Thursday, May 02, 2013

கல்யாணம் பண்ணிப் பார்!

500 பவுன் நகை, 50 லக்ஷம் ரொக்கம், உயர்ந்த ரக மக்கள் வசிக்கும் பகுதியில் ஆடம்பர பங்களா, ஒரு கார்(ஆடியா தெரியலை)  இத்தனையும் கேட்கிறாள் ஒரு தொலைக்காட்சித் தொடரில் மாமியார்.  என்ன தான் சொந்த பிசினஸ் பண்ணினாலும் அம்பானியாகவே இருந்தாலும் 500 பவுன் நகை சாத்தியமா தெரியலை.   கல்யாணச் செலவு ஒரு கோடியைத் தாண்டுகிறது.  இதை எல்லாம் பார்க்கிறச்சே. இப்படி எல்லாம் சொல்லிக் கொடுக்கிறாங்களே, ஏற்கெனவே நம் மக்கள் ஆடம்பரத்துக்குப் பழக்கப் பட்டுப் போயிருக்காங்களே, இப்போ இன்னும் ஜாஸ்தியாகுமேனு தோணித்து.  ஆனாலும் என்ன செய்ய முடியும்?  நாம இங்கே தனியா லபோ, திபோனு புலம்பிட்டு இருக்க வேண்டியது தான். இதிலே எது குறைஞ்சாலும் கல்யாணம் இல்லைனு கண்டிஷன் வேறே.

இதிலே சீரியலில் அந்தப் பெற்றோருக்கு மூணு பெண்கள்.  இந்தப் பெண்ணுக்கு வந்த நல்ல வேலையையும் அநாவசிய கெளரவம் பார்த்துக் கொண்டு அப்பா வேண்டாம்னு சொல்லிட்டாராம்.  :))) ஏனெனில் பெண்கள் என்றால் அவருக்கு உயிராம்.  அவரே உழைத்து சம்பாதித்து அந்தப் பணத்தில் பெண்கள் கவலை இல்லாமல் வாழ்க்கை நடத்தணுமாம்.  அதுவும் எல்லாப் பெண்களையும் பெரிய தொழிலதிபர்களுக்குத் தான் கொடுப்பார் போல! :)))))) ஜீவி சார் வருங்காலத்து திருமணங்களையும் குறித்துச் சொல்லணும்னு கேட்டார்.  வருங்காலத்துத் திருமணம் இப்படி இருந்தால்??? ம்ஹ்ஹூம், சான்ஸே இல்லை.  .  சீரியல் கதாநாயகியரைத் தவிர்த்து எந்தப் பெண்ணும் இதுக்கு ஒத்துக்கமாட்டா .  இப்போதெல்லாம் பெண்கள் மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.  அதுவும் இந்தக் கணினி யுகத்துப் பெண்கள் நேரே போலீஸுக்குப் போயிடுவாங்க.  மாம்பலத்தில் ஒரு திருமண மண்டபத்தில் சில வருடங்கள் முன்னர் நடக்க விருந்த திருமணத்தின் மணப்பெண் வித்யாவைப் போல.  ஆனால் அந்த வித்யா செய்தது முட்டாள் தனம்.

திருமணம் நிச்சயம் ஆகி மாப்பிள்ளையோடு பேச்சு, வார்த்தையெல்லாம் இருந்து வந்திருக்கிறது.  திருமணத்துக்கு முதல்நாள் நிச்சயதார்த்தமும், இந்தக் கால வழக்கப்படி ரிசப்ஷனும் நடந்திருக்கிறது.  அப்போல்லாம் அந்தப் பெண் சந்தோஷமாகவே இருந்திருக்கிறாள்.  ரிசப்ஷன் முடிஞ்சு மறுநாள் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டிய சாமான்களைத் தயார் செய்கையில் வெள்ளி கூஜா அந்த வித்யாவுக்கு வாங்கி இருப்பது மாப்பிள்ளையின் அம்மாவுக்குத் தெரிய வந்திருக்கிறது.  அவங்க சாதாரணமாகச் சொல்வதாய் நினைத்துக் கொண்டு, "எங்க வீட்டில் கூஜாவில் வரலக்ஷ்மி விரதத்தில் அம்மன் முகம் வைப்பதில்லை.  செம்பில் தான் வைப்போம்.  வெள்ளியில் செம்பாக வாங்கி இருக்கலாமே!" என்று சொல்ல, பெண்ணின் தாய் மாமாவும் அதை யதார்த்தமாக எடுத்துக் கொண்டு வாங்கிய ரசீது இருப்பதால் காலையில் கடை திறந்ததும் மாற்றித் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

