எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, April 23, 2019

அன்னையின் சந்நிதியில்!

  கோலாப்பூரை நோக்கி

மேலே உள்ள சுட்டியில் நாம் கடைசியாகப் பார்த்தது காலை உணவு பற்றி. காலை உணவு எடுத்துக்கொள்ள ஆட்டோ ஓட்டுநரை அழைத்தபோது அவர் தான் வீட்டிலேயே சாப்பிட்டு வந்துவிட்டதாகச் சொல்லி மறுத்துவிட்டார். பொதுவாகவே வடமாநிலங்களின் ஆட்டோ ஓட்டுநர்கள், கார் ஓட்டுநர்கள் நாம் சாப்பிட அழைத்தால் உடனே வர மாட்டார்கள். ரொம்பத் தயங்குவார்கள். ஆகவே நாங்களும் வற்புறுத்தவில்லை. நாங்கள் ஆகாரம் எடுத்துக் கொண்டு வந்ததும் கோயிலுக்குச் செல்லும் நுழைவாயிலுக்கு அருகே வண்டியைக் கொண்டு போய் நிறுத்தினார் ஓட்டுநர். அங்கிருந்து கோயிலுக்கு உள்ளே நடந்து தான் செல்ல வேண்டும். கோபுர வாயிலுக்கு அருகே சென்றிருந்தோம். விதவிதமான பூக்கள், பழங்கள், தேங்காய்கள் எனத் தட்டுக்களில் வைத்துக் கூடவே புடைவை (அநேகமாகப் பச்சை நிறம்)ரவிக்கைத்துணி, கண்ணாடி வளையல்கள் ஆகியவை வைத்து அம்பிகைக்கு எடுத்துப் போகச் சொன்னார்கள்.பலரும் இப்படிப் பிரார்த்தனை செய்து கொள்ளுவது உண்டாம். அதைத் தவிர்த்தும் பூக்கள், பழங்கள் தனியாகவும் கொண்டு சென்றனர்.  அங்கே அநேகமாக அல்லிப்பூக்களும், குமுதமுமே கிடைத்தன. மல்லிகைப்பூக்கள் நூலில் கட்டி (தள்ளித்தள்ளி) விற்றனர். சுமார் ஒரு முழம் பூ 20 ரூபாய் என்றனர். யார் கட்டினார்கள் எனக் கேட்டால் மதராசி என்றனர். அங்கெல்லாம் நாம் வாழை நாரில் நூலில் பூக்கட்டுவதைப் போல் கட்டத்தெரியாது. ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். ஊசி நூல் வைத்துக் கொண்டு கூட வரிசையாகக் கோர்க்கத் தெரியாது.பூக்கட்டுவது ஓர் அரிய கலை அவர்களுக்கு.  ஆனால் நாங்க ஶ்ரீரங்கத்தில் இருந்தே தாமரைப் பூக்கள் வாங்கிச் சென்றிருந்தோம். ஆகாய விமானத்திலும் ஏசி, இரவு ரயிலும் ஏசி என்பதால் பூக்கள் வாடவில்லை. அவற்றின் இதழ்களைப் பிரித்து வைத்திருந்தேன். அவற்றை எடுத்துக் கொண்டோம். செருப்புக்களை வண்டியிலேயே விட்டுவிட்டு ஆட்டோ ஓட்டுநர் சொன்ன வழியில் கோயிலை நோக்கிச் சென்றோம்.


இது தெற்கு வாசல் கிட்டத்தட்டக் கோட்டை போன்ற அமைப்பு கோயிலும்

உள்ளே பிரகாரம், எதிரே வரிசையில் நிற்பதற்காகப் போடப்பட்டுள்ள கம்பித்தடுப்புகள்



இவற்றிலும் ஏறி மேலே செல்லலாம். இது தரிசனம் செய்துவிட்டு வந்த பின்னர் எடுத்த படங்கள். அதோடு முதல் நாள் தான் ஹோலி நடந்து முடிந்திருந்ததால் தரையெங்கும் வண்ணமயம்


முக்கியக் கோபுரம் இதன் கீழே தான் அம்பிகை வாசம் செய்கிறாள்.

