Thursday, June 29, 2006

77. நன்றி, நன்றி, நன்றி.

"காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது."

இப்போ இந்த நிலைமையில் தான் நான் இருக்கேன். 24-ம் தேதி சனிக்கிழமை என் பதிவுகள் காணாமல் போனதும், திரு மஞ்சூர் ராஜாவின் உதவியால் திரும்ப வந்ததும் இன்னும் மறக்க முடியாது இந்த சூழ்நிலையில், நம்ம "நாகை சிவா" மற்றும் ஒரு மறக்க முடியாத உதவி செய்திருக்கிறார். அதுதான் என் "எண்ணங்களை"த் தமிழ்ப் படுத்தியது. எங்கோ இருந்து கொண்டு என்னைப் பார்க்காமலேயே எனக்கு உதவி செய்ய இத்தனை நல்ல உள்ளங்கள் இருப்பதைப் பார்த்தால் நான் வலைப்பூ வைத்திருப்பதும், அதில் எழுதுவதும் எனக்கு எத்தனை பலன்களைத் தந்திருக்கிறது என்று பிரமிப்பாக இருக்கிறது. எனக்கு எழுதவோ, சொல்லவோ வார்த்தைகள் இல்லை. நன்றி என்ற ஒற்றைச் சொல்லால் இதை கொச்சைப் படுத்த விரும்பவில்லை.

8 comments:

  1. தமிழ்மணம் மற்றும் வலைப்பூவினால்(blogger.com) பல நல்ல நண்பர்கள் எனக்கும்/பலருக்கும் கிட்டி உள்ளனர்.

    ReplyDelete
  2. naagai siva rommmmmmbbbaaa nallllaaavaarrrr polirukkeee! :)

    ReplyDelete
  3. செய்த உதவிய நெனச்சு பார்கறதே இந்த காலத்துல பெரிய விசயம் அதுக்கு ஒரு போஸ்ட்டும் போட்டு அசத்தீட்டீங்க

    //நன்றி என்ற ஒற்றைச் சொல்லால் இதை கொச்சைப் படுத்த விரும்பவில்லை//

    நாட்டுக்கோழி அடிச்சு ஒரு விருந்து வெச்சுடுங்க...

    ReplyDelete
  4. ரொம்ப நன்றி நன்மனம், உண்மையில் நல்ல நண்பர்கள் தான் எல்லாரும். யாரை விட, யாரைச் சேர்க்க? எல்லாரும் நல்ல நண்பர்கள் தான்.

    ReplyDelete
  5. அம்பி,
    சமயத்தில் உதவி செய்ய யாருமே இல்லாமல் தவிக்கும்போது இப்படி வலுவில் வந்து உதவுவது என்பது அரிது இல்லையா? அதான் சொன்னேன். எல்லாருமே ரொரொரொரொரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பபபபபபபபபபபபநல்லவங்கதான். :-)

    ReplyDelete
  6. ச்யாம்,
    சிவ சிவா, நான் சுத்த்த்த்த்த்த்தத்த்த்ததததததத சைவம்ங்க. தவிர, ஒரு பறவை அடிபட்டு விழுந்தாலே எனக்கு மனசு தாங்காது. நீங்க வேறே!

    ReplyDelete
  7. என்னங்க கீதா, இம்புட்டு உணர்ச்சி வசப்படுறீங்க. இதுல என்னங்க இருக்கு. ஏதோ என்னால் முடிந்த சின்ன விசயம். எனக்கு இது போல தான் வந்த புதுசில் மாயவரத்தான் உதவி புரிந்தார்.
    அப்புறம், இந்த மேட்டர் எல்லாம் சும்மா இல்லை. ஒரு வேளை உங்களை நான் சந்திக்க நேர்ந்தால் எனக்கு ரொம்ப பிடித்த போளி செய்து கொடுப்பீங்க, அப்படிங்குற ஒரு சின்ன நப்பாசையில் தான்.

    ReplyDelete
  8. அம்பி உங்க வாய்ஸ், கொஞ்சம் கூட சரியில்லை. இப்படி தான் சுபா பதிவில் கவுத்து வீட்டிர்க்கள். இப்ப இங்க.... என்னை விட்டுங்க. அப்புறம் நான் அழுதுடுவேன்...... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete