Monday, June 24, 2013

கண்ணன் துணை இருப்பான்! சந்தோஷமான செய்தி!


ஒரு பத்துநாட்களாகவேக் கடுமையான உழைப்பு. :))) கண்ணன் கதையின் முதல் பாகத்தை எடிட் செய்து தொகுத்துக் கொண்டு அவற்றைப் பிரின்ட் அவுட் எடுக்க ஆரம்பித்தேன்.  பாரதீய வித்யா பவன் சென்னை அலுவலகத்தில் 22 ஜூன் சனிக்கிழமை மதியம் டைரக்டர் என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கி இருந்தார்.  ஆகவே குறைந்த கால அவகாசத்தில் முடிக்கணும். பிரிட் அவுட் எடுத்துக் கொண்டு எதுக்குத் தொந்திரவு?  பென்டிரைவிலோ சிடியோ போடலாம்னு சொல்றவங்களுக்கு!  போடலாம் தான்.  அது தெரியும்.  ஆனால் அதைக் கணினியில் தான் போட்டுப் பார்க்க முடியும். சிலர் பிடிஎப் கோப்பாக அனுப்பி வைனும் சொன்னாங்க.  அதைப் பார்ப்பாங்களா உடனடியாகனு சந்தேகம்.  ஆகவே நம் கையே நமக்கு உதவினு வீட்டிலேயே பிரின்ட் அவுட் எடுக்க ஆரம்பித்தேன்.

எடிட்டிங் வேலை முடியவே மூணுநாள் ஆச்சு.  அப்படியும் வேர்ட் நிறைய ஸ்பெல்லிங் தப்புப் பண்ணி இருக்கேனு திட்டிட்டும் இருந்தது.  கூடியவரை எல்லாத்தையும் சரி பண்ணினேன்.  பிரின்ட் அவுட் எடுக்கிறச்சே இரண்டு முறை இங்க் தீர்ந்து போய், ஒரு தரம் இங்க் திரும்ப நிரப்பினது சரியா வராமல் போய், அதுக்குள்ளே சென்னை கிளம்பும் நாளும் வந்துவிட்டது. சனிக்கிழமை சென்னை கிளம்பணும்.  வியாழனன்று பிரின்டர் வேலை நிறுத்தம் மெகானிக்கைக் கூப்பிடவும் என் அவசரம் தெரிந்ததால் அவரும் வந்து கிட்டேயே இருந்து வேலையை முடிக்கிற வரை பிரின்டரைத் தட்டிக் கொடுத்து கவனித்துக் கொண்டார்.  பின்னர் அன்னிக்கே சாயந்திரமாப் போய் பைன்டிங் செய்யக் கொடுத்து வெள்ளிக்கிழமை ஈரம் காயும் முன்னே வாங்கி வந்து கொண்டு போகும் பையில் அடியில் வைத்து மேலே அழுத்தம் கொடுத்துவிட்டோம்.

சனிக்கிழமை காலை பல்லவனில் கிளம்பினோம்.  அன்னிக்குனு வண்டி தாமதம். அரை மணி நேரம்.  ஒரு மணிக்குள்ளாக வித்யாபவனின் இருக்கணும். ஒரு வழியா மாம்பலத்தில் இறங்கி ஆட்டோ வைத்துக்கொண்டு வித்யாபவன் போகையிலே பனிரண்டே முக்கால்.  டைரக்டர் மீட்டிங்கில் இருந்தார் எனினும் நான் வந்திருக்கும் செய்தி சொல்லப்பட்டுக் காத்திருக்கச் சொன்னார்.  பின்னர் அவரே வெளியே வந்து காத்திருக்கச் சொல்லிவிட்டு வந்தவர்களை வழி அனுப்பிட்டு, மற்றவர்களைக் கவனித்துவிட்டு எங்களை அழைத்தார்.  கொண்டு போன புத்தகத்தைக் கொடுத்தோம்.  படித்ததில் அவருக்குத் திருப்தி என்பது முகத்திலேயே தெரிந்தாலும் அவர் வாய் மூலம் சொல்லணும்னு இருந்தோம்.

 பப்ளிஷிங் பத்திப் பேசிவிட்டுப் பின்னர் என்னிடம் உங்கள் ஆர்வமும், எழுதி இருக்கும் நடையும் தேர்ந்த எழுத்தாளரின் எழுத்தைப் போல் இருக்குனு பாராட்டிவிட்டு எங்களுக்கு நேரேயே பவன் மூலம் பப்ளிஷ் பண்ணலாமா, அல்லது நாங்க இன்வெஸ்ட் பண்ணிட்டு பவன் மூலம் வெளியீடு பண்ணலாமானு இரண்டு கருத்தையும் அவங்களுக்கு அனுப்பி இருக்கார். எப்படி இருந்தாலும் பவன் மூலம் வெளியீடு செய்வதில் அவருக்கு ஆக்ஷேபணை இல்லைனு தெரிந்தது.  மேலும் இப்போது முன்ஷிஜி அவர்களின் 125 ஆவது பிறந்த நாளுக்கான கொண்டாட்டங்களுக்கான வேலைகள் வேறு செய்வதால் அதை ஒட்டி வெளியிடலாம் என்றும் கூறி உள்ளார்.  இனி எல்லாம் கண்ணன் கையில்.  அடுத்து இரண்டாம் பாகம் எடிட்டிங் செய்து அதைப் பென்டிரைவ் அல்லது, சிடியில் எடுத்துடலாம்னு எண்ணம்.  அதோடு டைரக்டர் அறையிலோ ரிசப்ஷனிலோ கணினியோ, மடிக்கணினியோ இல்லை.  ப்ரின்டிங் செக்‌ஷனில் மட்டும் இருக்குமோ என்னமோ!  நல்லவேளையா பென் டிரைவ் கொண்டு போகலை.  போட்டுப் பார்க்கிறேன்னு சொல்லி இருப்பாரே! :))))

போகப் போகத் தெரியும்.  கண்ணன் துணை இருப்பான் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.  இதன் முழுப் பலனும் திவாகரையே சேர்ந்தது.  அவருடைய தூண்டுதல் இல்லை எனில் இந்த மொழிபெயர்ப்பு வேலையை ஆரம்பித்திருப்பேனா என்பது சந்தேகமே.  அதே போல் இப்போது வித்யாபவனை நாடுவதற்கும் பெருமளவு உதவிகள் செய்தார்.  மொத்தத்தில் இந்த மொழிபெயர்ப்பே அவருக்குச் சமர்ப்பிக்க வேண்டிய ஒன்று.

பி.கு: நேற்றைய பல்லவனில் கிளம்பி நேற்றிரவு ஒன்பதேகாலுக்கு வீட்டுக்கு வந்தாச்சு. சென்னை ரசிகர்களுக்கு என் வரவைக் குறித்து முன் கூட்டித் தெரிவிச்சால் கூட்டம் கூடும் என்பதால் தெரிவிக்கவில்லை. :))))))

26 comments:

  1. கண்ணன் துணை இருப்பான்!

    சந்தோஷமான செய்தி!

    பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    வெற்றி மேல் வெற்றி கிட்டட்டும்.

    ReplyDelete
  2. //பி.கு: நேற்றைய பல்லவனில் கிளம்பி நேற்றிரவு ஒன்பதேகாலுக்கு வீட்டுக்கு வந்தாச்சு. சென்னை ரசிகர்களுக்கு என் வரவைக் குறித்து முன் கூட்டித் தெரிவிச்சால் கூட்டம் கூடும் என்பதால் தெரிவிக்கவில்லை. :))))))//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! ;)))))

    இது நல்லதொரு ஐடியா தான்.

    ReplyDelete
  3. உங்களுக்கு பல வகைகளில் உதவி புரியும் அனைவருக்கும் நன்றி... வாழ்த்துக்கள்...

    பின் குறிப்பு மிகவும் முக்கியம்... ஹிஹி...

    ReplyDelete
  4. வாழ்த்திய இருவருக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  5. வாழ்த்துகள்...வாழ்த்துகள்...மனமர்ந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. வாழ்த்துகள்...வாழ்த்துகள்...மனமார்ந்த வாழ்த்துகள்!

    (எழுத்துப் பிழை இல்லாமல்!)

    ReplyDelete
  7. காலையில் இனிய செய்தி.
    வாழ்த்துக்கள். பாரதி வித்யா பவனுக்கு அடிச்சுது லக்கு.

    ReplyDelete
  8. Wow... Super. Congratulations. Will wait for the book :)

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வாழ்த்துகள் கீதாம்மா.....

    ReplyDelete
  11. வாழ்த்துகள். புத்தகம் வெளியானதும் சொல்லுங்க. வாங்கிடறேன்.

    ReplyDelete
  12. வாழ்த்துகள் கீத்தாம்மா..

    ReplyDelete
  13. சித்திரங்கள் முக்கியம். அதுவும் சின்னச் சின்ன படங்கள்.குழந்தைகள் கதைப் புத்தகம் மாதிரி; அம்புலிமாமா மாதிரி. மலிவுப் பதிப்பு எனில் இன்னும் உசிதம்.

    இந்தத் தொடரின் ஆரம்ப அத்தியாயங்களிலேயே இந்தத் தொகுப்பு புத்தகமாக வரவேண்டும் என்கிற எனது ஆவலைவெளிப்படுத்தி இருந்த நினைவு. அந்த ஆவல், ஆகச்சிறந்த வெளியீட்டார்களின் ஆர்வமாக உருக்கொண்டதில் மகிழ்வு.

    வாழ்த்துக்கள், கீதாம்மா.