கோயிலுக்குச் செல்லும்போதே கூட்டம் எப்படி என விசாரித்த வண்ணம் சென்றோம். அரை மணி நேரம் நிற்கும்படி இருக்கும் என்றனர். நாங்கள் சென்றபோது வரிசை நிறைந்து சுமார் நூறுபேர்களுக்கும் மேல் நின்று கொண்டிருந்தனர். அதற்குள்ளாக ஆட்டோ ஓட்டுநர் அங்கே வந்து எங்களை அழைத்துக் கொண்டு வேறொரு வழியில் சென்றார். அங்கே கூட்டம் இல்லை. அங்கே மேலே போகச் சொல்லிவிட்டு அங்கே இருக்கும் நபரிடம் ஆட்டோ ஓட்டுநர் அனுப்பியதாகச் சொல்லச் சொன்னார். அதே போல் மேலே சென்றோம். உள்ளே மஹாமண்டபம் வந்தது. அங்கே சரஸ்வதி குடி இருந்தாள். ஒரு நிமிஷம் அவள் தான் மஹாலக்ஷ்மியோ எனத் திகைத்து நிற்கையில் ஆட்டோ ஓட்டுநர் சொன்ன கோயில் ஊழியர் எங்களைப் பார்த்துவிட்டு வாருங்கள் என அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார். உள்ளே பலரையும் தாண்டிக் கொண்டு அம்மன் சந்நிதிக்கு அருகே கொண்டு நிறுத்திவிட்டார். அம்மனைப் பார்த்து மெய்ம்மறந்தோம்.நினைவாகக் கையில் கொண்டு போயிருந்த தாமரை மலர்களைக் கொடுத்தோம்.

அம்பிகை பிரசாதமாகக் கிடைத்த கல்கண்டு, திராக்ஷைப் பழங்கள் அடங்கிய பாக்கெட்டை வாங்கிக் கொண்டு மனசே இல்லாமல் அங்கிருந்து கிளம்பினோம். இதுக்கே சுமார் ஒரு மணி நேரம் ஆகி இருந்தது. அங்கே இருந்த காமதேனுவைப் படம் எடுக்க முயன்ற போது காமிரா திறந்து மூட முடியாமல் தொந்திரவு செய்தது. எவ்வளவோ முயன்றும் காமிரா மூட முடியவே இல்லை. ஓட்டுநரும் முயன்று பார்த்துவிட்டு வரவில்லை. பின்னர் அதைக் கைப்பையில் வைத்துவிட்டு அலைபேசி மூலம் படங்கள் எடுத்தேன். அந்தப் படங்கள் தான் மேலே உள்ளவை.


கோயில் சுற்றுச் சுவரில் செதுக்கப்பட்டிருந்த சிற்பங்கள்


இன்னொரு கோணத்தில்



எல்லாக்கோபுரங்களும் சேர்ந்த வண்ணம் அளிக்கும் காட்சி



தீபஸ்தம்பம்


இந்தக் கோயில் ஜைனர்களுக்கும் முக்கியமானது என்கின்றனர். ஜைனர்கள் பலர் இந்த இடத்துக்கு வந்து குங்குமம், மஞ்சள் சார்த்தி வழிபட்டுச் செல்கின்றனர்.

Plants: image 1 0f 4 thumb

கோலாப்பூர் மஹாலக்ஷ்மி கோயிலின் அதிகாரபூர்வ தளத்திலிருந்து எடுக்கப்பட்ட படம். நன்றி. 

34 comments:

  1. கோலாப்பூர் மஹாலக்‌ஷ்மி கோவில் அருமை. ரொம்ப நடக்கவேண்டி வந்ததோ? கால்லலாம் கலர் ஒட்டிக்கலையா?

    ReplyDelete
    Replies
    1. ஆட்டோவிலிருந்து இறங்கியதும் நுழைவாயில் வழியாகப் பிரகாரத்துக்குள் நுழைந்து படிகள் ஏறிப் போக வேண்டியது தான். காலில் நிறம் ஒட்டி இருக்கும் தான்!

