hariki
---------- Forwarded message ----------
அன்பர்களே,
கம்ப ராமாயண உரையும் ஆங்கில மொழிபெயர்ப்பும் தொடங்கப்பட்டு சில நாள் தொடராமல் நின்று இப்போது மீண்டும் தொடர்கின்றது.
பாற்கடலை நக்கிக் குடிக்க முயன்ற பூனையைப்போல் இந்தக் காரியத்தைத் தொடங்கியிருக்கிறேன் என்று கம்பனே சொல்லிக் கொள்ளும்போது, அற்பத் திறனும் அதிலும் அற்பமான அறிவும் படைத்த நானும் இந்தக் கடலுக்குள் என்னை அமிழ்த்திக் கொள்கிறேன், ஆசைபற்றி அறையலுற்றேன். காரியம் பெரிது. திறன் சிறிது.
எண்ணிக்கையில் 10,500 செய்யுள் உள்ள கம்ப ராமாயணம் முழுமையையும் உரை எழுதி மொழி பெயர்க்கவும் செய்யவேண்டும் என்ற ஆசையும் அதிகப்பாடல்களையும் சேர்த்து 12,500 பாடல்களையும் பூர்த்தி செய்யவேண்டும் என்ற பேராசையும் உண்டு. இந்தப் பணியில் எனக்குக் கைகொடுக்க என்னோடு இணைகிறார், மதுரபாரதி.
பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் சனி, ஞாயிறுதோறும் ஒன்றுகூடி, ஒன்றாக வாசித்து நாங்கள் இருவரும் கம்ப ராமாயணம் முழுவதையும் ஓதி முடித்ததைப் போல, இப்போது எடுத்துக்கொண்டிருக்கும் இந்தப் பணியும் நிறைவடைய பெரியவர்களின் ஆசியையும், மற்றவர்களின் வாழ்த்தையும், முருகன் உறுதுணையையும் நாடுகிறேன்.
கம்ப ராமாயண உரை, மொழிபெயர்ப்பு, இதர தொடர்புள்ள விஷயங்களில் என்ன ஐயங்கள் எழுகின்றனவோ, என்னென்ன ஆலோசனைகள் தோன்றுகின்றனவோ அவற்றையெல்லாம் எங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
--
அன்புடன்,
ஹரிகி.
எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Monday, July 07, 2008
கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 69

இந்திரஜித் மாண்டான். ராவணனின் அன்பு மகனும், தேவேந்திரனையே வென்றவனும், எவராலும் வெல்ல முடியாத யாகங்களைச் செய்து, தன்னை வெற்றி கொள்ள அனைவரையும் திணற அடித்தவனும் ஆன இந்திரஜித் மாண்டான். உண்மையா?? இது உண்மையா?? ராவணனுக்குத் துக்கமும், கோபமும் அடக்க முடியவில்லை. வானரர்களின் ஜெயகோஷம் கேட்கின்றது. அரக்கர்களின் அழுகுரல் கேட்கின்றது. ராவணனின் கோபமும், துவேஷமும், பழிவாங்கும் வெறியும் அதிகம் ஆனது. இயல்பிலேயே எவராலும் அடக்க முடியாத கோபம் கொண்டவன் ஆன ராவணனின் கோபம் பல்மடங்கு பல்கிப் பெருகியது. தவித்தான், திணறினான். துக்கத்தை அடக்க முடியவில்லை. பட்டத்து இளவரசனைப் பறி கொடுத்தேனே எனக் கதறினான். கல்நெஞ்சுக் காரன் என்றாலும் புத்திரசோகம் ஆட்டிப் படைத்தது, அவனையும். அவனுடைய கோபத்தையும், துக்கத்தையும் கண்டு அரக்கர் கூட்டம் அவனருகே வரப் பயந்து ஓடோடி ஒளிந்தனர். கண்ணீர் பெருகி ஓட அமர்ந்திருந்த அவனைக் கண்டு அவனுக்கு ஆறுதல் சொல்ல ஒரு உறவினர் கூட இல்லாத நிலைமை ஏற்பட்டதை நினைத்து அவன் துக்கம் அதிகரிக்க, கண்களிலிருந்து நீர் அருவி போல் பொங்கியது.
"எத்தனை தவங்கள் செய்து, எவ்வளவு கடுமையான விரதங்கள் செய்து, பிரம்மனிடமிருந்து வரங்களைப் பெற்றேன். அத்தகைய என்னையும் ஒருவன் வெல்ல முடியுமோ??? பிரம்மாவால் எனக்களிக்கப் பட்ட ஒளி வீசும் கவசத்தையும் பிளக்க ஒருவனால் முடியுமோ?? ராமனுக்கும், லட்சுமணனுக்கும் ஒரு முடிவு கட்டுகின்றேன். அதற்கு முன்னால், ஓ, சீதா, சீதா, உன்னால் அன்றோ நான் என் அருமை மகனை இழந்தேன்? ஒரு மாய சீதையை நீ என நம்பவைத்தான் அல்லவா என் மகன்? இரு, நான் இதோ வந்து உண்மையாகவே உன்னைக் கொன்று விடுகின்றேன். பின்னர் அந்த ராமன் என்ன செய்வான் என்று பார்ப்போம்." ராவணன் நினைத்த் உடனேயே அசோகவனம் நோக்கித் தன் வாளை எடுத்துக் கொண்டு சீதையை அழித்துவிடும் நோக்கத்தோடு கிளம்பினான். பட்டமகிஷியான மண்டோதரியும் செய்வதறியாமல் அவனைத் தொடர்ந்தாள். உடன் மற்ற அமைச்சர்கள் தொடர்ந்தனர். சற்றே தயக்கத்துடன் அமைச்சர்கள் ராவணனைத் தடுக்க முயன்றனர். எனினும் ராவணன் அவர்களை லட்சியம் செய்யவில்லை.
சீதையோ ராவணன் வாளும், கையுமாக வருவதைக் கண்டு தன்னைக் கொல்லத் தான் வருகின்றான் என நிச்சயம் செய்துகொண்டு, தான் அனுமன் அழைத்த போதே அனுமனுடன் சென்றிருக்காமல் போனோமே என நொந்து கொண்டு புலம்பினாள். சீதை புலம்ப, ராவணனின் அமைச்சர்களில் ஒருவர் அவனை மிக மிக வினயத்துடன், வேதங்களை முறைப்படி கற்றுத் தேர்ந்த ராவணன் ஒரு பெண்ணைக் கொல்வது என்பது தகாது என்றும், நாளைக்கு போர்க்களம் புகுந்து, ராமனை வென்றபின்னர் முறைப்படி சீதையை அடையலாம் எனவும் கூறுகின்றான். திடீரென அவன் வார்த்தைகளில் மனம் மாறிய இலங்கேசுவரனும் திரும்புகின்றான். படைகள் வானரர்கள் மீது தாக்குதலைத் தொடருமாறு கட்டளை இடுகின்றான் ராவணன். அரக்கர்களின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்திய வானரர்கள் ராமரின் துணையை நாட ராமரும் அம்பு மழை பொழிந்தார். ராமர் எங்கே இருக்கின்றார், எப்படி அம்புகள் வருகின்றன என்பதே தெரிய முடியாத அளவுக்கு நினைத்தும் பார்க்க முடியாத கடும் வேகத்தில் அம்புகள் தொடர்ந்தன. எங்கு நோக்கினும் ராமனே கண்ணுக்குத் தெரிந்தார். இதோ யானைப் படையில் ராமர், அதோ அரக்கர்களின் காலாட்படையை அழிக்கின்றார், இல்லை, இல்லை, இங்கே குதிரைப் படையில் ராமர், யார் சொன்னது? அதோ இலங்கையின் கோட்டை வாயிலில் அல்லவா இருக்கின்றார்? எங்கே பார்த்தாலும் ராமரின் அம்புகள் தான் கண்ணுக்குத் தெரிந்தன. அரக்கர்களும், அரக்கிகளும் கலங்கினர், துடித்தனர், துவண்டனர், பதறினர், புலம்பினர். இனி இலங்கைக்கு அழிவு காலம் தான் எனக் கதறினார்கள். ராவணன் அழிந்தானே என்று புலம்பினார்கள். அவர்களின் ஓலக் குரல் ராவணனின் காதுகளையும் எட்டியது. ஏற்கெனவே அருமைத் தம்பி, மகன்கள், அனைத்துக்கும் மேல் உயிரினும் மேலான இந்திரஜித் ஆகியோரைப் பறி கொடுத்துப் பரிதவித்துக் கொண்டிருந்த ராவணன், அருகில் இருந்த வானரர்களைப் பார்த்து, "என்னுடைய படைகளை அணிவகுத்து நிற்கச் சொல்லுங்கள். நான் யுத்தம் செய்யத் தயார் ஆகின்றேன். வானரர்களையும், அந்த ராமன், லட்சுமணனையும் கொன்று நான் கழுகுகளுக்கும், நரிகளுக்கும் உணவாக்குகின்றேன். என்னுடைய ரதம் தயாராகட்டும், என் அருமை வில் எங்கே?? யுத்த களம் செல்ல என்னோடு வரச் சம்மதிக்கும் அனைவரும் தயாராகுங்கள்." என்று ஆணை இடுகின்றான்.
