இது நிஜம்மாவே பல ஆண்டுகள், கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கும் மேல்???? இருக்கும். கண்ட இல்லம் என் தாத்தா காலத்து வீடு இது. மேல்மங்கலம் கிராமத்தில் இன்னமும் இருக்கு. :))))) முன்னால் பதிவிட்டப்போ மேல்மங்கலத்தில் நாங்க தங்கின வீடுனு நினைச்சு மாத்திச் சொல்லி இருந்தேன். அப்புறமாப் பார்த்தா அந்த வீடு வேறே, இது வேறேனு வேறு சில படங்களின் மூலமாப் புரிஞ்சது. அந்த வீடும் இது போல் தான் இருந்தது. இப்போ இடிச்சு நவநாகரிக முறையில் கட்டி இருக்காங்க! :))))
வாழும் வீடு. பழமையின் இனிமை.
ReplyDeleteதிண்ணை கான்செப்டே போயிடுத்து. :-(
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், நாங்கல்லாம் இந்த வீட்டைப் பார்த்ததோடு சரி! :))) அப்பா இருந்தால் மலரும் நினைவுகளைச் சொல்லி இருப்பார். :))))
ReplyDeleteவாங்க வா.தி. கிராமங்களிலே இப்போவும் திண்ணையோடு கூடிய வீடுகள் இருக்கின்றன. இங்கே திருச்சி ஆண்டார் தெருவில் உள்ள மாயவரம் லாட்ஜில் மாப்பிள்ளைத் திண்ணையே இருக்கு! :)))))))உ.பி. கோயிலுக்குப் போனப்போ பார்த்தோம். பழைய நாள் கட்டிடம் என்பதோடு அதை மாற்றாமலேயே மேற்கொண்டு வேலைகள் செய்து வருகின்றனர். அந்தக் காலத்து வக்கீல் வீடுகள் மாதிரிப் பெரிசா இருக்கு. நடுவிலே முற்றம், மேலே அழிக்கம்பி போட்டு, சுற்றிலும் நாற்புறமும் கூடம். அதுக்கு மேலே உள்ளே போக அநுமதிக்கலை. பார்த்தவரை அந்த நாள் கட்டிடம் எனப் புரிந்தது.
ReplyDeleteஅதோடு எல்லாம் மெட்ராஸ் டெரஸ் வேறே. இப்போதைய கான்க்ரீட் இல்லை. :))))))
//அதை மாற்றாமலேயே மேற்கொண்டு வேலைகள் செய்து வருகின்றனர். //
ReplyDeleteஅதை மாற்றாமலேயே மேற்கொண்டு ரிப்பேர் வேலைகள் செய்து வருகின்றனர் என்று படிக்கவும். ஹிஹிஹி, கண்ணாடி செய்த வேலை! :)))))
தெருவோரம் திண்ணை வீடு இப்பொழுதெல்லாம் காணக் கிடைப்பதில்லை.
ReplyDeleteபடம் மகிழ்ச்சி தருகின்றது.
சந்தோசம் தரும் வீடு...
ReplyDeleteகொஞ்ச நேரத்திற்கு முன்பு சேரனின்
ReplyDelete'ஆட்டோகிராப்' படம் பார்த்தேன்.
இந்தப் படத்திற்கும் சரி, எனது சமீபத்திய 'கனவில்..' தொடருக்கும் சரி, 'ஞாபகம் வருதே' பாடல் ரொம்பவும் பொருத்தமாகத் தெரிந்தது.
பழமையான வீடு அழகு.
ReplyDelete
ReplyDelete"வீடு, பார்க்கலையோ வீடு!
பழமையின் இனிமையான
அருமையான காட்சி ..
ஒரு அறையின் அளவுக்கு விசாலமான திண்ணை! அருமை.
ReplyDelete
ReplyDeleteவேரைக் காட்ட , ஊரைக் காட்ட தேரைக்காட்ட என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். எங்கள் பூர்வீக வீடு. கை மாறிக் காலமாய் விட்டது. இருந்தாலும் என் மகன் மருமகள் பேரக்குழந்தைகள் இவர்களுக்குக் காட்ட எங்கள் கிராம தேர் திருவிழா சமயம் போயிருந்தோம். எங்கள் வீட்டின் உள்ளே எல்லாம் அனுமதி கேட்டு அவர்களுக்குக் காண்பித்தேன். ஒரு சில சிறிய மாற்றங்களே இருந்தன. நான் என்னுடைய ஒன்பது பத்து வயதில் என் பாட்டியுடன் இருந்திருக்கிறேன். மலரும் நினைவுகளைப் பதிவில் எழுதி இருக்கிறேன். பாலக்காட்டில் கல்பாத்தி அருகே கோவிந்த ராஜபுரம் எங்கள் கிராமம்.சென்ற ஆண்டு 2012 ஏப்ரல் ஒன்றாம் தேதி கிராமம் பற்றியும். gmbat1649.blogspot.in/2012/05/blog-post_26.html என்னும் பதிவுகள். பார்க்கலாமே.
