Wednesday, November 03, 2010

அம்பி, ரொம்ப அவசரமாய் ஒரு மடல்!


சே, உடம்பும் சரியில்லாமல், அதைப் பார்த்து நொந்து போன இணையமும் தன்னோட உயிரை மயக்க நிலைக்குக் கொண்டு போக ஒரு மாசமா ஒரே படுத்தல். இந்த அழகில் தீபாவளி வேறே நெருங்கிட்டது. திவா வேறே ஏற்கெனவே நவராத்திரிக்கு முன்னாலேயே தீபாவளி பர்ச்சேஸுக்கு டிப்ஸ் கொடுத்திருந்தார். அதை அம்பிக்குச் சொல்றதுக்குள்ளே இப்படி ஒரு பிடுங்கல்! அன்னிக்கே திவாவின் டிப்ஸை ஜி3 பண்ணி இருக்கணும். அட?? ஜி3க்கு இந்த வருஷம் அஜீத்(தல) தீபாவளி இல்லை?? வாழ்த்துகள் ஜி3!

இப்போ நம்ம விஷயத்துக்கு வருவோம். அவசரமா பர்ச்சேஸ் பண்ணறதாலே, நல்லிக்கு திநகர் எல்லாம் போக முடியாது. ஆகவே அம்பி இந்த வருஷம் ராசி சில்க்ஸின் ஸ்வப்னா கலெக்ஷன்ஸோட திருப்தி அடைஞ்சுக்கலாம்னு வச்சுட்டேன். வாங்கிட்டு பில்லை உங்களுக்கு அனுப்பச் சொல்லிடறேன். செட்டில் பண்ணிடுங்க. அதிகமில்லை ஜெண்டில்மேன், ரெண்டே ரெண்டு தான்! அண்ணா நகரிலேயே கடை இருக்கா??? சீக்கிரமாப் போய் வாங்க செளகரியமா இருக்கும். தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அம்பி! சீக்கிரமா செட்டில் பண்ணிடுங்க.

12 comments:

  1. ஹிஹி.. தீபாவளி வாழ்த்துக்கள் மாமி

    ReplyDelete
  2. தீபாவளி வாழ்த்துக்கள் மிஸஸ் சிவம். 22 வருஷத்துக்கப்புறம் இந்த வருஷம் தீபாவளிக்கு புது புடவை !! இவர், பசங்களுக்கு pant, t shirt. shirt இங்கேயே கிடைச்சுடும்.வாங்குவேன் எனக்குத்தான் ஒண்ணும் இருக்காது.வாங்கிக்கவும் மாட்டேன். இந்த வருஷம் வாங்கின புடவை ஒண்ணை பிரிச்சு கட்டிக்க டைம் வரலை.நேத்துதான் பார்த்தேன்!! :))ஸோ தீபாவளிக்கு கிடைச்சது.உங்க முதல் புடவை தலப்பு பாத்ததும் அட நம்ப புடவை இருக்கறமாதிரி இருக்கேனு தோனித்து.எனக்கு என்னிக்குமே பிடிச்சது ராசி தான்.
    பாவம் அம்பி ? இப்பத்தான் ப்ளே ஸ்கூலுன்னு ஆரம்பிச்சிருக்கு . ... !!.இப்ப வலை உலக தாய்குலம் எல்லாமும் லிஸ்ட் அனுப்ப ஆரம்பிச்சுடுமே !! எங்கயோ "துந்தனா பாட்டு பாடணும் இல்லைனா தாளம் போடணும்" நு பாட்டு சத்தம் ?? அவரா பாடறது ??:)))))))

    ReplyDelete
  3. எல்கே, தயாராய் இருங்க எதுக்கும், பொங்கலுக்கு நீங்க கொடுக்கிறாப்போல் இருக்கும்! :))))))

    ReplyDelete
  4. வாங்க ஜெயஸ்ரீ, அதெல்லாம் நம்மளை விட்டா வேறே யாரும் கேட்க மாட்டாங்க அம்பிட்டே! பயமுறுத்தி வச்சிருக்காரோ?? ம்ம்ம்ம்??? ஆணாதிக்கம்??? ஆமாம்னா ஒரு போராட்டம் நடத்திடுவோம்ல! :D அவர் அதெல்லாம் பாடலை, சீக்கிரமா செட்டில் பண்ணணுமேனு முழிச்சுட்டு இருப்பார்.

    வாழ்த்துகள் இத்தனை வருஷம் கழிச்சுப் புதுப்புடவை கட்டிக்கிறதுக்கு! என் பொண்ணு இங்கேருந்து வாங்கிண்டு போறதிலே ஒண்ணை தீபாவளிக்குனு ஒதுக்கிடுவா! :))))))

    ReplyDelete
  5. தீபாவளிக்கு வாழ்த்துக்கள் மாமி.
    மாடம்பாக்கம் கோவில் பற்றி நீங்கள் பதிவு போட்டீர்களா அல்லது வேறு யாருமா.

    எனது அம்மாவிற்கு விபரம் வேண்டும்.

    ReplyDelete
  6. தீபாவளி வாழ்த்துக்கள் தலைவி ;))

    ReplyDelete
  7. வாங்க ராம்ஜி யாஹு, மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில் பத்தி நான் தான் எழுதினேன். இங்கே என் பயணங்களில் என்ற லிங்கில் பாருங்க. அங்கே உள்ள பதினெட்டு சித்தர் கோயில் பத்தி எழுத ஆரம்பிச்சேன். என்னமோ பாதியிலே நின்னு போச்சு! அதையும் எழுதணும். திருமூலருக்கு அந்தக் கோயிலிலே தனி சந்நிதி இல்லை என்பது ஆச்சரியமா இருந்தது. கோயிலில் கேட்டதுக்கும் சரியா பதில் கிடைக்கலை. அதையும் முடிக்கணும். நினைவு செய்ததுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  8. தேனுபுரீஸ்வரர் கோயில் சரபருக்கு ஞாயிறன்று விசேஷ வழிபாடு நடக்கும். அன்னிக்குப் போகலாம். சரபர் சிற்பம் வெகு அற்புதம்! வழிபடும் சிற்பம் என்பதாலும், படம் எடுக்கத் தடை என்பதாலும் படம் எடுக்க முடியவில்லை. ஸ்கந்தாசிரமமும் போகச் சொல்லுங்க.

    ReplyDelete
  9. வாங்க கோபி, பார்க்கவே முடியறதில்லை இப்போல்லாம். தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. தீபாவளீ 'க்ரீட்டிங்ஸ்' கீதா பாட்ட்ட்ட்ட்டீ!! :)

    ReplyDelete
  11. இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete