Friday, January 19, 2007

நானும் தமிழ் எழுதறேன்.

இன்னிக்கு எழுதினதிலே இன்னும் சில பேர் விட்டுப் போயிடுச்சு. அதிலே சிட்டி, நரசையா, லா.ச.ராமாமிர்தம், மஹரிஷி, எழுத்து செல்லப்பா, சுந்தர ராமசாமி, ஹெப்ஸிபா ஜேசுதாஸன் போன்றவர்களும் உண்டு. இதில் சிட்டி அவர்கள் தி.ஜானகிராமனுடன் சேர்ந்து எழுதிய "நடந்தாய் வாழி காவேரி" புத்தகத்தை எத்தனை முறை படித்திருப்பேன் சொல்ல முடியாது. நரசையாவைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர் புத்தகங்கள் மூலம் தான் எனக்குச் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய உண்மையான தரிசனம் கிடைத்தது. லா.ச.ரா. சொல்லவே வேணாம். மஹரிஷி பேரை அறியாதவர்கள் கூட "புவனா, ஒரு கேள்விக்குறி" என்ற படத்தை மறந்திருக்க மாட்டார்கள். மஹரிஷியின் கதை தான் அது. அப்புறம் ர.சு. நல்லபெருமாள். இன்னொரு அற்புதமான வரலாற்றுக் கதாசிரியர். இவர் எழுதின "கல்லுக்குள் ஈரம்" "போராட்டங்கள்" எல்லாம் இன்னும் நினைவில் இருக்கிறது. இத்தனை புத்தகங்களும், பேர்களும் நான் சொல்றதைப் பார்த்து எங்க வீட்டிலே ஒரு பெரிய புத்தக நூலகம் இருக்குன்னு நினைச்சா நீங்க நினைக்கிறது தப்பு. எல்லாம் ஓசி வாங்கிப் படிச்சது. இன்னும் சொல்லப் போனால் நான் புத்தகம் படிக்கிறதுக்கு அடிச்சுக் கிட்ட மாதிரி வேறே எதுக்கும் இல்லை. அப்படிப் போய்க் கெஞ்சிக் கெஞ்சிப் புத்தகங்கள் வாங்கி வருவேன்.

