Thursday, August 28, 2008

சகோதரி அனுராதா ஆன்மா சாந்தி அடையட்டும்!


கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து 5 வருடங்களாகப் புற்று நோயுடன் போராடி வந்த சகோதரி அனுராதா, இன்று காலை, 9-52 மணிக்கு இறைவனடி சேர்ந்தார். வாழ்வின் துயரங்கள் மறைந்து அந்திமாலையில் கணவனோடு இனிமையான இல்லறம் நடத்தத் தயாராக இருந்த சகோதரிக்கு இப்படி ஒரு நோய் வந்து அவரின் உயிரைப் பறித்துக் கொண்டது சோகத்திலும் சோகம். ஆனாலும் அவருக்குக் கடைசிவரையிலும் உறுதுணையாக இருந்து வந்த அவரது கணவர் திரு சுப்பிரமணியம் அவர்களின் துணையினாலேயே அனுராதா கடைசி வரையிலும் மன உறுதியுடன் போராடினார். சுப்பிரமணியம் அவர்களைத் தேற்ற வார்த்தைகளே இல்லை. அனுராதாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

6 comments:

  1. அனுராதா அவர்களின் குடும்பத்தினருக்காகவும், அவர்தம் ஆன்மா சாந்தியடையவும் என்னுடைய பிரார்த்தனைகளும்.

    ReplyDelete
  2. அனுராதாவை இழந்த அவரது குடும்பத்துக்கு அனுதாபங்கள்.

    அவர் இன்னும் நிறைய நாட்கள் போராடி வெற்றி பெறுவார் என்றே நினைத்தேன்.

    ReplyDelete
  3. நான் ஒரு முறை அனுராதா மேடமுடன், மற்றும் அவரது கணவருடன் பேசியிருக்கிறேன்.

    அனுராதா மேடம் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  4. சகோதரி அனு - துயரத்திலிருந்து விடுபட்டார். அருமைக் கணவர் சுப்பிரமணியம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    அனுராதாவின் ஆன்மா சாந்தியடைய இறைவன் துணை புரியட்டும்

    ReplyDelete
  5. :(
    அனுராதா அம்மாவின் இன்னுயிர் இறைவன் திருவடிகளில் இளைப்பாற வேண்டுகிறேன்!
    சுப்பிரமணியம் ஐயாவுக்கு இந்த இக்கட்டான சூழலில் அமைதியும் ஆறுதல்களும் வேண்டுகிறேன்!

    ReplyDelete
  6. கீதாஞ்சலி (94)
    ----------------------------
    நான் பிரியும் வேளை!
    ------------------------------
    மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
    தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
    ----------------------------------
    நல்விடை கூறி என்னை,
    அனுப்பி வைப்பீர்
    நண்பர்களே,
    நானும்மைப் பிரியும் வேளை!
    வானம் பளிச்சென வெளுத்து விட்டது!
    வனப்பு பொங்கு தென் பாதையில்!
    எடுத்துக் கொண்டு செல்வது
    என்ன வென்று கேளாதீர் என்னை.
    வெறுங் கையாய்ப் பயணத்தில்,
    புறப்பட்டேன்,
    பிறர் அளிப்பதை எதிர்பார்த்து!
    அப்போது நான்
    திருமண மாலை கழுத்தில்
    அணிந்து கொள்வேன்!
    பயணிகள் உடுத்திக் கொள்ளும்
    பழுப்பு நிற ஆடை
    ஏகும் எனக்கு ஏற்ப தில்லை!
    போகும் பாதையில்
    அபாயம் நிரம்ப உள்ளன!
    ஆயினும் நெஞ்சில்
    அச்ச மில்லை எனக்கு!
    வானத்தில்
    முளைத்தெழும் வெள்ளி,
    என் பயணம்
    முடியும் தருவாயில்!
    எந்தன் அதிபதி வீட்டு முற்றத்தில்
    அந்தி மங்கிய
    துன்ப மயக் கீதங்கள்
    அடித்துக் கொண்டு எழுந்திடும்,
    அவ்வேளை!
    -----------------------------------
    அனுராதா அம்மா சார்பாக ஒரு மகன்

    ReplyDelete