Tuesday, April 17, 2007

ஒரு வேண்டு கோள்

என்னோட இன்னொரு வலைப்பக்கம் ஆன "ஆன்மீகப் பயணத்தில்" சிதம்பரம் பற்றிய அரிய தகவல்களை எழுது கிறேன். அதற்குப் பின்னூட்டமே வரதில்லை ஆதலால் மறுமொழியப் பட்ட இடுகைகளில் வராது. ஆகவே குறைந்த பட்சம் 4, 5 பின்னூட்டங்களாவது வந்தால் தான் தமிழ் மணத்தில் தெரியும். அனைவரையும் போய்ச் சேரும். படிக்கிறவர்கள் கட்டாயம் ஏதாவது பின்னூட்டம் கொடுக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

அப்புறம் இ.கொ. யாராவது மூன்று நபர்களை நானும் கூப்பிடவேணும்னு சொல்லிட்டு இருக்கார். அவருக்காக நான் அழைப்பது:
வேதா(ள்), குறைந்த பட்சம் 10 நாளாவது எடுத்துப்பாங்க எழுத. இப்போ சோளிங்கர் தொடர் வேறே எழுத ஆரம்பிச்சிருக்காங்க. அதனால் இன்னும் டைம் எடுக்கும். வேதா(ள்) யாரும் கூப்பிடலையே?

லதா ரொம்ப நாளா இந்தப் பக்கமே வரலை. அவங்க பதிவுக்கும் போக முடியலை. அதனால் இதை எங்கேயோ இருந்து அவங்க இதைப் பார்த்துட்டு எழுதி எனக்கும் தகவல் கொடுப்பாங்கன்னு நம்பறேன்.

கைப்புள்ள, யாரும் கூப்பிடலையே? ஆள் அட்ரஸே காணோம். அப்போ அப்போ வ.வா.ச. பதிவுகளில் வந்து எழுதிட்டுப் போயிடறார். எங்கே இருக்கார், என்ன ஆச்சு? ஏன் இன்னும் சுடர் ஏந்தினதுக்கு அப்புறம் ஆளே காணோம். ஒண்ணுமே புரியலை. கையைச் சுட்டுக்கிட்டாரோ என்னவோ. இவங்க மூன்று பேரையும் கூப்பிட்டிருக்கேன். அப்பாடி, ஒரு சுமை இறங்கியது.

அடுத்து மணிப்ரகாஷ் உங்க பதிவிலே என்னாலே பின்னூட்டமே கொடுக்க முடியலை. அப்புறம் உங்களோட கமென்டுக்கு நான் பதில் சொல்லலைன்னு வருத்தப் படறீங்க. நான் கமென்ட் வந்திருக்கான்னு நெருப்பு நரியில் பார்த்துப் பப்ளிஷ் செய்து அதை எடக்ஸ்ப்ளோரரில் படிச்சு, அதில் தமிழ்ப் பின்னூட்டம் கொடுக்க முடியாது, திரும்ப நெருப்பு நரிக்கு வந்து எது யார் எழுதினதுன்னு தெரியாமலே ஓரளவு நினைவு வச்சுப் பதில் கொடுக்கிறேன். (பாருங்க, தமிழுக்காக எப்படி உழைக்கிறேன்னு!:D) இந்தக் குழப்பத்திலே சிலருக்குப் பதில் வரும், சிலருக்கு வராது. என் கையிலே இல்லை, வழக்கம்போல். எல்லாம் அவன் அருள்! :)))))))))))))))))
நேதாஜி பற்றி நீங்க படிச்சேன்னு சொன்னதையும் அதிலே சந்தேகம் இருக்குன்னு சொன்னதும் நல்லா நினைவு இருக்கு. அதற்குப் பதில் சொல்லும் முன், நான் மறுபடி ஒருமுறை தயார் செய்துக்கணும் இல்லையா? ஆகவே நீங்க படிச்சேன்னு சொல்ற லிங்கை எனக்குக் கிடைச்சாப் பார்த்துட்டு வரேன். முடிஞ்சா திரும்ப ஒரு முறை லிங்கைக் கொடுங்க. நேத்துக் கூட உங்க சந்தேகம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். பின்னூட்டம் கொடுக்கிறதுன்னா இது எல்லாம் ரொம்பப் பெரிசாப் போகுது. அதான் பதிவாவே எழுதிட்டேன். பதிவுக் கணக்கு ஹிட் ஏறுமே! ஹிஹிஹி!

