Wednesday, August 15, 2012

எஞ்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

சுண்டைக்காய் வற்றல் ஒரு கைப்பிடி, மணத்தக்காளி வற்றல் ஒரு கைப்பிடி, வேப்பம்பூ ஒரு கைப்பிடி, அரை அங்குலம் சுக்குப் பொடி, பெருங்காயப் பொடி, சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டு நல்லெண்ணெயைப் பொங்க வைத்து எல்லாத்தையும் போட்டு நன்றாக வறுத்துக் கொண்டு ஒரு கைப்பிடி சூடான சாதத்தில் போட்டுச் சாப்பிட்டிருக்கேன்.  வயிறு சொன்னபடி கேட்கணும். :((((  கொஞ்சம் பரவாயில்லை. பார்க்கலாம்.  கன்னாபின்னாவென அலைச்சல், வேலை, நேரங்கெட்ட நேரச் சாப்பாடு எல்லாவற்றின் விளைவு. :((((( இன்னும் இரண்டு நாளாவது ஆகும். அது வரைக்கும் லீவேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் எஞ்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

8 comments:

  1. அலோபதி பக்கம் போக மாட்டீங்க போல! சீக்கிரம் சரியாக எங்கள் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  2. இதுக்கு பேரு எங்க பக்கம் அங்காயப்பொடின்னு சொல்வாங்க. கண்டிப்பா உங்க வயிறு சொன்னபடி கேக்கும்.

    ReplyDelete
  3. வாங்க ஶ்ரீராம், அலோபதியும் போவோம், வெங்கடாசலபதி கிட்டேயும் போவோம். இது இந்த மருந்திலேயே சரியாகும்னு தான். :)))) இன்னிக்குக் கொஞ்சம் பரவாயில்லை. இத்தனைக்கும் நான் சாப்பாட்டு விஷயத்தில் மிகவும் கடுமையான கட்டுப்பாடு. அப்படி இருந்தும் இம்மாதிரி நேர்கிறது.

    ReplyDelete
  4. வாங்க லக்ஷ்மி, ஐ/அங்காயப் பொடியே தான். :))) அப்படிச் சொன்னால் தெரியுமோ, தெரியாதோனு விபரமாக எழுதினேன். வயிறு கொஞ்சம் பரவாயில்லை.

    ReplyDelete
  5. விரைவில் நலம்பெற வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  6. உடல்நலத்தைக் கவனிச்சுக்கோங்க அம்மா.

    ReplyDelete
  7. அங்காய போடி எப்பவுமே எங்க வீட்ல இருக்கும். அம்மா அடிக்கடி பண்ணிண்டே இருப்பா. வீட்ல எல்லாருமே சாப்பிடுவோம். இந்த சாதம் அம்மாவே கலந்து கொடுப்பா. அப்போ இன்னும் பிரமாதமா இருக்கும். இது வயத்துக்கு ரொம்பவே நல்லது.
    உங்களுக்கு சீக்கிரம் சரி ஆயிடும். Take care!

    ReplyDelete
  8. மாதேவி,

    கவிநயா,

    மீனாக்ஷி ஆகியோருக்கு நன்றி.

    ReplyDelete