      Delete
  2. நல்ல முன்யோசனையா பூக்களையும் கொண்டுபோயிருக்கீங்க. இல்லைனா அதுக்கு வேற அலையணும்.

    உங்களை போட்டோ எடுத்துத் தரச் சொல்லி யார்கிட்டயும் சொல்லலையா? நினைவுக்கானதாக இருந்திருக்குமே.. நான் இதிலெல்லாம் வெட்கம் பார்க்கமாட்டேன். போன்/கேமரா கொடுப்பது ஒரு டீசண்ட் ஆள்டதானான்னு மட்டும் மனசுல எண்ணிப்பார்த்துக்குவேன்.

    ReplyDelete
    Replies
    1. என் உறவுகள் ஒவ்வொரு இடத்திலும் நின்று நினைவுக்காக போட்டோ எடுத்துக் கொள்வார்கள். நான் மட்டும் அந்த இடத்தைத் தனியாக போட்டோ எடுப்பேன்! மாமா என்னைத் திட்டுவார். நான் படம் எடுக்கும்போது சட்டென முன்னே வந்து நின்று போஸ் கொடுப்பார். போட்டோவை வேஸ்ட் செய்கிறேனாம்!

      Delete
    2. ஸ்ரீராம் - நான் உங்கள் உறவுகளைவிட வித்தியாசமானவனில்லை. அதனால், நானோ இல்லை வேறு என்னுடைய ஆட்களோ இல்லாத படங்கள் பல சமயங்களில் குறைவாக இருக்கும். பிறகு நான் அதை மாற்றிக்கொண்டு நிறைய இடுகைகள் நானில்லாமல் எடுக்க ஆரம்பித்தேன். வெளிநாட்டு முக்கிய இடங்களில் நமக்குத் தெரிந்தவர்கள் இருக்கமாட்டார்கள், பலமுறை நான் தனியாகத்தான் பயணித்திருக்கிறேன். அப்போ அங்கு இருப்பவர்களில் எனக்கு நம்பிக்கை வருபவர்களிடம் கேமராவைக் கொடுத்து என்னையும் படமெடுத்துக்கொள்வேன். செல்ஃபி சரியாக வராது.

      Delete
    3. பூக்களுக்கெல்லாம் அலைய வேண்டாம். கோயில் வாசலிலேயே எல்லாம் வைத்துக் கொண்டு விற்பதைச் சுட்டிக் காட்டியுள்ளேன்.
      // விதவிதமான பூக்கள், பழங்கள், தேங்காய்கள் எனத் தட்டுக்களில் வைத்துக் கூடவே புடைவை (அநேகமாகப் பச்சை நிறம்)ரவிக்கைத்துணி, கண்ணாடி வளையல்கள் ஆகியவை வைத்து அம்பிகைக்கு எடுத்துப் போகச் சொன்னார்கள்.பலரும் இப்படிப் பிரார்த்தனை செய்து கொள்ளுவது உண்டாம். அதைத் தவிர்த்தும் பூக்கள், பழங்கள் தனியாகவும் கொண்டு சென்றனர். அங்கே அநேகமாக அல்லிப்பூக்களும், குமுதமுமே கிடைத்தன. மல்லிகைப்பூக்கள் நூலில் கட்டி (தள்ளித்தள்ளி) விற்றனர்.// நாங்க இங்கே நல்ல தாமரைப்பூக்கள் கிடைப்பதால் எடுத்துச் சென்றோம்.

