Wednesday, May 11, 2011

பெருமாள் செய்யப் போகும் கிரஹப்ரவேசம்!

 
 
Posted by Picasa
கீழே காணும் சுட்டிகளில் பெருமாளைக் குறித்த செய்திகளைக் காணலாம். பல வருஷங்களாக முயன்று மூன்று வருஷம் முன்பே ஆரம்பித்த திருப்பணி பணப்பற்றாக்குறையால் அவ்வப்போது நின்று, மீண்டும் ஆரம்பித்து என்று ஒருவழியாக இப்போது கொஞ்சம் சூடு பிடித்துக் கடைசியில் கும்பாபிஷேஹத்திற்கு நாளும் குறித்துப் பத்திரிகையும் அடித்து வந்தாயிற்று. கும்பாபிஷேஹத்தில் கலந்து கொண்டு பெருமாளின் அருளைப் பெற வேண்டி நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம். சாப்பாடு போடவும் ஏற்பாடுகள் செய்திருக்கிறது. வர முடிந்தவர்கள் கட்டாயமாய் வந்து கலந்து கொள்ளும்படி வேண்டுகிறோம். ஊர் மக்கள் சார்பாகவும் அழைக்கிறோம்.


கீதா&சாம்பசிவம்

கும்பகோணத்தில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் பேருந்துகளில் வந்தால் கூந்தலூர் என்னும் ஊரில் இறங்கி அங்கிருந்து கருவிலி என்னும் சற்குணேஸ்வரபுரம் வழியாக வரவேண்டும். இது ஒரு வழி.

இன்னொரு வழி கும்பகோணம்-காரைக்கால் மார்க்கத்தில் வடமட்டம் என்னும் ஊரில் இருந்தும் வரலாம். வடமட்டத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. கோனேரிராஜபுரம், திருவீழிமிழலை போன்ற ஊர்கள் சுற்றி உள்ளன. கும்பகோணத்திலிருந்து மினி பேருந்து ஊருக்குள் வருகிறது.


ஒரு வேண்டுகோள்

பெருமாள் கிடைத்துவிட்டார்

6 comments:

  1. காலையில் நல்ல செய்தி. கும்பாபிஷேகம் நல்ல படி நடகட்டும். இங்க இருந்து பிரார்த்தனை பண்ணிக்கறேன்

    ReplyDelete
  2. விழா இனிது நடைபெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  3. நம்ம ஊர்ப்பக்கமா?
    விழாக்காண வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. அழைப்புக்கு நன்றி !
    விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் கீதாம்மா .

    ReplyDelete
  5. அழைப்புக்கு நன்றி...இங்க இருந்து பிரார்த்தனை பண்ணிக்கறேன்

    ReplyDelete