Thursday, August 22, 2013

கணக்கா கேட்கறீங்க, கணக்கு! ஹாஹாஹாஹா!

ஶ்ரீராம்  முப்பது ரூபாய்க்குக் கணக்குக் காட்டச் சொல்லி இருக்கார்.  கணக்குக் கேட்டதிலே எத்தனை கட்சி உடைஞ்சிருக்கு!  அது தெரியாமக் கேட்டிருப்பாரோ? அதுவும் 30 ரூபாய்க்கு!  நான் யார், நான் யார், நான் யார்!  இந்த வலை உலகின் ஈடு இணையற்ற ஒரே தலைவி.  என்னிடமா உங்கள் கணக்கு!  கணக்கு, மணக்கு எனக்கு ஆமணக்கு! என்றாலும் விட்டேனா பார்!  பொறுத்தது போதும், பொங்கி எழு என எழுந்துவிட்டேன். ஆஹா, என்னிடமா கணக்கு!  இதோ உங்கள் கணக்கு!  இல்லை இல்லை க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதோ என் கணக்கு!

அரிசி ஓசியில் வாங்கினது ஒரு கிலோ

சின்ன வெங்காயம்  5 ரூக்கு (கிலோ 40க்கு நல்ல தரமானதும், சுமாரானது 30, 35ரூக்கும் கிடைக்கிறது.)

எண்ணெய் மற்றும் உப்புக்கு = 10 ரூ (எண்ணெய்க்கு எட்டு ரூ, உப்புக்கு 2 ரூ)

தக்காளி    100கிராம்        =2 ரூ (கிலோ பதினைந்து ரூபாய் என்பதால் 2 ரூக்குப் போதும்)

பாசிப்பருப்பு        =10 ரூக்குக் கிடைப்பது

பச்சை மிளகாய்      2 ரூக்குக் கிடைப்பது


ஆங்காங்கே பொறுக்கிய சுள்ளிகளை வைத்து அடுப்பு மூட்டி அரிசியைச் சோறாக்கி  அதிலேயே பாசிப்பருப்பையும் சேர்த்து வேக வைத்துவிட வேண்டும்.  தக்காளி, பச்சை மிளகாய்  எண்ணெயில் வதக்கிச் சேர்க்கவும்.  தேவையான உப்புச் சேர்க்கணும். சின்ன வெங்காயத்தை உரிக்கவும்.  குறுக்கே நறுக்கிக்கவும்.  பச்சைமிளகாய், உப்பு, தக்காளி மீதம் இருந்தால் சேர்க்கவும்.  சாதத்துக்கு சைட் டிஷாகத் தொட்டுக் கொண்டு சாப்பிடவும். மிச்சம் ஒரு ரூபாயைச் சேமிக்கவும். தினம் ஒரு ரூபாயாகச் சேர்த்துக் கொண்டு வரவும்.  மாசமுடிவில் கிடைக்கும் முப்பது ரூபாயோடு அன்றைக்குக் கோட்டா முப்பதும் சேர்த்து அம்மா உணவகத்தில் வெளுத்துக்கட்டவும்.

இன்றைய விலைவாசி நிலவரப்படி கொடுத்திருக்கேனாக்கும்!

23 comments:

  1. அடேங்கப்பா... முப்பது ரூபாயில் ஒரு ரூபாய் சேமிப்பு வேறா? அதுசரி..பதிவு தேத்த காரணமானதற்கு எனக்கு ராயல்டி எங்கே? :))

    ReplyDelete
  2. நல்ல நகைச்சுவைப்பதிவு. ரஸித்தேன். இனி கணக்கே கேட்க மாட்டேன்.

    பகிர்வுக்கு நன்றிகள்.


    [உடனே ஓடியாங்கோ, தொடரின்
    பகுதி-39 வெளியிடப்பட்டுள்ளது.]

