Saturday, March 30, 2013

என்னோட "பவர்" என்னனு தெரியுமா?

இணையத்துக்கு வரதுக்கு முந்தியே பவர்ஃபுல் ஆள் தான் நான்.  வந்ததும் பவர் கூடித் தான் போச்சு! அதுவும் இப்போ சில மாதங்களாகப் பவர் எக்கச்சக்கமாக் கூடினதில் தலைகால் தெரியலை. ஒரு எழுத்துப் புரியாது.  ஏதோ உத்தேசமாத் தெரிஞ்சுப்பேன்.  தட்டச்சும்போதும் இந்தப் பவர் நினைப்பிலேயே இருந்ததாலேயோ என்னமோ ஏகப்பட்ட தட்டச்சுப் பிழை வரும்.  எப்போவுமே திருத்தற வழக்கம் இல்லையே!  மாட்டிப்பேன்.

அப்படியும் திருந்தலை.  தட்டச்சறதாவது கை விரல்களின் தொடுகை மூலம் ஒரு மாதிரியாப் புரிஞ்சுடும்.  சமாளிச்சுக்கலாம்.  படிக்கிறது? அதான் பெரிய பிரச்னையா இருந்தது.  ரொம்பக் கஷ்டப்பட்டுக் கழுத்தை வளைத்து, முகத்தை நிமிர்த்திக் கண்களைக் கீழே கொண்டு வந்துனு கஷ்டமாத் தான் இருந்தது.  கடந்த நான்கைந்து நாட்களாக சுத்தம்!!!!!!!!!!!!!!!!!!!!!!

இன்னிக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்னு நேத்திக்குச் சாயந்திரமா ரங்க்ஸ் கிட்டே சொல்லிட்டேன். அவர் மனசுக்குள்ளே எப்போவுமே உனக்குத் தானே பவர் ஜாஸ்தினு நினைச்சது புரிஞ்சாலும் வேறு வழியில்லை.  இன்னிக்குக் காலம்பரப் போகலாம்னு சொல்லி இருந்தார்.  காலம்பர  வீட்டு வேலைகள் நிறைய இருக்குமே!  ஒரு மாதிரித் தட்டிக் கழிக்கப் பார்த்தேன்.  எல்லாம் இந்த dilator பயம் தான். சென்னையிலே இருந்தவரைக்கும் இந்த பயம் இல்லாமல் இருந்தது. அந்தக் கண் மருத்துவர் சொல்லாமல் கொள்ளாமல் ஊத்த மாட்டார்.  அதோட அப்போல்லாம் இவ்வளவு பவரும் இல்லை. இப்போ இரண்டு வருஷங்களுக்கும் மேல் ஆகிப் பவர் எக்கச்சக்கமாக் கூடி இருக்குனு எனக்கே புரிஞ்சு போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்!

தட்டிக்கழிக்கிறதைப் பார்த்து ரங்க்ஸுக்கு பி.பி, ஷுகர் இரண்டும் எகிற போதுண்டா சாமினு வரேன்னு சொல்லிட்டேன்.  எக்கச்சக்க நிபந்தனைகள்.  வண்டியிலே ஏறி, ஏறி இறங்க மாட்டேன்.  நேரே போய்ப் பவர் செக்கப் பண்ணிட்டு, வீடு திரும்பணும்னு. சரி உன்னை விட்டுட்டு நான் போய் என் வேலைகளை முடிச்சுக்கறேன்னு சொல்லிட்டார்.  உள்ளே போனேனா?  முதல்லே ஒண்ணு, ரெண்டு எண்ணச் சொன்னாங்க.  எட்டு ஆறு மாதிரி இருக்கு.  ஆறு 0 மாதிரி இருக்கு.  ஐந்து ஆறு மாதிரித் தெரியுது.  இல்லைனா ரெண்டிரண்டாத் தெரியுது.  பசுமாடு எப்படி இருக்கும்னு தெரியுமானு கேட்காத குறை.  பகல்லே கண்டு பிடிச்சுடுவேன்னு மனசுக்குள்ளே சொல்லிக் கொண்டேன்.

எல்லாப் பரிசோதனைகளும் முடிஞ்சு, கண்ணுக்கு அழுத்தமும் பார்த்தாச்சு.  சரி, அப்பாடா நிம்மதினு நினைக்கிறப்போ, உங்களுக்கு பிபி இருக்கில்ல, டைலேட்டர் ஊத்திப் பார்த்து மறுபடி உறுதி செய்துக்கணும்.  அதுக்கப்புறம்மாத் தான் போகலாம்னு சொல்லிட்டாங்க.  பகவானே, பிள்ளையாரப்பா, இது என்ன சோதனை!  ஏற்கெனவே கண்களில் ஊற்றின விதவிதமான மருந்துகளால் ஒரே எரிச்சல். டைலேட்டர் ஊத்திட்டு அரை மணி உட்காருனு சொல்லவே ரங்க்ஸ்தன்னோட வேலைகளைக் கவனிக்கப் போக, தேமேனு உட்கார்ந்திருந்தேன்.  ஒண்ணும் செய்யாமல் உட்கார்ந்திருந்தது வாழ்க்கையிலேயே முதல் தடவையோ?  ரயிலில், பேருந்தில் போகிறச்சே தவிர மற்ற நேரங்களில் ஏதாவது திரிசமன் (ஹிஹிஹி)  வேலை நடக்கும்.  புத்தகமானும் படிப்பேன்.

