Tuesday, May 22, 2012

காவேரி ஓரம், கதை சொன்ன காலம்!

காவேரிக் கரையிலே /  இல்லை; இல்லை, காவேரிக்குள்ளேயே :)))கொஞ்சம் சுத்தம் செய்து விளக்குகள் போட்டு மக்கள் மாலை வேளையில் கூடும் பீச் போல ஏற்படுத்தி உள்ளது திருச்சி நகராட்சி.  கருட மண்டபம் அருகே இருந்தும் போகலாம்.  மாம்பழச் சாலையில் இருந்தும் போகலாம். திருச்சி மக்களே அதிகம் வருகின்றனர்.  கூட்டம் வரும் முன்னர் போய்ப் படம் எடுக்கணும்னு இன்னிக்கு ஆறரைக்கே போனோம். ஒரு சில படங்கள் பார்வைக்கு.

இது ஒரு பக்கத்துப் பார்வை. காவேரி அகண்ட காவேரியாய் இருப்பதால் முழுசையும் கவர் பண்ண முடியவில்லை.  வெட்டி ஒட்ட வேண்டும். அது இன்னமும் சரியா வரலை. :(



விளக்குகள் போட்டதும் எடுத்த படம். வெயில் இருந்ததால் விளக்குகள் தெரியவில்லை.  தூரத் தெரியும் விளக்குகள் திருச்சி நகரின் வெளிச்சம். கரூர் பைபாஸ் ரோடு.


திருச்சிக் கரையில் உச்சிப் பிள்ளையாரும், மலைக்கோட்டையும்.


உச்சிப் பிள்ளையாரைப் பார்த்தபடி ரங்க்ஸ்! :))))))))

12 comments:

  1. காவிரின்னு எழுதாம அது என்ன காவேரி?

    போஸ்ட்டைப் படிக்க மாத்தேன் போ...

    ReplyDelete
  2. பீச் பார்க்கறா மாதிரி இருக்கு. கூட்டம் எவ்வளவு கூடுகிறது என்று ஒரு புகைப்படம் போட்டிருக்க வேண்டாமோ...! :))

    ReplyDelete
  3. அகண்ட காவேரி.....மணல்!
    ஒருகாலத்தில் இருகரையும் தொட்டு சுழித்து ஓடிய ஆறு!

    ReplyDelete
  4. இ.கொ. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், உங்களோட பேசப் போறதில்லை. :(((( காவேரினு தான் எழுதுவேன், போங்க! :P

    ReplyDelete
  5. அப்பாதுரை, காவேரிலனு நானும் குறிப்பிட்டிருக்கணும்; இருந்தாலும் நீங்க புரிஞ்சுண்டதுக்கு நன்றி. தற்சமயம் காவேரியிலே தண்ணீர் இல்லைனாலும், கர்நாடகா மனசு வைச்சால் அடுத்த மாசம் வரலாம். அப்போவும் படம் உண்டு. :)))))

    ReplyDelete
  6. ஸ்ரீராம், நேத்திக்கு தொலைக்காட்சித் தொடர்கள் உண்டே. நம்ம ரங்க்ஸ் அப்புறமா அப்செட் ஆகிடுவார். அதனால் சீக்கிரமாப் போயிட்டு வந்தோம். சனி, ஞாயிறில் போனால் கூட்டம் வரும் நேரம் பார்க்கலாம். இந்த சனி, ஞாயிறு முயல்கிறேன். :)))) இதுவே வந்ததிலே இருந்து போக நினைச்சு நேத்துத் தான் போக முடிஞ்சது.

    ReplyDelete
  7. அகண்ட காவிரியை நினைச்சால் மனசு வேதனையாத் தான் இருக்கு! :(((((( மனிதர்கள் மனம் மாற வேண்டும்.

    ReplyDelete
  8. LK, எப்படியும் அடுத்த மாசம் கொஞ்சமானும் தண்ணீர் வந்துடும். நம்பிக்கை தானே வாழ்க்கை!

    ReplyDelete
  9. Best wishes for many more happy returns of the day!

    ReplyDelete
  10. நல்ல பகிர்வு. வாழ்த்துகள்.

    ReplyDelete