    ReplyDelete
  3. தக்காளி நாட்டுத் தக்காளியா, பெங்களுர்த் தக்காளியா? விலைவிவரம் சென்னை நிலவரத்தோடு பார்த்தால் கொஞ்சம் இடிக்கிறது! 2 ரூபாய்க்கு 2 பச்சை மிளகாய்த்தான் தருகிறார்கள்! :))

    ஆனாலும் அருமையான ஐடியா. நல்ல சமாளிப்பு!

    ReplyDelete
  4. வரேன், உங்க அழைப்பை இப்போத் தான் பார்த்தேன். கொஞ்ச நேரத்தில் வரேன். :))))

    ReplyDelete
  5. கணக்குக் கே (கெ)ட்டவங்க இந்நேரம் தலையைச் சுத்தி விளுந்திருப்பாக :))))
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் !!!...(யாருக்கிட்ட கணக்கு கேக்கிரதென்று ஒரு
    இங்கித வேணாம் அவகளுக்கு :)))) )

    ReplyDelete
  6. சில நாட்களுக்கு முன் வறுமைக் கோட்டின் எல்லையாக தனி நபர் ஒருவர் தினம் ரூ. 29-/ சம்பாதனை என்று சொல்லிக் ( கட்டிக்) கொண்டவர் உங்களிடம்தான் புள்ளி விவரம் சேகரித்தாரோ.?

    ReplyDelete
  7. அதானே... நாங்கெல்லாம் யாரு...?

    ReplyDelete
  8. அப்படிப்போடுங்க :)))

    ReplyDelete
  9. சாம்பு மாமா கொடுத்துவைத்தவர்:)

    ReplyDelete
  10. அட, வல்லி, வந்தாச்சா? இப்போத் தான் எங்கள் ப்ளாகிலே போய் உங்களைக் கூப்பிட்டுட்டு வந்தேன். :)))

    ReplyDelete
  11. ஸ்ரீராம், பதிவு தேத்த நீங்க ஒண்ணும் காரணமில்லையாக்கும்! இது திடீரென உதித்த பதிவு! :))) ஆகவே நோ ராயல்டி! நீங்கதான் ஒரு தரம் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரினதுக்கு எனக்கு ராயல்டி தரணும். :))))

    ReplyDelete
  12. ஹிஹிஹி, வைகோ சார், ஓட்டமா ஓடி வந்தேனா, காலெல்லாம் வலிக்குது! :)))) அது!!!!!!!!!!!!!!! இனி கணக்குனு யாரானும் வாயைத் திறப்பாங்க???

    ReplyDelete
  13. ஶ்ரீராம், இங்கே நாட்டுத் தக்காளி தான் ஜாஸ்தி! அதுவும் திண்டுக்கல் தக்காளி. பெரிசு ஐம்பது ரூபாய் கிலோ, சின்னது நாற்பது ரூபாய். நான் திருச்சி மார்க்கெட் நிலவரம் சொன்னால் இன்னும் குறையும். ஸ்ரீரங்கம் விலையைத் தான் சொல்லி இருக்கேனாக்கும். சென்னையில் ஜாஸ்தியா?

    அதோடு சின்ன வெங்காயம் இங்கே திண்டுக்கல்லில் இருந்து வருவதால் சுமார் ரகம் கிலோ 40 ரூயும், நல்ல ரகம் கிலோ 50 ரூபாயும் விற்குது! திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்னும் குறையும். :))) பச்சை மிளகாய் நூறு பத்து ரூபாய், பதினைந்து ரூபாயில் கிடைக்குது. பத்துரூபாய் மிளகாயில் இரண்டு ரூபாய்க்கு வாங்கினேன்.

    ஹாஹாஹாஹா, நாங்க யாரு??????????

    ReplyDelete
  14. திருச்சி, ஶ்ரீரங்கம் சுற்று வட்டாரத்தில் காய்கள் அநேகமாய் நாட்டுக்காய்களாகவே கிடைக்கும் என்பதோடு செயற்கை உரச் சேர்ப்பும் குறைவாக இருக்கிறது என்பது காய்களின் சுவையிலேயே காணமுடியும். காலிஃப்ளவர் எல்லாம் என்னிக்கோ தான் பார்க்க முடியும். :)))))நூல்கோல், டர்னிப் எல்லாம் ஒரு நாள் கிடைச்சால் பெரிய விஷயம். அதே நாட்டுக்காய்கள் தாராளமாய்க் கிடைக்கும். ஆங்கிலக் கறிகாய்களில் தாராளமாய்க் கிடைப்பது முட்டைக்கோஸ், முள்ளங்கி(இதுவும் நாட்டு முள்ளங்கி, வாசனை தூக்கும்.)காரட், பீட்ரூட், உ.கி. போன்றவை.