      Delete
    4. பொதுவாக நாங்க சுற்றுப்பயணம் செல்லும் இடங்களில் எல்லாம் யாரிடமும் படம் எடுத்துத் தரச் சொல்லிக் கேட்டதில்லை. ஒரு சில சமயங்களில் கோயில் வாயிலைப் படம் எடுக்கையில் தற்செயலாக அவர் படத்தில் வருவார். அவ்வளவே! ஆனால் இங்கே எங்களை ஆட்டோவில் வைத்து பஞ்சகங்கா நதிக்கரையில் ஆட்டோ ஓட்டுநர் படம் எடுத்தார். அதைப் போடவில்லை. அவ்வளவெல்லாம் முக்கியத்துவம் இல்லை. நாங்க எங்களோட படங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது இல்லை. இன்று வரை என்னோட அலைபேசியில் இரண்டே முறை செல்ஃபி எடுத்திருக்கேன். ஒன்று வீடியோ! என் மாமா பெண்ணின் பிறந்த நாளுக்கான நினைவுகள் பத்திப் பேசினேன். இன்னொன்று ஏடிஎம்முக்கு தீபாவளி அன்று அனுப்பியது! அவங்க வாங்கிக் கொடுத்த புடைவையைக் கட்டிக் கொண்டு செல்ஃபி எடுத்து அனுப்பினேன். அதைத் தவிர்த்து என்னை நானே தனியாகவோ, யாருடனுமோ, இன்னும் சொல்லப் போனால் எங்கள் இருவரையுமோ செல்ஃபி எடுத்ததே இல்லை. அந்த அளவுக்கு ஆவலும் இல்லை.

      Delete
    5. வெளிநாட்டில் குழந்தைகளுடன் போன இடங்களில் அவங்க எடுத்திருக்காங்க!

      Delete
    6. ஸ்ரீராம் கீதாக்கா மீயும் அப்ப்டியே நான் எங்கு சென்றாலும் அந்த இடங்களை மட்டுமே படம் எடுப்பதில் முனைவேன்.கூட வருபவர்களை எடுக்கும் பழக்கம் இல்லை. என்னையுமெ எடுத்துக் கொள்ள மாட்டேன். மகனும் விரும்ப மாட்டான். நமக்கு முக்கியம் அந்த இடங்கள் அதன் அழகு. நான் மிகவும் கவனமாக ஃப்ரேமுக்குள் கூட வ்ருபவர்கள் வராமல் பார்த்துக் கொள்வேன். கூடியவரை மனிதர்கள் வராமல் எடுக்க முயன்றாலும் சில இடங்களில் அது முடிவதில்லைதான்.

      நானும் குழுவாகச் செல்லும் போதும் கூட என்னை ஃபோட்டோ எடுத்துக் கொள்ளும் ஆர்வம் இருப்பதில்லை. மாறாக இடங்கள் இயற்கைக் காட்சிகள் இவைதான்...

      கீதா

      Delete
    7. நம்மைப் படம் எடுத்துக்கொள்வதில் என்ன இருக்கு? சுற்றுப்பயணம் செல்லும் இடங்கள் தானே முக்கியத்துவம் வாய்ந்தவை!

      Delete
  3. தீபஸ்தம்பமும், ஜைனர்கள் வழிபாட்டுக்குரிய பகுதியும் மிகவும் புராதானமாகத் தோன்றுகின்றன.

    ஒருவேளை ஜைனர்களிடமிருந்து கோவிலைக் கைப்பற்றி மகாலக்‌ஷ்மி கோவிலாக ஆக்கியிருக்க வாய்ப்பு இருக்கோ?

    ReplyDelete
    Replies
    1. பத்ரிநாத் கோவிலும், பெளத்த கோவிலாகத்தான் இருந்தது. தாமரை மலரில் அமர்ந்த திருக்கோலத்தில் இருக்கும் பத்ரிநாராயணரும், முன்பு பெளத்தராக இருந்த சிலைதான் என்று படித்திருக்கிறேன். இந்து என்று நாம் ஒன்றுபடுத்தினாலும், முன்பு, சமணம், பெளத்தம், சைவம், வைணவம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மதமாகத்தான் இருந்திருக்கிறது, அவற்றிலும் தீவிரப் பற்றாளர்கள் இருந்திருக்கின்றனர். அதனால்தான்,
      1. ஆனை துரத்தினாலும் ஆனைக்கா புகேன் என்ற பழமொழி வந்தது. (திருவானைக்கால் சைவ சமயக் கோவில்). முன்பு காவிரியின் நதி திசைமாற்றப்பட்டபோது, திருவானைக்கா கிராமத்துக்கும் திருவரங்கம் கிராமத்துக்கும் பெரிய தகராறு வந்து தீர்த்துவைக்கப்பட்டது.
      2. நெல்லையப்பர் கோவிலில், நெல்லையப்பர் சன்னிதிக்கு அடுத்ததாக இருந்த அரங்கநாதர் சிலை (பெரிய சிலை), சுவர் கொண்டு மூடப்பட்டிருந்தது. 40களில் பரமாச்சார்யார் சொல்லி அந்தச் சுவர் இடிக்கப்பட்டு வழிபாடு தொடங்கப்பட்டதாகப் படித்திருக்கிறேன்.