மீண்டும் எண்ணற்ற யானைகளும், குதிரைகளும், அரக்கர் படைகளும், தேர்களும் தயார் ஆகின்றன. மகாபார்ச்வன் என்னும் அமைச்சனின் உதவியால் படைகள் அணிவகுக்கப் பட்டன. மிக மிக உன்னதமான தேரும் ராவணனுக்காகத் தயார் செய்யப் பட்டது. யுத்த பேரிகை, "பம், பம்" என்று முழங்கியது. சங்குகள் ஆர்ப்பரித்தன. எங்கும் ராவணனுக்கு ஜெயகோஷம் எழும்பியது. அரக்கர் படை தன்னுடைய கடைசித் தாக்குதலுக்குத் தயார் ஆனது. ஆனால் சகுனங்களோ எனில்??? பூமி நடுங்கியது, பூகம்பமே வந்துவிட்டதோ என அனைவரும் கலங்கினர். மலைகள் இடம் பெயர்ந்தன. சூரியன் தன் ஒளியை இழந்து எங்கும் இருள் சூழ்ந்தது. நான்கு திக்குகளும் இருளில் மூழ்கின. ராவணனோ போருக்கு ஆயத்தம் ஆனான். போர் ஆரம்பித்தது. வானரங்களும், அரக்கர்களும் ஒருவருக்கொருவர் மீண்டும் மோதிக் கொண்டனர். இம்முறை மிகக் கடுமையாகவும், மிக வேகத்தோடும் கடும் போர் நடந்தது. பல வானரங்கள் வீழ்த்தப் பட்டது போல் அரக்கர் தரப்பிலும் கடும் சேதம். அரக்கர் படைத் தலைவனான விரூபாக்ஷனும், அமைச்சன் ஆன மகாபார்சவனும் முறையே சுக்ரீவனாலும், அங்கதனாலும் கொல்லப் பட்டனர். ராவணன், ராமனையும், லட்சுமணனையும் பழி தீர்க்கும் எண்ணத்தோடு சபதம் பூண்டான். திக்கெங்கும் பேர் ஒலியைக் கிளப்பிய வண்ணம் ராவணனின் தேர் கிளம்பியது. ராமரை நோக்கி, அவர் இருக்கும் திசை நோக்கி விரைந்தது. அண்டசராசரமும் குலுங்கியது ராவணனின் தேரின் வேகத்தில். ராமர் மேல் தேரின் மீது இருந்த வண்ணம் அம்பு மழை பொழிந்தான் ராவணன். ராமர் பதிலுக்குத் தாக்க இருவரின் அம்புகளால் வானம் மூடிக் கொள்ள மீண்டும் இருள் சூழ்ந்தது. சம பலம் பொருந்திய இருவர், வேத விற்பன்னர்கள் ஆன இருவர், அஸ்திரப் பிரயோகம் தெரிந்த இருவர், போரில் வல்லவர்கள் ஆன இருவர், சிறப்பான ஆயுதங்களை வைத்திருந்த இருவர் சண்டை போடும்போது அதன் சிறப்பையோ, கடுமையையோ வர்ணிக்கவும் வேண்டுமா?
கடல் அலைகள் போல் மீண்டும், மீண்டும், ராவணனின் அம்புகள் தாக்குதலைத் தொடுக்க, ராமரின் அம்புகள் அவற்றைத் தடுக்க இதற்கு ஒரு முடிவே இல்லையா என்றே தோன்றியது அனைவருக்கும். ராவணனின் அம்புகளால் ராமரை ஒன்றும் செய்யமுடியாமல் போனது போலவே, ராமரின் அம்புகளாலும், ராவணனை ஒன்றும் செய்ய முடியவில்லை. கோபம் கொண்ட லட்சுமணன் அம்புகளால், ராவணனின் கொடியைத் தாக்கிக் கீழே விழச் செய்து, ராவணனின் தேரோட்டியையும் தாக்கிக் கீழே வீழ்த்திக் கொன்றான். தேரின் குதிரைகளை விபீஷணன் வீழ்த்தக் கோபம் கொண்ட இலங்கேசுவரன், கீழே குதித்துச் சண்டை போடத் துவங்கினான். விபீஷணன் மீது கோபத்தோடு அவன் எறிந்த வேலை லட்சுமணன் தடுத்து நிறுத்தினான். இரு முறைகள் லட்சுமணன், ராவணனின் வேலைத் தடுத்து நிறுத்த, கோபத்துடன் இராவணன், லட்சுமணனைத் தாக்கப் போவதாய்ச் சத்தமிட்டுச் சொல்லிக் கொண்டே, அவன் மீது சக்தி வாய்ந்த வேலை எறிந்தான்.ராமர் தன் தம்பியை ராவணன் தாக்குவதைக் கண்டு, "இந்த வேலின் சக்தி அழியட்டும். லட்சுமணனுக்கு ஒன்றும் நேராது,இது பயனற்றதாய்ப் போகட்டும்," என்று கூற, வேல் லட்சுமணன் மார்பைத் தாக்கியது. லட்சுமணன் தரையில் வீழ்ந்தான். ராமர் பதறினார்.
Sunday, July 06, 2008
கதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் பகுதி 68

இதன் பின்னரே சீதை போர்க்களம் வந்து ராம, லட்சுமணர்களும், வானரப் படைகளும் மயங்கி வீழ்ந்திருப்பது கண்டு துயரம் மிகக் கொண்டதாயும் திரிசடை என்னும் அரக்கி அவளைத் தேற்றியதாயும் கூறும் கம்பர், இதன் பின்னரே, விபீஷணன்,ராமன் ஆணையின் பேரில் ராமனுக்கு உணவு கொண்டு வரச் சென்றவன் போர்க்களம் வந்து அனைவரும் கிடந்த நிலை கண்டு துயருற்றதாயும், அனுமனைத் தேடிக் கண்டுபிடித்து மயக்கம் தெளிவித்ததாயும் கூறுகின்றார்.