    ReplyDelete
  15. அம்பாள் அடியாள், அப்படிச் சொல்லுங்க! அடுத்த உபிச பதவிக்குக் காத்திருக்கிறவங்க பட்டியல்லே உங்க பெயரையும் சேர்த்துடறேன். ஹிஹிஹி ஏற்கெனவே ஒரு உபிச இருக்காங்க என்பதோடு இரண்டு பேர் காத்திருப்போர் பட்டியலிலே இருக்காங்க. உங்க பெயரையும் தாயுள்ளத்தோடு சேர்த்துக்கிறேன். :))))

    ReplyDelete
  16. ஹாஹாஹா ஜிஎம்பி சார், இதுக்கெல்லாம் அசந்துடுவோமா என்ன?? ஹிஹிஹி

    ReplyDelete
  17. டிடி, அதானே, வலைஉலகத்தின் ஒப்பற்ற, நிகரற்ற ஒரே குழந்தைத் தலைவியைப் பார்த்துக் கணக்கா கேட்கிறாங்க, கணக்கு!:)))))

    ReplyDelete
  18. வாங்க மாதேவி, போட்டுட்டோமுல்ல! :)))

    ReplyDelete
  19. அமைதி அமைதி தலைவி அமைதி அமைதி! கணக்கு கேட்டவங்க கதிகலங்கிப் போயிருக்காங்க.

    ஸ்ரீராம், ரெண்டு ரூபாய்க்கு ரெண்டு பச்சை மிளகாயா? புடலங்காய் சைசுல இருக்குமா?

    ReplyDelete
  20. வாட் இஸ் நாட்டு தக்காளி தலைவி?

    ReplyDelete
  21. வாங்க அப்பாதுரை, கொந்தளிக்கிறது வலை உலகமே. தலைவியைப் பார்த்துக் கணக்குக் கேட்ட ஸ்ரீராமைப் பார்த்து வலை உலகே கோபத்தில் கொதிக்கிறது! :)))) ஹாஹாஹாஹா

    அப்புறமா ரெண்டு ரூபாய்க்கு நாலைந்து பச்சை மிளகாய் காந்திஜியின் குட்டிப் பென்சில் சைசுக்குக் கிடைக்கும். ஆனால் காரமா இருக்கு! :))))

    ReplyDelete
  22. நாட்டுத் தக்காளின்னா தெரியாதா? அட??? country tomato!

    ReplyDelete
  23. நாட்டுத் தக்காளி ஒரிஜினல். ஆர்கானிக்னு சொல்லலாமோ? ஆனால் பெண்களூர்த் தக்காளியில் உ.கி.யின் மரபணுக்களைச் சேர்த்து விரைவில் அழுகாமல் இருக்கும்படியாகவும், தோல் கொஞ்சம் கெட்டியாக இருக்கும்படியும் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டது. சாறு குறைவாக இருக்கும்.

    நாட்டுத் தக்காளி மெல்லிய தோலுடன் சாறு அதிகமாக விரைவில் அழுகும் தன்மையுடன் இருக்கும். தக்காளி விரைவில் விற்றால் தான் விவசாயிக்கு நன்மை. ஆனால் சில சமயங்கள் விற்காது. ஆகையால் பெண்களூர்த் தக்காளி போல் மரபணுக்கள் மாற்றப்பட்ட தக்காளியை உண்டாக்கிப் பக்குவப்படுத்தி வைத்து விற்கலாம். அவ்வளவே வித்தியாசம். விகடனில் எப்போவோ படிச்சது!

    ReplyDelete