Sunday, June 13, 2010

என்னவோ போங்க ஒண்ணுமே பிடிக்கலை!

அப்பாடானு இருக்கு, கிட்டத்தட்ட ஒரு மாசமாவே சரியாயில்லை. இப்போ லைலா புயல் வந்ததுக்கப்புறம் ஜாஸ்தியாயிடுத்து. வைரஸ் அட்டாக்னு புரியலை. மின் வெட்டு இருந்ததால் திடீர் திடீர்னு மின் அழுத்தம் ஏறி இறங்கும் அதனாலேனு நினைச்சேன். அதுவும் இல்லைனு தெரிஞ்சு ஒரு வழியா திரும்ப ஆபரேட்டிங் சிஸ்டம் போட்டிருக்கு. எல்லாமே மாறி இருக்கா, கொஞ்சம் பழகணும். ஆகவே பதிவுகள் மெதுவாத் தான் வரும். கீ போர்டு வேறே பழசு ரொம்ப மோசமாப் போயிடுச்சுனு மாத்தியாச்சு. புது கீ போர்டு, இதிலும் கொஞ்சம் அதிகமாவே நேரம் எடுக்குது. ஸ்பேஸ் தட்டும்போதெல்லாம் 'க்ளிக்" "க்ளிக" னு சத்தம் வருது. ரொம்பத் தொந்திரவா இருக்கு. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் னு கத்தணும்போல வருது. ஆனால் யார் கிட்டக் கத்தறதுனு தான் புரியலை. கொஞ்சம் பொறுங்க. மெதுவா வரேன். எழுத்து வேறே இதிலே கொஞ்சம் அழிஞ்சாப்பல தெரியுது. பேசாம அந்த கீபோர்டையே மாத்திடலாமானு யோசிக்கிறேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நறநற.

இந்த விண்டோ வேறே ஒரே குதி குதியாக் குதிக்குது! என்னோட பிரச்னையைப் பார்த்து அவ்வளவு சந்தோஷமா? விண்டோ மட்டும் குதிக்கலை, டாஸ்க் பாரே குதிக்குதே! என்ன செய்ய??? நறநறநறநறநற சின்னக் குழந்தைங்க எல்லாம் பழகின பொம்மை எத்தனை அழுக்காய்ப் போய்க் கிழிஞ்சிருந்தாலும், அதையே வேணும்னு சொல்லுமே, அது மாதிரி எனக்கு என்னோட கீ போர்டு தான் வேணும் இப்போ! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்(மீ டூ குழந்தை) அதான்! :(

11 comments:

  1. அலுப்பாய் ஒரு தலைப்பு:)! காரணம் பார்த்தால் கீபோர்டு, ஜன்னல்னு..! எல்லாம் சரி பண்ணிட்டு சந்தோஷமா வாங்க சீக்கிரம்.

    ReplyDelete
  2. பாவம், மாமாகிட்ட கத்துங்க .. விய வழி இல்ல

    ReplyDelete
  3. வாங்க ரா.ல. தலைப்பு நல்லா இல்லை?? :P போகட்டும், சரி பண்ணித் தான் ஆகணும், இந்த ஆபரேடிங் சிஸ்டமே பிடிக்கலை எனக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  4. எல்கே, மாமா கிட்டே கத்தி என்ன பண்ணறது?? அவருக்குப் புரியாது! :))) வேறே வழியே இல்லை, தனியாத் தான் கத்திக்கணும், வழக்கம்போல்!

    ReplyDelete
  5. //, இந்த ஆபரேடிங் சிஸ்டமே பிடிக்கலை எனக்கு!/

    அப்ப வேற போடுங்க..

    ReplyDelete
  6. //டாஸ்க் பாரே குதிக்குதே! என்ன செய்ய??//

    டாஸ்(மா)க் பார் தானே?
    அப்படித்தான் குதிக்குமாம்!!!!!

    ReplyDelete
  7. //(மீ டூ குழந்தை/

    ithu 100 times over

    ReplyDelete
  8. எல்கே, நாலு வருஷமாச் சொல்லிட்டு இருக்கேனே, தெரியாது? :P அதனாலே 100 டைம்ஸ்ங்கறது ஒண்ணுமே இல்லையாக்கும். :D

    ReplyDelete
  9. வாங்க கோபி, இன்னிக்கு ஓய்வு கிடைச்சது போல!:D

    ReplyDelete