இதிலே அப்பா சில புத்தகங்களை சென்சார் செய்வதுண்டு. மேலும் படிக்கிற போது புத்தகம் படிக்கக் கூடாது என்று கறாராக உத்தரவு போடுவார். எல்லாத்தையும் மீறிக் கொண்டுதான் நான் புத்தகம் படிப்பேன். அதுவும் எப்படி? என்னுடைய பாடப் புத்தகங்களுக்குள் ஒளித்து வைத்துக் கொண்டு அப்பாவுக்குத் தெரியாமல் படிப்பேன். மாட்டிக் கொண்டதும் உண்டு. ஹிஹிஹி, அதெல்லாம் ஒரு அனுபவம். இப்போவும் என் கணவர் என்னைப் புத்தகக் கண்காட்சிக்கு மட்டும் கூட்டிப் போகவே மாட்டார். திரும்ப வீடு வர நேரம் ஆகுமோ அல்லது அங்கேயே தங்கிக் கண்காட்சி முடிஞ்சதும் தான் வருவேன்னு சொல்லுவேன்னோ என்னவோ தெரியலை. எத்தனையோ முறை கூப்பிட்டும் வரலை. எனக்குத் தனியாப் போகவும் பிடிக்கலை. அதனால் டி.வி.யில் வரும் புத்தகக் கண்காட்சிக் காட்சிகளை மட்டும் பார்த்துச் சந்தோஷப் படுவேன். சில புத்தகங்களுடன் என்னோட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் ஆசை. இது இங்கே நிற்க.
*************************************************************************************
இப்போ எனக்கு ஒரு சந்தேகம். நான் யாஹூவில் இருந்தோ அல்லது ஜி-மெயிலில் இருந்தோ மெயில் கொடுத்தால் சில சமயம் போகுது. பல சமயம் போக மாட்டேங்குது. இதுக்கு என்னோட இணைய இணைப்புத் தான் காரணமா தெரியலை. பதிவுகளே சில சமயம் பப்ளிஷ் ஆக மாட்டேங்குது. சில சமயம் பப்ளிஷ் ஆகலைன்னு நினைச்சிட்டிருப்பேன். திரும்பத் திரும்ப வந்திருக்கும். யாஹூவில் எனக்கு மெயில், மயில், புறா விடு தூது அனுப்பிச்சவங்க எல்லாம் கொஞ்ச நாள் பொறுக்கவும். நான் எஸ்.கெ.எம்முக்கு அனுப்பிய எறும்பு மெயில் எதுவுமே அவங்களுக்குக் கிடைக்கலைன்னு புரியுது. கொஞ்ச நாளில் சரியானதும் மெயில், மயில் எல்லாம் அனுப்பறேன். அப்புறம் ஜி-மெயில் திறந்ததுமே எனக்கு மானிட்டரில் தெரிவது "ரின் சுப்ரீம் வெள்ளை" தான். சில சமயம் யாராவது "சாட்"டுக்கு வந்தால் அது வரும். அது மட்டும் தான். மற்ற படி மெயில், குயில் எதுவும் தெரியாது. இது பத்தி ஒரு நாளைக்கு "ராமு"டன் "சாட்" செய்யும்போதுக் கேட்டேன். அதுக்கு அப்புறம் அவர் என் ப்ளாகுக்கு வரதை நிறுத்தினதோடு அல்லாமல், என்னோட தலையை ஜி-மெயிலில் பார்த்தாலே சிவப்பு விளக்கை எரிய விட்டுடுவார். சரின்னு நம்ம கோபெருஞ்சோழனைக் கேட்டால் (ஹிஹிஹி, கைப்புள்ள தான்) அவர் அதுக்கு மேலே, "மேடம், என்னோட லாப்-டாப்பே சார்ஜ் இல்லை, அப்புறமா வரென்"னு கழட்டிக்கிறார். எல்லாரும் ஏதோ புது ப்ளாக்குக்கு மாறுங்கனு கூவிட்டிருக்காங்களே, தமிழ்மணத்திலே, அதனாலே தானாக்கும்னு நினைச்சுக் கைப்புள்ள கிட்டே, "நானும் புது ப்ளாகுக்கு மாறவா?"னு கேட்டால் அவர், "ஏன், உங்களுக்கு ஜிலேபி சுத்த வராதா?"னு கேட்டார். என்னனு பார்த்தா நம்ம ராம் இல்லை, அவர் புது ப்ளாகுக்கு மாறினதும் நல்லா ஜிலேபி சுத்தி இருக்கார். அங்கே போய்ப் பாருங்கன்னு சொன்னதும், பார்த்துட்டு வந்தேன். சரி, இது வேலைக்கு ஆகாதுன்னு விட்டுட்டேன். என்ன கஷ்டம்னா நீங்க எல்லாம் எழுதற புதுப் பதிவு எதுவும் எனக்குத் தெரிய மாட்டேங்குது. இன்னும் சொல்லப் போனால் அட்ரஸ் கொடுத்தாலே எல்லா ப்ளாகும் திறக்கும். இப்போ எந்த ப்ளாகும் சரியாவும் திறக்கறதில்லை. யாரும் தப்பா நினைக்காதீங்க. இதை மட்டும் ஒரு பத்து முறை literally saying முயற்சி செய்து கொடுக்கிறேன். வருதா பார்ப்போம். .சில சமயம் வந்துடுச்சுன்னு மெசேஜ் வராமல் ரொம்பவே ஸ்டைலாக Internet Ezplorer cannot display this webpage அப்படின்னு வரும். இப்போ என்ன செய்யுதோ பார்க்கலாம். பிள்ளையாரே காப்பாத்து.!!!!!