மருத்துமலைப் படலம்: பாடல் எண் 2655
"கண்டு தன் கண்களூடு மழை எனக் கலுழி கால
உண்டு உயிர் என்பது உன்னி உடற் கணை ஒன்று ஒன்று ஆக
விண்ட நீர்ப்புண்ணின் நின்று மெல்லென விரைவின் வாங்கி
கொண்டல் நீர் கொணர்ந்து கோல முகத்தினைக் குளிரச் செய்தான்."
இதன் பின்னர் ஜாம்பவானை அவர்கள் இருவரும் தேடிக் கண்டு பிடித்துச் சென்று அடைந்து யோசனை கேட்பதாயும் ஜாம்பவான் மருத்துமலைக்குச் சென்று மூலிகைகள் கொண்டு வரும்படியாக அனுமனை வேண்டுவதாயும் சொல்லுகின்றார்.
பாடல் எண் 2667
"எழுபது வெள்ளத்தோரும் இராமனும் இளைய கோவும்
முழுதும் இவ்வுலகம் மூன்றும் நல் அற மூர்த்திதானும்
வழு இலா மறையும் உன்னால் வாழ்ந்தன ஆகும் மைந்த
பொழுது இறை தாழாது என் சொல் நெறி தரக் கடிது போதி."
என்று அனுமனை மருத்து மலைக்குச் செல்லும் வழியையும் கூறி அனுப்பவதாய்க் கம்பர் கூறுகின்றார். மேலும் இங்கே மலையைப் பெயர்த்து எடுக்கும் அனுமனை மூலிகைகளைக் காக்கும் தேவதைகள் முதலில் தடுப்பதாயும் அனுமன் சொன்ன பதிலில் திருப்தியுற்று அனுமதி அளித்ததாயும் கம்பர் கூற, வால்மீகி அது பற்றி எதுவும் சொல்லவில்லை.
பாடல் எண் 2705, 76
"பாய்ந்தனன் பாய்தலோடும் அம்மலை பாதலத்துச்
சாய்ந்தது காக்கும் தெய்வம் சலித்தன கடுத்து வந்து
காய்ந்தது நீதான் யாவன் கருத்து என்கொல் சுழறுக என்ன
ஆய்ந்தவன் உற்ற தன்மை அவற்றினுக்கு அறியச் சொன்னான்."
"கேட்டு அவை ஐய வேண்டிற்று இயற்றிப் பின் கெடாமல் எம்பால்
காட்டு என உரைத்து வாழ்த்திக் கரந்தன கமலக் கண்ணன்
வாள் தலை நேமி தோன்றி மறைந்தது மண்ணின் நின்றும்
தோட்டனன் அனுமன் மற்று அக்குன்றினை வயிரத் தோளால்."
இதன் பின்னரே ராவணன் தாம் ஜெயித்ததாய் எண்ணிக்களியாட்டங்களில் ஆழ்ந்ததும், பின்னர் உண்மை நிலை தெரிந்து மாயாசீதையை இந்திரஜித் கொல்வதாய்க் காட்டுவதும், நிகும்பலை யாகம் செய்ய மறைந்திருந்து செல்வதும் வருகின்றது. இப்போ இந்திரஜித் யாகம் செய்து கொண்டிருப்பான், நாமும் அங்கே சென்று பார்ப்போமா??? இனி வால்மீகி!
*************************************************************************************பெரும் துக்கத்தில் ஆழ்ந்து கிடந்த ராமரை விபீஷணன் தன் ஆறுதல் வார்த்தைகளால் தேற்றி இவை யாவும் இந்திரஜித்தின் மாயையே என விளக்குகின்றான். ராமருக்கோ முழுதும் மனம் சமாதானம் ஆகவில்லை. அவருடைய அப்போதைய மனநிலையில் விபீஷணன் சொன்னதை முழுதும் அவரால் ஏற்கவும் முடியவில்லை. எனினும் விபீஷணனை மீண்டும் சொல்லும்படி கேட்டுவிட்டு, அவன் சொன்னதை ஒருவாறு ஏற்று, லட்சுமணனை இந்திரஜித்துடன் போர் புரிய ஆயத்தம் செய்து கொள்ளுமாறு ஆணை இடுகின்றார். அவ்வாறே லட்சுமணனும் கிளம்புகின்றான். வானரர்களில் முக்கியமானவர்கள் ஆன அனுமன், ஜாம்பவான், அங்கதன் ஆகியோரும் பெரும்படையோடும், விபீஷணனோடும் லட்சுமணனைப் பின் தொடருகின்றனர். முதலில் நிகும்பிலம் சென்று இந்திரஜித்தின் யாகத்தைத் தடுக்க வேண்டும் என்று அங்கே செல்கின்றனர் அனைவரும். யாகத்தை முடித்துவிட்டால் பின்னர் இந்திரஜித்தை வெல்வது கடினம்.
லட்சுமணன் உடனடியாகக் கடும் தாக்குதலை நிகழ்த்தினான். அம்புகளினால் வானம் மூடப் பட்டது. சூரியனும் மறைந்து போனான், அந்த அம்புக் கூடாரத்தினால். அவ்வளவு அடர்த்தியாக அம்பு மழை பொழிந்தான் லட்சுமணன். நிலைகுலைந்துபோனது அரக்கர் படை எதிர்பாராத தாக்குதலினால். அரக்கர் படையினர் விளைவித்த ஓலக் குரலைக் கேட்டு நிதானமிழந்த இந்திரஜித் யாகம் செய்வதைப் பாதியிலேயே விட்டுவிட்டு வெளியே வந்தான். அரக்கர் படைக்குப் பெரும் சேதத்தை விளைவித்துக் கொண்டிருந்த அனுமன் கண்களில் பட அனுமனைத் தாக்கப் போனான். அப்போது விபீஷணன் லட்சுமணனிடம் இந்திரஜித்தைத் தாக்கும்படிச் சொல்கின்றான். யாகம் செய்யும் இடத்தில் இருந்த ஆலமரம் ஒன்றினைச் சுட்டிக் காட்டிய விபீஷணன், "இந்திரஜித் இந்த ஆலமரத்தினடியில் தான் யாகத்தை முடிப்பான். இந்த இடத்தில் தான் மறைந்திருந்து போருக்கும் கிளம்புவான். ஆகவே அதற்கு முன்னாலேயே அவனை அழித்துவிடு." என்று லட்சுமணனிடம் சொல்ல, லட்சுமணன் இந்திரஜித்தைப் போருக்கு அழைக்கின்றான். இந்திரஜித் அவனை லட்சியம் செய்யாமல், விபீஷணனைத் தூஷித்துப் பேசுகின்றான்.
