Monday, August 19, 2013

கோயில் பதிவுகளுக்கு முன்னர்......................

இங்கே வந்ததில் இருந்து திருமயம் கோயிலுக்குப் போகணும்னு ஆசை.  திருமயம்,சித்தன்னவாசல் இரண்டுக்கும் போகணும்னு சொல்லிட்டே இருந்தேன்.  ஆனால் போகவே முடியலை. அது என்னமோ தெரியலை; தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.  டிசம்பர் மாதம் சில நண்பர்கள் வந்தப்போ புதுக்கோட்டையில் திருக்கோகர்ணமும் போயிட்டு வந்தாங்க. அவங்களும் அதைப் பத்திச் சொல்லிட்டு இருந்தாங்க.  தினம் தினம் சொல்லிட்டு இருந்தேன். அப்போத் தான் நம்ம இன்னம்பூராரின் பயணத்திட்டத்தில் காரைக்குடியும் உண்டுனு தெரிஞ்சது. அவர் டிசம்பர் மாதத்தில் இருந்தே, இந்தியா வரப் போகும் ஆகஸ்ட் மாதத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்.  காரைக்குடியில் மாணவர்களுக்காக தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் ஐஏ எஸ், ஐபிஎஸ் மாணாக்கர்கள் தேர்வை எதிர்கொள்ளும் முறை குறித்த ஒரு அறிமுகச் சொற்பொழிவு செய்ய இருந்தார்.   இங்கே தமிழ் மரபு அறக்கட்டளை குறித்து ஒரு சின்ன அறிமுகம்.

சுபாஷிணி

மலேசியாவில் பிறந்து வளர்ந்து, படித்துப் பின்னர் தற்சமயம் ஜெர்மானியரான ட்ரெம்மலைத் திருமணம் செய்து கொண்டு ஜெர்மனியில் வேலை பார்த்துக் கொண்டு கணவருடன் வசிக்கும் சுபாஷிணியும், கொரியாவில் இருந்த நா. கண்ணனும் பனிரண்டு வருடங்கள் முன்னர் ஆரம்பித்தது இந்த அறக்கட்டளை.

நா.கண்ணன்

 இதன் மடலாடல் குழுமமாக முதலில் யாஹூவில் "இ-சுவடி" என்ற குழுமம் ஆரம்பித்துப் பின்னர் கூகிளின் மடலாடல் குழுமமான மின் தமிழ் ஆரம்பிக்கப் பட்டது. ஒரு கோயிலுக்குப் போனதுக்கு இப்படி நீஈஈஈஈஈஈள முன்னுரையானு நினைக்க வேண்டாம்.  சந்தடி சாக்கிலே மின் தமிழைக் குறித்துச் சொல்லலாம்னு தான். இந்த மின் தமிழ்க் குழுமம், மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளையின்  பனிரண்டாவது ஆண்டு விழாவை ஒட்டி இம்மாதம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