நல்லவேளையா டைலேட்டர் டெஸ்டிலும் பாஸ் செய்துட்டேனோ, பிழைச்சேனோ!  கண்ணாடி வரதுக்கு இன்னும் நான்கைந்து நாட்கள் ஆகும்.  "அதுவரைக்கும் மொக்கையா?????" னு யாருங்க அது அலறுகிறது!  அதெல்லாம் மொக்கை இல்லை.  கண் தெரிகிறதை வைச்சுண்டு எழுத மாட்டோமா என்ன? தட்டச்சறதிலே பிரச்னை இல்லை.  என்ன, கொஞ்சம் வேகம் குறைஞ்சிருக்கும்.  பரவாயில்லை.  தேர்வா எழுதப் போறேன். 

20 comments:

  1. //கொஞ்சம் வேகம் குறைஞ்சிருக்கும். பரவாயில்லை. //

    :)))

    ReplyDelete
  2. நான் கூட 4 வருஷமா டியூ! கண் செக் பண்ணனும்! செக் அப்புக்கு போய் வந்தும் ஒரு பதிவா... அட!

    ReplyDelete
  3. "பவர்' இந்த மாதிரியெல்லாம் மாறாதேயம்மா. எதை 'கவர்' பண்ணப்போறேள்.

    ReplyDelete
  4. உங்க பவர் தெரிந்து விட்டது கீதா.

    ReplyDelete
  5. அதான் நம்ம பக்கம் எல்லாம் வந்து படிக்கறது இல்லைபோல!!

    சீக்கிரமே குட்டு கண்ணாடி ப்ராப்திரஸ்து! :)

    ReplyDelete
  6. கண்ணாடி மாற்றினால் போதும் என்று சொல்லிவிட்டார், இல்லையா?.. கவலை விட்டது.

    ReplyDelete
  7. Power Star Geetha Maami!!!!

    BTW, take care.

    ReplyDelete
  8. வாங்க ஸ்ரீராம், என்ன சிரிப்பு?? உண்மையிலேயே வேகம் குறைஞ்சு தான் போச்சு! :)

    ReplyDelete
  9. சீக்கிரமாச் செக்கப் பண்ணுங்க ஸ்ரீராம்.

    ReplyDelete
  10. வாங்க "இ"சார், என் பதிவுக்கும் நீங்க அடிக்கடி வரதுக்கு ரொம்ப நன்றி. எதை கவர் பண்ணறதுனு புரியலை. நாலு நாள் இப்படி ஓட்டிடலாம்! :)))))

    ReplyDelete
  11. வாங்க கோமதி அரசு, ஹாஹாஹா!

    ReplyDelete
  12. வாங்க டிடி, பயங்கர பவர் தான். அந்த மருத்துவருக்கும் அதான் ஆச்சரியம், எப்படி இந்தக் கண்ணாடியை வைச்சு ஓட்டறீங்க, ஒண்ணுமே தெரியாதேனு திரும்பத் திரும்ப ஆச்சரியப் பட்டாங்க! :))))

    ReplyDelete
  13. இ.கொ. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், வந்து பின்னூட்டியதுக்கெல்லாம் பதில் கொடுங்க முதல்லே. அப்புறமா வரலாம். நீங்க என்னமோ வராப்போல நினைப்பா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  14. வாங்க ஜீவி சார், உண்மையிலேயே கவலை விட்டதுதான். கண்ணிலே அழுத்தம் பார்க்கிறச்சேயே அந்தக் குட்டிக் கருவியைக் கொண்டு வரச்சேயே கொஞ்சம் திகில் கலந்த ஆர்வமா இருந்தது. வேறே ஏதானும்னா என்ன பண்ணறது? :))) நல்லவேளை, நான் பிழைத்துக் கொண்டேன்னு பாடாத குறைதான். :)))

    ReplyDelete
  15. வாங்க கவிதா, பவர்ஃபுல் தான்! :))))

    ReplyDelete
  16. நீங்க உண்மையிலேயே பவர்ஃபுல்லான ஆளுதான் கீத்தாம்மா :-)

    ReplyDelete
  17. வாங்க அமைதி, ஹிஹிஹி, தாங்கீஸ், தாங்கீஸ்!

    ReplyDelete
  18. ஹா..ஹா...தப்பினீர்கள்.

    ReplyDelete
  19. உண்மை மாதேவி, தப்பினேன். :))))

    ReplyDelete