Friday, August 24, 2007

சரியா, தப்பா? தெரியாது?

என் இதயம் ஆகிய இந்தச் சிறிய மலரைப் பறித்து விடு! உடனே ஏற்றுக் கொள்! உனக்குக் காணிக்கை ஆக்குகிறேன். இல்லை எனில் இது வாடிப் புழுதியில் மண் மூடிவிடுமோ என அச்சமாய் உள்ளது.

உன்னுடைய அழகிய மாலையில் வெறும் நாரினால் இந்த மலரைப் பிணைக்காதே! என் தலைவா! உன்னுடைய மிருதுவான தொடுகையால் இந்த அற்ப மலரின் ஊடலைப் போக்கிப் பின்னரே இம்மலரைப் பறிப்பாய்! நான் உன் தொடுகையால் மனநிறைவு பெறும் முன்னரே இந்த தினம் முடிந்து விடுமோ? என்னுடைய வழிபாட்டின் நேரம் தவறி விடுமோ? என எனக்கு அச்சமாக உள்ளது!

இந்த அற்ப மலருக்குச் சிறிது வண்ணமும், வாசனையும் சேர்த்துவிடு! பிறகே உன்னுடைய சேவையில் இந்த மலரை ஏற்றுக் கொண்டு நேரம் வந்ததும் இதற்கு மோட்சம் கொடுத்து விடு!

இறைவா! என்னுடைய பாடல் அழகான ராகங்களால் ஏற்ற இறக்கத்துடன் கூடி உள்ளது. அதற்கு இந்த வேஷத்தால் அழகு அடைந்தமைக்குப் பெருமை ஏதும் இல்லை. ஏனெனில், இந்த அழகான ஆபரணங்களே உன்னை நான் ஆலிங்கனம் செய்து கொள்வதைத் தடுக்கிறது. உனக்கும் எனக்கும் நடுவில் பிரிவை உண்டாக்குகிறது. அதனுடைய ஆரவாரமான ஒலியினால் உன்னுடைய மிருதுவான அழைப்பு அழுந்தப் படுகிறது.

உனக்கு முன் நான் ஒரு கவிஞன் என்றும், புலவன் என்றும் கொண்ட பொய்யான பெருமை தூள் தூளாக நொறுங்கிப் போகிறது. ஏ மாபெரும் கவிஞனே! உன் காலடியில் நான் அமர்ந்திருக்கிறேன். என் வாழ்க்கையை இப்போது மிக எளிதானதாக்கி விடு! அப்போதுதான் நான் இனிமையான கீதம் இசைக்கும் ஒரு புல்லாங்குழல் போல் ஆகி உன்னுடைய புகழைப் பாட முடியும்!

4 comments:

  1. இம்முறை திருப்தி இல்லாததினால் முதலில் கொடுத்த தலைப்பை மாற்றி விட்டேன். லேபலில் கொடுத்திருக்கேன். கீதாஞ்சலின்னு. எனக்குப்புரியுது, ஆனால் எழுதத் தெரியலை! :(((((

    ReplyDelete
  2. நிஜமாவே தெரியாம தான் கேக்கறேன்:

    இந்த கீதாஞ்சலியே பிரிட்டீஷ் சாம்ராஜியத்தின் எலிசபத் ராணி மற்றூம் அவர் கணவர்(பிரபு) இவர்களை புகழ்ந்து பாடப் பட்ட ஒரு பாடல் தொகுப்பு!னு சொல்றாங்களே உண்மையா?

    உங்க மொழி பெயற்ப்பும் அதே மாதிரி தான் இருக்கு.
    தனி பதிவாகவே விளக்கவும்.

    கண்ணபிரான் கூட ஒரு பதிவு போட்ருக்கார் பாருங்க.

    ReplyDelete
  3. Nallave ezuthi irukkingga.

    mozhi peyarppu uyir peRuvathu
    kadinamaana velai.
    adhai azhaka solavthu unggaLukkuk kaivantha
    kalaiyaakivittathu.

    ReplyDelete
  4. வல்லி,உங்க பாராட்டு கொஞ்சம் அதிகமாவே இருக்கோ? ஹிஹிஹி, ஆனாலும் எனக்கு வேண்டித் தான் இருக்கு!

    @அம்மாஞ்சி, ஒரு பதிவாவே போடறேன் பாருங்க! :P

    ReplyDelete