வேறு எதுவும் நடந்ததாய்த் தெரியவில்லை.  இது எப்படி ஊதிப் பெரிசாக்கப் பட்டதுனும் தெரியலை.  எல்லாரும் படுத்துக் கொண்டதும், விடியற்காலை மூன்றரை மணி நான்கு மணி அளவில் அந்தப் பெண் வித்யா எதிரே இருந்த காவல் நிலையத்தில் போய்ப் புகார் கொடுத்துவிட்டாள்.  மாமனார் வீட்டில் வரதக்ஷணை கேட்டுத் தொந்திரவு செய்வதாக. வேறு பெரியவர்கள் யாரும் இல்லாமல் பெண்ணே நேரில் போயிருக்கிறாள் அவள் தோழிகளோடு.   அந்தப் பெண்ணிற்கு வேறு ஏதேனும் நோக்கம் இருக்குமா, இருந்திருக்கிறதா என்பது குறித்துத் தெரியவில்லை.  ஆனால் திரும்பத் திரும்பச் சொல்லவும், போலீஸ் கல்யாண மண்டபம் போக, மாப்பிள்ளை வீட்டினருக்கு அதிர்ச்சி என்பதோடு, மத்திய அரசு அலுவலில் இருந்த மாப்பிள்ளையின் தந்தை போலீஸ்காவலில், நல்லதொரு கம்பெனியில் இருந்த மாப்பிள்ளையும் போலீஸ் காவலில்.  பிள்ளையின் அம்மா மட்டும் பெண் என்பதால் ஜாமீனில் விடுதலை ஆனார்.  அவரும் ஒரு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை.


24 comments:

  1. மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சி நடந்ததாக கூறுகிறீர்கள்.

    வித்யா கொடுத்த கம்ப்ளைன்டு பதிவு செய்யப்பட்டதா அல்லது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டதா
    அதற்குப்பின்னே விசாரிக்கப்பட்டதா

    குற்றம் ஏதேனும் நடந்திருக்கிறது என முடிவு செய்து காவல் துறை ஏதேனும் வழக்கு
    பதிவு செய்து இருக்கிறதா

    என்றெல்லாம் விவரங்கள் இருந்தால் மட்டுமே மேற்கொண்டு கருத்துக்கள் சொல்வது
    சட்டப்படி நல்லது.

    ஒரு வேளை இது பற்றிய கேஸ் நிலுவையில் இருந்தால் இதில் ஒபினியன் சொல்வது கூட‌
    ஸப் ஜுடிஸ் எனப்படும்.

    ஆகவே கருத்து சொல்லுமுன் , இல்லை அது பற்றி ஒரு பதிவு போடுமுன்னர் கூட
    ஒரு தடவைக்கு மேல் யோசித்து எழுதுவது நல்லது. தனிப்பட்ட நபர்கள் விவகாரங்கள்
    பற்றி எழுதுவது சட்டப்படி சரியில்லை.

    இல்லை...
    இது தொலைக்காட்சி சீரியல் தான் என்றால்,
    நல்லா கமென்ட் அடிக்கலாம்.

    ஏன் என்றால் எல்லாமே ஃபிக் ஷ்ன் தான்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  2. //வித்யா கொடுத்த கம்ப்ளைன்டு பதிவு செய்யப்பட்டதா அல்லது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டதா
    அதற்குப்பின்னே விசாரிக்கப்பட்டதா

    குற்றம் ஏதேனும் நடந்திருக்கிறது என முடிவு செய்து காவல் துறை ஏதேனும் வழக்கு
    பதிவு செய்து இருக்கிறதா

    என்றெல்லாம் விவரங்கள் இருந்தால் மட்டுமே மேற்கொண்டு கருத்துக்கள் சொல்வது
    சட்டப்படி நல்லது. //

    விபரங்கள் நிறையவே இருக்கு. ஆனாலும் மேற்கொண்டு கேஸ் முடிந்து விட்டதா என்பது குறித்துச் சரியாக எதுவும் தெரியாததால் தொடரவில்லை. இத்தோடு நிறுத்திக்கிறேன். :)))))))

    ReplyDelete
  3. ஆனால் மேல் விபரங்கள் பிரபல வாரப் பத்திரிகைகளில் வந்தன.

    ReplyDelete
  4. ஏற்கனவே கெட்டுப்போய் இருக்கும் மனதை, இது போல் தொடர்கள் மேலும் கெடுக்கிறது என்பது மட்டும் உண்மை...