தன்னுடைய வயதுக்கும், உறவுக்கும் மரியாதை கொடுக்காமல் இந்திரஜித் பேசியதைக் கேட்ட விபீஷணன் அவனைப் பழித்தும், இழித்தும் பலவாறு பேசி தர்மத்தின் பால் செல்லும் தனக்கு எப்போதும் ஜெயமே கிட்டும் என்றும், தர்மத்தை கடைப்பிடிக்காத ராவணனுக்கும், அவன் குடும்பத்தினருக்கும் அழிவே கிட்டும் என்று சொல்லி இந்திரஜித் இன்று தப்ப முடியாது எனவும் சொல்லுகின்றான். ஆத்திரம் கொண்டான் இந்திரஜித். லட்சுமணனைப் பார்த்து, நீயும், உன் அண்ணனும் என்னுடைய ஆயுதங்களால் மயங்கி விழுந்து கிடந்ததை மறந்தாயோ? உன்னைக் கொன்று விடுவேன், உன் சகோதரன் தன் இளைய சகோதரன் ஆன உன்னை இழந்து தவிக்கப் போகின்றான்." என்று கூறிவிட்டுத் தன் அம்புகளால் மழை போலப் பொழிய ஆரம்பித்தான். லட்சுமணன் நடத்திய பதில் தாக்குதல்களினால் விண்ணே மறையும் அளவுக்கு அம்புகள் சூழ்ந்து மீண்டும் வானம் இருண்டது. லட்சுமணன் இந்திரஜித்தின் தேரோட்டியையும், தேர்க்குதிரைகளையும் வெட்டி வீழ்த்தினான். அப்படியும் இந்திரஜித் வீரத்துடனும், சாகசத்துடனும் தேரைத் தானே ஓட்டிக் கொண்டு வீரமாய்ப் போர் புரிந்தான். வானரர்களும், விபீஷணனும், லட்சுமணனும் அவன் சாகசத்தைக் கண்டு வியந்தனர். இருள் மிகச் சூழ்ந்ததால் இந்திரஜித் மறைந்திருந்து தாக்கும்போது அரக்கர்களைக் கொன்றுவிடுவோமே என எண்ணி, நகருக்குள் சென்று மற்றொரு தேரைக் கொண்டு வருகின்றான்.
மீண்டும் கடுமையான போர் நடக்கின்றது லட்சுமணனுக்கும், இந்திரஜித்துக்கும். கண்டவர் வியக்கும் வண்ணம் இருவரும் போர் புரிந்தனர். அப்போது லட்சுமணன் தன் வில்லிலே இந்திரனையே அதிபதியாய்க் கொண்ட ஒரு ஆயுதத்தை ஏற்றி, ராமனின், சக்தியும், கொடுத்த வாக்கைக் காக்கும் உறுதியும், தர்மத்தின் பாதையில் செல்வதும் உண்மை, எனில் இந்த அம்பு இந்திரஜித்தைக் கொல்லும், எனப் பிரார்த்தித்துக் கொண்டு ஏவ, அந்த அம்பும் அவ்வாறே இந்திரஜித்தின் தலையைத் துண்டிக்கின்றது. வானரர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றனர், ராமர் பெரும் மகிழ்ச்சி கொண்டு லட்சுமணனைக் கட்டித் தழுவிப் பாராட்டுகின்றார். இனி ராவணன் கதி அதோகதிதான், ராவணன் வீழ்ந்துவிட்டான் என்றும் சொல்கின்றார். அங்கே ராவணன் மாளிகையில்........
Saturday, July 05, 2008
கம்பர் காட்டும் காட்சிகள்- பிரம்மாத்திரப் படலம்!
வானரப் படைகளும், ராம, லட்சுமணர்களும், விபீஷணனோடு இந்திரஜித் யாகம் செய்யும் இடத்துக்குப் போயிருக்காங்க. இந்திரஜித் யாகம் செய்ய நேரம் ஆகாதா? அதுக்குள்ளே நாம இதையெல்லாம் ஒரு கண்ணோட்டம் விடலாமேனு ஆரம்பிச்சேன். அதுக்குள்ளே நேயர் ஒருத்தர் விருப்பம் இல்லாமலேயே, எப்போ மீண்டும் , வால்மீகியை ஆரம்பிக்கப் போறீங்கனு கேட்கிறார்! :P இன்னிக்கு இதோட முடிச்சுட்டு, நாளைக்கு வால்மீகி தான் ஆரம்பிக்கப் போறேன். இன்னிக்கு ஒருநாள் பொறுத்துக்கணும். உத்தர காண்டம் வந்தால் கம்பர் வரவே மாட்டார்! கம்பர் அதை எழுதவே இல்லையே? :P அதுவரை கம்பர் தொடருவார்.
*************************************************************************************
பல அரக்கர்கள் இறந்தபின்னரும், ராமன் போர்க்களத்திலேயே இருந்ததாய்க் கம்பர் கூறவில்லை. வானரப் படைகளும், வானரத் தளபதிகளும், லட்சுமணனுமே எதிர்கொண்டதாய்ச் சொல்லும் கம்பர், இந்திரஜித்துடன் சண்டை போடும் லட்சுமணன் பிரம்மாஸ்திரத்தை ஏவி அவனை அழிக்க எண்ணியதாயும், அதை ராமர் தடுத்ததாயும் சொல்கின்றார். பின்னர் இந்திரஜித் மறைந்திருந்து லட்சுமணனைத் தாக்க வேள்விகள் பல புரிந்துவிட்டு, பிரம்மாஸ்திரத்தை ஏவும் எண்ணத்தோடு வந்ததாயும் அப்போது ராமன் அங்கே போர்க்களத்தில் இல்லை என்பதாயும் கூறுகின்றார்.
பிரம்மாத்திரப் படலம்: பாடல் எண் 2543
"வந்திலன் இராமன் வேறு ஓர் மலை உளான் உந்தை மாயத்
தந்திரம் தெரிவான் போனான் உண்பன தாழ்க்கத் தாழா
எந்தை ஈது இயன்றது என்றார் மகோதரன் யாண்டை என்னை
அந்தரத்திடையன் என்றார் இராவணி அழகிற்று என்றான்"
என்று இந்திரஜித் போர்க்களத்தின் நிகழ்ச்சிகளைக் கேட்டு அறிந்த பின்னர் வேள்விகள் செய்து பிரம்மாஸ்திரத்தை ஏவத் தயார் ஆனதாயும் கூறுகின்றார்.
பாடல் எண் 2544, 45
"காலம் ஈது எனக் கருதிய இராவணன் காதல்
ஆல மாம மரம் ஒன்றினை விரைவினில் அடைந்தான்
மூல வேள்விக்கு வேண்டுவ கலப்பைகள் முறையால்
கூலம் நீங்கிய இராக்கதப் பூசுரர் கொணர்ந்தார்."
"அம்பினால் பெருஞ்சமிதைகள் அமைத்தனன் அனலில்
தும்பை மாம் மலர் தூவினன் காரி என் சொரிந்தான்
கொம்பு பல்லோடு கரிய வெள்லாட்டு இருங்குருதி
வெம்பு வெந்தசை முறையின் இட்டு எண்ணெயால் வேட்டான்"
என்று வேள்விகளைச் செய்து முறையாகப் பிரமாஸ்திரத்தை இந்திரஜித் ஏவியதாய்க் குறிப்பிடுகின்றார். மேலும் அரக்கர்களில் பலரும் மகோதரனும் மாயைகள் பல புரிந்து தேவேந்திரன் போலும், தேவர்கள் போலும், ரிஷி, முனிவர்கள் போலும் உருமாறி வானரர்களுடன் போரிட்டதாயும் சொல்கின்றார் கம்பர்.
பாடல் எண் 2550
கோடு நான்குடைப் பால் நிறக் களிற்றின் மேல் கொண்டான்
ஆடல் இந்திரன் அல்லவர் யாவரும் அமரர்
சேடர் சிந்தனை முனிவர்கல் அமர் பொரச் சீறி
ஊடு வந்து உற்றது என்கொலோ நிபம் என உலைந்தார்."என்று வானரர்கள் வருந்தியதாயும், அந்த வேளையில் இந்திரஜித் தன்னுடைய பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகம் செய்ததாயும், லட்சுமணனும், வானரர்களும் அதனால் செயலற்று விழுந்ததாயும் சொல்கின்றார். அனுமனும் கூட பிரமாஸ்திரத்தில் கட்டுண்டதாகத் தெரிவிக்கின்றார் கம்பர். அப்போது ராமன் வேறிடத்தில் இருந்ததாயும், பின்னர் போருக்கு முறையான ஏற்பாடுகள் செய்துகொண்டு ஏதும் அறியாமலேயே புறப்பட்டு வந்ததாகவுமே கம்பர் சொல்கின்றார். பிரமாஸ்திரத்தில் ராமனும் கட்டுண்டது பற்றிய செய்தி கம்பனில் இல்லை.