13 comments:

  1. naan koodava comment podaradhu illai? :-( thamizhmanam moolama mattume ellarum padikradhu illai, so no worry! :-)

    ReplyDelete
  2. ஒரு உள்ளேனம்மா மட்டும் போட்டுக்கொள்கிறேன்....

    ReplyDelete
  3. நல்லாச் சொன்னீங்க பொற்கொடி....நான் தமிழ்மணம் பார்ப்பது வீக் எண்ட் மட்டுமே...ஆனா கூகிள் ரிடர் மூலமாத்தான் பதிவுகளைப் படிக்கிறேன் பின்னூட்டமிடுகிறேன்.

    ReplyDelete
  4. இம்புட்டு தூரம் சொல்றீங்க...நான் போய் அங்கன ஒரு கமெண்ட் போடுறேன்...படிக்க போறேன்னு எல்லாம் பொய் சொல்லல....:-)

    ReplyDelete
  5. நான் நாளைக்கு போறேன், வந்ததுக்கு இங்க ஒரு கமெண்ட்.

    ReplyDelete
  6. நேதாஜி பதிவ நான் கூர்ந்து படிப்பேன், எதாச்சும் தப்பு இருந்துச்சு... பிராண்டி வச்சுடுவேன் சொல்லிட்டேன்....

    ReplyDelete
  7. போர்க்கொடி, என்ன இருந்தாலும் நீங்க எல்லாம் தினம் வந்து போடறதில்லை, மதுரையம்பதி கூட இப்போ அம்பி கூடச் சேர்ந்ததுக்கு அப்புறம் மாறிட்டார். :P
    @மதுரையம்பதி, இது எப்படி இருக்கு? உங்க புதுத் தோழர் மெயில் அனுப்பிச்சு மிரட்டறார், நீங்க அவர் கட்சியாம் இப்போ, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........... அது சரி, கூகிள் ரீடரில் எனக்குத் தெரியறதில்லையே? என்ன செய்யணும்?

    ReplyDelete
  8. ரொம்ப டாங்ஸு, ச்யாம், உண்மைத் தொண்டர்னு நிரூபிச்சுட்டீங்க.

    @சிவா, நாளைக்கு என்ன நல்ல நாளா? எல்லாம் இன்னிக்கே போடலாம் இல்லை? அதுக்குள்ளே உகாண்டா நினைவா? :P
    நேதாஜி பத்தி எழுத ஆரம்பிக்கும் முன்னேயே பிராண்டலா? எல்லாம் உகாண்டா வேலை! :))))))))))))

    ReplyDelete
  9. //அப்புறம் உங்களோட கமென்டுக்கு நான் பதில் சொல்லலைன்னு வருத்தப் படறீங்க. நான் கமென்ட் வந்திருக்கான்னு நெருப்பு நரியில் பார்த்துப் பப்ளிஷ் செய்து அதை எடக்ஸ்ப்ளோரரில் படிச்சு, அதில் தமிழ்ப் பின்னூட்டம் கொடுக்க முடியாது, திரும்ப நெருப்பு நரிக்கு வந்து எது யார் எழுதினதுன்னு தெரியாமலே ஓரளவு நினைவு வச்சுப் பதில் கொடுக்கிறேன்//

    romba nanri madam. enakaga ivolo periya rply panninathukku...


    //இந்தக் குழப்பத்திலே சிலருக்குப் பதில் வரும், சிலருக்கு வராது. என் கையிலே இல்லை, வழக்கம்போல். எல்லாம் அவன் அருள்! :)))))))))))))))))
    //

    "தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
    மெய்வருத்தக் கூலி தரும்"

    னு வள்ளுவனார் சொல்லி இருக்கார்.வரலைனா நான் கேட்டு வாங்கிக் கொள்கிறேன்...