    ReplyDelete
  5. சீரியல்கள் பார்ப்பதில்லை. வித்யா கதை கேட்ட மாதிரி இருக்கிறது.

    பொதுவாக இது மாதிரி வரதட்சணை அது இது என்று அதிகம் ஆசைப்பட்டுக் கேட்பவர்கள் மாமியார்கள்தான் இல்லை?

    ReplyDelete
  6. விவரம் தெரியவில்லை என்றால் வித்யா செய்தது எப்படி முட்டாள்தனமாகும்?
    500 பவுன் நகை வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள்?!

    ReplyDelete
  7. வாங்க டிடி, நெடுந்தொடர்கள் எல்லாத்திலேயும் பழி வாங்கறது எப்படினு அழகாச் சொல்லித் தராங்க. :((((

    ReplyDelete
  8. மாமனார்களும் உண்டு ஸ்ரீராம். :))))) நான் பார்த்திருக்கேன். பெண்கள் வேண்டாம்னு சொன்னால் கூட அவர்கள் பெயரைச் சொல்லிக் கேட்கும் மாமனார்கள் உண்டு. பெண் வீட்டில் பணம் வாங்கிக் கொண்டு பிள்ளைக்கு இஷ்டமில்லாமல் அந்தப் பெண்ணையே கல்யாணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திய தகப்பனார்கள் உண்டு. :(((((

    ReplyDelete
  9. அப்பாதுரை, வேறெதுவும் கேட்டதாகத் தெரியவில்லை என்பதைத் தான் வேறு விபரங்கள் தெரியலைனு சொன்னேன். நிச்சயதார்த்தத்துக்குப் பின்னர் பழகி இருக்காங்க. இதைத் தவிர வேறெதுவும் நடக்கலைனு இரு தரப்பிலும் சொல்லி இருக்காங்க. இப்போதைக்கு இவ்வளவு தான். :))))))

    ReplyDelete
  10. சூரி சார் மூன்று வருடங்கள் இல்லை. தப்பாய்ச் சொல்லி இருக்கேன். எட்டு வருடங்கள் இருக்கலாம். :)))))

    ReplyDelete
  11. ஏதோ ஞாபகம் இருக்கு. என்ன காரணத்துக்காக இந்தப் பொண்ணு கம்ப்ளேயிண்ட் கொடுத்ததோ.உள்ள வேற சமாசாரம் இருந்திருக்கும்.இன்னோரு ரிஷிமூலம்/.

    ReplyDelete

  12. எனக்குத் தெரிந்த ஒரு நிகழ்ச்சி. இரு தரப்பினரும் கூடிப்பேசிஎல்லோருக்கும் திருப்தி, சம்மதம் என்று தெரிந்தபிறகு திருமணம் நிச்சயிக்கப் பட்டது. திருமணத்துக்கு முன் பையனும் பெண்ணும்காதலிக்கக் கூடத் துவங்கினர். நிறைய செலவு செய்து திருமண்ம் நடந்தது. திருமணம் நடந்த இரு வாரங்களில் பெண்ணுக்குப் பையனைப் பிடிக்கவில்லையாம். நிறைய கசமுசக்களுக்குப் பின் இரு தரப்பினரும் mutual ஒப்பந்தப்படி விவாகரத்து செய்து கொண்டனர். ஒரு வருடத்தில் பைய்ன் வேறு மணம் செய்துகொண்டு அமேரிக்கா போய்விட்டான். அவனுக்குக் குழந்தைகள் கூட இருப்பதாகக் கேள்வி. பெண்ணைப் பற்றின செய்தி ஏதுமில்லை. திருமணத்துக்கு முன்னும் பின்னும் பழகியவர் ஏன் மணமுறிவு செய்யவேண்டும். பதில் தெரியவில்லை.

    ReplyDelete

  13. பெண்களுக்கு உதவ நினைக்கும் சட்டங்களை பெண்கள் தவறாக பயன்படுத்தும் வாய்ப்பிருக்கிறது.

    ReplyDelete
  14. 500 பவுன் நகை !!!! coatstand மாதிரி human jewellery display stand !அத்தனையும் போட்டுண்டா நன்னாவா இருக்கும். face book ல south Indian bride நு போட்டோ போட்டிருந்தாங்க.சிரிப்பு வந்தது பாத்து:))
    Thanks to you tube !!!!!
    http://www.youtube.com/watch?v=_Cv2I3uNiys

    ReplyDelete
  15. 500 பவுன் நகை என்ன செய்வாங்களோ, கணக்குப் பண்ணினால் தலை சுத்துது! :)))) இப்போப் பவுன் விக்கிற விலையில்!