 சென்ற மாதம் இதன் நிர்வாகிகளில் ஒருவரான திரு நா. கண்ணன் ஈரோட்டில் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியில் பன்னாட்டுத் தமிழ் மரபு அறக்கட்டளை மையம் துவக்கி வைத்தார். இதற்காக நம் வலைப்பதிவரும், வல்லமை மின்னிதழின் ஆசிரியருமான பவளசங்கரி தீவிரமாக உழைத்தார். அதைத் தொடர்ந்து ஆரம்ப காலத்தில் இருந்தே இதன் உறுப்பினராக இருந்து வரும் திரு இன்னம்பூரார் அவர்கள்  கல்லூரி மாணவர்களிடையே பங்கு பெற்று ஐ ஏ. எஸ் தேர்வில் எவ்வாறு பங்கெடுக்க வேண்டும், எப்படித் தயார் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு அறிமுகச் சொற்பொழிவை ஆகஸ்ட் பனிரண்டாம் நாள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அரங்கில் நிகழ்த்த இருந்தார்.  அவர் இருந்தது இங்கிலாந்தின் தலைநகரம் லண்டனில்.  இந்தியா வரும் முன்னர் இருந்தே திரு இன்னம்புரார் தன்னுடைய நிகழ்ச்சி நிரலைக் கூறி இருந்தார்.  சென்னை சந்திப்பில் நிச்சயம் கலந்து கொள்ள இயலாது என்பது தெரியும்.  ஆகவே இன்னம்பூருக்கோ அல்லது காரைக்குடிக்கோ போகலாம் என நினைத்தேன்.  முதலில் திரு இன்னம்புரார் குறித்து ஒரு சின்ன அறிமுகம். எண்பது வயதுக்கு மேலாகும் திரு இன்னம்பூர் செளந்திரராஜன் மத்திய அரசின் தணிக்கைத்துறையின் துணைத்தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர்.  அவ்வப்போது தணிக்கைத் துறை குறித்த தன் கருத்துக்களை வல்லமை மின்னிதழிலும், மின் தமிழ், தமிழ்வாசல் போன்ற குழுமங்களிலும் பகிர்ந்து கொள்வார்.  அரியக்குடி, காரைக்குடி போன்ற ஊர்களில் சிறு வயதில் தன் தகப்பனாரின் வேலை நிமித்தம் வாழ்ந்து அந்த ஊரின் அனுபவங்களையும் அவ்வப்போது பகிர்ந்து கொள்வார்.

இன்னம்பூரார்

அவருடைய "அம்மா சொல்படி ராஜு" என்னும் தொடர் அந்தக் கால வாழ்க்கை குறித்த அவருடைய தாயின் அனுபவங்களை அவர் தாய் கூற திரு இன்னம்பூரார் எழுதியவை. இது அவருடைய மாஸ்டர் பீஸ் என்பது என்னுடைய சொந்தக் கருத்து.  ஆனாலும் அவர் தமிழின் மேல் அளப்பரிய காதல் கொண்டிருந்தாலும், நன்கு படிக்கவோ, எழுதவோ தனக்கு வராது என்பார்.  இந்த வயசிலும் சர்க்கரை நோயாளியான அவர் தன் சகோதரருக்கு ஒரு சிறுநீரகத்தை தானமும் கொடுத்த பின்னரும், தேனியைப் போல் சுறுசுறுப்பாகப் பல்வேறு விதமான சமூகத்தளங்களில் தன் ஆற்றலைக் காட்டி வருகிறார். தமிழ் இலக்கணத்தைப் பத்து வருடங்களுக்கு முன்னர் படிக்க ஆரம்பித்த இவர் சென்ற வாரம் யாப்பருங்கலக்காரிகையிலும், தண்டியலங்காரத்திலும் தேர்வு எழுதியுள்ளார்.  தன் மகனுடன் வசிக்கவென லண்டன் சென்ற இவர் அங்கேயும் சும்மா இருக்கவில்லை.  லண்டன் பல்கலைக்கழகத்திலும் சமூகம், சமுதாயம், மனித வளம், உறவுகள் சம்பந்தப்பட்ட வேலைகளில் ஈடுபட்டதோடு அல்லாமல் மனித வளம், மனித உறவு குறித்த மேற்படிப்பும் படித்திருக்கிறார்.  நடைப்பயிற்சி, உடல் பயிற்சி போன்றவை மேற்கொண்டிருக்கும் இவர் தற்சமயம் இரு வருடங்களுக்குப் பின்னர் இந்தியா வருகை தந்துள்ளார்.

பாண்டிச்சேரியில் பக்தி இலக்கியம் சம்பந்தமாகப் படித்து வரும் இவர் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்திலும் தமிழில் பட்டமேற்படிப்புப் படிக்க விண்ணப்பித்திருக்கிறார்.  ஆகஸ்ட் பனிரண்டாம் நாளான நேற்று காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் மாணவர்களுக்கு ஐஏ எஸ், ஐபிஎஸ் தேர்வுகள் எழுதுவதற்காக எப்படித் தயார் செய்து கொள்வது என்பது குறித்து ஒரு அறிமுகச் சொற்பொழிவு செய்திருக்கிறார்.  இவர் எழுதும் பாமரகீர்த்தி என்னும் சாமானிய மக்கள் குறித்த கட்டுரைகள் வலை உலகில் பெரும் புகழ் பெற்றவை. சாமானியரிடம் இருக்கும் தனிப்பட்ட சிறப்பை எடுத்துக்காட்டும் விதமாக ஏற்கெனவே நடந்த நிகழ்வுகளைக் கொஞ்சமே கொஞ்சம் கற்பனை சேர்த்துப் பலரும் விரும்பும் விதம் எழுதுவார்/  அவ்வப்போது கையில் வலி என்று சொன்னாலும் இணையத்துக்கு வந்து எழுதாமல் அவராமல் இருக்க இயலாது.  பல நல்ல புத்தகங்களை மின்னாக்கம் செய்து தமிழ் மரபு அறக்கட்டளையில் இணைத்திருக்கிறார். மேலும் பல நவீன யுக்திகள் மூலம் தமிழை மேம்படுத்த வேண்டும் என்ற ஆவலும் கொண்டிருக்கிறார்.  ஒலித் தமிழ் என்னும் வலைப்பக்கம் திறந்து அதன் மூலம் தமிழ் கற்றுக் கொடுக்கவும் முயற்சி செய்து வருகிறார்.  இனி நம் பயணத்தைத் தொடருவோம்.  ரொம்ப அறுவை போட்டுட்டேனோ?

http://innamburan.blogspot.in/2013/08/2.html">இன்னம்பூரார் பக்கம்


இவரைச் சந்திக்கத் தான் காரைக்குடிக்குச் சென்றோம்.  ஏற்கெனவே இவர் லண்டன் செல்லும் முன்னர் ஒரு சின்ன  கெட் டு கெதர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.  குரோம்பேட்டையில் அவர் இல்லத்தில் நடைபெற்ற  அந்த நிகழ்ச்சிக்குத் தான் ஒவ்வொருத்தரும் அவரால் இயன்ற பலகாரங்களைச் செய்து கொண்டு போயிருந்தோம்.  நான் வெண்கல உருளியில் செய்யப்பட்ட அரிசி உப்புமா, கொத்சு கொண்டு சென்றிருந்தேன்.  ஆகவே இப்போ அவர் மகளைச் சந்திக்கையில் அவங்களுக்கு நினைவில்லாவிட்டாலும், அரிசி உப்புமா எனச் சொல்லி நினைவு கூர வைக்கலாம்.  காரைக்குடிக்குச் சென்று ஞாயிறன்று இரவு தங்கித் திங்கள் காலை திரும்பலாம் எனப் போடப்பட்ட திட்டத்தை என் உறவினர் ஒருவர் திங்களன்று வந்ததால் மாற்ற நேரிட்டது.  ஞாயிறன்று காலை இங்கிருந்து சென்று ஞாயிறன்று மாலையே திரும்பவேண்டும் என்று முடிவு செய்தோம்.  ஆகவே வாகனம் ஏற்பாடு பண்ணிக் கொண்டோம். அங்கே முனைவர் காளை ராஜன் எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு எங்கள் தொடர்பில் இருந்து வந்தார். ஞாயிறன்று காலையும் வந்தது.

ஒவ்வொரு முறையும் கோயில்களுக்குப் போகணும்னு தான் போவோம்.  இம்முறை தான் நண்பரைப் பார்க்கப் போகிற இந்தச் சந்தர்ப்பத்தை இதற்கும் பயன்படுத்திக்கலாம்னு போனது. :))))))


26 comments:

  1. இனிய சந்திப்பாக இருந்திருக்கும். காத்திருக்கிறேன் கீதா.

    ReplyDelete
  2. மிகச் சிறந்த தமிழ் அறிஞர் ஒருவரைப் பற்றி இத்தனை நாள் தெரியாமல் இருந்துவிட்டேனே என்று இருக்கிறது.
    உங்கள் சந்திப்பு பற்றி மேலும் அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    படங்களுக்குக் கீழ் பெயர்களும் இடம்பெற்றால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  3. ம்..... தொடருங்கள்.

    ReplyDelete
  4. காத்திருக்கிறேன் அம்மா...