      இன்னும் ஏகப்பட்ட உதாரணங்கள் உண்டு.... தற்காலத்தில்தான் சைவ, வைணவ பேதங்கள் குறைய ஆரம்பித்து, 'இந்து' என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்திருக்கிறது என நினைக்கிறேன்.

      Delete
    2. எல்லாவற்றையும் பௌத்தம், ஜைனம் எனச் சொல்ல ஆரம்பித்தால் முடிவே இருக்காது. பத்ரிநாத் கோயிலின் தொன்மை குறித்துக் கல்வெட்டு ஆதாரமே இருப்பதாகச் சொன்னார்கள். பௌத்த கோயில் எல்லாம் இல்லை. அதே போல் இந்தக் கோயிலும் ஜைனர்கள் வழிபட்டு வருகின்றனர். அது குறித்துச் சரியான தகவல் யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. விசாரிக்கணும். இதே போல் தில்லை கோவிந்தராஜரையும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அங்கே கோவிந்தராஜர் கோயிலுக்கு அவரைத் தரிசிக்க வரும் ஶ்ரீவைணவர்கள் எதிரே காட்சி அளிக்கும் நடராஜரைப் பார்க்கக் கூடாது என முகத்தை மூடிக் கொண்டு திரும்பி நின்று கோவிந்தராஜர் பக்கம் பார்ப்பதையும் கண்டிருக்கிறேன். பத்து வருஷம் முன்னால் கூட திருவாலி, திருநகரி திவ்ய தேசங்களில் பட்ட அவமானங்கள் மறக்க முடியாது! :))))

      Delete
    3. நர, நாராயண மலைகளும் நீல்கண்ட்மலையுமே பத்ரிநாத் கோயிலின் தொன்மைக்குச் சான்று. பதரி மரத்தினடியில் தான் மஹாவிஷ்ணு தவம் இருந்தார். அங்கேஒரு முறை போனாலே இது குறித்துப் புரிய வரும். சும்மா எல்லாம் பௌத்தம், ஜைனம் எனச் சொல்லக் கூடாது. சில இடங்களில் புத்தர் சிலைகளை புத்தர் எனக்குறிப்பிட்டே கோயில்களில் வைத்திருக்கின்றனர். ஆனால் மஹாவிஷ்ணு எனில் சங்கு, சக்கரம் இருக்கும்.அந்த வித்தியாசத்தை வைத்துக் கண்டு பிடிக்கலாம்.ஜைனர்களின் தேவ, தேவியர் பலர் இந்து மதத்தில் வரும் தேவ தேவியரை ஒத்திருப்பார்கள். கணபதி வழிபாடும் அவர்களுக்கு உண்டு. ஜைன ராமாயணமும் தனியாக இருக்கிறது.

      Delete
  4. படங்கள் தெளிவு. விளக்கங்கள் இரத்தின சுருக்கம். தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, பாராட்டுக்கு நன்றி.