    ReplyDelete
  16. வாங்க வல்லி, வரதக்ஷணை தான் பிரச்னைனு சொன்னாங்க. :))))

    ReplyDelete
  17. ஜிஎம்பி சார், ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்ட் கால் கதை அல்லது சுய முன்னேற்றக்கட்டுரைக்கதையின் கருத்தும் இப்படித் தான். ஆனால் நீங்க சொல்வது மாப்பிள்ளை கல்யாணம் செய்து கொண்டது குறித்து. இதிலே பாதிக்கப் பட்ட பெண் எப்படி மனோநிலை தேறி வருகிறாள் என்பது குறித்து.

    ReplyDelete
  18. //பெண்களுக்கு உதவ நினைக்கும் சட்டங்களை பெண்கள் தவறாக பயன்படுத்தும் வாய்ப்பிருக்கிறது.//

    ஆமாம் ஐயா, தவறாய்ப் பயன்படுத்திய பெண்ணால் ஒரு குடும்பமே சீரழிந்தது. :(((((

    ReplyDelete
  19. வாங்க ஜெயஸ்ரீ, நகைக்கடை ஸ்டான்டில் உள்ளதை விட ஐநூறு பவுன் நகை என்பது கூடவே இருக்கும்னு நினைக்கிறேன். சர்வ சாதாரணமாச் சொல்றாங்க. கோடியெல்லாம் ஏதோ ஒரு ரூபாய் மாதிரி நினைப்பாங்க போல! :))))

    ReplyDelete

  20. என் கருத்துரையில் பெண்ணுக்குத்தான் பையனைப் பிடிக்கவில்லை என்று எழுதி இருக்கிறேன். பெண் பாதிக்கப் பட்டவள் அல்ல. பாதிப்பு ஏற்படுத்தியவள்.!

    ReplyDelete
  21. மாப்பிள்ளையின் தாத்தா வரதட்சிணை, நகை கேட்ட கதை எல்லாம் எங்கள் உறவினர் வீட்டு திருமணத்தில் உண்டு.
    மாப்பிள்ளையின் அப்பா, அம்மா நல்ல பெயர் வாங்கி கொண்டு தாத்தாவை கெட்டபெயர் வாங்க வைத்தார்கள்.
    அந்தபெண் நகையை லாக்கரில் தான் வைத்து இருக்கிறாள் நகையே போடுவது இல்லை.
    மாப்பிள்ளைக்கு நகை பிடிக்காதாம், இது எப்படி இருக்கு!

    ReplyDelete
  22. //என் கருத்துரையில் பெண்ணுக்குத்தான் பையனைப் பிடிக்கவில்லை என்று எழுதி இருக்கிறேன். பெண் பாதிக்கப் பட்டவள் அல்ல. பாதிப்பு ஏற்படுத்தியவள்.!//


    ஜிஎம்பி சார், புரிந்து கொண்டு தான் எழுதி இருக்கேன்.

    //ஜிஎம்பி சார், ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்ட் கால் கதை அல்லது சுய முன்னேற்றக்கட்டுரைக்கதையின் கருத்தும் இப்படித் தான். ஆனால் நீங்க சொல்வது மாப்பிள்ளை கல்யாணம் செய்து கொண்டது குறித்து. இதிலே பாதிக்கப் பட்ட பெண் எப்படி மனோநிலை தேறி வருகிறாள் என்பது குறித்து.//

    நான் சொல்லி இருப்பது ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்ட் காலில் பாதிக்கப் பட்ட பெண்ணைக் குறித்து வருகிறது என்பதே. தெளிவாகச் சொல்லாததுக்கு மன்னிக்கவும்.:(

    ReplyDelete
  23. வாங்க கோமதி அரசு, இப்போதைய நிலவரப் படி நன்கு சம்பாதிக்கும் பெண்களைத் திருமணம் செய்து கொடுக்கப் பெற்றோர் விரும்புவதில்லை. இது என் சொந்தக்காரப் பெண் ஒருத்தி (திருமணம் ஆகி விட்டது) டிசிஎஸ்ஸில் வேலை செய்பவள் சொல்வது. :(((

    ReplyDelete
  24. Anonymous04 May, 2013

    சீரியல் நாடகம் எழுதுபவர்களைக் கொலை முயற்சி வழக்கில் உள்ளே தள்ளினால் பாதிப்பிரச்சினை சரியாப்போகும்

    ReplyDelete