    ReplyDelete
  5. வாங்க வல்லி, அரைமணி நேரம் தான் சந்திப்பு நடந்தது. அவங்களும் ரொம்பக் களைச்சிருந்தாங்க. நாங்களும், அதோடு ரங்க்ஸுக்கு உடம்பு வேறே சரியில்லாமல் இருந்தது. ஆகவே அதிக நேரம் பேச முடியலை!

    ReplyDelete
  6. வாங்க ரஞ்சனி, எல்லாருமே தமிழறிஞர்கள் தான். திரு இன்னம்பூரார் இந்த வயசில் எழுதுவதும், அவருடைய சுறுசுறுப்பான நடவடிக்கைகளையும் பார்த்து நிறையக் கத்துக்கறேன். தமிழைத் தவிர! :))))

    ReplyDelete
  7. வாங்க ஶ்ரீராம், நன்றி.

    ReplyDelete
  8. டிடி நன்றிப்பா.

    ReplyDelete
  9. அவங்க அவங்க குறிப்புகளுக்குக் கீழே படங்களை இடம்பெறச் செய்ததால் முதலில் பெயர் தேவை இல்லைனு நினைச்சேன். ரஞ்சனி கேட்டதுக்கப்புறமாப் போட்டுட்டேன்.

    ReplyDelete

  10. உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்துவரும் எனக்கு நீங்கள் கூறி இருக்கும் பல அமைப்புகள் பற்றி ஏதும் தெரியாது.80 வயதிலும் தமிழ் கற்றுக் கொள்கிறேன் என்று சொல்லும் இன்னம்பூரார் என்னை ஆச்சரியப் பட வைக்கிறார். அன்னார் போன்றோரின் பணி பரவலாகப் பேசப் பட வேண்டும். ஆரம்பித்து வைக்கும் உங்களுக்கு என் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  11. 80 வயதிலும் தமிழ் கற்றுக் கொள்கிறேன் என்று சொல்லும் இன்னம்பூரார் என்னையும் ஆச்சரியப் பட வைக்கிறார்.

    தொடருங்கோ.

    ReplyDelete
  12. //நான் வெண்கல உருளியில் செய்யப்பட்ட அரிசி உப்புமா, கொத்சு கொண்டு சென்றிருந்தேன். //

    ஆஹா.. உங்களுக்கு சொல்லியா கொடுக்கணும்?.. ஆள் மறந்தாலும் பண்டம் மறக்காம் நினைவில் நிற்கிற
    மாதிரி தேர்வு பிரமாதம்!

    ஆரம்ப அறிமுகங்கள் ஜோர். இருந்தாலும் தெரியாதவர்களுக்கு இன்னும் தெரிகிற மாதிரி தொடர்கையில் எழுதினால் இன்னும் ஜோராக இருக்கும்.

    ReplyDelete
  13. இன்னம்பூரார் அவர்கள் இந்தவயதிலும் படிப்பது அறிந்து மகிழ்ச்சி.

    ReplyDelete
  14. வாங்க ஜிஎம்பி சார், இவை எல்லாம் கூகிள் குழுமங்கள். :)))) இன்னம்பூராரின் சில சிந்தனைகளை நான் இந்த வலைப்பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன். :)))

    ReplyDelete
  15. வைகோ சார் வாங்க, அவர் உடல் நிலைக்கு அவர் ஏகப்பட்ட சுறுசுறுப்பு. என்னால் இந்த வயசிலேயே முடியலை! அவர் வயசில் நான் உயிருடன் இருந்தால் நடமாட்டமே இருக்காதுனு நினைக்கிறேன்.

    ReplyDelete
  16. ஜீவி சார், அவரோட விருப்பம்னு தெரிஞ்சு தான் அரிசி உப்புமா வெண்கலப் பாத்திரத்தில் சமைத்துக் கொண்டுபோனேன். :)))) மற்றபடி இன்னும் தெரிகிற மாதிரி என்ன சொல்வது என்று புரியவில்லை. :)))) கூடிய வரையில் அறிமுகம் கொடுத்துவிட்டேன்.