பாடல் எண்:2570
செய்ய தாமரை நாள் மலர்க்கைத்தலம் சேப்ப
துய்ய தெய்வ வான் படைக்கு எலாம் வரன் முறை துரக்கும்
மெய்கொள் பூசனை விதிமுறை இயற்றி மேல் வீரன்
மொய் கொள் போர்க்களத்து எய்துவாம் இனி என முயன்றான்."
போர்க்களம் வந்த ராமன், வானர வீரர்கள் மட்டுமின்றி, சுக்ரீவன், அனுமன், லட்சுமணன் அனைவரையும் இழந்துவிட்டோமே எனக் கதறுவதாயும் சொல்கின்றார். லட்சுமணனை நினைத்து ராமன் புலம்புவதாயும் கம்பர் கூறுகின்றார்.
"மாண்டாய் நீயோ யான் ஒரு போதும் உயிர் வாழேன்
ஆண்டான் அல்லன் நானிலம் அந்தோ பரதன் தான்
பூண்டார் எல்லாம் பொன்றுவர் துன்பப் பொறையாற்றுவர்
வேண்டாவோ நான் நல் அறம் அஞ்சி மெலிவுற்றான்"
என்று சொல்லும் கம்பர், துக்கம் தாங்காமல் லட்சுமணனை அணைத்த வண்ணமே ராமன் துயிலுற்றதாயும் சொல்கின்றார்.
பாடல் எண் 2602
என்று என்று ஏங்கும் விம்மும் உயிர்க்கும் இடை அஃகி
சென்று ஒன்ரு ஒன்றோடு இந்தியம் எல்லாம் சிதைவு எய்த
பொன்றும் என்னும் நம்பியை ஆர்வத்தோடு புல்லி
ஒன்றும் பேசான் தன்னை மறந்தான் துயில்வுற்றான்." என்று ராமன் தன்னை மறந்து உறங்கியதாய்ச் சொல்லும் கம்பர் ராமனை தேவர்கள் உண்மையை உணர்த்தி எழுப்புவதாயும் கூறுகின்றார். ஆனால் வால்மீகியில் இதெல்லாம் கிடையாது. இதற்கெல்லாம் பின்னரே, ராமனும் இறந்துவிட்டான், என நினைத்த அரக்கர்கள் ராவணனிடம் சென்று நீ ஜெயித்தாய், உன் பகைவன் ஒழிந்தான் எனக் கூறுவதாயும், சீதையை ராவணன் போர்க்களம் காண அப்போது அழைத்து வந்ததாயும் சொல்கின்றார் கம்பர்.
பாடல் எண் 2612
என் வந்தது நீர் என்று அரக்கர்க்கு இறைவன் இயம்ப எறி செருவில்
நின் மைந்தந்தன் நெடுஞ் சரத்தால் துணைவர் எல்லாம் நிலம் சேர
பின் வந்தவனும் முன் மடிந்த பிழையை நோக்கிப் பெருந்துயரால்
முன் வந்தவனும் முடிந்தான் உன் பகை போய் முடிந்தது என மொழிந்தார்." என்று சொல்கின்றார்.
இதன் பின்னர் சீதை களம் கண்டு திரும்பிய பின்னரே மருத்து மலைப் படலம். நாளைக்கும் கம்பர் தானோ??? சில முக்கியமான இடங்களில் ஒப்பு நோக்குவதைத் தவிர்க்க முடியவில்லை.

Friday, July 04, 2008
கம்பர் காட்டும் காட்சிகள் - தொடர்ச்சி!!
மாயா சனகன் வால்மீகியில் வருவதில்லை. அப்படி ஒரு காட்சியே வால்மீகி சொல்லவில்லை. அதிகாயனைக் கொன்ற லட்சுமணனைப் பழி தீர்க்க ராவணனே இந்திரஜித்திடம் சொல்லி லட்சுமணனை நாகபாசத்தால் பிணிக்குமாறு சொல்லுவதாயும் கம்பர் கூறுகின்றார். அது குறித்த பாடல்:
நாகபாசப் படலம்: பாடல் எண் 1957
"ஏகா இது செய்து எனது இன்னலை நீக்கிடு எந்தைக்கு
ஆகாதனவும் உளதோ எனக்கு ஆற்றலார் மேல்
மா கால் வரி வெஞ்சிலையோடும் மதித்த போதே
சேகு ஆகும் என்று எண்ணி இவ் இன்னலில் சிந்தை செய்தேன்"
என்று சொல்கின்றார் கம்பர். இதன் பின்னரே நடக்கும் கடும்போரில் வானர சேனைகளை இந்திரஜித் சிதற அடிப்பதைக் கண்ட இலட்சுமணன் விபீஷணனுடன், இந்திரஜித்தைத் தான் தனியாக எதிர்க்கக் கலந்தாசிப்பதாயும் சொல்கின்றார். இதன் பின்னரும் நடந்த கடும்போருக்குப் பின்னர் இந்திரஜித் தன் மாயாசக்தியால் மறைந்திருந்து நாகாஸ்திரத்தை ஏவ மறைய, அப்போது இந்திரஜித் தோற்று ஓடிவிட்டான் என்று போரை வானரப் படை நிறுத்தி இருந்த சமயம் நாகபாசத்தால் கட்டுகின்றான் இந்திரஜித். அந்தப் பாடல்: பாடல் எண் 2132
"விட்டனன் அரக்கன் வெய்ய படையினை விடுத்தலோடும்
எட்டினோடு இரண்டு திக்கும் இருள் திரிந்து இரிய ஓடி
கட்டினது என்ப மன்னோ காகுத்தர்கு இளைய காளை
வட்ட வான் வயிரத் திண் தோள் மலைகளை உளைய வாங்கி." என்று கம்பர் நாகபாசங்களாலும், லட்சுமணன் மட்டுமே கட்டுண்டு கிடப்பதாயும், அதன் பின்னர் அனுமன் முதலானவர்களையும் நாகபாசம் மெல்லப் பிணித்ததாயும் சொல்கின்றார்.
பாடல் எண் 2134
"மற்றையோர் தமையும் எல்லாம் வாள் எயிற்று அரவம் வந்து
சுற்றிய வயிரத் தூணின் மலையின் பெரிய தோள்கள்
இற்றன இற்ற என்ன இறுக்கின இளகா உள்ளம்
தெற்றென உடைய வீரர் இருந்தனர் செய்வது ஓரார்."
என்று சொல்கின்றார் கம்பர். இதன் பின்னர் விபீஷணன் லட்சுமணன் நிலைகண்டு கலங்கிப் புலம்பியதாயும், அவனுடன் வந்த அவன் உற்ற தோழர்களில் ஒருவன் ஆன அனலன் என்பவன் ராமனிடம் போய் லட்சுமணனுக்கு நேர்ந்த கதியைச் சொல்லிப் போர்க்களம் அழைத்ததாயும் சொல்கின்றார் கம்பர். இந்தப் படலத்தில் அதுவரை ராமன் போர்க்களம் வந்ததாய்ச் சொல்லவில்லை. பின்னர் ராமர் விபீஷணனிடம் தம்பியின் நிலை குறித்து ஆலோசித்துப் புலம்புவதாயும், அது கண்டு விண்ணில் தேவர்களும் மனம் கலங்குவதாயும், இவை எல்லாவற்றையும் பார்த்த கருடன், நாகபாசத்தில் இருந்து லட்சுமணனை விடுவிக்கப் புறப்பட்டு வந்ததாயும் சொல்கின்றார்.