    //ஆகவே நீங்க படிச்சேன்னு சொல்ற லிங்கை எனக்குக் கிடைச்சாப் பார்த்துட்டு வரேன். முடிஞ்சா திரும்ப ஒரு முறை லிங்கைக் கொடுங்க//

    மேடம் நான் இணையத்தில் படிக்கவில்லை..படம் பார்த்தேன்..

    போஸ் தி ஃபர்காட்டன் ஹிரோனு ஒரு ஹிந்திப் படம்..அதைத்தான் நான் பார்த்தேன் ..

    உதாரணமாய், அவர் ஜெர்மனி சென்று ஹிட்லரை சந்தித்ததாய் ஒரு நிகழ்வு வந்தது.. அதனைப் பற்றி நான் கேள்விபட்டது இல்லை.இது மாதிரி இன்னும் கொஞ்சம்..

    ஆனால் அதனைப் பற்றி கேட்கும் முன்னே அவரைப் பற்றி இன்னும் படித்தால் நன்றாய் இருக்கும் என்று எண்ணுகிறேன்..

    நான் உங்களுக்கு தனியா மடலிடுகிறேன்..நீங்க பதில் அனுப்புங்க.. அல்லது வேறு ஏதேனும் புத்தகம் இருந்தாலும் சொல்லவும்..

    ReplyDelete
  10. @ நாகை சிவா,
    உகாண்டவில் ஏதேனும் பிரச்சினையா. நேற்றைய முந்திய தினம் NDTVயில் உகாண்ட மக்கள் அங்கு வாழும் இந்தியர்களை வெளியேற சொல்லி வற்புறுத்துவதாய் காண்பித்தார்கள்.அது உண்மையா..?


    //பாருங்க, தமிழுக்காக எப்படி உழைக்கிறேன்னு!:D///

    @பொற்கொடி., நீங்க இத பார்த்து ஒன்னுமே சொல்லாம இருக்கீங்க....
    :((

    ஆனா நான் உண்மைத் தொண்டன்.. எனவே நான் ஒரு வாழ்க போட்டுக்கிறேன்...

    தா(னே)னைத் தலைவி வாழ்க.

    ReplyDelete
  11. கவலையே வேண்டாம் நாளையிலிருந்து நிச்சியம் பதில் உண்டு

    ReplyDelete
  12. கடமையை செய்!
    பலனை எதிர்பாராதே!
    - கீதையில் கண்ணன்.

    மொக்கையை போடுங்கள்! கமண்டை எதிர்பாராதீர்கள்!
    - குழந்தை அம்பி.

    இது எப்படி இருக்கு? :)))

    //மதுரையம்பதி கூட இப்போ அம்பி கூடச் சேர்ந்ததுக்கு அப்புறம் மாறிட்டார்.//
    :)) ha haaaa

    //எதாச்சும் தப்பு இருந்துச்சு... பிராண்டி வச்சுடுவேன் சொல்லிட்டேன்//
    @puli, புலி, நீ கடிக்கவே செய்யலாம்! தப்பே கிடையாது. எவ்ளோ செலவானலும் பரவாயில்ல. நான் பாத்துக்கறேன்.

    ReplyDelete
  13. //லதா ரொம்ப நாளா இந்தப் பக்கமே வரலை. அவங்க பதிவுக்கும் போக முடியலை. அதனால் இதை எங்கேயோ இருந்து அவங்க இதைப் பார்த்துட்டு எழுதி எனக்கும் தகவல் கொடுப்பாங்கன்னு நம்பறேன்.//

    தலை(வலி)வி அவர்கள் மன்னிக்கவும். அதிகம் ஆணி அடிக்க வேண்டியிருந்தது. ஆணி பிடுங்கிக் கொண்டே இருப்பது போரடித்துவிட்டது:-))). தங்கள் பதிவை இப்போதுதான் வாசித்தேன்.
    நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தூசிதட்டிஎடுத்து ஒரு பதிவு போட்டுவிட்டு உங்களுக்குச் சொல்கிறேன். :-)))

    ReplyDelete