      Delete
  5. ஆட்டோ ஓட்டுநர் அறிமுகம் கிடைத்தது அதிருஷ்டம்தான் போல.. உள்ளே வந்தும் உதவி செய்கிறாரே.... கூட்டங்களை பைபாஸ் செய்து சீக்கிரம் அம்பாளைப் பார்த்தாச்சு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், கூட்டம்னா அப்படி ரொம்ப இல்லை. ஆனாலும் மற்ற இடங்கள் பார்க்கணும் என்பதாலும் அதிக நேரம் வரிசையில் நிற்க வேண்டாம் என்பதாலும் ஆட்டோ ஓட்டுநர் உதவினார். கடைசியில் நாங்க பண்டர்பூர் ரயில் ஏறும் வரை ஒத்தாசையாக இருந்தார். விலாசமெல்லாம் கொடுத்திருக்கார்.

      Delete
  6. என்னதான் ஏ ஸியிலேயே பயணம் செய்திருந்தாலும் தாமரை மலர்கள் வாடாதிருந்தது ஆச்சர்யம். வாடாவிட்டாலும், சமயங்களில் உதிர்ந்து விடும்.

    ReplyDelete
    Replies
    1. வாடலை, நன்றாகவே இருந்தன. செந்தாமரைப் பூக்கள். இங்கே வெண் தாமரையும் கிடைக்கும். ஆனால் அன்று செந்தாமரை!

      Delete
  7. படங்கள் நன்றாயிருக்கின்றன. ஒவ்வொரு படத்தையும் க்ளிக் செய்து பெரிதாகப் பார்த்து ரசித்தேன்.

    ReplyDelete
  8. கோவில் கலையம்சம் உள்ளதாக தெரிகிறது. படங்கள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  9. வணக்கம் சகோதரி

    கோவிலைப்பற்றிய விளக்கங்களும், படங்களும் மிகவும் அருமையாகவும், அழகாகவும் இருக்கின்றது. கோபுர தரிசனம் கண்டு மஹாலக்ஷ்மியை நமஸ்கரித்து கொண்டேன்.கோவிலைப்பற்றிய விபரங்கள் அறிந்து கொண்டேன்.

    அம்பாளின் அனுகிரஹத்தால் தங்களுக்கு கிடைத்த ஆட்டோ ஓட்டுநர் மூலமாக சீக்கிரமாகவே அம்பாள் தரிசனம் தங்களுக்கு கிடைத்திருப்பது மிகவும் நல்ல விஷயம்.

    அத்தனை பிரயாணத்திலும், தாங்கள் கையோடு கொண்டு சென்ற தாமரை மலர்கள் வாடாமலிருந்து, அதை அன்னையிடம் சமர்பிக்கும் போது அந்த நேரம் தங்களுக்கு மிகவும் மகிழ்வான ஒரு நேரமாகயிருந்திருக்கும் இல்லையா? தங்களுடன் நானும் அன்னையை தரிசித்த நிறைவை பெற்றேன். இனி அடுத்த பகுதியை அறிய ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, சில இடங்களில் இப்படியான ஆட்டோ ஓட்டுநர்கள் அமைந்து விடுகின்றனர். இவர் மறுநாள் நாங்கள் கிளம்பும்வரை இருந்து வழி அனுப்பி வைத்தார். தாமரைப்பூக்களை வாங்கிக் கொண்டு அம்பிகையின் மேல் சார்த்திய பூக்களைப் பிரசாதமாகக் கொடுத்தார்கள். வாங்கிக்கொண்டோம்.

      Delete
  10. அக்கா நான் சென்றது 14 வருடங்களுக்கு முன். நிறைய வித்தியாசம் இருக்கிறது உங்கள் படங்களைப் பார்க்கும் போது...படங்கள் அழகாக இருக்கின்றன.

    பூ கட்டுவது என்பது நம்மூர் தான்.
    முழுவதும் பார்த்துவிட்டு வருகிறேன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நானும் சில இடங்களுக்குப் பத்துப் பனிரண்டு வருடங்கள் முன்னரேபோயிருப்பதால் இப்போது போனால் வித்தியாசம் தெரியத்தான் செய்யும். பண்டர்பூர் முதல் முறை போய் 12,13 வருடங்களுக்கும் மேல் ஆகி விட்டது.இப்போது ஊரே மாறிவிட்டது! நாங்கள் பார்த்தது கிராமம்!