    ReplyDelete
  17. வாங்க கோமதி அரசு, சுறு சுறு மனிதர்.

    ReplyDelete
  18. இன்னம்பூரார்அவர்களின் சுறுசுறுப்புக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. இன்னம்பூரார் மிகவும் ஆச்சரியப்படவைக்கிறார்..!

    ReplyDelete
  20. இன்னம்பூரார் இந்தியாலயா இருக்காரு? அடடா.. தெரியாம போச்சே! எளிமையான இனிமையான மனிதர். சுவாரசியமா இருந்துக்கும் உரையாடல்னு நினைக்கிறேன்.

    ஜீவி சார் பிடிச்சாலும் பாயிண்டு கரெக்டா பிடிக்கிறாரு.

    ReplyDelete
  21. சுபாஷிணி நா.கண்ணன் இருவரைப் பற்றிய அறிமுகங்களுக்கு நன்றி. சாதிக்கப் பிறந்தவர்கள்.

    ReplyDelete
  22. வாங்க மாதேவி, இன்னம்பூராரின் சுறுசுறுப்பில் பாதி எனக்கு இருந்தால் போதும்னு நினைச்சுப்பேன். :)))

    ReplyDelete
  23. அப்பாதுரை கிடைத்த அரைமணி நேரத்தில் அவர் மகனோடு எங்கள் அறிமுகம், நாங்க எழுதறதுனு சொல்லவே சரியாப் போச்சு. வேறே ஒண்ணும் அன்னிக்கு அமையலை. அவங்களோ அதீதக் களைப்புடன் பார்த்தாலே மனதுக்குத் தெரிந்தது. ஆகவே ரொம்ப நேரம் எடுத்துக்கலை. :))) பாண்டிச்சேரியில் தான் இருக்கார். அக்டோபரில் தான் இங்கிலாந்து திரும்பப் போறதாச் சொல்லி இருக்கார். ஶ்ரீரங்கம் வரணும்னு ஆசை இருக்கு. ஆனால் அவங்க குடும்பத்திலே தனியே அனுப்ப யோசிக்கிறாங்க. இனிமேல் தான் தெரியும். :))))

    ReplyDelete
  24. உண்மை தான், சுபாவின் ஆற்றலை நினைத்தால் வியப்பாகவே இருக்கும். உண்மையிலேயே இருவரும் செய்யும் தமிழ்த்தொண்டு அளப்பரியது.

    ReplyDelete
  25. நான் சரியான ட்யூப் லைட் தான்! சரியாக, மூன்று ஆண்டுகள் கழித்து சுபாஷிணிக்கும், கண்ணனுக்கும் புகழாரம் சூட்டிய இந்த பதிவை காண்கிறேன். அதற்குள் இரு முறை அமெரிக்கா, இங்கிலாந்து சென்று வந்து சென்னையில் வாசம். திருமதி கீதா சாம்பசிவத்துக்கு அனந்த கோடி நமஸ்காரம். தற்காலம் புதுச்சேரியில் டேரா: கல்லாடம், சூளாமணி, வைணவகுருபரம்பரை, தொல்காபியம் பாடம். அனைவருக்கும் நன்றி.
    இன்னம்பூரான்
    23 08 2016

    ReplyDelete
  26. //திருமதி கீதா சாம்பசிவத்துக்கு அனந்த கோடி நமஸ்காரம். //

    ஐயா, என் தாய் உயிருடன் இருந்திருந்தால் உங்கள் வயது தான் ஆகி இருக்கும். அப்படி இருக்க நீங்கள் எனக்கு நமஸ்காரம் செய்யலாமா? அதுவும் அனந்தகோடி நமஸ்காரம்? இதை மின் தமிழ்க் குழுமத்திலும் போட்ட நினைவு இருக்கிறது. ஆனாலும் தேடணும்! :) மற்றபடி உங்களுக்கும் நல்ல அறிமுகம் கொடுத்துள்ளேன். உங்கள் சாதனைகள் உண்மையிலேயே நாங்கள் தினம் தினம் பார்த்தும், நினைத்தும் வியந்து வரும் ஒன்று.

    ReplyDelete