பாடல் எண்: 2186, 87
"இத்தன்மை எய்தும் அளவின் கண் நின்ற
இமையோர்கள் அஞ்சி இது போய்
எத்தன்மை எய்தி முடியும்கொல் என்று
குலைகின்ற எல்லை இதன்வாய்
அத்தன்மை கண்டு புடை நின்ற அண்ணல்
கலுழன் தன் அன்பின் மிகையால்
சித்தம் கலங்கும் இது தீர மெள்ள
இருளூடு வந்து தெரிவான்.
"அசையாத சிந்தை அரவால் அனுங்க
அழியாத உள்ளம் அழிவான்
இசையா இலங்கை அரசோடும் அண்ணல்
அருள் இன்மை கண்டு நயவான்
விசையால் அனுங்க வடமேரு வையம்
ஒளியால் விளங்க இமையாத்
திசையானை கண்கள் முகிழா ஒடுங்க
நிறை கால் வழங்கு சிறையான்."
நாகபாசத்தில் இருந்து லட்சுமணனை விடுவிக்கும் கருடனுக்கு, ராமன் விஷ்ணுவின் அவதாரம் எனத் தெரிந்து அதை ராமனிடமே சொல்லுவதாயும் கம்பர் தெரிவிக்கின்றார். ராமனைக் கருடன் தேற்றுதல் என்னும் அத்தியாயத்தில் இவ்வாறு சொல்கின்றார் கம்பர்:
பாடல் எண் 2200
"சொல் ஒன்று உரைத்தி பொருள் ஆதி தூய
மறையும் துறந்து திரிவாய்
வில் ஒன்று எடுத்தி சரம் ஒன்று எடுத்தி
மிளிர் சங்கம் அங்கை உடையாய்
சொல் என்று உரைத்தி கொலையுண்டு நிற்றி
கொடியாய் உன் மாயை அறியேன்
அல் என்று நிற்றி பகல் ஆதி ஆர் இல்
அதிரேக மாயை அறிவார்."
"மறந்தாயும் ஒத்தி மறவாயும் ஒத்தி
மயல் ஆரும் யானும் அறியேம்
துறந்தாயும் ஒத்தி துறவாயும் ஒத்தி
ஒரு த்னமை சொல்ல அரியாய்
பிறந்தாயும் ஒத்தி பிறவாயும் ஒத்தி
பிறவாமல் நல்கி பெரியோய்
அறம்தான் நிறுத்தல் அரிது ஆக ஆர் இவ்
அதிரேக மாயை அறிவார்."
அடுத்து வருவதே மருத்துமலைப் படலம் என்னும் சஞ்சீவி மலையைக் கொண்டு வருவது. சிலருக்கு ரொம்பப் பெரிசாய்த் தோணுதாய்க் கேள்விப் பட்டேன். ராமாயணமே பெரியது தானே. கூடியவரையில் முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டுமே சொல்லியும் இப்படிப் பெரிசா வந்தால் என்ன செய்யறது??

Wednesday, July 02, 2008
கம்பர் காட்டும் காட்சிகள், கும்பகர்ணன் வதை- சஞ்சீவி மலை கொணருதல்
மேலே செல்வதற்கு முன்னர், சஞ்சீவி மலையை ஆஞ்சநேயர் எடுத்து வந்தது பற்றிய கம்பரின் பாடல்கள் இடம் பெறும் இடம் பற்றிப் பார்க்கலாமா??? வால்மீகியின் கூற்றுப் படி முதற்போர்புரி படலம் எனக் கம்பர் எழுதி இருக்கும் முதல்போர் புரி படலத்திலேயே ராமன், போர்க்களத்துக்கு வந்து போர் புரிந்ததும், கருடன் வந்து இந்திரஜித்தின் நாராசங்கள் என்னும் அம்புகளில் இருந்து விடுவிப்பதையும் பார்த்தோம். கம்பர் தன் முதல்போர் புரிபடலத்தில் இது பற்றிக் குறிப்பிடவில்லை என்றும் பார்த்தோம். அதன் பின்னர் கும்பகர்ணன் வதைப் படலம், மாயா சனகப் படலம் என்றெல்லாம் கம்பர் குறிப்பிடுகின்றார். ராவணன் போர் தொடங்கும் முன்னரே சீதையை அசோகவனத்தில் கண்டு பேசி, ராமரின் தலையை மாயாரூபமாய் வெட்டுண்டதாய்ச் சித்திரித்துக் காட்டி சீதையை ஏமாற்றுவதாய் வால்மீகி கூறுகின்றார். இதற்கெல்லாம் பின்னரே, இலங்கை முற்றுகை தொடங்குகின்றது வால்மீகி ராமாயணத்தில். ஆனால் கம்பரோ கும்பகர்ணன் வதைக்குப் பின்னரே ராவணன் சீதையைக் கண்டு பேசுவதாயும், அப்போதும் ஜனக மகாராஜாவைக் கொண்டு வந்து சீதைக்கு முன்னர் துன்புறுத்துவதாயும் காட்டுகின்றார்.
மாயா சனகப் படலம்: பாடல் எண் 1604, 1605
"ஆயது ஓர் காலத்து ஆங்கண் மருத்தனைச் சனகன் ஆக்கி
வாய் திறந்து அரற்றப் பற்றி மகோதரன் கடிதின் வந்து
காய் எரி அனையான் முன்னர்க் காட்டினான் வணங்கக் கண்டாள்
தாய் எரி வீழக் கண்ட பார்ப்பு எனத் தரிக்கிளாதாள்."
" கைகளை நெரித்தாள் கண்ணில் மோதினாள் கமலக் கால்கள்
நெய் எரி மிதித்தாலென்ன நிலத்திடைப் பதைத்தாள் நெஞ்சம்
மெய் என எரிந்தாள் ஏங்கி விம்மினாள் நடுங்கி வீழ்ந்தாள்
பொய் என உணராள் அன்பால் புரண்டனள் பூசலிட்டாள்."
என்று ராவணன் சீதையிடம் ஜனகன் போல் தோற்றமளிக்கும் மாயையை உருவாக்கிக் காட்டியதாய்ச் சொல்கின்றார். மேலும் மாயா சனகனைக் காட்டி, சீதையைத் தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியதாயும், சீதை அதற்கு இணங்காமல், ராவணனைக் கடுமொழிகள் பல பேசியதாயும், கடைசியில் இவ்வாறு உரைத்ததாயும் சொல்கின்றார்.
பாடல் எண் 1632
"புன் மக, கேட்டி கேட்டற்கு இனியன புகுந்த போரின்
உன் மகன் உயிரை எம்மோய் சுமித்திரை உய்ய ஈன்ற
நன் மகன் வாளி நக்க நாய் அவன் உடலை நக்க
என் மகன் இறந்தான் என்ன நீ எடுத்து அரற்றல் என்றாள்"
என சீதை ராவணனைப் பார்த்து உன் மகன் இந்திரஜித்தை, லட்சுமணன் அழிப்பான், அப்போது நீ இவ்விதம் புலம்புவாய் எனக் கூறுவதாயும், அது சமயம் கோபம் கொண்டு சீதையைத் தாக்க முனைந்த ராவணனை மகோதரன் தடுத்து நிறுத்தி இவ்விதம் சொல்லுவதாயும் தெரிவிக்கின்றார் கம்பர்.
பாடல் எண்: 1633
"வெய்பவன் அனைய கேளா வெயில் உக விழித்து வீரக்
கை பல பிசைந்து பேழ் வாய் எயிறு புக்கு அழுந்தக் கவ்வி
தையல் மேல் ஓடலோடும் மகோதரன் தடுத்தான் ஈன்ற
மொய் கழக் தாதை வேண்ட இசையும் நீ முனியல் என்றான்.'
