Friday, May 15, 2009
இறைவன் கொடுத்த வரம்!
ஒவ்வொரு மூச்சும் இறைவன் கொடுத்த வரம் தான். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக இதை ஒவ்வொரு கணமும் உணர்கின்றேன். இந்த மாதிரி அட்டாக் வரும் ஒவ்வொரு முறையும் அதுவா, நானா என்றே இருக்கிறது. ஆனாலும் இறைவன் அருளால் சமாளித்துக் கொண்டு வருகிறேன். என்றாலும் இம்முறை ரொம்பக் கஷ்டமாய் இருக்கு. வெயில் காரணம்னு நினைக்கிறேன். இது வரையிலும் எழுதி வைத்தவைகளை ஷெட்யூல் பண்ணி வச்சுப் போட்டாச்சு. இனிமேல் எழுதணும். அதுக்கு இப்போ தெம்பு இல்லை. வழக்கமான வேலைகள் எல்லாமே மாறிப்போயிருக்கு. மறுபடி தினசரி நடைமுறைக்கு வர எத்தனை நாளாகுமோ தெரியாது. தாங்கிக் கொள்ளும் வல்லமையைக் கொடுக்கும் இறைவனுக்கும் நன்றி. தொலைபேசியில், தனி மடலில், பின்னூட்டங்களில் என நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி.
ஒய்வு எடுத்து மீண்டும் புதிய தெம்போடு வந்து பதிவிடுங்கள்.
ReplyDeleteஇறைவன் துணையிருப்பான்.
பிரார்தனையுடன் வாழ்த்துகளும்
சூர்யா
கீதா, இன்னூம் உடம்பு சரியாப் போகலியா. சீக்கிரம் சரியாகட்டும் அப்புறமா எழுதுங்க்கோ
ReplyDeleteஉடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள் கீதாம்மா. விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteகீதா மேடம். உங்கள் உடல்நலம் விரைவில் நன்கு தேறிட நானும் பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteவிரைவில் நலமுடன் வருவிங்க தலைவி...
ReplyDeleteகீதாம்மா, இவ்வளவு சீரியஸ்னு எனக்கு முன்னாடி தெரியலை. மன்னிக்க.
ReplyDeleteஎனக்கு சிறுவயதில் (இப்பவும்) தூசி/சிகரெட்/பார்த்தீனியம் ஒவ்வாமை = அதுனால ஆஸ்த்மா உண்டு. வெயில்னால வரும்னு தெரியாது... மூச்சு விட முடியாம இருக்கறது எவ்வளவு கஷ்டம்னு உணர்ந்தவள் நான். உடம்பை கவனியுங்கள். எனக்கு எப்பவும் உக்கிர தெய்வங்களை வணங்குவதில் இது குறையும். அவங்க கிட்ட உங்களுக்காக வேண்டிக்கிறேன்.
:-(
ReplyDeleteஅச்சம் இலர் பாவம் இலர்
ReplyDeleteகேடும் இலர் அடியார்
நிச்சம் உறு நோயும் இலர்
தாமுன் நின்றியூரில்
நச்சமிட(று)உடையார் நறுங்
கொன்றை நயந்தாளும்
பச்சம் உடை அடிகள்
திரு்ப்பாதம் பணிவரே
விரைவில் குணம் பெற பிரார்த்தனைகள்