Wednesday, April 04, 2012

ஹூஸ்டன் ம்யூசியத்தில் ஏமாந்தோம்!




Posted by Picasaஹூஸ்டன் ம்யூசியம் போனோம்.  அங்கே படங்கள் எடுக்கத் தடை.  ஒரு சில காலரிகளில் மட்டும் எடுக்கலாம்.  இது அந்தக் காலத்து சைனா கிண்ணம்.  ஐந்து நூற்றாண்டுகள் முன்பு இருந்ததாம். இம்மாதிரி நிறைய வைச்சிருக்காங்க.  இதை மட்டும் படம் எடுக்க அனுமதி கிடைச்சது. ஒரு இடத்தில் இம்மாதிரிப் பீங்கான் துண்டங்களாலேயே கார்ப்பெட் மாதிரி அலங்கரித்து வைச்சிருக்காங்க. 

பல நாட்டுக் கலைப்பொருட்களும் இருக்கின்றன.  உலக நாடுகள் அனைத்திலிருந்தும் கலைப்பொருட்களைச் சேகரித்திருக்கிறார்கள். அதில் ஆப்பிரிக்க, சீனக் கலைப் பொருட்கள் கொஞ்சம் பார்க்கும்படியாக இருக்கின்றன.  மிகக் கொஞ்சமே இருந்த இந்திய காலரியில் பத்தாம் நூற்றாண்டு  அம்பிகையும், நடராஜரும்,  இருக்கின்றனர்.  பிற்காலச் சோழர் காலச் சிலைகள் அதிகம் காணப்பட்டன.  புத்தர் திபெத்தில் இருந்து வந்திருக்கார்.  ஒரு சில பல்லவ காலத்துச் சிலைகளாகக் காணப்படுகின்றன.  பலவும் சுவாமிக்குப் போடும் கவசம், நகைகள், ஆபரணங்கள், தலைக்கிரீடம் போன்றவையே. ஒரு கோணத்தில் பார்த்தால் புத்தர் தக்ஷிணாமூர்த்தி மோன தவத்தில் இருப்பது போல் காணப்படுகிறார்.

மிகப் பெரிய ம்யூசியம்னு நினைச்சுட்டுப் போய் மிகப் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது என்னவோ உண்மை.  சித்திரங்கள் உள்ள காலரியில் படம் எடுக்கலாம்.  அங்கே எல்லாம் கிறிஸ்துவின் வாழ்க்கையை விளக்கும் ஓவியங்களாகவே காண முடிகிறது.

மாதிரிக்கு ஒண்ணு.

9 comments:

  1. படம் எடுக்கமுடிந்ததோ இல்லியோ பார்த்து ரசிக்கமுடிந்தது இல்லியா?

    ReplyDelete
  2. மற்றவற்றைப் படம் எடுக்க முடியவில்லை என்பது வருத்தம்தான். பிற்காலச் சோழர் காலச் சிலைகளையும் மோன புத்தக்ஷினாமூர்த்தியையும் பார்க்க முடியவில்லையே...!

    ReplyDelete
  3. நேற்று இட்ட என் கமெண்ட் இதுவரை வெளியாகாத மர்மம் என்ன? உண்ணாவிரதம் (காலை எட்டு மணி முதல் மதியம் ஒரு மணி வரை) இருக்கும் யோசனையில் இருக்கிறேன்! :))

    ReplyDelete
  4. அடடா...பின் தொடரும் வசதியை இப்போதுதான் காண்கிறேன்....அதற்காக இது....

    ReplyDelete
  5. பல ம்யூசியத்தில் படம் எடுக்க அனுமதிப்பதில்லை....

    பார்த்து ரசிக்க வேண்டியது தான்!

    நல்ல பகிர்வும்மா..

    ReplyDelete
  6. வாங்க லக்ஷ்மி, ரசிக்கிறாப்போல் தெரியலை எனக்கு. சுமாரா இருந்தது.

    ReplyDelete
  7. வாங்க ஸ்ரீராம், மோனபுத்தக்ஷிணாமூர்த்தியைப் படம் எடுக்க முடியாது. :((

    நேத்திலே இருந்து இணையம் ஒரு வழி பண்ணிடுச்சு; அதோட இப்போ பவர் கட் அறிவிக்கப்பட்டது மூன்றுமணி நேரம்; அதைத் தவிரவும் சேர்த்துக்குங்க.

    நீங்க எந்த சொர்க்கம்???

    ReplyDelete
  8. அடாடா? உண்ணாவிரதமா?? பார்த்துங்க, கவனம், நடு நடுவில் ஏதேனும் சாப்பிட்டுக்குங்க. :))))

    இந்த ஃபாலோ அப் ஆப்ஷனை நேத்திக்கு நுனிப்புல் உஷாவின் பதிவில் பார்த்துட்டு ஒரு குதி குதிச்சதில் கால் வீங்கி இருக்கு. :)))))

    ReplyDelete
  9. வாங்க வெங்கட், ரசனைக்கு நன்றி.

    ReplyDelete