வாங்க மாதேவி நன்றி. :)))
ReplyDeleteடிடி, வரவுக்கும் மகிழ்வுக்கும் நன்றி.
ReplyDeleteவாங்க ஜீவி சார், இந்த வீட்டில் இருந்ததில்லை. அதனால் எனக்கு "ஞாபகம்" எதுவும் வரலை! :)))) ஒரு மெளன சாட்சி. அவ்வளவே.
ReplyDeleteவாங்க கோமதி அரசு, ஆமாம், பழமையான வீடுகளே முன்னோர்கள் வாழ்ந்த அடையாளம் இல்லையா?
ReplyDeleteவாங்க ராஜராஜேஸ்வரி, ரசனைக்கு நன்றி.
ReplyDeleteவாங்க ரா.ல. அந்தத் திண்ணையை ஒட்டிக் காமிரா உள்னு சொல்வாங்க அது இருக்கும் பாருங்க, அதனோட அகலம் திண்ணையோட அகலமா வரும். :))))
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார், என் கணவர் பிறந்த பரவாக்கரை கிராமத்திலும் அவங்க பழமையான வீடு அதுவும் நூறு வருஷங்களுக்கு மேலானது இன்னமும் நல்ல நிலையில் இருக்கு. அதை வாங்கினவங்க கிட்டே அநுமதி வாங்கிப் படங்கள் எடுத்திருக்கேன். அதையும் விரைவில் பகிர்ந்துக்கறேன். மூன்றுதலைமுறைகளுக்கு மேல் கண்ட வீடு என்பதோடு என் கணவர் பிறந்ததும் அங்கே தான். :))))
ReplyDeleteபடம் பாத்து பெரியகுளம் ஞாபகம் வந்தது. வீட்டுக்கு எதிர்த்தாப்புல ஒரு வீடு இருக்கும். படத்துல இருக்கிற திண்ணை அளவுதான் ஆனால் வீடு ஏன்னமோ ரயில் மாதிரி ஒரு மைலுக்கு உள்ள போகும்! கதவு மூடின அந்த திண்ணையும் கால்களில் இரும்பு வளையமும் அதிலிருந்து அறுந்து தொங்கற சங்கிலியும் இடுப்பில் இரும்பு வளையமுமா அழுக்கு துணி இடுப்பில், நரைத்த தாடி மீசை, வாய் முணு முணுத்துக்கொண்டே இருக்க பாதத்தை மடித்து வைத்துக் கொண்ட முழங்காலில் வைத்துக்கொண்டு விட்டத்தை பார்த்துக்கொண்டு , அக்ரஹார சிறுவர்கள் கல் எரிவதையும் பொருட்படுத்தாம படுத்துக்கொண்டிருக்கும் பத்மநாபனும் நினைவுக்கு வருகிறது. சகலமும் அந்த திண்ணையில் தான். எங்கேந்து வந்தார் யார் சொந்தம் ஏன் அந்த திண்ணைக்கு வந்தார், அது யாரோட திண்ணை என்பது பாட்டி தாத்தாவுக்கு தெரிஞ்சிருக்கணும். ஊரே பைத்தியம்னு ஒதுக்கினவருக்கு, வீட்டை விட்டு வெளிய வராத பாட்டி, குமாஸ்தா 8 மணிக்கு ஆபீஸ் விளக்கை அணைச்சு பூட்டியவுடன் இழுத்து போர்த்தின முதுகோடு ஒரு தட்டில் சாப்பாடு போட்டு வெளிய வந்து குமாஸ்த்தாவை அழைத்துக்கொண்டு போய் திண்ணையின் நுனியில் வைக்கசொல்லி சாப்பிடு பத்மனாபான்னு சொல்லிட்டு உள்ளே போய்விடுவாள். பாட்டி போனப்போ கடைசி யாத்திரையில் சாஷ்டாங்கமா ரோட்டில் நமஸ்காரம் பண்ணிட்டு போன பத்மநாபனை அதுக்கப்புறம் பார்க்க வில்லை:( Was he really Mad? God alone knows!
ReplyDelete