மாற்றுவதற்கு இன்னும் சூழ்நிலை அமையவில்லை.. ஆனாலும் பதிவுகள் போட்டுக் கொண்டு தான் இருக்கின்றேன்..

    கருத்துரைகளுக்கு பதில் சொல்ல இயலவில்லை.

    காலில் வலியும் குறையவில்லை.. ஆனாலும் சில ஊர்களுக்கு சென்று வந்து கொண்டிருக்கின்றேன்..

    கடவுள் தான் துணை..

    ReplyDelete
    Replies
    1. வாங்க தம்பி. முதலில் உடம்பைப் பார்த்துக்கோங்க. விரைவில் கண்ணாடி மாத்துங்க. கால் வலிக்கு ஆர்தோஹெர்ப் முயற்சி செய்து பாருங்க. மாத்திரைகளூம் கிடைக்கின்றன.

      Delete
    2. தங்கள் அன்பினுக்கு நன்றி அக்கா..

      Delete
  7. பாரதியார் நினைவு நாள், பிறந்நாள் என்று பதிவுகள் போட்டு கொண்டு இருந்தேன், பதிவுகளில் பாரதியார் கவிதை பகிர்வேன் அடிக்கடி. பாரதியார் கவிதை புத்தகம் பழசு ஆகிவிட்டது என்று புதிதாக ஒரு பாரதியார் கவிதை புத்தகம் வாங்கி தந்தார்கள் என் பிறந்த நாளுக்கு. அது போல திருக்குறள் புத்தகமும்.

    பேத்தி துர்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், கால தாமதமாக. எனக்கும், என் கணவருக்கும் செம்படம்பர் மாதம்( தமிழ் மாதம்ஆவணி) வரும்.

    முடிக்க நினைத்து இருக்கும் வேலைகளை இறைவன் அருளால் முடிக்க இறைவன் மனபலம் உடல் பலம் தருவார்.

    ReplyDelete