7 comments:

  1. //என்ன கஷ்டம்னா நீங்க எல்லாம் எழுதற புதுப் பதிவு எதுவும் எனக்குத் தெரிய மாட்டேங்குது//

    சாலேசரமா...இவ்வளவு சின்ன வயசுல அது எல்லாம் வராதே அதுதான்...சும்மா ஒரு டவுட்டு.. :-)

    ReplyDelete
  2. in a day 2 posts. nalla internet connection you have.I think it is a made to order special connection just for you.niraya pesunadhala pazhi vanguradhukku company karan panna velaiyo.;)--SKM

    ReplyDelete
  3. அன்புள்ள அத்தைக்கு ,
    என்னோட முதல் அட்டென்டென்ஸ்
    இப்பொழுது தான் எழுத ஆரம்பித்திருக்கிறேன் (ஒரு நாள் தான் ஆகுது) கொஞ்சம் பொறுத்துகொள்ளவும் ,டவுன்லோட் பண்ற வசதி இல்லை ...போக போக சரியாக எழுதுகிறேன்....பழைய பதிவை சரி செய்திருக்கிறேன் பிழை இருந்தால் பொறுத்தருள வேண்டுகிறேன்.

    ReplyDelete
  4. ஹிஹிஹி, ச்யாம், சாளேஸ்வரமா? உங்களுக்கா? அப்படின்னா என்ன? எனக்குப் புரியலையே?

    @எஸ்.கே.எம். அதான் நான் காப்பி, பேஸ்ட் தானே பண்ணறேன். அதுவும் இணையம் கிடைக்காதபோது எழுதி வச்சுக்கிறதை இணையம் வரப்போ போடறேன். அதிலேயும் சில சமயம் தான் வருது. சில பதிவுகள் வரவே இல்லை. எங்கே போய் ஒளிஞ்சிட்டிருக்குன்னும் தெரியலை. இன்னும் கண்ணாமூச்சி தான் ஆடுது. அதுவும் ஜி-மெயிலில் போனால் இன்னும் மோசம். இணைய இணைப்பே இல்லைன்னு சத்தியம் பண்ணுது. இந்தக் கொடுமைக்கு என்ன செய்யறதுன்னு புரியலை.

    ReplyDelete
  5. கண்ணா,
    போனால் போகுதுன்னு மன்னித்தேன். அப்புறம் தொண்டர் படையை வாபஸ் வாங்கிட்டீன்னா என்ன செய்யறது? அதான், தமிழ் நாட்டிலே பிறந்துட்டு, அதுவும் சங்கம் வளர்த்த மதுரையில் பிறந்துட்டுத் தமிழ் எழுத ஆரம்பிச்சு ஒரு நாள் தான் ஆகுதுன்னு சொல்றயே? துடிக்கிறது என் மனசு, சீத்தலைச் சாத்தனார் போல்(வேறே யார் தலையிலாவது) தலையில் (எழுத்தாணி இல்லாததால்) எலிக்குட்டியால் அடிக்கச் சொல்கிறது மனசு. அடக்கிக் கொண்டிருக்கிறேன். எப்போ பொங்கி எழுமோ தெரியாது. பார்த்துக்கோ!

    ReplyDelete
  6. மேடம்,

    சீக்கிரமே புது பிளாக்கர்க்கு மாத்துங்க... Publish பிரச்சினையே அதிலே கிடையாது, Just one Click'லே முடிஞ்சிரும், இதுமாதிரி வட்டம் சுத்திட்டே இருக்காது :)

    ReplyDelete
  7. Blogla தமிழ் எழுதி ஒரு நாள் ஆகுது ,சொன்னேனே தவிர தமிழ் எழுதி என்று சொல்ல வில்லை....தொண்டர்கள் அனைவரும் தங்களை காண அவலுடன் இருகிறார்கள்......இந்த மாதிரி ஆர்வ கோளறு காரணமா என்னை மாதிரி இன்னொருவனும் ஆரம்பிச்சிருக்கான்.பதிவு போட்டவுடன் சொல்கிறேன் அவனையும் வாழ்த்தவும்.

    ReplyDelete