Saturday, October 13, 2012

பக், பக், பக்கூம், பக்கூம் மாடப்புறா! பக்கம் நிற்கும் மாடப்புறா!

டெல்லியில் இருக்கும் பெரிய மைத்துனர் வீட்டிலே சமையலறை ஜன்னலிலே மாடப்புறா ஜோடி குடும்பம் நடத்துது.  நாங்க போயிருந்தப்போ முட்டை போட்டு அடை காத்துட்டு இருந்தது.  குஞ்சு பொரிச்சு முட்டையிலிருந்து வெளிவரும் சமயம்.  மேலே எடுத்த படம்.

இன்னொரு முட்டையை அடைகாக்கையில் எடுத்த படம். குஞ்சைத் தன் அலகினால் கொத்திக் கொத்திக் கொடுக்கிறது. குஞ்சு கண்களைத் திறக்க மூணு நாள் ஆகும்போல.  பின்னர் தன் இறக்கைகளுக்குள் பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறது.  அம்மாப்புறாவும், அப்பாப் புறாவும் மாறி மாறி இந்த வேலைகளைச் செய்கின்றன.  புறா சும்மா முட்டையை அடைகாத்த வண்ணம் குஞ்சைக் கொத்தித் தடவிக் கொடுக்கலைனா அப்பாப்புறானு நினைச்சுப்போம்.  அது தடவிக் கொடுத்ததுன்னா அம்மாப் புறானு பேசிப்போம்.  சமைக்கும்போது மெல்ல வலைக்கதவைத் திறந்து பருப்பு, அரிசி, பொடியாக நறுக்கிய காரட் துண்டுகள்னு அதுங்களுக்கு விருந்து கிடைக்கும். :))))


அம்மாப்புறாவும், அப்பாப்புறாவும் ஷிஃப்ட் மாத்திக்கும்போது எடுத்த படம் மேலே.

கூடு கட்ட வாயிலே புல்லோ, குச்சியோ எடுத்துட்டு வந்து ஒரு புறா (அப்பா?) கொடுக்க இன்னொண்ணு அதை அலகாலே நீவி நீவி மெத்துனு பண்ணிக் குஞ்சுக்கு மெத்தை மாதிரிப் போடுது.  ரொம்பக் கஷ்டப்பட்டு எடுக்க வேண்டியதாப் போச்சு. வலை ஜன்னல் கிட்டே காமிராவைக் கொண்டு போனால் புறாவுக்கு பயம் வருது.  அதோட அது இருக்கிறது வேறே கொஞ்சம் பள்ளத்திலே.  எம்பி, எம்பிப்பார்த்து ஒரு வழியா ஏதோ எடுத்துட்டேன்.

11 comments:

  1. வாவ்! எவ்வளவு அன்பான குடும்பம். ரொம்ப சுவாரசியம்தான். உங்களுக்கு நல்ல ரசனை. :))
    எங்க வீட்லேயும் ரெண்டு கிளிகள் இருக்கு. அதுகள் விளையாடறத நேரம் போறதே தெரியாம பாத்துண்டே இருப்பேன். நடு நடுல சண்டையும் போடும். அப்பறம் ஓண்ணுக்கு ஒண்ணு கொஞ்சும், ஆதரவா வருடி கொடுக்கும். ரொம்பவே ரசிப்பேன்.

    ReplyDelete
  2. முட்டையிலிருந்து வெளிவரும் குட்டி பக்...பக்..

    சிரமப்பட்டு எடுத்த படங்கள் நன்றாக இருக்கின்றன.

    ReplyDelete
  3. புறாவுக்கு ஆகாரம் கொடுக்கிறோம் என்றால் பழகி விடுமே... இல்லையா?

    ReplyDelete
  4. படங்களும் பகிர்வும் அழகு.

    ReplyDelete
  5. நல்ல பதிவு கீதா.புறாப் படங்கள் எல்லாமே நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  6. வாங்க மீனாக்ஷி, உங்களுக்கும் ரசனைதான். நான் ரசித்ததை நீங்களும் ரசிக்கிறீங்களே! :))) மெதுவாக் கிளிகளைப் படம் எடுங்க. :))))

    ReplyDelete
  7. வாங்க ஸ்ரீராம், புறாக்கள் மீண்டும் மீண்டும் அங்கேயே வருகின்றன. ஆனால் அவை ஒரே ஜோடியா, இல்லை மாறி மாறி வருகின்றனவா, புரியலை. :)))))

    ReplyDelete
  8. நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  9. வாங்க வல்லி, ஒருமுறைக்கு இருமுறை ரசித்ததுக்கு நன்றி. :)))

    ReplyDelete
  10. நல்லா இருக்கு மாமி. நானும் இது போல் டெல்லியில் புறா முட்டை போட்டு அடைகாத்ததை பற்றி எழுதி ட்ராஃப்டில் வைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  11. புறாக்களையும் பார்த்து ரசித்தேன்.

    ReplyDelete