Friday, July 07, 2006

81. வேலையில் சேர்ந்தேன்.

என் கணவரைத் திடீரென்று அங்கே பார்த்ததில் எனக்கு ஆச்சரியம். எப்படி வந்தார்? நான் எதுவும் கேட்கவில்லை. அவர் என்னிடம் "joining report" கொடுத்தாச்சா? "என்று கேட்டார். நான், "ம்ம்ம்" என்று சொல்ல "சரி, மணி 5 ஆகி விட்டது. வீட்டுக்குப் போகலாம்." என்று சொல்ல நானும் கிளம்பினேன். அங்கிருந்து செண்ட்ரல் போய்ப் பின் செண்ட்ரலில் இருந்து ரெயிலில் போனோம். வீட்டுக்கு வந்ததும் தான் என் நாத்தனார் என்னிடம், "ஆஃபீஸ் போனதும் அண்ணாவுக்கு ஃபோன் செய்யவில்லையா?" என்று கேட்டாள். நான் பதில் சொல்வதற்குள் அவளே "உங்களிடமிருந்து தகவல் இல்லாததால் அண்ணா சீக்கிரம் வீட்டுக்கு வந்து என்னைக் கேட்டு விட்டுப் பின் ஆஃபீஸ் போய்ப்பார்ப்பதாகச் சொன்னார்." என்று சொன்னாள். பிறகுதான் தெரிந்தது, அவர் மெயின் ஆஃபீஸுக்குப் ஃபோன் செய்து விசாரித்து விட்டு நான் தண்டையார்பேட்டை ஆஃபீஸில் ஜாயின் பண்ணும் விவரம் தெரிந்து கொண்டு தண்டையார்பேட்டை வந்த விவரம். மறுநாளில் இருந்து எப்படிப் போவது என்று புரியவில்லை. என் கணவர் அவர் அலுவலகத்தில் விசாரிப்பதாகவும் அதுவரை செண்ட்ரலில் இருந்து போய் வருமாறும் சொன்னார். அங்கே என் அலுவலகத்தில் இருந்த எல்லாரும் மிண்ட், தண்டையார்பேட்டை, ராயபுரம், மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்தவர்கள். யாரும் இவ்வளவு தூரத்தில் இருந்து வரவில்லை. மறுநாள் செண்ட்ரல் போயே போ என்று என் கணவர் சொன்னதால் அப்படியே போனேன். சிலர் வீடு மாற்று என்றார்கள். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி யோசனை கொடுத்தார்கள். வால்டாக்ஸ் ரோடில் பஸ்ஸில் இருந்து இறங்கிப் பின் லோக்கல் வண்டியைப் பிடிக்க வெகு தூரம் தினமும் நடக்க வேண்டும். அதிலேயே ஒரு வண்டி போய் விடும்.இந்த மாதிரிக் கொஞ்ச நாள் போனதும் என் சிநேகிதி ஒருத்தித் தினமும் பெரம்பூரில் இருந்து வருவாள். அவள், "பெரம்பூர் வழியாகத் தானே இந்தப் பேருந்து வருகிறது. நீ பெரம்பூரில் இறங்கு. நாம் இருவரும் சேர்ந்து போகலாம். நீ ரெயிலில் வரும் நேரம் வரை நான் காத்திருப்பேன்." என்று சொல்ல மறு நாளில் இருந்து நான் பெரம்பூரில் இறங்கிப் போக ஆரம்பித்தேன். ஒரு நாள் வீட்டில் ஏதோ வேலை. கொஞ்சம் நேரம் ஆகிவிட்டது. 9-15 வண்டியை விட்டு விட்டேன். அடுத்த வண்டியில் தான் போனேன். சேர்ந்த புதிது. நேரம் கழித்துப் போனால் என்ன சொல்வார்களோ என்ற பயம் வேறு. கவலையுடன் உட்கார்ந்திருந்தேன். கூட இருந்தவர்கள் எல்லாம் பயப்படாதே என்று சொன்னாலும் மனம் கேட்கவில்லை. பெரம்பூரும் வந்தது. ரெயில் வேகம் குறைய ஆரம்பித்தது. நான் இறங்கத் தயார் ஆனேன். அப்போது ஒரு வினாடி ரெயில் நின்றதும், நான் ஒரு காலைக் கீழே வைத்து இறங்க முயன்றேன். வண்டி outer-ல் இருந்திருக்கிறது. அதைக் கவனிக்கவில்லை. வண்டி சட்டென்று ஒரு குலுக்கலுடன் முன்னே போக நான் வண்டியில் இருந்து கீழே விழுந்து நடைமேடையில் உருண்டேன்.

12 comments:

  1. அச்சோ!னு நான் இங்கே கத்தினதை கேட்டு நாலு பேர் திரும்பி பாத்துட்டா!

    மாமா சொன்ன மாதிரி, கையை காலை வெச்சுண்டு சும்மாவே இருக்க முடியாதா உங்களால?

    ReplyDelete
  2. அம்பி,
    கீழே விழுவது மீண்டும் எழுவதற்காகவே! தெரியாது?

    ReplyDelete
  3. ஏங்க நமக்கு இந்த வேலை.. வெளில எல்லாம் போறப்ப பாத்து போங்க தெய்வமே..

    ReplyDelete
  4. பெரம்பூரில் ஏதும் பிரசித்தப்பட்ட கோவில் ஏதும் இருக்குற மாதிரி தெரியல்லையே. அப்புறம் ஏன் நீங்க தேவையில்லாமல் அங்கபிரதசனம் செய்து இருக்கீங்க........

    ReplyDelete
  5. ஆமா ஆமா புலி பதுங்குவது பாய்வதற்கு தான்... :-)

    ReplyDelete
  6. வேதா, உங்க கற்பனை சகிக்கலை. அவர் ஆஃபீஸ் ஆவடிலே. நான் விழுந்தது பெரம்பூரிலே.

    ReplyDelete
  7. அதெல்லாம் எழுந்துட்டேன், கார்த்திக், இல்லாட்டி இப்போ உட்கார்ந்து பதிவு எழுத முடியுமா?

    ReplyDelete
  8. சிவா,
    இது தேவைதான் எனக்கு.

    ReplyDelete
  9. ச்யாம்,
    புலி எங்கேருந்து வந்தது?

    ReplyDelete
  10. நமக்கு எதுக்கு இந்த சர்கஸ் வேலை எல்லாம். பிளாட்பாரத்திலே இரங்கறதே கஷ்டம் இதிலே அந்தரத்திலே வேறே இறங்கனுமா? தி ரா ச

    ReplyDelete
  11. வேதா,
    தண்டையார்பேட்டைலே ஆஜர் ஆகலாம். ஆனால் அவருக்கு நான் விழுந்த விஷயமே தெரியாது. தற்செயலாக அன்று என்னைப் பார்த்த ஒருத்தர் அவருடைய ஆஃபீஸ் காரராகிப் போய் பின்பு ஒரு நாள் எங்கள் இரண்டு பேரையும் சேர்த்துப் பார்த்ததும் அவரிடம் சொல்லும் வரை நான் சொல்லவே இல்லை. வம்பு! அப்புறம் நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டேன்! அது வேறே விஷயம்.

    ReplyDelete
  12. சார்,
    என்னோட வயசுக்கு(!!!!!!!!) நான் சர்க்கஸ் வேலை எல்லாம் பண்ணாமல் என்ன பண்ணறது? உங்களுக்கு வயசு ஆயிடுச்சு இல்ல அதான் புரியலை!!!!!!!! :-)

    ReplyDelete