Tuesday, August 07, 2012

நல்ல தமாஷுங்கோ!

சிப்பு சிப்பா வருது; நேத்திக்கு தசாவதாரம் படம் ஹிந்தி டப்பிங் பார்த்தேன்.  வழக்கம் போலத் தான்; பாதிப் படத்திலிருந்து.  தலை, வால் எதுனு புரியலை;  படம் எடுத்தவங்களுக்கே தெரியுமோனு சந்தேகம் வேறே.  நல்ல தமாஷாக இருந்தது படம்.  ஒரு ஐம்பொன் சிலையை என்னமோ ரப்பர் பந்து மாதிரி நினைச்சு அசினும், நம்ம உலக நாயகரும் தூக்கிப் போட்டு அநாயாசமா விளையாடறாங்களே?  எங்க வீட்டு உருளியையோ, வெண்கலப் பானையையோ என்னாலே தூக்க முடியறதில்லை.  அவங்களை விட்டுத் தூக்கி வைக்கச் சொல்லி இருக்கலாம் போல! :P

அந்தச் சிலையைத் தூக்கிண்டு அசின் என்ன வேகமா ஓடறாங்க. மேலே இருந்து கீழே, கீழே இருந்து மேலே னு ஏறிக் குதிச்சு!  யம்ம்ம்ம்ம்மா!  நம்ம தமிழ்ப் படத்திலே தான் இப்படியெல்லாம் ஒரிஜினல் காட்சிகள் காணக் கிடைக்கும்.  லாஜிக்காவது ஒண்ணாவது!  எஞ்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!


பேத்தல்!

15 comments:

  1. தசாவதாரம் பழைய சிரிப்பு....புதிய சிரிப்புக்கு விஸ்வரூபம் வரும்....பார்த்துச் சிரியுங்கள்! தமிழில் பார்த்த போது தெலுங்கு கலந்து மாட்லாடும் அந்த போலீஸ் ஆபீசர் வேஷம் ரசிக்க முடிந்தது!

    ReplyDelete
  2. சில சமயம் இந்த அவதாரங்கள் இனிமே நடிக்கறத நிறுத்தினா தேவலைன்னு தோணும் எனக்கு.சத்தமா சொன்னா ரசிக சிகாமணிகள் நமக்கு தர்ம அடி கொடுத்துடுவா:((( aiyo !! ViswaroopamA. bayamaa irukke!!

    ReplyDelete
  3. நீங்க ஏன் பத்து வருஷம் கழித்து படத்தப் பாக்குறீங்கன்னு புரியலை..

    அதெல்லாம் அந்தந்த காலத்துல பாத்த கொஞ்சமாச்சும் சிரிக்கலாம்...

    இவ்வளவு நாள் கழிச்சுப் பாத்தா பேத்தாலாத்தான் தெரியும்..

    போனாப் போகுது..விஸ்வரூபத்தையாவது சீக்கிரம் பாருங்க..இல்லன்னா காசனார் கோச்சுப்பாரு.

    ReplyDelete
  4. தமிழ் படங்களில் லோஜிக்கைப் பற்றி எல்லாம் கேட்கக் கூடாது :)))

    ReplyDelete
  5. அடுத்ததா உங்களை சிரிக்க வைக்க[!] விஸ்வரூபம் வரப்போகுது... ரெடியா இருங்க....

    அவங்கல்லாம் சிக்ஸ் பேக்.... அதனால ஈசியா தூக்கிட்டு ஓட முடியும்... :)

    ReplyDelete
  6. வாங்க ஸ்ரீராம், அப்படி ஒண்ணும் ரொம்பப் பழசு இல்லை போலிருக்கே, நாலு வருஷம் ஆகி இருக்குமா? நான் சிதம்பர ரகசியம் எழுதறச்சே இதை வைச்சு ஒரு பெரிய விவாதமே நடந்தது! :)))))

    ReplyDelete
  7. வாங்க ஜெயஶ்ரீ, எப்போவோ நிறுத்தி இருக்கணும். எங்கே? :(((

    ReplyDelete
  8. ஹிஹிஹி, வாங்க அறிவன், ரொம்ப நாளாச்சு பார்த்து! :))) பத்து வருஷம்லாம் ஒண்ணும் ஆகலை. எங்கே? என்னிக்காவது இன்னிக்குக் கணினியில் உட்காராமல் வேறே ஏதானும் செய்யணும்னு தோணும்போது படம் பார்ப்பேன். ஒவ்வொரு சானலா திருப்பிட்டு எந்த சானலிலே பார்க்காத படமா அப்போ என்ன படம் வருதோ அதான் பார்க்க முடியும்! விஸ்வரூபமும் இந்த மாதிரி தொலைக்காட்சியிலே போடறச்சே கட்டாயமாய்ப் பார்ப்பேன். :)))))

    ReplyDelete
  9. மாதேவி, சரியாச் சொன்னீங்கம்மா.

    ReplyDelete
  10. வாங்க வெங்கட், சிக்ஸ் பேக் ஏற்கெனவே சூரியா நடிச்சு ஏதோ ஒரு படம் வந்த நினைப்பு இருக்கே? அதனாலே சிக்ஸ் பேக் ஒண்ணும் புதுமையில்லைனு நினைக்கிறேன். :)))) விஸ்வரூபம் வரட்டும்; பார்க்கலாம்.

    சீரியல் ஒண்ணு வந்தது விஸ்வரூபம்னு நல்லாவே இருக்கும். ரொம்ப விரும்பிப் பார்த்தது அது மட்டும் தான். முடிக்கவே இல்லை. பாதியிலே நிறுத்திட்டாங்க.

    ReplyDelete
  11. விஸ்வரூபம்னு உங்கள் அபிமான (!!) 'ஜிவாஜி' நடிச்ச படம் ஒண்ணு இருக்கே...! ஜோடி ஸ்ரீதேவி!!!

    ReplyDelete
  12. வாங்க ஸ்ரீராம், மறு வரவுக்கு நன்றி. ஸ்ரீதேவி ஜிவாஜிக்கு ஜோடியா? நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவா? நல்லவேளை, அப்படி ஒரு படம் வந்ததே தெரியாதோ, பிழைச்சேன்! டூயட் ஒண்ணும் இல்லையே? தாத்தாவும், பேத்தியும் டூயட் பாடினால் சகிக்காதே! :))))

    ReplyDelete
  13. ஹிஹிஹி, ஜிவாஜி என்னோட அபிமான நடிகர்னு கண்டு பிடிச்சதுக்கு தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  14. முன்பாவது நடிகர் நடிகை பேராவது தெரிஞ்சது. இப்ப புதுசா வரவங்க பேரும்தெரியல்லே ஒரே ஒரு படம் பண்ணிட்டு காணாம போயிடுராங்க.

    ReplyDelete
  15. மஹா அபத்தம் அந்த படம்... படம் வந்த புதிதில் அந்தப் படம் பார்க்க தியேட்டருக்கு கூப்பிட்டாங்க. கூப்பிட்டது எனது மைத்துனரும், மாமனாரும். முடியவே முடியாதுன்னு ஒற்றை காலில் நின்னேன். அது எவ்வளவு நல்லதுன்னு ஒரு முறை டிவியில் இந்த படத்தை பார்த்தப்ப நினைச்சது,...

    ஐம்பொன் சிலை வேண்டாம். சாதாரண நடராசர் விக்ரஹத்தை தூக்க சொல்லுங்கோ....

    ReplyDelete