என மாய சனகனைக் காட்டி சனகன் சொன்னால் சீதை உனக்கு இணங்குவாள் என்று மகோதரன் தடுப்பதாய்ச் சுட்டிக் காட்டும் கம்பர் அடுத்து எழுதி இருப்பது:
பாடல் எண்: 1634 1635, 1636
"என்று அவன் விலக்க மீண்டான் ஆசனத்து இருக்க ஆவி
பொன்றினன் ஆகும் என்னத் தரையிடைக் கிடந்த பொய்யோன்
இன்று இது நேராய் என்னின் என்னை என் குலத்தினோடும்
கொன்றனை ஆதி என்னா இனையன கூறலுற்றான்."
"பூவின் மேல் இருந்த தெய்வத் தையலும் பொதுமை உற்றாள்
பாவி யான் பயந்த நங்கை நின் பொருட்டாகப் பட்டேன்
ஆவி போய் அழிதல் நன்றோ அமரருக்கும் அரசன் ஆவான்
தேவியாய் இருத்தல் தீதோ சிறையிடைத் தேம்புகின்றாய்?"
"என்னை என் குலத்தினோடும் இன் உயிர் தாங்கி ஈண்டு
நல் நெடுஞ்செல்வம் துப்பேன் ஆக்கினை நல்கி நாளும்
உன்னை வெஞ்சிறையின் நீக்கி இன்பத்துள் உய்ப்பாய் என்னா
பொன் அடி மருங்கு வீழ்ந்தான் உயிர் உகப் பொருமுகின்றான்."
என்று இவ்வாறு மாயா சனகன் சீதையை ராவணனுக்கு இணங்குமாறு கேட்டதாயும், அதற்கு சீதை கடிந்து கொண்டதாயும் தெரிவிக்கின்றார்.
பாடல் எண் 1640
"நீயும் நின் கிளையும் மற்று இந்நெடு நில வரைப்படம் நேரே
மாயினும் முறைமை குன்ற வாழ்வெனோ வயிரத்தின் தோள்
ஆயிர நாமத்து ஆழி அரியினக்கு அடிமை செய்வேன்
நாயினை நோக்குவேனோ நாண் துறந்து ஆவி நச்சி"
என்று சீதை ஜனகனின் குலமே அழிந்து பட்டாலும் ராவணனுக்குத் தான் இணங்க மாட்டேன் எனச் சொன்னதாயும், உடனேயே கோபம் கொண்ட ராவணன் மாயா சனகனைக் கொல்லத் துணிந்ததாயும், அதை மகோதரன் தடுத்ததாயும், அந்நேரமே கும்பகர்ணன் இறந்து பட்டதும் வானர வீரர்களின் ஆரவார ஒலி விண்ணைத் தொடும் அளவுக்கு எழுந்ததாயும், அதைக் கேட்டுக் கும்பகர்ணன் இறந்த விஷயத்தை ராவணன் தெரிந்து கொண்டதாயும் கம்பர் சொல்கின்றார். மேலும் மாயா சனகனைச் சிறையில் அடைக்குமாறு மகோதரன் சொன்னதாகவும் சொல்கின்றார்.
பின்னர் சீதை அதைக் கேட்டு மகிழ்ந்ததாயும், அப்போது திரிஜடை என்னும் அரக்கி, இந்த மாயா சனகன் உண்மையில் மாயையில் வல்லவன் ஆன மருத்தன் என்னும் பெயரைப் பெற்ற அரக்கன் ஆவான் என்று உண்மையைச் சீதையிடம் சொல்லி அவளைத் தேற்றியதாகவும் சொல்கின்றார். இவ்வாறு கும்பகர்ணன் வதை, பின்னர் அதிகாயன் வதை, அதிகாயன் வதைக்குப் பின்னரே இந்திரஜித் கோபம் மிகக் கொண்டு, நாக பாசங்களை ஏவி லட்சுமணனைக் கட்டியதாயும், லட்சுமணனை மீட்கவே கருடன் வந்ததாயும் தெரிவிக்கின்றார். அது பற்றி நாளை பார்ப்போம்.

Tuesday, July 01, 2008
கதை,கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 67

இப்போது சொல்லப் போகும் விஷயங்கள் லட்சுமணன் கூறுவதாய் வால்மீகி ராமாயணத்தில் வருவது.லட்சுமணன் தர்மத்தை நிந்தித்துப் பேசுவான் இந்த இடத்தில். இந்த இடத்தை முக்கியமாய்க் குறிப்பிடுவதற்குக் காரணமே மற்ற ராமாயணங்களில் இவ்விதம் வரவில்லை என்பதே! என்னதான் மனிதரில் உயர்ந்தவர் என்றாலும் ராமரும் சரி, லட்சுமணனும் சரி, சாதாரண மனிதனின் ஆசாபாசங்களுக்கு உட்பட்டே, அந்த நியதிகளுக்குக் கட்டுப்பட்டே நடந்திருக்கின்றனர். நான் குறிப்புகள் எடுக்கும்போதே இவ்விதமான மேற்கோள்கள் வரும் இடத்தை முக்கியமாய் எடுத்துக் கொண்டேன். ஏனெனில் ராமர் ஒரு மனிதன் தான், என்பதையும், அவரைச் சார்ந்தவர்களும், தாங்கள் ஒரு அவதாரம் என்று நினைக்காதபடிக்குமே வால்மீகி அவர்கள் பேசுவதை எல்லாம் குறிப்பிட்டுள்ளார். மனச்சோர்வு என்பது நமக்கு இன்றளவும் எதற்கானும் ஏற்பட்டே தீர்கின்றது. அந்தச் சோர்வு ஏற்பட்டால் உடனே தர்மத்தின் பாதையில் இருந்து பிறழாமல், மீண்டும் நமது கடமையிலேயே மனதைச் செலுத்தி, செய்யவேண்டியவற்றை ஒழுங்கு முறையோடு செய்யவேண்டும் என்பதை உணர்த்தவே இது இங்கு குறிப்பிடப் படுகின்றது, என என்னுடைய கருத்து.
