Thursday, January 18, 2007

ஒரு விளம்பரம்

KANNAN-IN-KANAVU- பதிவுலகிற்கு ஒரு புதிய வரவு! கண்ணனின் துபாய், மதுரை, சென்னை அனுபவங்களைக் காண உடனே விஜயம் செய்யுங்கள்.
kannan-in-kanavu.blogspot.com. உங்கள் அனைவரையும் அங்கே செல்க, செல்க என தலைவியின் ஆனை சீச்சீ, ஆணை! உடனே சென்று பின்னூட்டம் கொடுக்கவும். (என் மானத்தைக் காப்பாத்துங்க.) ஹிஹிஹி, இன்னிக்கு இது தான். அப்புறமா நாளைக்குப் பார்க்கலாம். வர்ட்டா?

10 comments:

  1. Tanq Athai...But Inum konjam Kalam agum tamila Type panna....Ipo than Admin rights keturuken local machinuku ...Lets see

    ReplyDelete
  2. போடுறதுக்கு மேட்டர் இல்லைன்னாலும் இந்த வெட்டி விளம்பரதுக்கு குறைச்சல் இல்லை தலைவியே..

    இதோ இப்பவே ஆணையை நிறைவேற்றுகிறேன் தலைவியே

    ReplyDelete
  3. அங்க போனா புளியோதரை & வாட்டர் பாக்கட் கிடைக்குமா? :-)

    ReplyDelete
  4. ஹிஹிஹி, கண்ணா, கலக்குறே போ? இந்தத் த்ரிஷா எல்லாம் வேணாம், நீ நமக்குத் தனியாவே கோவில் எடு, அவங்க கூடவோ எதிரேயே வேணவே வேணாம்.

    @கார்த்திக், மேட்டர், மாட்டர் எல்லாம் நிறையவே இருக்கு, நேத்திக்கு வெளியே போயிட்டு வந்தேனா? வந்ததும் பையன் இண்டெர்நெட்டிலே, "அத்தை" னு பாச மழை பொழிஞ்சானா? அதான் கொஞ்சம் ஏதோ நம்மால் ஆனது. நியாயமாக் கடை திறந்ததும் அவன் போய் எல்லாருக்கும் பத்திரிகை கொடுத்துக் கூப்பிடணும். நம்ம லெவலுக்கு ஆனை சீச்சீ ஆணை தானே விட்டால் கெளரவம், அதான். ஆணையிட்டேன்.

    @ச்யாம், என்ன இன்னுமா புதுவருஷம், பொங்கல்னு கொண்டாடிட்டு இருக்கீங்க. உங்க பதிவு கண்ணுக்குத் தெரியாம ஏமாத்துது? தினமும் கவனிச்சாலும் வர மாட்டேங்குதே? பார்க்கலாம். பொங்"கல்", "புலி"யோதரை எல்லாம் கிடைக்கும். போய்ப் பாருங்க.

    @வேதா, ஹிஹிஹி, இப்படியா சபையிலே வச்சு மானத்தை வாங்கறது. அதெல்லாம் பையனுக்கு எல்லாத் தொண்டர்கள், குண்டர்கள் எல்லார் விலாசமும் தெரியும். அப்போ அப்போ இங்கே உள்ள நிலவரத்தை விசாரிச்சு வச்சுப்பான்.

    ReplyDelete
  5. அன்புள்ள அத்தைக்கு,
    தங்களுடைய விளம்பரத்தால் நிறைய பேர் வந்தார்கள்...தமிழில் எழுதுகிறேன்..நிறைய ....
    இங்க SURVEY பயஙரமா போகுது, கோயில் இடதிற்கு..பார்க்கலாம் எங்கே கட்டுவதென்று

    ReplyDelete
  6. முதல்ல அத்தை,
    அப்புறம் மருமானா.
    தேவலையே.
    குடும்ப விளையாட்டா ஆக்கீட்டீங்களா.:-)
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  7. கார்த்திக், பொங்கலுக்கு அப்புறம் எழுதி இருக்கீங்களா? அப்படின்னா எனக்குத் தெரியலை. ஏன்னு புரியலையே? என்ன செய்யலாம்? நான் இங்கே இருந்து வந்தால் உங்க அஜித், ஆழ்வார் பத்தின பதிவு மட்டும் தான் வருது. வேறே ஒண்ணும் வரதில்லை. சரி பார்க்கறேன்.

    அப்புறம் நான் "ஒளவை"னு கூடத் தெரியாமல் என்ன தொண்டர் நீங்க? நம்ம கைப்புள்ள தான் அதியமானா இருந்து எனக்கு ஒரு நெல்லிக்கனி(அழுகிப் போச்சு) கொடுத்தாரே? :D

    ReplyDelete
  8. வாங்க, வாங்க, வல்லி, நீங்களும் போய்ப் பையனை வாழ்த்திட்டு வாங்க. ரொம்பவே சந்தோஷம் நீங்க வந்ததுக்கும், வாழ்த்தினதுக்கும்.

    ReplyDelete
  9. உங்க மருமான் வீட்டில் பிரசன்ட் போட்டாச்சு தலைவி அவர்களே.

    ReplyDelete
  10. ஹிஹிஹி, புதுவரவு மலரே, வருக, வாழ்க, வளரிக, பின்னூட்டம் ரேட் ஏற்றுக. நீங்க எந்தக் கிளை, கட்-அவுட் கிளையா, போஸ்டர் ஒட்டும் கிளையா, கோவில் கட்டும் கிளையா? உ.பி.ச. ஏற்கெனவே இருக்காங்க, இன்னும் எஸ்.கே.எம்.மும், உமா கோபுவும் வேறே அடுத்த லிஸ்ட்லே இருக்காங்க. அதனாலே உங்களோட தொண்டைத் தெளிவு படுத்திக் கொள்ளத் தலைவியின் ஆனை, ஹிஹிஹி, சின்ன வயசா? எப்பவும் ஆனை, ஆனை நினைப்பே வருது. தலைவியின் ஆணை!

    ReplyDelete