    ReplyDelete
  14. வெரி குட். எல்லா பகுதிகளையுமா பிரிண்ட் அவுட் எடுத்துண்டு போனீங்க..? இல்ல, மதியம் ஒரு மணி வேற, பாவம் டைரக்டர்! அதான் கேட்டேன். :))

    வாழ்த்துக்கள். ப்ரிண்ட் அவுட் எடுக்க ஐடியா குடுத்த எனக்கு எவ்ளோ ராயல்டி தரதா உத்தேசம்..?

    ReplyDelete

  15. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  16. விரைவில் புத்தகம் வெளிவரட்டும். மனமார்ந்த வாழ்த்துக்கள்!
    அடுத்தடுத்து எல்லா பாகங்களும் வரட்டும். படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  17. வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

    @அம்பி, நோ ராயல்டி! :P :P :P

    ஏன்னா நீங்க சொன்ன back to back method இலோ தி.வா. சொன்ன செலக்ட் ஆல் மெதடிலோ, எல்கே சொன்ன பத்துப் பத்துப் பக்கமா செலக்ட் பண்ணியோ எடுக்கலை. என்னோட சொந்த மூளையைப் பயன்படுத்தி எடுத்தேனாக்கும். ஹிஹிஹி, ஆக நோ ராயல்டி, நீங்க தான் புத்தகம் வெளிவந்ததும் வாங்கி எனக்கு ராயல்டி கிடைக்க உதவணும். :)))))))))

    மொய் கொடுக்காமலே தப்பிச்சிருக்கோம் நாங்க, இது எல்லாம் ஜூஜூபி!

    ReplyDelete
  18. @ஜீவி சார், முதல்லே மும்பை அலுவலகம் முடிவைச் சொல்லட்டும். அப்புறமா மிச்சம்.

    ஒரிஜினல் புத்தகத்தில் சித்திரங்கள் கிடையாது. அதோடு வித்யா பவனுக்கு லாபமும் கிடைக்கணும்னு எதிர்பார்ப்பாங்களே. மலிவுப் பதிப்பு?? ம்ஹ்ஹும்! பார்க்கலாம் சார், முதல்லே பிரதக்ஷணம் முடியட்டும். :)))))))

    ReplyDelete
  19. ஜீவி சார் மட்டுமில்லாமல் முதல் பாகம் படித்த பலரும் புத்தகமாய் வெளி வரவேண்டும் என்ற தங்கள் ஆவலைத் தெரிவித்தார்கள். ஆனால் எனக்கு அதில் அவ்வளவு விருப்பம் ஆரம்பத்தில் இருந்தே இல்லை. என்னுடைய முக்கியமான பிரச்னையே காப்பிரைட் தான். அதுக்கு இப்போப் பிரச்னை இல்லை என்பதே என்னளவில் பெரியதொரு அதிர்ஷ்டம் என எண்ணுகிறேன். என்றாலும் வித்யாபவன் வெளியீடாகக் கொண்டுவரச் சொல்லிக் கேட்கும்படி ஆலோசனை சொன்ன திவாகருக்குத் தான் இதன் முழு க்ரெடிட்டும். :)))))

    ReplyDelete
  20. ரஞ்சனி, முதல் இருபாகங்கள் இந்த வலைப்பக்கத்தில் வந்துவிட்டன. மூன்றாம் பாகம் தனியானதொரு வலைப்பக்கத்திலும் வந்து கொண்டிருக்கிறது. நேரம் இருந்தால் படியுங்கள். நன்றிங்க.

    ReplyDelete
  21. ஹாஹா டிடி, இந்த வலைப்பக்கம் தான் முக்கியமானது என்பதால் பின் குறிப்பை இங்கே சேர்த்தேன். :))))))

    ReplyDelete
  22. //அதோடு வித்யா பவனுக்கு லாபமும் கிடைக்கணும்னு எதிர்பார்ப்பாங்களே. மலிவுப் பதிப்பு?? ம்ஹ்ஹும்! பார்க்கலாம் சார், முதல்லே பிரதக்ஷணம் முடியட்டும். :)))))))//

    மலிவுப் பதிப்பு மீன்ஸ் அதிக விற்பனை.. அதற்கேற்ப லாபம்!

    படிக்கிறார்களோ இல்லையோ 'ரொம்ப சீப்' என்று வாங்கி வைத்துக் கொள்வோர் உண்டு.

    இப்படித்தான் நான் கூட கோரக்பூர் ப்ரஸ்..

    ReplyDelete
  23. வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. ஜீவி சார், ஏதோ சொல்ல வந்து பாதியிலே நிறுத்திட்டாப்போல் இருக்கே! :))))

    ReplyDelete
  25. நன்றி மாதேவி.

    ReplyDelete
  26. அன்புள்ள கீதா,
    நிச்சயம் படிக்கிறேன்.
    திரு முன்ஷி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கண்ணன் கதையை தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறீர்களா? பாரதீய வித்யாபவன் என்று நீங்கள் எழுதியிருப்பதால் இந்தக் கேள்வி.
    கொஞ்சம் விவரமாக சொல்லுங்கள், ப்ளீஸ்.
    அன்புடன்,
    ரஞ்சனி

    ReplyDelete