சாதாரண மனிதர்கள் ஆன நமக்கெல்லாம் இன்றிருக்கும் அதே ஆசா, பாசங்களும், கோப, தாபங்களும், தர்ம நிந்தனையும், பெரியோர்களை மதித்து நடந்தாலும் அதன் விளைவாய் ஏற்பட்ட தனிப்பட்ட நஷ்டத்தைக் குறித்து வருந்துவதும், ராமரும் ,சீதையும், லட்சுமணனும் ஆங்காங்கே எடுத்துச் சொல்லுவதாகவே வால்மீகி கூறி உள்ளார். அதன்படியே நாம் பார்க்கவேண்டும். சீதை தான் சிறைப்பட்டதும், கைகேயியை நினைத்துப் புலம்புவதும் சரி, சீதையை இழந்ததும் ராமர் புலம்பியதும் சரி, இந்தத் தனிப்பட்ட மனிதர்களின் சாமான்யப் போக்கைச் சுட்டுவதே அல்லாமல், ராமரை ஒரு அவதாரமாய் எடுத்துக் கொண்டு பார்த்தால் தப்பாகவே தெரியும். ஆனால் வால்மீகிக்கு அந்தக் கட்டாயம் ஏதும் இல்லை. ஆகவே தான் பார்த்தபடி, தன் கோணத்திலேயே சொல்லி உள்ளார். இந்தக் குறிப்பிட்ட வித்தியாசங்கள் தெரியும்படியாகவே நான் எழுதி வருகின்றேன் கூடியவரையிலும். இனி சீதை இறந்துவிட்டாள் என்று கருதிய ராமர் மயங்கி விழுந்துவிட்டதைக் கண்ட லட்சுமணன் கூறுவது:
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
அருமை அண்ணன் மயங்கி விழுந்ததைக் கண்ட லட்சுமணன், அண்ணனை வாரி எடுத்துத் தன் மடியில் போட்டுக் கொள்கின்றான். "தூய்மையிலேயே நிலைத்து நின்று, அதையே நிரந்தரமாய்க் கடைப்பிடிக்கும் உங்களுக்கு இப்படி ஒரு துன்பமா?? தர்மத்தின் பாதையில் செல்லும் உங்களை அந்தத் தர்மம் கூடக் காக்கவில்லையா? எனில் நீங்கள் செய்து வந்த அந்தத் தர்மத்தினால் என்ன பயன்?? அது தேவையா என்றே தோன்றுகின்றதே? தர்மத்தைக் கடைப்பிடிப்பவன் மேன்மை உறுவான் எனில் உங்களுக்கு என்ன நடந்துள்ளது? அம்மாதிரி அனைவரும் சொல்வதற்கு என்ன ஆதாரம் உள்ளது? தர்மத்தை இனியும் நாம் பின்பற்றவேண்டாம் என்றே தோன்றுகின்றது. தர்மம் தலை காக்கும் என்பது உண்மையானால் இம்மாதிரியான துக்கம் உங்களுக்கு ஏன் நேர வேண்டும்? தீயவனை அதர்மம் அழிக்கும் என்றால், அந்த அதர்மம் அவனைக் கொன்றால், அவனைக் கொன்ற பாவம் அந்த அதர்மத்துக்கு வந்தால், அப்புறம் அந்த அதர்மமும் அழிந்து விடும் அல்லவா? அப்படி எனில் அதனால் என்ன ஆபத்து ஒருவனுக்கு நேரிடும்?? ஒன்றும் இல்லையே? அல்லது விதியின் செயல் என்றால் விதியைத் தானே நொந்து கொள்ளவேண்டுமோ??? குழப்பமாய் உள்ளதே?"""தர்மம் எங்கே இருக்கின்றது??? கண்ணுக்குத் தெரியுமா?? கண்ணுக்குத் தெரியவில்லை எனில் இல்லை என்று தானே பொருள்??? தர்மம் என்று ஒன்று இருந்திருந்தால் இம்மாதிரியான துக்கம் உங்களுக்கு எப்படி நேரிட முடியும்?? ஆஹா, இதெல்லாம் எவ்வாறு ஆரம்பித்தது?? நம் தந்தை அன்றோ ஆரம்பித்து வைத்தார்? உங்களுக்குப் பட்டாபிஷேஹம் என்று சொல்லிவிட்டு, உங்களிடமும் அது பற்றிச் சொல்லிவிட்டுப் பின்னர் அதை மறுத்து வாக்குத் தவறியதால் வந்தது அன்றோ இத்தனையும்??? தர்மம் பெரியது என நீங்கள் வாதிட்டாலும், குடிமக்களுக்கு நீங்களே அரசனாவீர்கள் என வாக்குக் கொடுத்தீர்களே? அதிலிருந்து தவறியவர் ஆக மாட்டீர்களா?? தந்தையை நீங்கள் அடக்கி இருக்க வேண்டுமோ?? தவறி விட்டீர்களோ?? தந்தையை அடக்காததால் குடிமக்களுக்குச் செய்யவேண்டிய கடமை என்னும் தர்மத்தில் இருந்து நீங்கள் தவறியவர் ஆகிவிட்டீர்களோ? இப்படி எல்லாம் தியாகம் செய்து நீங்கள் கண்ட பலன் தான் என்ன? மனைவியை ஒரு அரக்கனிடம் பறி கொடுத்துவிட்டு, அவள் இருக்கின்றாளா, இறந்துவிட்டாளா என்பதே தெரியாமல், இப்படி மயங்கி விழுந்து கிடப்பதைத் தவிர நீங்கள் அடைந்த நன்மைதான் என்ன??"
"இருக்கட்டும், இளவரசே, நான் இந்த இந்திரஜித்தைச் சும்மா விடப் போவதில்லை. என் பலம் முழுதும் பிரயோகித்து அவனைக் கொல்வேன், அழிப்பேன் அடியோடு, இன்று என் போர்த்திறனை நீங்கள் காண்பீர்கள், எழுங்கள், உங்களை மன மகிழ்ச்சி அடையச் செய்வதே என் நோக்கம், உங்கள் திருப்தியே என் திருப்தி, அந்த ராவணனையும், அவன் குடிமக்களையும், படை வீரர்களையும் அழித்து நாசம் செய்கின்றேன். சீதைக்கு நேர்ந்த கதியை மனதில் வைத்துக் கொண்டு அவர்களை பழி வாங்குவேன்." என்று பலவாறு லட்சுமணன் சொல்கின்றான். ஏற்கெனவே இந்திரஜித் செய்த அட்டகாசத்தால் கதி கலங்கிக் கிடந்த வானரப் படைகள் இப்போது ராமரும் மயங்கியதும் சிதறிப் போகின்றது. விபீஷணன் பெரும் முயற்சி எடுத்து படைகளை ஒன்று திரட்டுகின்றான். அப்போது தான் அவனுக்குச் சீதையை இந்திரஜித் கொன்றுவிட்டதாய்ச் செய்தி வந்தே ராமர் கீழே விழுந்துவிட்டார் என்று தெரிய வருகின்றது.
விபீஷணன் பெருங்குரலெடுத்து நகைக்கின்றான். மேலும் சொல்கின்றான்:"ராவணனை நான் நன்கு அறிவேன். கடல் அலைகள் வற்றிவிட்டது என்றாலோ, சூரியன் மேற்கே உதிக்கின்றது என்றாலோ நம்பலாம். சீதையை ராவணனோ, இந்திரஜித்தோ கொன்றுவிட்டார்கள் என்று நம்புவது இயலாத காரியம். ராவணன் சீதையைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றான் என்பது எனக்கு நன்கு தெரியும். எனவே சீதையின் உயிர் பற்றிய கவலையோ, சிந்தனையோ கொள்ள வேண்டாம். மாயையில் வல்லவன் ஆன இந்திரஜித், இம்மாதிரி உங்களைக் கலங்க அடித்து வெற்றி பெற எண்ணுகின்றான். அவனால் உண்டாக்கப் பட்ட மாய சீதையாகத் தான் அவள் இருக்க முடியும். அதுவும் அவன் ஏன் செய்திருக்கின்றான் என்றால், இப்போது அவன் ஒரு குறிப்பிட்ட யாகம் செய்ய "நிகும்பிலம்" என்னும் இடம் சென்றிருக்கின்றான். அங்கே போய் அந்த யாகத்தில் நாம் இடையூறு விளைவித்து விடாமல் இருக்கவே இம்மாதிரியான குழப்பத்தை உண்டு பண்ணி நம்மை வேதனையில் ஆழ்த்தி இருக்கக் கூடும். இந்த யாகத்தை அவன் முடித்து விட்டானெனில் அவனை நம்மால் வெல்ல முடியாது. அவனை யாகத்தை முடிக்கவிடக் கூடாது. நாம் இப்போது அங்கே தான் செல்லவேண்டும்." என்று விபீஷணன் சொல்கின்றான். அனைவரும் யாகம் நடக்கும் இடம் நோக்கிச் செல்கின்றனர்.
Subscribe to:
Posts (Atom)