      Delete
  11. இந்த ஆட்டோ ஓட்டுநர் உங்களுக்கு ரொம்பவே உதவியாக இருந்திருக்கிறார் போல! நல்ல விஷயம்!

    இங்கு லக்ஷ்மி அத்தனை அழகாக அவர்கள் ஊர் அலங்காரத்தில் இருப்பார்.

    இங்கு போய்விட்டு வரும் வழியில் நரசிம்ஹவாடி போய்வந்தோம். ஆற்றின் படித்துறையிலேயே கோயில் தத்தாத்ரேயர். நதியில் போட்டிங்கும் உண்டு. அத்தனை அழகான நதி எதிர்ப்புறத்தில் சிறிய மலைக்குன்று தொடராக இருக்கும். மிக மிக அழகான இடம். கோயில் நதிக்கு மிக அருகில் படித்துறையில் செம அழகான இடம். அப்போதெல்லாம் கேமரா இல்லை என்பதால் படங்கள் எதுவுமே எடுக்கவில்லை. நீங்கள் போகும் ப்ளான் தெரிந்திருந்தால் இதையும் உங்களுக்குச் சொல்லியிருப்பேன் கீதாக்கா. ஆனால் உங்களுக்கும் தெரிந்திருக்கும். நரசிம்ஹ சரஸ்வதி!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நரசிம்ஹவாடி பற்றிக்கேள்விப்படலை! இன்னும் சொல்லப் போனால் சதாரா பக்கத்தில் தான் என்பதே தெரியவில்லை. நம்ம ரங்க்ஸும் பின்னால் சொல்கிறார். தெரிஞ்சிருந்தால் சதாராவிலும் மேலச் சிதம்பரம் பார்த்துட்டு வந்திருக்கலாம். எங்களிடம்2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரே காமிரா! அதற்கு முன்னால் எங்க பெண் அவளோடகானன் காமிரா ஃபில்ம் மாற்றுவதைக் கொடுத்து வைத்திருந்தாள். அதில் ஒரு ரோல் போட்டால் அது முடியும் வரை எடுப்போம். பின்னர் அடுத்த ரோல் வாங்க ஆறு மாசமாவது ஆயிடும். 2009 ஆம் ஆண்டில் தான் டிஜிடல் காமிரா பையர் வாங்கிக் கொடுத்தார்.

      Delete
  12. சிற்பங்கள் கலை ஃபோட்டோ சூப்பராக இருக்கிறது அக்கா.

    கேமரா மூடவில்லை என்றால் ஜஸ்ட் பேட்டரியை எடுத்து விட்டு மீண்டும் போடுங்கள். அப்போது மூடிக் கொண்டுவிடும். மீண்டும் ஃபோட்டோ எடுக்கலாம். எனக்கும் அப்படி நடந்ததுண்டு கீதாக்கா.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? தி/கீதா, எனக்கு இந்த விஷயம் தெரியாது. இனி இப்படிப் பிரச்னை வந்தால் பாட்டரியை எடுத்து விட்டு மீண்டும் போட்டுப் பார்க்கிறேன். நன்றி.

      Delete
  13. கோஹ்லாப்பூர் மஹாலக்ஷ்மி படம் வித்தியாசமாக இருக்கிறது.

    முதலில் சரஸ்வதி தேவிக்கு முன்னால் போய் நின்றீர்களே.. சேவித்தீர்களா? இல்லை அவர் கூப்பிட்டவுடன் லக்ஷ்மிதேவியிடம் ஓடிவிட்டீர்களா!

    //..அம்மன் சந்நிதிக்கு அருகே கொண்டு நிறுத்திவிட்டார். //
    இங்கே பார்வதி தேவியோ என்று நினைத்துவிட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏகாந்தன், இந்தப் படம் அதிகாரபூர்வத் தளத்தில் இருந்து சுட்டது. :)))) சரஸ்வதியைத் தான் மெய்ம்மறந்து பார்த்துக் கொண்டிருந்தோம். ஊழியர் கூப்பிட்டதும் உடனே எல்லாம் போகலை! அவரும் காத்திருந்து அழைத்துச் சென்றார்.

      Delete