Thursday, June 18, 2009

பதிவுகள் தாமதம் ஆவதற்கு மன்னிக்கவும்!

படிக்கிறவங்க இருக்காங்களா இல்லையானு தெரியலை. ஆனால் பின் தொடருபவர்கள் எண்ணிக்கை 35-ல் இருந்து 34 ஆகக் குறைந்துள்ளது. ஆகவே பதிவுகள் தாமதம் ஆவது தான் காரணமோனு தோணுது. கொஞ்ச நாட்கள் இப்படித் தான் இருக்கும். பாகவதம், பாரதம் ஆகியவற்றிலிருந்து விலகாமல், அதை ஒட்டியே கொண்டு போகவேண்டும். அதே சமயம் திரு முன்ஷிஜி எழுதி இருப்பதையும் மாற்றாமல், "இது எப்படி முடியும்?" என்ற கேள்விக்கும் விடை கண்டு பிடித்து எழுதுவது, படங்கள் கிடைக்கத் தாமதம், வீட்டில் அடுத்தடுத்து விருந்தினர் வருகை, உடல் நலம் மதிய வேளையில் கணினியில் உட்கார விடாமல் செய்வது, நீண்ட நேர மின் தடை, இணையம் வேலை செய்யாமை போன்ற காரணங்களால் தாமதம். ஜூலை மாசம் முடிய இந்தத் தாமதம் இருக்கும். அதுக்கு அப்புறமாய்க் கண்ணன் கதையை ஒரே ஓட்டமாய்த் தான் ஓட்ட வேண்டி இருக்கும். முக்கிய நிகழ்ச்சிகள் எல்லாம் அப்புறம் தானே வருது! ஆர்வம் உள்ளவர்கள் காத்திருபபார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. நன்றி.

3 comments:

  1. கவலைப்படாதீங்க. நாங்கல்லாம் படிச்சுட்டு நல்லா இருக்குன்னு நினைச்சுண்டு போயிடுவோம். காமென்ட் போடற பழக்கமில்லே!

    ReplyDelete
  2. @திவா,
    //நினைச்சுண்டு போயிடுவோம். காமென்ட் போடற பழக்கமில்லே!//

    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete