Thursday, March 15, 2012

அம்பிக்குக் கொடுக்கவேண்டியதைக் கொடுத்தாச்சு!

ஒரு வழியா அம்பிக்கு இருந்த நீண்டநாள் குறையைத் தீர்த்து வைச்சுட்டேன்.  யு.எஸ்ஸிலே இருந்து கிளம்பறச்சே அம்பி தொலைபேசியில் பேசினப்போ அவரோட கல்யாணத்திலே நான் மொய்யே கொடுக்காமல் தப்பிச்சுட்டேன்;  அதே போல் அவர் அருமைத் தம்பி(க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)தாக்குடுவின் கல்யாணத்துக்கும் மொய் வைக்காமல் அமெரிக்கா கிளம்பி வந்துட்டேனு குறைப்பட்டுண்டார். அதென்னமோ தெரியலை, கல்லிடைக்குறிச்சியில் அம்பியோட பெற்றோர் அவங்க பிள்ளைங்களுக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ண வேண்டியதுதான்; நாங்க அமெரிக்கா கிளம்பிடறோம். ஹிஹிஹி, ரெண்டு தரமும் அப்படித் தான் ஆச்சு.

அம்பியாவது பொண்ணு பார்த்திருக்கேன்; நிச்சயம் மதுரையிலே வாங்கனு பேச்சுக்குச் சொன்னார்; நிஜமாவே பேச்சுக்கு;  கடைசியில் நிச்சியதார்த்தத்துக்குக் கூப்பிடவே இல்லை.  போனால் போகட்டும் போடானு பாடிட்டுக் கல்யாணச் சாப்பாடுக்கு உட்கார்ந்திருந்தா சரியா கல்யாணத்துக்கு ஒரு மாசம் முன்னே யு.எஸ். கிளம்பிட்டேன்.  ஹிஹி; அதே போல் தான் தாக்குடுவும் கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டுத் தொலைபேசினார்.  உடனே அமெரிக்கப் பயணம் உறுதினு தெரிஞ்சு போச்ச்ச்ச்ச்ச்!!!


அமெரிக்காவிலே இருந்து நம்ம சொர்க்கத்துக்குக் கிளம்பறச்சே அம்பி ஒரு கவரை அவர் மாமனாருக்கு அனுப்பச் சொன்னாரா!  அதை அவருக்கு அனுப்பி வைச்சேனா!  அதுக்குக் கூரியர் பணத்தை அம்பி எனக்கு அனுப்பி வைக்கலை.  நானும் ரொம்பப் பெருந்தன்மையா(கவனிக்க வேண்டிய இடம்) கூரியருக்குப் பணம் நானே கொடுத்துட்டேன்.  அப்புறம் தான் தோணித்து.  ஆஹா, அம்பிக்கு மொய் வைக்கலைனு குறை இருந்ததே;  அதைத் தீர்த்து வைக்க வேண்டாமானு! உடனே அம்பிக்கு மெயிலிட்டேனே, அன்னிக்கே, கூரியருக்குப் பணம் அனுப்பலை;  அதனாலே மொய்ப் பணத்தில் வரவு வைச்சுக்கவும்னு எழுதிட்டேனேனு நினைப்பு வந்தது.  மனம் சமாதானம் ஆச்சு.


தாக்குடு, அடுத்து தோஹாவா, துபாயா தெரியலை;  தயாரா இருக்கவும்; உங்க மாமனாருக்கு அனுப்ப ஒரு கவரோடு. அதை இந்தியா வந்து நான் அனுப்பினேன்னா, உங்க மொய்க்கு ஒண்ணும் செய்யலைங்கற குறை தீர்ந்து போயிடும்.  வெயிட்டீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.




24 comments:

  1. மொய் வைத்ததெல்லாம் சரிதான். பதில் மரியாதையாக இன்னும் வஸ்திரகலா வந்து சேரவில்லையே:)!

    [போட்டுக் கொடுத்தாச்சு!]

    ReplyDelete
  2. விரும்பிச் செய்த தாக்குதலா தாக்குடு? :)) ஸோ...இந்தியா ரிடர்னுடு...ரைட்?

    ReplyDelete
  3. மொய் எழுதியாச்சு. அதனால வஸ்டிரகலா வந்துடும்:)
    உங்களிடம் பேசவாவது பேசினார். என்னுடன் அதுவும் இல்லை.
    நல்ல குழந்தைகள்!!!
    நலமா கீதா.

    ReplyDelete
  4. வந்தாச்சா?வெய்யில் எப்படி?

    ReplyDelete
  5. வாங்க எல்கே, சிரிச்சா???:P

    ReplyDelete
  6. ஹிஹிஹி, ரா.ல. அமெரிக்காவிலே இருக்கும் அம்பி பதில் மரியாதைக்கு டாலரிலே அனுப்புவார்னு தான் வஸ்த்ரகலா எல்லாம் அல்பம்னு விட்டுட்டேனாக்கும். :))))))))

    ReplyDelete
  7. வாங்க ஸ்ரீராம், தாக்குடு மட்டும் இல்லை, போர்க்கொடியும் தான்! :))))))))பொற்கொடினு பேரை வைச்சுக்கிட்டா? சும்மா விடுவோம்???? :)))))))

    ஆமாம், இந்தியா ரிடர்னு! :))))

    ReplyDelete
  8. வாங்க லக்ஷ்மி, ரசனைக்கு நன்றி.

    ReplyDelete
  9. வாங்க வல்லி, அவர் எங்கே பேசினார்?? ரா.ல. பேச வைச்சாங்க! இல்லைனா அம்பியாவது, பேசறதாவது! :))))))))நல்லா இருக்கேன் ரேவதி.

    ReplyDelete
  10. வந்தாச்சு ஜெயஸ்ரீ, அதான் வந்ததுமே மழையைக் கொண்டு வந்துட்டோமே! இப்போதைக்கு வெயில் தெரியலை; போகப் போகப் பார்க்கலாம். :)))))

    ReplyDelete
  11. வாங்க வா.தி. வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  12. இந்தியா வந்தாச்சா.... நல்லது...

    மொய் வைக்காம இப்படி கூட தப்பிக்கலாமா? நல்ல ஐடியா தான்.... :))))

    ReplyDelete
  13. வாங்க கீதாமா!!
    நீங்க எப்போ வருவீங்கன்னு ஒரே எதிர்பார்ப்பு தான் போங்கோ:))

    ReplyDelete
  14. அப்புறம் அப்பாவி உங்களை வந்து பார்த்தாரா :))

    ReplyDelete
  15. வாங்க கீதாமா!!
    நீங்க எப்போ வருவீங்கன்னு ஒரே எதிர்பார்ப்பு தான் போங்கோ:))

    ReplyDelete
  16. யார் அது வஸ்திரகலா? அழகான பேர்.

    வந்ததுமே மழையா? வெரிகுட். தெருவெல்லாம் க்ளீனாயிருக்குமே? உங்களுக்காகவே பெஞ்ச மழைனு சொல்லுங்க.

    ReplyDelete
  17. கண்ணன் வருவான் - வரமாட்டேங்கிறானே பிலாக்லே?

    ReplyDelete
  18. வாங்க வெங்கட் நாகராஜ், மொய் வைக்காமத் தப்பிப்பது எப்படினு ஒரு புத்தகமே போடலாம்னு இருக்கேனாக்கும். :)))))))

    ReplyDelete
  19. வாங்க ப்ரியா, அப்பாவியாவது வந்து பார்க்கிறதாவது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வீட்டு நம்பருக்குத் தொலைபேசினாலே அழைப்புப் போறதில்லை! :(

    ReplyDelete
  20. அப்பாதுரை, ஹா, ஹா, வஸ்த்ரகலா தெரியாது? ஹேமமாலினி தான் ப்ராண்ட் அம்பாசடர் விளம்பரத்துக்கு! :)))))) இப்போ நினைப்பு வந்திருக்கணுமே!:P:P:P

    ஹிஹிஹி, எங்கே தெருவெல்லாம் தண்ணீர் தேங்காமல் இருந்ததே, பெரிய விஷயம். :))))))

    ReplyDelete
  21. கண்ணன் வந்திருக்கணும். கொஞ்சம் இல்லை, நிறையவே வேலை; இந்த முறை இணையம் என்னமோ சீக்கிரமா வந்துட்டது; ஆனால் என்னால் தான் உட்கார முடியலை. இன்னிக்குக் கண்ணன் வந்தாலும் வருவான். ஆனால் இன்னும் சில நாட்களுக்கு இப்படித் தான் இருக்கும். ஜூன் மாசத்துக்கு அப்புறமாக் கொஞ்சம் எழுத நேரம் கிடைக்கும்னு நினைக்கிறேன். நன்றி விசாரிப்புக்கு.

    ReplyDelete